Friday, April 24, 2009

மிகுந்த வருத்தங்களுடன்

வணக்கம்.

அஞ்சடியில் வெளியான ம.நவீனின் தர்கங்களுக்கு எதிர்வினையாற்யிய எனது இரு பதிவுகளிலிருந்தும் சில காத்திரமான கோபத்தில் வெளிவந்த அவதூறு சொற்களை எனது வலைப்பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன்.

சில விசயங்களுக்காக அதில் உள்ள பல விசயங்களையும் சேர்த்து நீக்கியதில் வருத்தகங்கள் ஏற்படப்போவதில்லை. சில நேரங்களில் நாம் சொல்லவரும் செய்தி சொல்லத ஒன்றையும் உள்ளடக்கியிருப்பதை உணர்ந்தும் அறிந்திருந்தும் அந்த நேரத்து அமைதியின்மையில் இன்று பிற எழுத்துக்கள் முன் என்னை அடித்துச்சென்றுவிட்டது.

"பிச்சை" எனும் சொல் பிரயோகம் மிக மோசாமான சொல் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அதைத் தவிர்த்திருக்கலாம்.இனி வருந்துவதாகவோ மன்னிப்பு கேட்பதிலோ அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.

எனது எழுத்து சார்ந்து தர்கங்களுக்கு மட்டும் என்னை ஒருமுகபடுத்த அதீத காலம் தேவைப்படலாம். இனி அதற்கான சிந்தனைகள் மட்டுமே எனக்குள்.

மிகுந்த வருத்தங்களுடன்
பாலமுருகன்

Thursday, April 23, 2009

ஓடுகாலியின் குரல்

வணக்கம். 1)
"வி.ம." அதாவது விமர்சன மன்னன் என பேரும் புகழும் எடுத்த பழைய நண்பர் யுவராஜன், பழைய கதைகளைக் கொஞ்சம் பேசியுள்ளார். பழைய நண்பர்களால் பழைய கதைகளைத்தானே நினைவுக் கூர முடியும். அதுவொரு அழகிய நிலாக்காலம்...

நான் மலேசிய அறிவுமதியாக உலா வந்த காலம். அப்போதே யுவராஜன் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக, குருவாக இருந்தார். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது, தமிழ்ப்பேரவையின் தலைவர் பதவிக்கான தேர்தல் அன்று, இடம்கூட அறிவியல் புல வளாகம் என்று இன்றும் ஞாபகம். ஏனெனில் அந்த தேர்தலில் நின்று பெரும்பான்மை வாக்குகளில் தோற்றுப்போனவன் இந்த மலேசிய அறிவுமதி.தோற்ற பின்னர் நான் என்னை அறிவுமிதியாக நினைத்துக் கொண்டேன். ஆனால் அடிக்கடி சந்தித்துக் கொண்டது அண்ணன் யுவராஜன் சொன்னதைப் போல தமிழ் நூலகம்தான், அப்போதுதான் நான் கொஞ்சம் கொஞ்சம் பேனா பிடித்து நடந்துக் கொண்டிருந்த காலம். "இடைப்பட்டவை" என்ற பாலர் பள்ளி மாணவர்களின் தரத்திற்கு கிறுக்கிய ஒரு காலம்.


நான் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஒள,ஃ என தமிழின் ஆதார எழுத்துக்களைப் பயின்று வந்த காலம்.அப்போதே "வி.ம" யுவராஜன், குட்டி ரேவதியின் முலைகள் நூலைத் தேடி வந்து கொடுத்தார். கலாப்பிரியா, மாலதி மைத்ரி,யூமா.வாசுகி, ஆதவன் தீட்சண்யா என இன்னும் சிலரது நூட்களும் அவர் கொண்டு வந்து கொடுத்த கூடையில் இருந்தது. அ,ஆ,எழுதிக்கொண்டிருந்தவனுக்கு எடுத்த எடுப்பிலேயே அவற்றை வாசிக்க முடியவில்லை. கூடையைத் தூக்கிப் போட்டு விட்டு போனவன் தான்.ஆகக் கடைசியாக மலேசிய வைரமுத்து நவீனின் சகோதரியின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது "வி.ம" யுவாவை.

ஆனால், எனது குருவை நான் தான் ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் கரைத்துக் குடித்து மண்டையில் சேர்த்து வைத்திருந்த அறிவுக்கு ஏற்ப என்னால் எழுதமுடியவில்லை. அவரைத் திட்டமிட்டும் திட்டமிடாத போதும், பார்க்க நேரும் போதெல்லாம், என்ன கிறுக்குகிறாய் என்று கேட்டுத் தொலைப்பார். இருந்தாலும் போனால் போகட்டும் குருதானே என நானும் தொடர்ந்து சந்தித்துத் தொலைத்தேன். ஆனால் போக போக அவரது அறிவுத் தொல்லை தாங்க முடியவில்லை. அவர் கோணங்கியை வாசித்து விட்டு, அவரைப் போல் அல்லது அவரது தரத்திற்கு நாங்கள் எல்லாம் எழுத வேண்டும் என எதிர்பார்த்தார். எனக்கு எழுதவே வராது. பின்னர் குருவின் மோட்டாரைக் கண்டால் வேறு பாதையில் செல்வேன். குருவைக் கண்டால் ஒதுங்கி விடுவேன்.குருவிடம் பேசும் போது, எனக்கு தலை வலிக்க ஆரம்பித்ததால் நான் அவ்வாறு செய்யத் தொடங்கினேன்.

என்னால், தமிழகத்தில் உள்ளவர்கள் போல் எல்லாம் எழுத முடியாது. என்னால் என்னைப் போலவே மட்டுமே எழுத வருகிறது.நான் என்ன செய்ய? அ,ஆ,இ,ஈ எழுதி, இன்று ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதும் அளவு தேறியிருக்கிறேன் என எனது வாக்கிய வெளியீட்டு நிகழ்வில், எழுத்தாளர் ம.சண்முகசிவா கூறியிருந்தார். நிச்சயம் என்றாவது ஒரு நாள் இந்த "ஓடுகாலி" பயல், ஒரு கட்டுரை எழுதி விடுவேன்.அப்போது தெரிவுபடுத்துகிறேன்.எழுத்துப்பிழையைக் கண்டுபிடியுங்கள்..அல்லது இப்போது வந்திருக்கிற முகுந்தராஜ் அல்லது வேறு சிலரருடன் ஒப்பிட்டு, என்ன எழுதியிருக்கிறான் இந்த மலேசிய அறிவுமதி என ஊர்கூடி பேசுங்கள். அல்லது இலக்கிய வட்டத்திலிருந்து சிவம் வெகுதூரம் சென்று விட்டார் என ஒப்பாரி வையுங்கள்.

அகிலன்( நம்மூர்) ஒரு நல்ல கவிதை எழுதி விட்டார். நீங்கள் எப்போது எழுதப் போகிறீர்கள் எனும் எனது குருவின் அந்நாள் கேள்வி இன்னும் என் மனதில் உள்ளது. சரி அகிலன் எங்கே? சிவத்தைத் தேடுங்கள். வருங்காலத்தில் குருவாக எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு நான் கேட்டுக் கொள்வதெல்லாம், சிஷ்யப் பிள்ளைகளை நன்றாக வளருங்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள் பின்னர், ஓடுகாலி சிவத்தைப் போல, எங்கேயாவது ஓடி விடுவான். அப்போது ஓடிவிட்டான், தொலைந்து விட்டான் என்றெல்லாம் சொல்லாதீர்கள் பந்தாவாக. விரட்டி விட்டேன்...தொலைத்து விட்டேன் என ஒரு துளி கண்ணீரையாவது வடித்துத் தொலையுங்கள். என்னைப் போல, குருவிடம் திட்டு வாங்கிக் கொண்டு ஓடிப் போன சிவாவின் கதையை நீங்கள் கேட்க வேண்டும். இன்று நான் ஒரு வாக்கியம் எழுத கற்றுக் கொண்டேன் என்றால் அந்த புகழும் பெருமையும் எனது குருவைத்தான் சேரும். நாளை நான் ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு கட்டுரை எழுத முடிந்தால், அந்த பெருமையும் எனது குரு "வி.ம." யுவா அவர்களைத்தான் சேரும்.
2)

ஓடி விட்டேன் என்று சொல்லாதீர்கள். உங்கள் அளவுக்கு எழுத முடியாது அது உண்மை. ஆனால் எனது அளவுக்குத்தான் என்னால் எழுத முடியும்.அதுவும் உண்மை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வாசிப்பதற்கு அஞ்சி ஓடியாதைப் போல என்னைச் சித்தரித்து, உங்களை ஒரு மாமேதை போல காட்டிக்கொண்டுள்ளீர்கள். உண்மையில் இன்னும் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆணவத்தை-தான் காண முடிகிறது.

அப்படியே ஓடினாலும், அவன் அவனுக்கு என்ன என்ன பிரச்சனைகள் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. கொஞ்ச காலம் ஒருவனைக் காணவில்லை என்றால் அவன் வெகுதூரம் சென்று விட்டான் என அவதூறு பேசாதீர்கள். காணமல் போனவன், அடிபட்டு மருத்துவமனையில் இருக்கலாம். இப்போது நினைவுக்கு வரும் கிளைச்சம்பவத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

ஆக மொத்தத்தில், உங்களைக் கண்டுதான் நான் ஓடியிருக்கிறேன். நீங்கள் துரத்தவில்லை?நாயைக் கல் எடுத்து துரத்தாத குறையாய் நீங்கள் துரத்தியது உங்களுக்கு நினைவுக்கு வராது..கல்லடி பட்ட நாய்க்குத்தான் வலியும் வடுவும்.விரட்டியவருக்கு இருக்காது. அன்றிலிருந்து இன்று வரை அதே வாதம். உங்களைப் பெரிதுப்படுத்தி, உங்களை மேன்மைப்படுத்தி அடுத்தவரை மட்டம் தட்டும் போக்கு என்னோடு முடியட்டும்.

குறள் 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

குட்டி ரேவதியை@மேலும் சிலரை வாசிக்க இயலாத,
ஓடுகாலிப் பயல்
சிவம் த/பெ பாலன்
அ.எண் : 780725-08-5997 012 2625892

Wednesday, April 22, 2009

ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றா, இசா சட்டம்?!


இசா சட்டம் என்பது 'உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்' என்ற சொல்லின் சுருக்கம். இச்சட்டம் மிகவும் பிரபலமானது அண்மையில் தான். முன்னாள் பிரதமர் (துன்) அப்துல்லா அகமட் படாவியின் ஆட்சிக் காலத்தில் ஹிண்டிராஃப் பேரணி நடத்தியபோது இச்சட்டத்தின் காட்டத்தை மலேசிய இந்திய மக்கள் பெரிதாக - மிக வெளிப்படையாக உணரத் தொடங்கியிருந்தனர். அதன் பிறகு மற்ற எதிர்க்கட்சிகளும் கூடவே வழக்கறிஞர் மன்றத் தலைவியாக இருந்த அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்களோடு மன்ற உறுப்பினர்களும் இசா சட்டத்திற்கு எதிராக கலகக் குரல்கள் துன் அப்துல்லா காலத்தில் எழுப்பியது துரதிஷ்டமா அல்லது அவரின் கையாண்ட விதம் பலவீனமா என ஆய்வாளர்களின் சிந்தைகளிலிருந்து விரைவில் வெளிப்படக்கூடிய ஒன்று எனலாம்.

ஹிண்டிராஃப் பேரணி விஷயத்தில் பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் சர்வாதிகாரத்தனமாக நடந்து கொண்டது சரியா? துன் மகாதீரே இருந்திருந்தால் எப்படி நடந்துக் கொண்டிருப்பார்? போன்ற கோணங்களை ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்hம் தாண்டி இசா சட்டம் தேவையா இல்லையா என நாமும் கருத்துக் கூறலாமே என 'அஞ்சடிக்கு' வந்திருக்கிறேன்.

கடுமையானது, கொடுமையானது, மனுஷத்தன்மையே இல்லாதது; இப்படித்தான் மனித உரிமை போராட்டவாதிகள் 1960-ல் இயற்றப்பட்ட இசா சட்டத்திற்கு அடையாளமிடுகிறார்கள். இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கண்டிப்பாக தேவைப்படுகின்ற சட்டம் என அறிவிக்கின்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இச்சட்டம் தேவையா இல்லையா என்ற சர்ச்சை உருவாகி, பரபரப்பாகி, பிறகு அமைதியாகும். இம்முறையும் எப்போதும் போல பிரதமர் பதவியேற்றவுடன் முதல் அறிவிப்பாக ‘இசா சட்டம் முழுமையாக ஆராயப்படும்’ என டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.

அரசியல் எதிர்க்கட்சிகள் யாவும் மிகவும் ஆவலோடும் திக்..திக்.. மனவொலியோடும் எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த அறிவிப்பே நாட்டு மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது என்பது உண்மையே!இச்சட்டம் அறிமுகமானதிலிருந்து 2005 வரை 10,662 பேர் கைதியாகியுள்ளனர். 4,139 பேருக்கு வழக்கமான தடுப்பு உத்தரவிற்குள்ளும் 2,066 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறைகளுக்குள்ளும் ஆட்படுத்தப்பட்டிருந்தனர். இன்று வரை 27 பேர் தடுக்கப்பட்டும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர்.இச்சட்டத்தை எதிர்பார்ப்பவர்களின் வாதம் என்னவெனில் விசாரிக்கப்படாதபடிக்கு தடுத்து வைப்பதாகும். இது அடிப்படை மனித உரிமையையே மீறுவதாகும்.

இசா சட்டத்தின் கீழ் ஒருவர் தடுக்கப்படும்போது அல்லது கைதாகும்போது அவருக்கு நீதி விசாரணை மறுக்கப்படுகிறது. குற்றப்பத்திரிகை இல்லை. இதன் அர்த்தம், அந்த ஒருவர், தன்னை தற்காத்துகொள்வதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவர் விசாரணையின்றி குற்றவாளி என தடுக்கப்பட்டிருப்பார்.ஒருவர் இசா சட்டத்தின் கீழ் கைதாகும்போது 60 நாட்களுக்கு போலீஸ் காவலில் இருப்பார். அச்சமயங்களில் நீதிமன்ற விசாரணையோ எவ்வித விசாரணையோ இன்றி இருப்பார். 60 நாட்களுக்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சு தடுக்கப்பட்டிருப்பவரை விடுதலை செய்யக்கூடும் அல்லது எவ்வித விசாரணையுமின்றி இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்படும்.

மாநில உள்துறை அமைச்சு ஒருவரை இரண்டு ஆண்டுகள் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமானால் தடுத்து வைக்கப்பட்டவர் பேராக்கிலுள்ள கமுண்டிங் கேம்-மிற்கு அனுப்பப்பட்டு அங்கு இரண்டு ஆண்டுகளை கடூக்க வேண்டும். அக்காலக்கட்டம் முடிந்ததும் அதனை நீடிக்கச் செய்வதற்கு மாநில அமைச்சுக்கு சட்டம் அனுமதி தருகிறது.மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவாரான ரகுனாத் கேசவன் இதுகுறித்து, "அச்சட்டமானது ‘குற்றத்தை நிரூபிக்கும்வரை குற்றவாளியல்ல’ எனும் அடிப்படை கொள்கைக்கு எதிரானது" என்றார்.

"தடுத்து வைக்கப்பட்டவர் தன்னை தற்காத்துக்கொள்ள வடூயில்லாதபோது அமைச்சானது அவரைப்பற்றி மக்களிடையே பலவிதமாக பல குற்றங்களை சுமத்திட முடியும். இது நியாயமில்லை", என்றார் அவர்.செக்ஷன் 8(1) இசா சட்டமானது, நாட்டிற்கு அபாயகரமானவர்களாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலாகவும் இருப்பவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு தடுத்து வைக்க மாநில உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் கொடுக்கிறது."கமுண்டிங்கிலுள்ள அநேக கைதிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கே அவர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றம் இன்னதென்று தெளிவில்லாமல் இருக்கிறார்கள். தங்களை தற்காத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாத சூழலே இருக்கிறது", என்றார் ரகுநாத்.

"நாம் குற்றம் இழைத்து தண்டிக்கப்பட்டால் முடிவு என்னவென்றாவது தெரியும், "என சொல்லிய அவர், இசாவின் கீழ் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தாலும் 15 ஆண்டுகளுக்கு மேல் தடுக்கப்பட்டிருப்போரும் அங்கே உண்டு என்றார்.

மேலும் அவர், நீதிமன்றம் ‘நாட்டின் பாதுகாப்பு’ தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்ய மறுக்கிறது. அது தடுக்கும் விஷயத்திற்குரிய நுட்பங்களை மட்டும் ஆய்வு செய்ய ஆயத்தமாய் இருக்கிறது.இவ்விஷயத்தைக் குறித்து, நீதிமன்றம் திறந்த மனப்பான்மையுடன் செயல்படாமல் அரசாங்கத்திற்கு இதுபோன்ற விஷயங்களுக்கு அடிமை போல செயல்பட்டு வருகின்றது.

இசா சட்டம் இந்நாட்டில் அறிமுகமானது 1960-ல். கம்யூனிஸ தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் இது. காலப்போக்கில் கலகக்குரல் மாணவர்கள், அரசியல் எதிரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சியினர், இயக்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், போலி கடப்பிதழ் செய்வோர் ஆகியோரும் கூட இச்சட்டத்தில் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

இசா-வில் தடுக்கப்பட்ட அனேகர் தங்கள் இயல்பு வாழ்வை இழந்திருக்கின்றனர் என்று இசா ரத்து இயக்கத்தின் (GMI) தலைவர் சைட் இப்ராஹிம் கூறினார்.

குடும்பம் உடைகிறது; மனைவி மணவிலக்கு கேட்கிறாள்; பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்; மனரீதியில் பாதிப்படையும் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது" என்றார்.

இசா சட்டத்தின் கீழ் தடுக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுகிறார்கள். அதற்கு உதாரணமாக முன்னாள் இசா கைதி அப்துல் மாலிக் ஹ¥சேன் என்பவர் 1998-ல் அடிக்கப்பட்டும் சித்திரவதைக்குட்பட்டும் இருந்திருக்கிறார்.

இன்னொரு நபரான சஞ்சீவ் குமார் என்பவர் ஒற்றர் என குற்றஞ்சாட்டி இடுப்பிற்கு கீழே கால்வரை செயலற்றுப்போகும்வரை தடுப்புக் காவலில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் ஷாரி சுங்ஙிப் இசா சட்டத்தின் கீழ் முன்பு கைது செய்யப்பட்டவர் சொல்வதாவது "இந்த இசாவானது இஸ்லாமிய போதனைக்கு எதிரானது என்றார். பாரிசானின் சட்டத்துறை அமைச்சரான டத்தோ ஸைட் இப்ராஹிம், இசா மிகவும் சிக்கலானது, மறு ஆய்வு செய்வதை விட அதனை ரத்து செய்வதே மேல் என கருத்துரைத்தார்.

உண்மையாகவே ஒரு நாட்டின் பாதுகப்பிற்காக சட்டங்கள் தேவைப்படுமேயானால் உதாரணமாக பிரிட்டனில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் போல், புதிய சட்டங்கள் தெளிவாகவும் நியாயமாகவும் இயற்றப்பட வேண்டும்.ரகுநாத்தும் ஸைட்டின் கருத்துக்கு உடன்படுகிறார். இசா சட்டம் மறு ஆய்வுக்குப் போவதை விட ரத்து செய்யப்படுவதே மேல் என்பதாகும்.

கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய சோஸலிஸ்ட் கட்சி தலைவருமான (PSM), டாக்டர் முகமட் நாசீர் ஹாஷிம் இந்த இசா சட்டம் மலேசியாவிற்கு தேவையில்லை. அடூக்கப்பட வேண்டிய ஒன்று."நமக்கு இசா தேவையில்லை. அதன் தோற்றம் சரியில்லை. நமக்கு இசா இருந்தால், நமக்கு அரசியல் சட்டதிட்டம் தேவையில்லை. இசாவானது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது. மனித சுதந்திரத்திற்கும் இயக்க உருவாக்கத்திற்கும் கூட எதிரானது", என்ற அவர், இசாவின் கீழ் லிம் கிட் சியாங்கோடும் முகமட் சபூவோடும் ஒன்றாக தடுக்கப்பட்டிருந்தவர் ஆவர்.

1991-ல் 59 நாட்கள் இசா-வின் கீழ் தடுக்கப்பட்டு அதன் சித்திரவதைகளை அனுபவித்த இன்றைய அறிவியல் மற்றும் புத்தாக்க அமைச்சரான டத்தோ ஸ்ரீ டக்டர் மக்ஸிமஸ் ஓங்கிலி-யின் கருத்து சற்று வித்தியாசமானது. நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் இந்த இசா சட்டம் தேவை என்றாலும் கையாளும் வகையில் சிறு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

"அந்தச்சட்டமானது நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆபத்தானவர் என நினைக்கும் ஒருவரிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் நோக்கத்தை உடையதாக இருக்கக்கூடாது", என்றார் அவர்.மேலும் அவர், அச்சட்டத்திற்குரிய அதிகாரம் முடிவான முடிவாக தனியொருவரின் கரத்தில் இருக்கலாகாது, காரணம் சுலபமாக அவர் அதனை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று சொன்னார்.

பயங்கரவாதத்தை இந்நாட்டில் கையாளப்போவது எப்படி? இப்போது இல்லை. வருங்காலத்தில் நடக்கலாம் அல்லவா?, அதைத் தவிர இசா என்பது ஒருவரை வைத்து நிர்ணயிப்பது அல்ல, மேலும் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடாது", என்றார்

ஒவ்வொரு முறையும் பிரதமர் பதவியேற்பு நடந்து முடியும்போது இசா சட்ட கைதிகளின் விடுதலை அறிவிப்பு கண்டிப்பாக இடம் பெற்றிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் பிரதமர் நினைத்தால் மாத்திரமே இசா கைதிகள் விடுதலையாக்கப்படுகிறார்கள். பிரதமர் மட்டுமே இப்படி விடுதலை செய்வது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டிருக்கிறது. இதுவோர் அரசியல் அதிரடி விளம்பரம் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். தங்களுடைய கட்சி ஆளுங்கட்சியாக இருக்கையில், எதிர்க்கட்சிகள் செய்யும் தீவிர பிரசாரங்களும் நடவடிக்கைகளும் தங்களுக்கு எதிரான சதியோ, படுகுடூயோ, வீழ்த்திவிட சந்தர்ப்பமோ கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் பெரும்பாலும் இசா சட்டம் பாய்ந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளும்கூட ஆளுங்கட்சியாக ஆட்சிபீடத்தில் அமரும்போது இதே இசா சட்டத்தை இதே நோக்கத்தில் பயன்படுத்துவார்களோ என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே இருந்து வருகிறது.எப்படியோ இந்த இசா சட்டத்திற்கு பகிரங்கமான எதிர்ப்பு வந்தது ஹிண்டராஃப் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய சமூகத்தினிடையே ஒரு பெரிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில், குறுஞ்செய்தி வாயிலாக தன் சக்தியை நிரூபித்ததில் நாம் ஹிண்டராஃபிற்கு நன்றி கூறத்தான் வேண்டும். அதற்கு மேல்...... பல கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கிறேன். நியாய அநியாயங்களை கண்டிருக்கிறேன். பலவீனங்களை, அவசரத்தனங்களை, சோரத்தை, தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கை, பக்கா அரசியல்தனங்களை கண்டிருக்கிறேன்.

ஒரே ஒரு திருப்தி மட்டும்தான்.

ஓர் உருப்படியான கல்விமான்களை - சட்டங்களை நன்கு அறிந்த அறிவுஜீவிகளை ஒன்று சேர்த்திருக்கிறது. அதுகூட எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றுப்பட்டிருப்பார்களா என்ற சந்தேகம் என்மனதில் வலுத்திருக்கிறது.

மஹாத்மன்

தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்

மதிப்புமிற்க சக படைப்பாளி கே.பா. அவர்களுக்கு வணக்கம்.உங்கள் அன்பும் எழுத்தும் ஒரு காலத்தில் என்னைக் கவர்ந்ததாலும் எனக்குள் பிரமிப்பு உருவாக்கியிருந்ததாலும் முக்கியமாக - அவசியமாக - அவசரமாக சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது.

முன்பொரு காலத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்களிடமிருந்து விலகி நெடுங்காலமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். அதற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன. மனப்பிறழ்வுக்கு முன் என்னிடம் காணப்பட்ட முதல் அடையாளங்களை முதல் அறிகுறிகளை இப்போது உங்கள் எழுத்தில் காண்கிறேன். தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்...... வேண்டாம் பாலா ! நீங்கள் படைப்புலகில் சாதிக்க நிறைய வாய்ப்புகளுண்டு.

பரதேசியாய் போனபோது நான் தனியன்!

மஹாத்மன்

விவாதங்கள் ஆரோகியமானதாக இல்லை.தொடராதீர்.

நவீனுக்கும் ,பாலமுருகனுக்குமிடையே நடக்கும் இந்த விவாதத்தில்( ஆரோகியமான வார்த்தையைப் பயன்படவைக்கிறது வயது) பங்குபெற எனக்குக்கொஞ்சமும் விருப்பமில்லை. இது போகும் திசை இலக்கற்றது.தார்மீகமற்றது.பாதகமான விளைவுகளை தன்வசம் கொண்டுள்ள ஒன்று.ஏனெனில் தனிமனித சிறுமைகள் சினத்தின் அடிப்படையில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.எல்லாமும் முடிந்து கோபம் இறங்கி ஏதாவது ஒரு நாளில் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளக்கூடும்.கட்டிப்பிடித்து மன்னிப்புக்கேட்டுக்கொள்ளவும் கூடும்.கைகுலுக்கிகொள்வதும் மன்னிப்புக்கேட்டு கட்டிப்பிடித்துக்கொள்வதும் மனித இயல்பு.கைகுலுக்கிக்கொள்வதற்கும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதற்குமான உணர்வு ,ஒருநாள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ‘எதற்கு சண்டையிட்டோம்' என்ற வினாவோடு நம்மை திரும்பிப்பார்க்கும்?அப்படி எதிர்நோக்கும்போது இப்போதுள்ள கோபத்தை மிஞ்சிய வெட்கம் சூழக்கூடும். குறிப்பாக எழுத்தாளர்களுக்கு இதனை சொல்லவேண்டிய அவசியமில்லை.

எனக்கு நவீனும் பாலமுருகனும் நன்கு பழக்கமானவர்கள்.என்னவிட வயதில் சிறியவர்கள் என்பதைவிட இலக்கிய படைப்பில் மிஞ்சிவிடக்கூடியவர்கள் அவர்கள் மீதான் என் மதிப்பை வைத்திருப்பவன். நவீன் spm முடித்த கையோடு என்னைப்பார்க்க வந்தார்.இலக்கியம் ,சமயம் பற்றிய வினாக்களும் சந்தேகங்களும் நிறைந்தவராக.அப்போதுதான், ‘என் கவிதைகள் நயனத்தில் பிரசுரிப்பதில்ல. நீங்கள் நயனத்துக்குச் சொல்லுங்கள்,’ என்று கேட்டார். அப்போதே அவர் எழுதும் கவிதைகள் அவரின் வயதைக்கடந்த(18/19) முதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. இதற்குச்சிபாரிசு தேவையில்லை என்று எனக்கு நன்றாகவே புரிந்திருந்தது.நான் சிபாரிசு தந்தால்தான் கவிதை பிரசுரமாகும் என்ற நிலைக்கு நயனம் இருந்ததும் இல்லை. புதிதாக எழுதவருபவர்க்குள்ள அவசரம் அவரிடமுமிருந்ததால், நான் ஒரு கடிதம் எழுதி அவரிடமே கொடுத்துவிட்டேன்.அதிலும் நயனம் புதுக்கவிதைகளுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிலையில் நல்ல கவிதைகளுக்கான களத்தை தாராளமாகவே விரித்துவைத்திருந்தது.‘நவீன் என்னைக் கெஞ்சினார்' என்ற வார்த்தைப்பிரயோகம் ஒருவருக்கு இன்னொருவர் மேல் உண்டான அனாவசிய கோபத்தால் வந்தது.இதனைத்தவிர்த்திருக்கலாம்!

நவீனிடம் நான் பார்த்த எழுத்து அங்கீகாரம் சார்ந்த அவசரத்தைப் பாலமுருகனிடமும் நான் பார்க்கிறேன்.இதில் தவறேதும் இல்லை.யாருக்கு அங்கீகாரம் தேவையில்லை?மனித இயல்பு இது.(நடக்கப்பழகும் குழந்தைகூட கைத்தட்டலை எதிர்பார்க்கிறது)எல்லாருக்கும் அவருடைய ஆற்றலின் வெளிப்படுதலுக்கு ஏற்ற அங்கீகாரத்தை இந்த உலகம் வைத்துக்கொண்டு கொடுக்கக்காத்திருக்கிறது-பாராபட்சமின்றி. பாலமுருகனின் எழுத்து மலேசிய எழுத்து வகையிலிருந்து பெரிதும் வித்தியாசமானது. வாசகனை விரைந்து சேரும் போக்குடையது.இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல!ஆரோக்கியமற்ற விவாதத்தினால் நல்ல இலக்கியம் படைப்பதில் சற்று தேக்கம் உண்டாகலாம்.அதுவே சறுக்கியும் விடலாம்.வழுக்கலான நடைபாதையை நம் ஏன் ஏற்படுத்தவேண்டும்.தேவையற்ற உக்கிரத்தால் எழுத்தை விட்டுச்சென்று திரும்ப வராதவர் பட்டியல் நீளும்.இப்படி எவ்வளவு இழந்திருப்போம் நாம்!

இருவருக்கும் நான் என் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.இந்த மின் ஊடகப்போரைத்தொடராதீர்கள்.இருவருமே கெடா மாநில பூர்வீகத்தைக்கொண்டவர்கள். நல்ல எழுத்துப்பாரம்பர்யத்தைக் கொண்ட மாநிலம் என்ற பெயர்(தற்செயலாகவும் இருக்கலாம்) எடுக்கும் ஊர்.சமீபமாக இலக்கியவாதிகள் நல்ல சண்டையிட்டுக்கொள்ளும் ஊர் என்ற பெயரையும் எடுத்து வருகிறது.நல்ல இலக்கியம் உங்கள் இருவரிடமும் இருந்து தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை என்னிடமும், இலக்கிய விரும்பிகளிடமும் உள்ளது. கண்டிப்பாய் வரும், இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது தேவையற்றது என்று தவிர்க்கும்போது.

நன்றி,
கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com

பிச்சை புகினும்...

வணக்கம்,

எல்லாம் முடிந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்க எத்தனிக்கும் தருணத்தில் மீண்டும் திரு.பாலமுருகன் பிரசன்னமாகியுள்ளார்.பொதுவாக நான் தனிமனிதர்கள் ஒட்டிய மோதல்களைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.நவீன்,மஹாத்மன்,சிவம்,சந்துரு எனஅத்தனைப் பேரோடும் கடுமையாய் பொருதியிருக்கிறேன்.மஹாத்மனோடு கிட்டதட்ட ஒரு வருடமும் (அடிக்கடி காணமல் போவதால்நீண்ட இடைவெளி), நவீனோடு சுமார் ஆறு மாதம்.சிவம் என்னைச் சந்திக்க விரும்பாத இருந்த காலமும் உண்டு.(இப்போதும்தான்)பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைதான். இவ்வாறான சமயங்களில் இருவர் தரப்ப்பிலும் வெளிபட்ட கண்ணியமான மொழியும் மௌனமும் இப்போது நினைத்துப் பெருமூச்சு விடவேண்டியதுதான்.

நிற்க,
நவீன் வல்லினத்துக்காக பலரிடம் பிச்சையெடுப்பதை திரு.பாலமுருகன்

வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.நவீனின் இன்றைய நிலைமைக்கு நானும் காரணமாய் இருப்பதால் சில செய்திகளைப் பகிர்ந்துக் கொள்ள அவா.

நகைச்சுவைப் பகுதி
சில வருடங்களுக்கு முன் நவீன் 'மலேசிய வைரமுத்து'வாகவும்,சிவம் 'மலேசிய அறிவுமதி'யாகவும்,சிவா பெரியண்ணன் 'மலேசிய அப்துல் ரகுமான்'ஆகவும் பட்டொளி வீசி பறக்க தொடங்கியிருந்தனர்.(இன்னொரு சிவா..இப்போதைக்கு வேண்டாம்.) இவர்களின் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு பீதியில் வயிறெரிந்தான் உங்களால் நாட்டாமை என்றழைக்கபடும் யுவராஜன்.யுவராஜனைப் பற்றி சில குறிப்புகள்இவன் மலேசியாவில் எழுதும் யாரையும் வாசிக்கமாட்டான். எப்பொழுது பார்த்தாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கே வால்பிடித்து அலைவான்.யாராவது சண்முகசிவாவின் எழுத்தைச் சிலாகித்தால் 'ம்... என்ன இருந்தாலும் வண்ணதாசன் போல்..'என்று ஆரம்பிப்பான்.சில அரைவேக்காடு சிறுகதைகளைப் போட்டிகளுக்கு மட்டும் எழுதுவான்.

நிற்க,
சிவா பெரியண்ணனனை முதலில் பிடித்தான்.நைசாக பேசி அவனிடம் வைத்தீஸ்வரனின் கவிதைத் தொகுப்பை கையில்திணித்தான்.சிவா அதோடு காலி.இப்போது ஜோகூர் பக்கம் இருப்பதாக கேள்வி.அடுத்து சிவம்.மலாயா பல்கலைக் கழகநூலகத்தில் தேமேவென்று பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார் சிவம்.'குட்டி ரேவதி'யின் கவிதையை வாசித்திருக்கிறீர்களா? என்று ஆரம்பித்தான்.அவரும் ஓடிப் போனார்.கடைசியாக மிஞ்சியது நவின்.பேரவை கதையின் பரிசளிப்பு விழாவில் மாட்டினான் நவீன்.அந்தப் போட்டியில் யுவராஜனுக்குப்பரிசு விழுந்திருந்தது.வாழ்த்துச் சொல்ல கை நீட்டிய நவீன் வசமாக மாட்டிக் கொண்டான்.அந்த கண நேரத்திலும் இருபதுக்கும்மேலான கவிஞர்களின் பெயரைச் சொல்லி இவர்களைப் படிக்காமல் மேலும் எழுதுவது வீண் என்று முத்தாய்ப்பாய் முடித்தான்.

சீரியஸ் பகுதி
சரியாக ஒரு வருடம் கழிந்து நவீனிடமிருந்து அழைப்பு.'காதல் ' என்ற இலக்கிய பத்திரிகையை திரு. தமிழ்மணியின் அவர்களின் உதவியோடுதொடங்குவதாக திட்டம்.முதல் சந்திப்பிலேயே அய்யாவை ஏற்படபோகும் இழப்பு குறித்து எச்சரித்தோம்.திரு. தமிழ்மணி எதைப் பற்றியும்அலட்டி கொள்வதாக தெரியவில்லை.பத்து இதழ்களோடு கிட்டதட்ட ஐம்பதாயிரத்தை விழுங்கி கொண்டு தொண்டையடைத்து மடிந்தது 'காதல்'.திரு.தமிழ்மணி அவர்களின் நிறைய கருத்துகளோடு முரண்படுபவன் நான்.'காதல்' நிச்சயம் நட்டமாகும் என்பதை ஆரம்பத்திலேயேஉண்ர்ந்திருப்பார்.ஆர்வமான இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நல்லெண்ணத்தைத் தவிர வேறெதையும் உணரமுடியவில்லை.நெகிழ்ச்சியான நன்றியும் அன்பும் எப்போதும் என் மனதில் திரு.தமிழ்மணி அவர்களுக்கு உண்டு.

பிறகு வல்லினம்.நவீன் அதைப் பற்றி எழுதி விட்டதால் மேலும் வேண்டாம்.'பிச்சை' என்று சில மொட்டை கடித சொறிப் பேர்வழிகளும்,அனாமதேய வெறிப் பேர்வழிகளும் சொல்லலாம்,நீங்கள் சொல்லலாமா திரு.பாலமுருகன் அவர்களே!மலேசியாவில் இலக்கியத்தில் மாற்று சிந்தனையை நம்புபவர்கள் விரும்பி ஏற்க வேண்டிய கடப்பாடு அல்லவா...உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் ஒதுங்கி செல்லுங்கள்.நவீன் புனிதர் இல்லைதான்.அவருடைய பலவீனங்களை ஓரளவு அறிந்தவன்தான்.இதையெல்லாம் மீறி நாட்டின் நவீன இலக்கியத்தில் அவர் பங்கு மிக முக்கியமானது.

ஏற்கனவெ இதழ்ப் பணி அவரின் படைப்பு மனத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பதில் சோர்வாகத்தான் இருக்கிறார்.ஒளவையார் பாட்டி சொன்னதாக தமிழ்ப்பள்ளியில் படித்தது;

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

சோர்வுடன்,
சு.யுவராஜன்.

பி.கு : நகைச்சுவை பகுதியொட்டி சிறுவிளக்கம். கேலியும், அவதூறுகளோடுதான் நவீன இலக்கியம் இந்நாட்டில் வளர்ந்து வந்திருக்கிறது.ஆச்சரியமாக யாருமே உறவுகளை முறித்துக் கொண்டதாக செய்தியில்லை.அத்தனை கருத்து வேறுபாடுகளோடும் ஒருவர் ஆளுமை மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதைதான் காரணமோ? அஞ்சடியைப் பிரபலபடுத்த உங்களைக் கொச்சைப்படுத்தும் அவசியம் நவீனுக்கு இருப்பதாக நான் நம்பவில்லை திரு.பாலமுருகன்.அதன் அத்தனை சாத்தியங்களையும் உதறித் தள்ளியவர் நவீன்.அதற்கு நானே சாட்சி.இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை.நல்ல எழுத்தாளர்களின் ஆளுமை அப்படிதான் இருக்கும்

அஞ்சடி நண்பர்களே...

அஞ்சடி நண்பர்களே...

அஞ்சடி மின் இதழ் தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரையில் நான் தனிப்பட்ட முறையில் யாரையும் இடித்துரைத்து எழுதியதில்லை. சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து எனது பார்வையை, கருத்தை முன் வைத்துள்ளேன்.

நவீனுக்கும் பாலமுருகனுக்கும் மகாத்மனுக்கும் இடையில் என்ன என்ன பிரச்சனைகள் என்னென்ன மனசிக்கல்கள் என அறிவதும் அவற்றைக் களைவதும் என்னுடைய பணி அல்ல. நவீனை தற்காத்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கும் அவருக்கும் இல்லை. நான் பாலமுருகனைக் குறிவைத்து சொற்களை இதற்கு முன்னர் பிரயோகிக்கவும் இல்லை. ஆனால் ஆகக் கடைசியாக வெளிவந்த அவரது எதிர்வினையைக் கண்டுதான் அதிர்ச்சியுற்றேன்.

நன்றாக கவனியுங்கள். அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை நான் விமர்சிக்கவில்லை அல்லது அதில் நான் சம்பந்தப்படவில்லை. ஆனால் பொதுவான அடிப்படையில், பாலமுருகன் சம்பந்தப்பட்ட இரு விவகாரங்களைத்தான் நான் விமர்சித்து கேள்விகள் எழுப்பினேன். என்னுடைய கட்டுரையை நன்கு படிக்கவும். புளித்துப்போன விவகாரத்தை மீண்டும் எழுப்பியதன் காரணத்தையும் அவசியத்தையும் கோரிதான் நான் எழுத முற்பட்டேன்.

பாலமுருகனைக் கேள்வி எழுப்பும் நான் ஏன் நவீனைக் கேள்வி எழுப்பவில்லை என்றால் இப்போது பழைய உளுத்துப்போன விவகாரத்தை யார் மீண்டும் அள்ளிக் கொண்டு வந்தது என நான் கேட்பேன். பதில் என்னவாக இருக்கும்? முதலில் அந்த பதிலைச் சொல்லுங்கள்...

பிச்சை என்ற சொல் பிரயோகம் பாராட்டிற்குரியதா ? ஓர் எழுத்தாளர் சொல்லி இன்னோர் எழுத்தாளரைச் சிறுமைப்படுத்தலாமா?இந்த இரு கேள்விகளைத்தான் நான் முன் வைத்தேன். இதற்கு முந்தைய எதிர்வினைகளையும் நன்கு கவனித்து வந்துள்ள நான், கடுமையாக விமர்சிக்க மேல் குறிப்பிட்ட அந்த இரு விவகாரங்களே அடிப்படை..ஆனால், அதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் உங்கள் கருத்து அதுவாயின், நீங்கள் மாற வேண்டாம்.மாறத்தேவையில்லை...

பாலமுருகன், இனி உங்களின் கதைகளை வாசிக்கும் போது, உங்களின் இந்த எதிர்வினைகள் நினைவுக்கு வருமாயின், தொடர்ந்து வாசிப்பது சிக்கலாக இருக்கும். ஆனாலும், கதையாசிரியர் கே.பாலமுருகனுக்காக வாசிப்பேன்.அவ்வளவுதான்...

சீனி.நைனா முகம்மது முன்பு காரி உமிழ்ந்தது எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை எனக்கு. இந்த மோதல்கள்தான் ரணத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் தொடர்ந்து மோதுவது என முடிவு செய்தாகி விட்ட போது, ரத்தமென்ன...உயிரென்ன?...நாங்கள் எல்லாம் நவீன உலகின் பிச்சைகள் தானே நண்பர்களே...

பா.அ.சிவம்

Tuesday, April 21, 2009

நேர்மைத் திறனும் வஞ்சகமும் ...

அஞ்சடிக்காரர்களுக்கு வணக்கமும் வருத்தங்களும்...

நாம் உகந்த பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறோமா என்றால் உடனடியாக அதற்கான பதிலைச் சொல்ல முடியும். இல்லை என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும் அந்த பதில். அஞ்சடியின் ஆகக் கடைசி எதிர்வினைகளை வாசிக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.அதனால் நாட்டின் இலக்கியத்திற்கு எந்தவகையிலும் நன்மை கிட்டப்போவதில்லை. எனினும் காலம் மனிதர்களின் முகங்களைக் காட்டத் தவறுவதில்லை. அவர்களாகவும் காட்டிக் கொடுத்து விடுகின்றனர்.

ஒரு சர்ச்சை முடிவுற்றது எனும் அமைதியில் திளைத்திருந்த போது, ஏன் மீண்டும் நீங்களாகவே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, எதிர்வினையைத் தொடங்கியிரு க்கிறீர்கள் பாலமுருகன்? உங்களின் ஆகக் கடைசி எதிர்வினையும்,அதற்கு முந்திய எதிர்வினையும் என்ன சொல்ல வருகின்றன என முதலில் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்களா ? அவ்விரண்டுக்கும் அடிப்படையிலேயே எழுந்துள்ள முரணை நீங்கள் உணரவில்லையா? ஏன் அவ்வப்போது மாறுபடுகிறீர்கள் பாலா ? உங்களின் தவிர்க்கப்பட வேண்டிய கருத்துக்கள் அல்லது பகிர்வுகள்தான்இங்கு மீண்டும் மீண்டும் வெறுப்பு தோன்ற குரோதம் துளிர்க்க காரணமாகி இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அது நிகழுமாயின் அதனால் எழக்கூடிய பாதகங்கள் மிகவும் கொடுமையானது என்பதை உணர வேண்டும்.

உங்களின் ஆகக் கடைசி இரு எதிர்வினைகளில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்றும் தெரியவில்லை. ஆனாலும் அது உங்களின் எழுத்துச் சுதந்திரம். என்றாலும் உங்களின் சுதந்திரம் மற்றவர்களைச் சீண்டுவது அல்ல.எனக்குத் தெரிய வேண்டிய/ விளக்கம் அறிய வேண்டிய இரு விஷயங்கள் உண்டு.

1) நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பிச்சை என்கிற சொல் நீங்கள் எல்லாம் எழுத்தாளரா என வினவத் தோன்றுகிறது. அந்த சொல்லின் காட்டம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்..ஆனால் வேண்டுமென்றே நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றும் எனக்கு இப்போது தோன்றுகிறது.எங்களைப் போல் ஏழைகள், பரம ஏழைகள் என்ன செய்வார்கள் பாலமுருகன்? என்ன செய்ய முடியும் எங்களால்? பிச்சை-தான் கேட்க முடியும்.போடுகிறவர்கள் போடலாம்.விருப்பம் இல்லையென்றால் நீங்கள் போடாமல் சென்றுக் கொண்டே இருக்கலாம். உங்களை யாரும் குற்றம் கூற மாட்டார்கள்.பிச்சை இடுவதைத் தவிர்ப்பதால் நீங்கள் பாவி ஆகி விட மாட்டீர்கள.நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு எழுதுவதை எல்லாம் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இதனை நான் இங்குதான் எழுத கடமைப்பட்டுள்ளேன்.தனிப்பட்ட முறையில் கருத்துரைக்க அல்ல. இதனைத் தொடர்ந்து எழும் எதிர்வினைகளுக்கும் நான் பொறுப்பேற்பேன். பிச்சை கேட்கிறீர்கள் என அவ்வளவு சுலபமாக உங்களால் எழுத முடிகிறது என்றால் வல்லினத்தைப் பற்றியும் அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களைப் பற்றியும் நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.நவீன் ஆசிரியர் என்றால் அதற்கு நானும் பொறுப்பேற்பதால் உங்களின் சொல் என்னையும் வந்து தாக்குகிறது. ஆனால் உங்களுக்கு அதில் எல்லாம் கவலை இல்லை. தொடர் விளைவைப் பற்றியும் நீங்கள் எங்கே எண்ணியிருக்க போகிறீர்கள்? நல்ல காரியத்தைச் செய்வதற்கு நம்மால் முடியாத நிலையில், பிச்சையின் வழி அதனைச் செய்ய முடியும் என்றால் அதை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. ஆனால் இக்கருத்து நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இதற்கு பின்னர் நான் எப்படி உங்களிடம் பேசுவது அல்லது எப்படி உங்களை எதிர்கொள்வது? நினைக்கவே சிரமமாக உள்ளது. ஒன்றைச் சொல்கிறேன்.பிச்சையிட உங்களின் கரம் அனுமதிக்க வில்லை என்றால், பிச்சை பற்றி பேசாதீர்கள். உங்களுக்குப் பதிலாக பிச்சை போட என்னால் முடியும்; தேவை ஏற்பட்டால்...

2) ஓர் எழுத்தாளர் நவீன் பற்றி கூறியது குறித்து நீங்கள் எப்படி அவரை இடித்துரைக்க முடியும்? யார் அந்த எழுத்தாளர்? அவர் உங்களிடம் சொன்னால், அதை நீங்கள் உங்களிடமே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே...அதைச் சுட்டிக் காட்டி பேசுகிற சுதந்திரத்தையும் துணிச்சலையும் யார் உங்களுக்கு அளித்தது ? உங்களுடைய சுதந்திரம் அடுத்தவரின் தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதில் இல்லை என்பதை நீங்கள் அறியவில்லையா ? நவீன், கெஞ்சினாலும்- கொஞ்சினாலும் அவர் எதற்காக அதைச் செய்தார் என்று உங்களுக்குச் சிந்திக்கத் தோன்றவில்லையா? உதவி கோருவது தவறா ? அல்லது உதவி செய்து விட்டு, நான் தான் உதவினேன் என தம்பட்டம் அடித்துக் கொள்வது தவறா ? செய்த உதவியைச் சுட்டிக் காட்டுவது சரியா ? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?

இன்று உயர்ந்து நிற்கும் மனிதர்கள் எல்லாம், தொடக்கத்தில் பட்ட கஸ்டங்கள், வேதனைகள், அவமானங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், அவர்களைப் புறக்கணிப்பவர்கள், அவர்களின் வெற்றியை மட்டுமே ரசித்து அவர்களின் இன்னல்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அல்லது தொடக்க கால இடர்பாடுகளைக் கொச்சைப் படுத்துபவர்கள் ஆகியோரை எல்லாம் நான் மதிப்பதில்லை... எனது மதிப்பீடு அனாவசியமாக இருக்கலாம். ஆனால் மதிப்பீடு வழங்க எனக்கு மதிப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.தேவை ஏற்பட்டால் அவ்வபோது தொடர்ந்து கருத்துரைப்பேன்.

ஆனால், பாலமுருகன், நீங்கள் என்னைச் சந்தேகப்படக் கூடாது. என்னை நீங்கள் தூரத்தில் இருந்துதான் கண்டிருக்கிறீர்கள்.நேர்மை அற்றவன் நான் என்றால் நான் நேர்மை அற்றவன்தான். எனது நேர்மை சொல்லித் தெரிய வேண்டியது அல்ல.

மிகுந்த வருத்தங்களுடன்
பா.அ.சிவம்

முக்கிய அறிவிப்பு...

அஞ்சடி இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளை தணிகை செய்ய அஞ்சடி நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.சில சட்ட சிக்கலை தவிர்க்க இந்த முறையை கையாள வேண்டியுள்ளது.அஞ்சடிக்கு எழுதும் அல்லது கருத்து தெரிவிக்கும் படைப்பாளிகளின் முழு விபரம் கிடைக்கும் பட்சத்தில் அது பிரசுரிக்கப்படும்.மாறாக மொட்டைக் கடிதங்களோ...துண்டு பிரசுரங்களோ... அனாமதேய கடிதங்களோ ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. நீங்கள் அனுப்பும் உங்கள் விபரங்கள் பாதுகாக்கப்படும்.

அஞ்சடி
நிர்வாகி.

கூழைக்கும்பிடு...

அஞ்சடி வாசகர்களுக்கு வணக்கம்.'நாடகக் குரல்'எனும் எனது எதிர்வினைக்கு பாலமுருகனும் தன் நிலையை புலம்பியிருந்தார்.அதை அஞ்சடி மின்னசலுக்கு அனுப்பாமல் எனது சொந்த மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.எனவே அதன் ஒவ்வொரு பத்திக்கும் சிறு விளக்கம்.அவ்வளவே...

எனது நாடகங்களை சிரமம் பாராமல் புலம்பலாக (நிதானமாக என்று அறிவிப்பு வேறு) அம்பலப்படுத்தியதற்கு மிக்க நன்றி நவீன். அது நாடகமா இல்லையா என்பதை பற்றி நான் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் நீங்கள் ஆடும் தொடர் மெகா சீரியல் நாடகத்தை மிகவும் கவனமாக கையாளுகிறீர்கள். அது என்று வெளிச்சத்திற்கு வரும் என்று காத்திருக்கவும் எனக்கு நேரமில்லை.

'நேரமில்லை...நேர விரையம்...ஒரு சிறுகதையாவது எழுதியிருக்கலாம் என' எப்போதும்தான் புலம்புகிறீர்கள்...ஆனால் மீண்டும் வந்து வெட்கமில்லாமல் ஒட்டிக்கொள்கிறீர்கள்.விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே 'நம் நட்பு இதனால் பாதிக்கப் படாதே...இதனால் நான் உங்களுக்கு கதை அனுப்புவது தடைப்படாது'என்ற அங்கலாய்ப்பு வேறு.தலைநகரில் சில நண்பர்களிடம் வேறு புலம்பி தள்ளுகிறீர்களாம்.ஒரு நண்பர் 'பாவம்பா அவன் ..புலம்பி தள்ளுரான்...காதில் ரத்தம் வருது'என வேறு கிண்டல் செய்ய தொடங்கிவிட்டார்.அப்புறம் நீங்களே அதற்கெல்லாம் நேரம் இல்லை என்பீர்கள்.விவாதம் வீண் என்பீர்கள்.

12 மணி இல்லை நவீன். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஜொகூருக்கு 10.30 மணியே கடைசி பேருந்து. என்ன நவீன் நீங்கள்? எதையும் சரியாகக் கவனிக்காமல்தான் பேசுவீர்களோ? ஓடவில்லை நவீன், நல்லா சொகுசாக பேருந்து சீட்டில் அமர்ந்து கொண்டுதான் சென்றேன். பழைய கதை என்று நீங்களே குறிப்பிட்ட பின் அதை மீண்டும் பேச எனக்கு விருப்பமில்லை.

இல்லை பாலமுருகன் நீங்கள் ஓடிதான் சென்றீர்கள்.இன்னும் சொல்வதானால் நடுரோட்டில் விட்டு விட்டு.நான் பார்த்தது ' நேரமாகிவிட்டது' என நீங்கள் ஓடிச்சென்றதைதான். அதன் பின்னர் நீங்கள் நிகழ்வில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு எங்கு போனீர்கள் ...எப்படி போனீர்கள்...அல்லது போகாமல் வீட்டில் தூங்கினீர்களா என்பன போன்ற விபரங்கள் தெரியவில்லை.நான் பார்த்தவரை 'அநங்கம்' அறிமுகத்துக்காக வந்த எம்.ஏ.நுக்மானை உபரசிக்காமல் ஓடிய பாலமுருகனைத்தான்.

நீங்கள்தானே வல்லினம் ஆசிரியர்? உங்களிடம்தான் படைப்பு குறித்தும் பிரசுரிப்பது குறித்தும் கேட்க வேண்டும் பேச வேண்டும். ஒருவகை ஆணவம்தான் உங்களுக்கு. இதற்கு முன் வல்லினத்திற்க்காக வங்கியில் பணம் சேர்ப்பிக்க 3-4 முறை மின்னஞ்சல் வந்துவிடும். அது எந்தவகைக் கெஞ்சல்? இதழை நடத்த நீங்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அனுப்பும் மின்னஞ்சலை, "பிச்சை' எனச் சொல்லலாமா? உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால். தரமான இதழ் வல்லினம்,ஆதலால் அதில் நம் படைப்பு பிரசுரம் ஆகுவது குறித்து நினைவூட்டல் வகையில் கேட்டால், அது என்ன நாடகமா? நாடகம் என்றால் என்ன என்பதில் உங்களுக்குப் பிசகல்.

உண்மைதான் பிச்சைதான் வாங்குகிறேன்.சரியாக 4 முறை குறுந்தகவல் அனுப்பி பிச்சை வாங்குகிறேன் 'வல்லினம்' நடத்த.இந்த பிச்சை மூலம்தான் இன்றளவும் பல தமிழக சிற்றிதழ்கள் நிலைக்கின்றன என பெரியவர் சோதிநாதன் போதனையில் ...மா.சண்முகசிவா ஆலோசனையில் பிச்சை வாங்குகிறேன்.மொத்தம் 23 பேர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 50 மற்றும் 100 என பிச்சை போடுகின்றனர்.அச்சடிப்பு செலவு 3000.00 ரிங்கிட் வருவதால் எனக்கு நானே சில நூறு ரிங்கிட்டை பிச்சையிட்டு அச்சுக்கு செலுத்துகிறேன்.அச்சுக்கு வந்த புத்தகத்தில் 100 வழங்குபவருக்கு 26 புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன்.அவர்கள் எனக்கு கொடுத்த 100 ரிங்கிட்டுக்கு என்னால் முடிந்த சிறு நன்றி.இந்த 23 பேர் கொடுத்த பிச்சையால் இன்று மலேசிய இலக்கியத்தை சுமந்த 'வல்லினம்' 5 நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.சமயத்தில் சிலர் அன்பு மிகுதியால் அதிகம் பிச்சை இட்டுவிடுவது உண்டு.அந்த பிச்சைப்பணத்தை சேமித்து இலக்கிய நிகழ்வுகள் நடத்துகிறேன்.நான்தான் 'வல்லினம்' ஆசிரியர் என்னிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது 'என்னுடைய கதைய போடுவீர்கள்தானே' என்று நிச்சயம் கேட்கலாம்தான்!!!ஆனால் அரசியல் பத்திரிக்கையாளரான மகாத்மனிடமும் அதே கெஞ்சல்...'நான் உங்கள் பத்திரிக்கைகு கதை அனுப்பலாமா?'என.ஒரு வேளை அதையும் இலக்கிய இதழ் என எண்ணி விட்டீர்களோ! மின்னஞ்சலில் வக்கனையாக பேசிவிட்டு அடுத்த நிமிடமே நீஙகள் குறுந்தகவலில் போடும் கூழைக்கும்பிடு நடிப்பில்லைதான்.

உங்களின் ரெட்டத்தன நாடகமும் அஞ்சடி வாசகர்கள் அறிந்ததுதான். பா.ம விஷயத்தில் மூக்கை நுழைத்து நாட்டாமையெல்லாம் பண்ணிவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டதை என்ன "செல்வி' நாடகத்திற்கு இணையான "செல்வன்' நாடகன் என்று சொல்லலாமோ? பா.மவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு அஞ்சடியில் கூழை கும்பிடுவை நன்றாகவே போட்டுள்ளீர்கள்.

திரு.பாலு மணிமாறன் என்னைத் தொடர்பு கொண்டார்.தனது தரப்பு நியாயங்களைக்கூறினார்.எனவே ''இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து ஒரு கவிஞரை அழைத்து வந்து இந்த நண்பர் படுத்தியபாடும் அடித்தக் கொள்ளையும் நினைவிற்கு வருகிறது' என கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அதில் 'அடித்தக் கொள்ளை'என்ற சொல்லை பிரயோகித்தமைக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அந்தச்சம்பவத்தை நான் நேரில் இருந்து பார்க்காத நிலையில் சம்பந்தப்பட்ட சிலரின் வாய் வழி வாக்கு மூலத்தால் ஏற்பட்ட கோபம் அது. எப்படி இருப்பினும் 'அடித்தக்கொள்ளை' என்பது மிகவும் கனமான சொல்லே. எந்த ஆதாரங்களும் இல்லாத காற்றில் கடந்த சொல்.'என்றேன்.இவ்வளவுதான் இவ்வளவேதான்.இது கூழைக்கும்பிடா...

சரி இனி உங்கள் வரிகளில் சில...

*எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

*நான் முன்பே சொன்னது போல எனக்கு விவாதிக்கும் திறனே இதுதான் முதல் அனுபவம் என்பதால் நான் முன்வைத்து நானே சிக்கிக் கொண்ட சில பதற்றங்களை, தடுமாற்றங்களை எண்ணி வருத்தம் கொள்கிறேன்என்னை முன்னிறுத்தி நான் ஆடிய அபத்த விவாதங்களில் கொஞ்சம்கூட நியாயம் இருக்குமோ இல்லையோ, தாராளமாக மன்னிப்பு மட்டும் கேட்கத் தோன்றுகிறது.

*நண்பர்களே, மீண்டும் நான் எல்லோரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என்னால் தொடங்கிய விவாதம்தான் இந்த அளவிற்குக் காத்திரம் பெற்று எங்கொங்கோ சென்று இழிவான நிலைக்குச் சென்றுள்ளது.
நவீன் நீங்கள் அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகியது தங்களின் சுதந்திரம். இனி அநங்கத்தின் ஆலோசகர் குழு இல்லை. அநங்கத்தை இன்னும் வளர்க்க பாடுபடுவேன். மேலும் விலகினாலும் நீங்கள் கடைசியாக சொன்ன ஆலோசனைகள் படி அநங்கத்தை இன்னும் தீவிரமாக்க முயற்சிப்பேன்.

*யுவராஜன் சொன்னதை அப்பொழுதே கேட்டிருக்கலாம் போல. மன்னிப்புக் கேட்டுத் திருத்திக் கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்க வேண்டியிருக்காது.
*நுண் அரசியலோ மண்ணாங்கட்டி அரசியலோ, இன்றும் இந்த அரசியல் வைத்தே நான் சிலரால் மதிபீடப்படுகிறேன்.
*இனி அவர்களிடம் நேர்மையா தவறை ஒப்புக் கொண்டு சென்றாலும் நான் சந்தர்ப்பவாதி எனக் கருதபடுவேனா? வேண்டாமப்பா!
*விபச்சாரி யோனி குறித்து நான் சிறுகதை எழுதுகிறேனோ நாவல் எழுதுகிறேனோ அது என் பாடு. நானே வலிந்து ஏற்படுத்திய கட்டமைப்பைக் கொஞ்சம் தளர்த்தும்போது மனம் இலேசாகுகிறது.
*அநங்கத்தின் எழுத்துப் பிழைகளைக் குறைக்க களைய ஆசிரியர் குழுவில் சொல்லி சீரமைப்பேன்.. . சிவம், நவீன் முன்வைத்த நட்பான எதிர்வினையில் மனம் இலேசாகி எல்லாம் தவறுகளையும் என் மீதே சுமத்திக் கொண்டு நிற்கலாம் எனத் தோன்றுகிறது. அன்புக்கு இவ்வளவு சக்தியா? -

இதன் பெயர் என்ன? அட போங்கப்பா...

மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா குறித்து எல்லோரையும் எங்களுடன் சேர்ந்து கொண்டு குரலெழுப்புங்கள் என்று ஏன் வற்புறுத்த வேண்டும்? நீங்களே முதுகெலும்பை வளைக்கும் கழகத்தைத் தொடங்கிவிடுவீர்கள் போல?

நான் யாரையும் வர்புறுத்தவில்லை பாலமுருகன்.எங்களுக்குத்தெரியாதா உங்களின் முதுகெலும்பின் வலுபற்றி.எதிர்ப்பதை நான் முன்னிருத்தவில்லை.அதிகாரத்துக்கு எதிராக உண்மையை கூற சொல்கிறேன்.அவ்வளவே.உங்கள் ஆளுமை என்னவென்று இப்போது தெரிந்த பின்னர் கவலைவேண்டாம் குறுந்தகவலில் மட்டுமே குசு குசு வென வரும் உங்கள் குரலை எதிர்ப்பார்க்க மாட்டோம்.

முதலிலிருந்து ஒரு பாலர் பள்ளி மாணவனுக்கு சொல்வது போல சொல்ல வேண்டும் போல உங்களுக்கு. போலி கண்ணிரும் அநங்கமும் என்கிர கட்டுரையின் மூலம் நான் அநங்கத்தின் நிலைபாடுகளைச் சொன்னதற்குக் காரணமே உங்களின் முதல் கட்டுரையும் அதன் பிறகு வந்த நக்கல் கட்டுரையும்தான். ஆலோசனை வழங்க உங்களுக்குத் தெரியவில் லை. எப்படி ஒரு இதழ் குழுவை அணுக வேண்டும் தெரியாமல் புத்திமதி சொல்லும் அளவிற்கு வளர்த்துவிட்டதாக மமதை வேறு. ஆமாம் நீங்கள் இதழியல் துறையின் மிகப் பெரிய தூண். நீங்கள் விலகுவதால் மனம் வலிக்கத்தான் செய்கிறது. அட போங்கப்பா!


என் நினைவில் உங்களிடம் நான் ஆலோசகராய் என்னை புகுத்த சொல்லவில்லை.நீங்களாகப் போட்டீர்கள்.அதில் எனக்கு என்ன மமதை.'கெ.டி.என்' இல்லாமல் வரும் இதழால் என்ன சட்ட சிக்கல் வரும் என்று... குழைந்து குழைந்து கேட்கும்போது உங்களுக்கு என் ஆலோசனை தேவைப்பட்டது...ஒரு தமிழக இதழின் முகவரியை போட்டு அச்சிட்டபோது உங்களுக்கு என் ஆலோசனை தேவைப்பட்டது...முதல் இதழின் பக்கங்களை அனுப்பிவத்து இது சரியா அது சரியா என கேட்ட போது உங்களுக்கு என் ஆலோசனை தேவைப்பட்டது...அப்போது உங்களுக்கு என் மமதை தெரியவில்லையா பாலமுருகன்.உங்களுக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரியும் போல...ஒரு பாலர் பள்ளி மாணவன் போலவே நடந்து கொள்கிறீர்கள்.

மறந்துவிட்டீர்கள் போல நவீன். நயனத்தில் உங்கள் கவிதைகளைப் பிரசுரிக்க சொல்லி ஒரு எழுத்தாளரிடம் கெஞ்சினீர்களாமே. . பழைய கதைதான். சிபாரிசு தேடி பல எழுத்தாளர்களைப் போய் சந்தித்து உங்கள் படைப்புக்கு அங்கீகாரம் வேண்டி அலைந்தீர்களாமே. அதை மறந்துவிட்டீர்கள் போல. இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய சூழல்.

எதையும் நான் மறக்கவில்லை.என் படைப்புகளை பிரசுரிக்க நான் அலைந்த அலைச்சல் குறித்து ஒரு பத்தியே தனியாக எழுதி வைத்துள்ளேன்.ஏறக்குறைய 16- 18 வயதுக்குள்ளான காலம் அது.அது குறித்து 'என் உயிரெழுத்து'என ஏற்கனவே பத்தி வேறு எழுதியுள்ளேன்.அந்தக்கவிதைகள் இன்னும் பத்திரமாக இருக்கின்றன.வாழ்வில் பிரிக்க இயலாத பகுதி அது.ஒரு வேளை அந்த பருவம் இல்லையென்றால் இலக்கியம் தொடர்பான எனது சிறிய பயணம் சுவாரசியம் இன்றி இருக்கும்.நீங்கள் சொன்ன அந்த எழுத்தாளர் கோ.புண்ணியவான்.அவரிடம் இலக்கியம் குறித்து பேச வேண்டும் என்றே அவரின் விக்டோரியா பள்ளியில் சம்பளம் இல்லாமல் பணிபுரிந்தேன்.இளஞ்செல்வனின் மரணத்துக்குப் பின்னர் நானே தேடிச்சென்று அவரிடம் கவிதை குறித்தும் கதை குறித்து நிறையவே கற்றுக்கொண்டுள்ளேன்.அதை இதுவரையில் என்றுமே மறந்ததோ மறுத்ததோ இல்லை.அவரிடம்தான் என் கவிதைகள் நயனத்தில் பிரசுரம் ஆகுமா என கேட்டு சில கவிதைகள் கொடுத்தேன்.அவரும் உதவினார்.நீங்கள் கூறுவது போல கெஞ்சினேனா என அவர்தான் சொல்ல வேண்டும்.சொல்வாரா?
அப்புறம் அங்கீகாரம்?! எனக்குத் தெரிந்து அப்போது நான் எழுதியதே 5 கவிதைகள்.அதுவும் மக்கள் ஓசையில் வந்தது.அதை வைத்துக்கொண்டு எந்த அங்கீகாரத்தை யாரிடம் கேட்டேன் என தெளிவாக கூறலாமே பாலமுருகன்.ரொம்ப வருடம் ஆகிவிட்டதால் மறந்து விட்டது.ஆனால் ஒன்று உண்மை உங்களைபோல தமிழ் நாட்டு எழுத்தாளர்களிடம் படைப்பை அனுப்பி கறுத்து சொல்லுங்க சார் என்றும் அவர் படைப்புகளுக்கு 'காக்கா பிடித்தும்' என் கதையை படிங்க என இதுவரை நான் நிச்சயமாய் கெஞ்சவில்லை.

இறுதியாய்...
'நவீன் குறித்து நீங்களே அவர் பால் உள்ள கடுப்புகளை என்னிடம் சொல்லியிருக்க்கிறீகள்.' என எனக்கும் மகாத்மனுக்கும் சிண்டுமுடிக்க முயன்றது போல யுவராஜனனின் மேல் நான் கொண்ட கடுப்பையும் எடுத்து கூறி சிண்டு முடிக்க முயன்றுள்ளீர்கள்.இதவிட கடுமையாகவெல்லாம் நானும் யுவாவும் சண்டையிட்டு முடிந்து விட்டது பாலமுருகன்.நீங்கள் கூறிய சிபாரிசு தேடி அலைந்த காலத்தில் எனது மிகப்பெரிய எதிரி இந்த யுவராஜந்தான்.பின்னாளில் எனது இலக்கியம் தொடர்பான சிந்தனை மாற்றத்துக்கும் அவர்தான் முதல் காரணம்.நான் அவரை கிண்டல் செய்வது அவர் என்னை வாரிவிடுவதும் வழக்கமாக நடக்கும் சம்பவங்கள்.இதில் என்ன வேஷம்.உங்கள் ஊர் காரர்தானே.உடனே நேரில் போய் சொல்லுங்கள்.நீங்கள் சிண்டு முடிக்க இது களம் இல்லை.

ம.நவீன்

Monday, April 20, 2009

நாடகக் குரல்


வணக்கம் இந்தக் பத்தியை மிகவும் நிதானமாகவே எழுதுகிறேன்.இதை சிலர் தனி மனித தாக்குதல் என எடுத்துக்கொள்ளலாம்.பாதகமில்லை.

ஒரு இலக்கியவாதியை அவனது படைப்பை வைத்து மட்டுமே தீர்வு செய்வது பொருந்தாது.மாறாக அவனது சமூக வாழ்வு, அரசியல்,சமரசம் அற்ற தன்மை இவையெல்லாம் மிக முக்கியமான உபரிகள்.ஒரு எழுத்தாளனின் முதுகெலும்பு எப்போது வளைகின்றது என்பதை சமூகமும் காலமும் பார்த்துக்கொண்டே இருக்கிறது.இதன் மூலமே நாம் பாரதியை தராசில் ஏற்றியும் வைரமுத்துவை இறக்கியும் வைக்கிறோம்.இந்த சமரசம் இல்லாத தன்மையால் தான் இன்றளவும் சீ.முத்துசாமியில் உண்மை குரலுக்கு சிலர் 'பணம்' 'பதவி'யின் பின் ஒழிந்து கொண்டு தொடை நடுங்கி சாகின்றனர்.இந்த சமரசமின்மையால்தான் சிங்கை இளங்கோவனின் குரலுக்குள் உள்ள உண்மை தீயாய் அனைவரையும் சுடுகிறது.இந்த சமரசமின்மையால்தான் ஷோபாசக்தியின் பேச்சு சர்ச்சையை கிளப்புகிறது.ஆக எழுத்தாளனுக்கு சொற்குவியல் மட்டும் போதாது என நினைக்கிறேன்...

எல்லா விவாதங்களும் முடிந்தது என அடுத்தக்கட்ட வேலைக்கு நகர்கையில் மீண்டும் பாலமுருகன் உள் நுழைந்திருக்கிறார்.அவருக்கும் சேர்த்து அவரே அறிவுரைக்கூறிக்கொள்வது போல மீண்டும் தனது புலம்பலைத் தொடங்கியுள்ளார்.இது நான் எதிர்ப்பார்த்துதான்.மீண்டும் 'இங்கு யாரும் பரிபூரண ஆத்மா கிடையாது' என வேறு ஆய்வெல்லாம் செய்து அறிவித்துள்ளார்.தமிழ் படங்களில் வரும் வில்லனுக்குப் பக்கத்தில் இருக்கின்ற எடுபிடி தன் எஜமானனுக்கு கூழைக் கும்பிடு போடும் ரகமாக தனது இறுதி கடிதத்தில் மன்னிப்பெல்லாம் கேட்டு(http://anjady.blogspot.com/2009/03/blog-post_24.html)இப்போது மீண்டும் ஆலோசனைகளெல்லாம் வழங்கியுள்ளார்.அதில் 'எனக்கும் சேர்த்து' என தன்னடக்கம் வேறு.

சரி போகட்டும்.இதன் மூலம் எனக்கும் சில உண்மைகளைக்கூற வாய்ப்பு எழுந்துள்ளது.முதலில் நான் அநங்கத்திலிருந்து தம்பட்டம் அடித்துக்கொண்டு ஒரு நாடகம் போல் வெளியேறினேன் என்றிருக்கிறார்.நல்லது.'அநங்கத்தின் நிலைப்பாடும் போலி கண்ணீரும்'எனும் பத்தியில் அவர் ஆசிரியர் குழுவின் சில கோட்பாடுகள் என குறிப்பிட்டு சில தீர்மானங்களைக்கூறி இருந்தார்.அந்தத் தீர்மானங்களை எடுக்க அவருக்கு ஆலோசகர் தேவையில்லாத பட்சத்தில் அதை பகிரங்கமாக அறிவித்த பின் நான் விலகிச்செல்வது குறித்து அறிவித்தால் அது 'நாடகம்'.இதே எனது வார்த்தைக்காக 'என்னால் தொடங்கிய விவாதங்களுக்கு'எனும் பத்தியில் 'இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா? வலிக்கிறது நண்பா மனம். . . .' என வேறு அங்கலாய்ப்பு.நாடகம் ஆடுவது யார் பாலமுருகன்?

உங்கள் நாடகம் இன்னும் சில ஞாபகத்திற்கு வருகிறது பாலமுருகன்.

அநங்கத்தின் முதல் வெளியீட்டுக்கு எம்.ஏ.நுக்மானை அழைத்து வந்தவன் என்ற முறையில், உங்களின் முதல் நாடகத்தைப்பார்த்தேன்.நிகழ்வு பத்து மணிக்கு முடிந்தது .பன்னிரெண்டு மணிக்கு நீங்கள் ஜொகூருக்கு பேருந்து பிடித்து ஓடினீர்கள்.பழைய கதைதான் பாலமுருகன்...(எட்டப்பன் காட்டிக்கொடுத்தது போல ...சோரம் போன வை.கோ போல...கடைசி காலத்தில் சாமியின் காலை பிடித்த பண்டிதன் போல) இதுவும் பழைய கதைதான்.ஆனால் நீங்கள் யார் என்பதை காட்டிக்கொடுத்த கதை.அந்த நேரத்தில் தனது வேலைக்கு அவசரமாக விடுப்பு எடுத்து எனக்கு உதவிய யுவராஜனுக்கு இப்போதும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.பேராசிரியர் எம்.ஏ.நுக்மான் நம்மிடம் விருந்தோம்பலை எதிப்பார்க்கவில்லை.யாருக்கும் சிரமம் தராத மனிதர் அவர்.ஆயினும் மலேசியர்களின் விருந்தோம்பல் குணத்தை கொச்சை செய்து அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் சிரிப்பை வரவைக்கிறது.

நாடகம் இரண்டு: ஜனசக்தி இதழுக்கு மகாத்மன் நேர்காணல் செய்கையில் 'மாணிக்க வாசகம்' விருதை குறித்து உங்கள் மோசமான விமர்சனத்தை அனுப்பிவிட்டு(இன்னும் பத்திரமாக அவர் கைத் தொலைபேசியிதான் உள்ளது) அதை பிரசுரிக்க கேட்கையில் மலுப்பிய உங்கள் நாடகமான குறுந்தகவலும் கைத்தொலைப்பேசியில் உள்ளது.

சுங்கைப்பட்டாணியிலிருந்து ஒரு மின்னஞ்சல் அடிக்கடி அல்லது தினந்தோறும் சில எழுத்தாளர்களை 'என் கதையைப்பற்றி கருத்து சொல்லுங்க'என்றும் 'ஏதாவது பேசுங்க' என்றும் கெஞ்சிக் கொண்டிருக்கிறதாம் பாலமுருகன்.உங்களால் முடிந்தால் யாரென கண்டுபிடிங்க. அந்த எழுத்தாளர்கள் கெஞ்சல் பொறுக்க முடியாமல் ஏதாவது படித்துவிட்டு சொல்லும் சொற்ப வார்த்தைகளை அஞ்சடியிக்கு அனுப்பி வைத்து தொந்தரவு செய்கிறது அதே மின் அஞ்சல்.(இதில் அந்த மின்னஞ்சல் காரரின் எழுத்து வெகுசன எழுத்து என அந்த எழுத்தாளரே அவர் அகப்பக்கத்தில் பிரசுரித்ததை மட்டும் மறைத்து விட்டார் அந்த மின்னஞ்சல்காரர்)

மகாத்மனுக்கு எழுத்தாளர் சங்கத்தில் விருது கிடைத்தவுடன் அது தனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்தார்.நியாமில்லாத எழுத்தாளர் சங்கத்தின் போக்குக்கு எதிரான குரலாக அது இருந்தது.இதையே சுங்கைப்பட்டாணியிலும் ஓர் அம்மையார் செய்து அவரும் தனது எதிர்ப்பை வெளிபடுத்தினார்.ஆனால் நீங்கள்... அந்த விருது கிடைக்க உங்களுக்கு தகுதி இருப்பினும் உங்களுக்கு கிடைக்கவில்லை என வருத்தப்பட்டீர்களாமே பாலமுருகன்.(கவலையே வேண்டாம் அந்தக் குறுந்தகவலும் பத்திரமாக உள்ளது.)

எல்லாவற்றுக்கும் மேலாக அஞ்சடியில் கடுமையான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கும் மகாத்மனுக்கும் மாறி மாறி 'என் கதையை பிரசுரிப்பீர்கள?'என கேட்டிருந்தீர்களே பாலமுருகன்.அது எந்தவகை நாடகம்?

இன்னும் பேச சில விஷயங்கள் உண்டு...விரைவில்...

ம.நவீன்

யாரும் இங்கு பரிபூரண ஆத்மா கிடையாது

தீர்க்கத்தரிசனம்/சமூக சீர்த்திருத்தம் எந்தத் தளத்தில் வைத்து கையாளப்படுகிறது என்பதை வைத்துதான் அதன் சார்ந்த மதிப்பீடுகளுக்குள் நுழைய முடியும். மேலும் ஒரு கருத்து எந்தப் பின்னனியில், எந்த களத்தில், எந்தச் சமயத்தில் சொல்லப்படுகிறது என்பதையெல்லாம் ஆராய்ந்தால் அல்லது உற்று நோக்கினால்தான் அதற்கான எதிர்வினைகளும் எடுப்படும்.

சமாளிப்பதற்காகவும், தம்முடைய மேதமையைக் காட்டுவதற்காகவும், தமது வாசிப்பின் ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு கருத்தை வெறுமனே தன்னால் எதிர்வினையாற்றக்கூடிய சரக்கு இருக்கிறது என்பது போல் அணுக நேர்ந்தால், அது தர்க்க விவாதங்களுக்கு ஏற்படும் பயங்கர சறுக்கல்.

"பாலியல் தொழிலாளி" (விபச்சாரி எனக் குறிப்பிடுவதே அவர்களை ஒடுக்குவதுதான் என்று நண்பர் ஒருவர் கூறியிருந்தார்) குறித்த எனது விவாத்தில் நவீன சொல்லாடல்கள், நுண் அரசியல் எதிர் அரசியல் என்று விவாதம் செய்ததுகூட எனது கருத்தை நான் அணுகிய விதத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. அதை உணர்ந்த மறுகணமே குறைபாடுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டாயிற்று. நான் ஏற்கனவே சொன்னது போல யாரும் இங்கு பரிபூரண ஆத்மா கிடையாது. பிறருக்கு புத்திமதி சொல்வதற்கு தமது இலக்கிய/வாசிப்பு ஆளுமையைப் பய்ன்படுத்துபவன் தமது மேதமையைக் கண்டு போதை பிடித்தவன் போல ஆகிவிட்டான் என்றுதான் நினைக்கிறேன்.

மஹாத்மன் அவர்களுடைய ஆகக் கடைசியான கடிதம் மிகவும் கருத்தியல் சார்ந்தும் தமது வாசிப்பாளுமை சார்ந்தும் நிதானமாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள். எல்லோரும் தேடலில்தான் இருக்கிறோம். அதே சமயம் எல்லோரும் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறோம். எந்த விவாதம், யாரால், எப்பொழுது, எந்த சூழ்நிலையில் முன் வைக்கப்பட்டு, வெற்றி தோல்வி காண்கிறது . . இப்படி பல மோதல்கள், விவாதங்கள், முரணான கருத்தின் செறுக்குகள் என்று இப்படியொரு களத்திலும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரே ஒரு வேதனைதான், நம் கருத்தை நியாயப்படுத்த வரும் இடத்தில் பிறரின் தனிப்பட்ட விஷயங்களை அம்பலப்படுத்துவது என்பது ஆரோக்கியமற்ற அணுகுமுறை. விவாதம் கருத்துகளுக்குத்தான். அவரின் தோற்றத்திற்கோ, குணங்களுக்கோ, குடும்ப செயல்பாடுகளுக்கோ அல்ல. (எனக்கும் சேர்த்து)

நாம் முன் வைக்கும் கருத்துகளுக்குப் பிறர் உடன்பட வேண்டும் என்று நினைப்பதும், அல்லது நாம் முன் வைக்கும் விவாதங்கள் எல்லாம் நிலைகளிலும் நியாயமாகத்தான் இருக்கும் என்றும் நினைப்பதும் அபத்தம் என்று கருதுகிறேன். நமக்கு தெரியாத, தர்க்கத்திற்குள் அகப்பட இயலாத பல கோணங்களில் வைத்து மதிப்பீட வேண்டிய நிலைகள் இருக்கின்றன.

டொரொண்டோ பாரிஸ். . நாங்கள்: மலேசியாவில் மாறி மாறி அடித்துக் கொள்வதை நீங்கள் வேடிக்கைப் பார்ப்பதாகச் சொல்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன் எங்குத்தான் இல்லை மோதல்கள்? எந்தத் துறையில்தான் இல்லை முரண்பாடுகள்? எல்லாம் நேரங்களிலும் நாம் உடன்படுவது அசாத்தியம். மேலும் மலேசிய இளம் தலைமுறையினர் ஒற்றுமையாகத்தான் இருக்க வேண்டும் என்று பிறர் வைக்கும் மதிப்பீடு அவர்களின் நம்பிக்கையைச் சார்ந்தது. அதற்காகவெல்லாம் நாம் கட்டுப்பட்டு, கருத்துகளே சொல்ல முடியாமல் அப்பாவியாக இருக்க முடியாது.

அஞ்சடியில் தொடங்கிய விவாதம், உண்மையில் மௌளனம் இதழில் வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நடுநிலை மாயையாக சில புத்திமதிகளை தம்பட்டம் அடித்துக் கொண்டு இன்று பலரின் பார்வையில் மிகப் பிரபலமாக அஞ்சடி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நடுநிலமை மாயையை ஏற்படுத்திய அஞ்சடிக்கு எனது வாழ்த்துகள். கருத்தும் விவாதமும் எங்கு வந்தால் என்ன? ஆனால் நான் எங்கு எதிர்வினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமை உண்டு. மௌளனம் ஆசிரியர் "புரிதல்" களத்தை வெகுவாக வரவேற்கிறாரே? அதை மறந்துவிட்டு அஞ்சடியை பிரபலப்படுத்த வேண்டும் என்கிற ஏதாவது நோக்கம் இதில் இருந்திருக்குமோ? அதையறியாமல் நானும் உள்ளே நுழைந்து பேசிவிட்டேன் போல.

மேலும் அநங்கம் குறித்த ஆலோசனைகளை ம.நவீன் ஆலோசகராக இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னிடமோ அல்லது ஆலோசனை குழுவிலோ பேசியிருக்க வேண்டும். (அதன் போக்கு குறித்து) அதைவிட்டுவிட்டு அஞ்சடியில் பதிவிட என்ன உள்நோக்கம் வந்தது? தமது காத்திரத்தின் உச்சத்தில் எல்லோரும் அறியும்படி ஒரு இதழை விட்டு நான் செல்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு வெளியேறுவது எந்தவகையான நாடகம் இது? மேலும் மூத்த மலேசிய எழுத்தாளர்களுக்கு அநங்கத்தில் இடம் தருவது இல்லை என்கிற எதிர்வினையையெல்லாம் அநங்கத்திற்கு எழுதி அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பப்பட்ட கருத்துகளை நான் பிரசுரிக்காமல் மறைத்திருந்தால், நீங்கள் அஞ்சடியில் பேசுவது நியாயம். ஆனால் இங்கு நடந்தது எல்லாம் தலைக்கீழ்தானே? நான் கேட்பது சரியா?

சரி போகட்டும். ஆலோசனை-ஆசிரியர் குழு- இதழியல்- இப்படி இந்தத் துறையில் நமக்கு இன்னும் பக்குவம் தேவை என நினைக்கிறேன்.

மேலும் என்னையும் உட்பட எல்லோருக்கும் சொற்பிரயோகங்கள் குறித்து விழிப்புணர்வு அவசியம் தேவை. விவாதம் செய்ய வந்த இடத்தில் தூற்றுவது/அவதூறு படுத்துவது, கேள்விக்குள்ளாக்குகிறேன் என்று சொல்லி கிண்டல் அடிப்பது, இதுவெல்லாம் ஆரோக்கியமான எதிர்வினைகளா?

ஆகக் கடைசியாக, எதிர்வினையாற்றுவது என்றால் நான் நேரடியாகவே வருவேன். எனக்கு புனைப்பெயர்கள் அனாவசியம். எழுத்து நடைக்குள் அப்படியொன்றும் தங்கமலை இரகசியங்கள் புதைந்து கிடப்பதற்கில்லை. சார்லி சப்லின் "city Lights "படத்தில் எல்லோரையும் அவர் கோமாளியாக்கிவிடுவார், குத்து சண்டை வீரர், போலிஸ்காரர்கள், தொழிலதிபர் என்று எல்லோரையும் ஒரு கணம் தனது நகைச்சுவை உடல் இயக்கத்தாலும் சுபாவங்களாலும் கோமாளியாக்கிவிடுவார்.

அது போல வெறும் எழுத்து நடையை வைத்து மட்டும் இங்கு நாம் பிறரை கோமாளியாக்கி எதையும் சாதிக்க முடியாது. தனித்துவமான எழுத்து நடையை அவ்வளவு நுட்பமாகக் கண்டறியும் அளவிற்கு பேதப்படுத்தும் அளவிற்கு நாமெல்லாம் என்ன அப்படியொரு மேதாவிகளாக மாறிவிட்டோமா?

ஆகையால், பாடாங் செராய் நண்பர்கள் தலைநகரத்தின் நண்பர்கள் எங்கு சந்தித்துக் கொண்டு தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறார்களோ அல்லது வளர்த்துக் கொள்கிறார்களோ, போகட்டும்.

நான் நானாக மட்டுமே எழுதுவேன், என் கருத்துகளை எப்படி முன் வைக்க வேண்டும், எனது பலவீனங்களை எப்படி உணர வேண்டும் , திருத்திக் கொள்ள வேண்டும் என்பது என் பெயரியிலேயே என்னாலேயே புரிந்து கொள்ள முடியும் என்கிற தெளிவு இருப்பதால், நான் ஒருவனே பலர் எனகிற குற்றசாட்டை நான் அலட்சியப்படுத்துகிறேன். நான் எதையும் நிருபிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை என்பதால் இதை இங்கேயே விட்டுவிடுகிறேன்.

குறிப்பு : சே.குவாரா மகாத்மா காந்தி போன்றவர்கள் தமது எழுத்தாளுமையை பிற துறையில் வெளிப்படுத்தியவர்கள். தன்னுடைய போராட்டத்தையும் வாழ்க்கை பயணங்களையும் எழுத்தாளுமையின் மூலம் பிரச்சாரம் செய்தார்கள். சே.குவாராவின் எழுத்தில் இன்றும் போராட்டத்தன்மையும் விளிம்பு நிலை மக்களுக்கான குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது, காரணம் அவரின் எழுத்து ஆற்றல்தான்.

அவரை எழுத்தாளர் இல்லை என்று சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியென்றால் விளிம்புநிலை மக்களுக்காக எழுப்பப்பட்ட அந்தச் சீர்திருத்தம் எழுத்து இல்லையா? மேல்தட்டு மக்களின் கலா இரசனையும் வாழ்வணுபவங்கள் மட்டும்தான் எழுத்து என்றாகிவிடுமா? பிரச்சாரம் என்பது எப்படி எந்த வடிவத்தில் கையாளப்படுகிறது என்பதை வைத்துதான் பேச முடியும்.

அன்புடன்
கே.பாலமுருகன்

Tuesday, April 14, 2009

எதிர்வினை

மிகவும் ஆய்வு நோக்கிலும் பொறுப்புணர்வோடும் செயற்படுவதாக வாயடிக்கும் ‘காலச்சுவடு’ம் வம்புத்தனத்தைச் செய்யத் தவறவில்லை. அப்பத்திரிகையின் இம்மாத இதழில் சை. பீர்முகம்மது "காட்டிக்கொடுக்கும் கருணா: ஒரு போராளி துரோகியான கதை" என்றொரு கட்டுரையை எழுதியுள்ளார். இது ஒன்றும் அரசியல் ஆய்வுக் கட்டுரை கிடையாது. இதுவும் பா.ராகவன் எழுதுவதைப்போல ‘புலனாய்வு’க் கட்டுரைதான். சை. பீர்முகம்மது கருணாவைப் பாரத்தபோதே மின்வெட்டும் நேரத்தில் கருணா நம்பிக்கைக்குரிய மனிதர் அல்ல என்பதைக் கண்டுபிடித்துவிட்டாராம். பன்னாட்டு விமானநிலைய சோதனைகளின்போது நூற்றுக்கணக்கான காவற்துறையினரையும் அதிநவீன கருவிகளையும் இனிப் பயன்படுத்தத் தேவையில்லை. சை. பீர்முகம்மதுவை வாயிலில் நிறுத்தி வைத்தால் போதும். தீவிரவாதிகளை மின்வெட்டும் நேரத்தில் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்.

கட்டுரையில் பீர்முகம்மதுவின் கண்டுபிடிப்புகளைப் படித்தால் பிரபாகரனே அதிர்ச்சியடைவார். மட்டக்களப்புக் கட்டளைத் தளபதி கண்ணன் அல்லது கர்ணன் என்றொரு கற்பனைத் தளபதியை உருவாக்கும் சை.பீர்முகம்மது அந்த இல்லாத தளபதி உடைவுக்கு முன்னமே கருணாவால் கொல்லப்பட்டார் என்றொரு செய்தியைச் சொல்கிறார். இந்த முழுப்பிழையான தகவலைக் கூட விட்டுவிடலாம். கிட்டுவும் புலேந்திரனும் குமரப்பாவும் வந்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்ததால் அவர்கள் கப்பலை வெடிக்க வைத்து ஒருசேர இறந்தார்கள் என்ற ஒரு தகவல் போதாதா சை. பீர்முகம்மதுவின் புலனாய்வுத் திறமைக்கு. பன்னாடை! பன்னாடை!!
ஷோபா சக்தி
தொடர்ந்து படிக்க...http://www.satiyakadatasi.com/

காட்டிக்கொடுக்கும் கருணா - ஒரு போராளி துரோகியான கதை


முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின்இ செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில்இ 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமைஇ துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமைஇ விவேகம்இ போர்த்திறன்இ விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறைஇ மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்புஇ அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.

சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.

லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 - 95இல் முல்லைத் தீவுஇ ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகுஇ பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

யு9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகுஇ நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவாஇ நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணாஇ பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.

வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.

இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றிஇ கருணாவின் அர்ப்பணிப்புஇ வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்துஇ பொறாமையால்இ கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.

இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.

கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.

இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுதுஇ கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.

காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர்இ மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.

கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறைஇ மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டுஇ புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.

பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.

பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.

கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம்இ பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணாஇ பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும்இ கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.
தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.


சை. பீர்முகம்மது - நன்றி:காலச்சுவடு

Friday, April 10, 2009

எனக்கும் நுண் அரசியல் - நுண் முரண்பாட்டு அரசியல் - எதிர் அரசியல் தெரியாது

ஒவ்வொரு நவீன கண்டுப்பிடிப்பின் பயன்பாட்டிலும் நன்மையும் தீமையும் அடங்கியிருக்கிறது, ஏதேன் தோட்டத்து நடுமரம்போல. தீமை என்று வரும்போது அது வேரூன்றி தடித்த வேர்களை மேல்பரப்பும் போது அத்தீமையினை அழிக்க முற்படும் முயற்சிகள் பெரும்பான்மையாக தோல்வியில் முடிகின்றன அல்லது பெருஞ்சேதம் விளைவிக்கின்றன. இன்று தென்கொரியாவின் 'தெபோடாங்- 2' போல. நாளை ஒரு நாள், விஷக்காற்று பரப்பப்பட்டு மூன்றில் ஒரு பங்கின் உலக மக்கள் சித்திரவதையின்றி - கத்தியின்றி இரத்தமின்றி சுலபமாக கொல்லப்படலாம். ஒரு காலகட்டத்திற்குள் மட்டும் (அநேகமாக 100 ஆண்டுகள்) இங்கேயும் வெளிமண்டல கவசங்களை மனிதர்கள் அணிய நேரிடலாம்.

இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாதே என்ற போராட்டத்தில்தான் சமூகநலவாதிகள், மனிதாபிமான அறிவுஜீவிகள் அரசை வற்புறுத்தி வற்புறுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிற நவீன கண்டுப்பிடிப்புகளின் நன்மைகளுக்கு எதிராக செயற்படும் தீமை செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும், தண்டித்து மற்றவர்களுக்கு பயத்தை உருவாக்கியும் பத்துகட்டளைகளைப் போன்றதொரு கட்டமைப்புகள் பிறப்பிக்கின்றன.

மலேசியாவில் இணைய - வலைப்பக்கங்களின் குற்றங்கள் அரசியல் ரீதியாக 'அளவு மீறப்படுகின்றன' என்று கருதிய அரசு, உடனே அதனை தடுத்து நிறுத்தவும் அதற்கு காரணமானவர்களை பிடித்து தண்டிக்கவும் செய்கின்றது. (உதாரணமாக ராஜாபெட்ரா)

'அல்தான்துயா என்ற பெண்ணை கொன்ற பாவிகளை நரகத்திற்கு அனுப்புவோம்' என்று வலைப்பக்கத்தில் எழுதிய காரணத்திற்காக ராஜாபெட்ராவின் வாழ்வு சற்று அலைக்கழிக்கப்பட்டது என்றுச் சொன்னால் உண்மைதான். உண்மைக்காக போராட முன்வருபவர்கள் சொகுசான - அமைதியான - பேரோடும் புகழோடும் வாழ்ந்தாக நான் படித்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இருந்த சொகுசான வாழ்வை, நான்கு தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் உத்திரவாதத்தை இழந்து நின்றவர்களைத்தான் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.

அந்த போராட்டமான வாழ்க்கைப் பாதையானது முற்புதரும், கற்குவியலும் நிறைந்தது. அதன் மேல் வெறுங்காலால் நடக்கும் நிர்ப்பந்தம். பிணவாடைகளின் மத்தியில் சுவாசிக்கும் சூழல். சுற்றிலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவனின் வாழ்வு அப்படியானது. திடீரென கல்லெறிவார்கள். கார் கண்ணாடியை உடைப்பார்கள். மனைவியின் முன்னாலேயே குடலை உருவி வெறியுடன் வெற்றிச் சிரிப்பை காட்டிச் செல்வார்கள். ஆகவே, திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டவர்கள் உண்மை போராட்டவாதியாக உருவெடுப்பதில் அதிகச் சிரமம் உண்டு. அதிக இழப்பு உண்டு. அதிக வேதனை உண்டு. (இப்போது ஹிண்ட்ராப்பின் தலைவர்கள் பலரை இப்படி யோசிக்க வைத்துவிட்டது.)

போராட்டத்திற்குள் நுழைந்த பிறகு, போராட்ட குரலை மட்டும் நம்பியிருக்காமல் நேரடி சந்திப்புகளையும் நம்பியிருக்காமல் எழுத்து ரீதியிலும் பத்திரிகையையோ, அகப்பக்கத்தையையோ கையாள வேண்டியுள்ளது. பராதியாரின் படைப்புகளை ஆய்வு செய்தபோது சமூக போராட்டத்தினையே அடிப்படையாக வைத்துக்கொண்டிருந்ததை அறிய முடிகிறது. மஹாத்மா காந்தி, போராட்டத்தை முடித்துக்கொண்ட பிறகு புத்தகம் எழுதவில்லை. சமூகத்திற்காக, நாட்டிற்காக போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் புத்தகத்தையும் எழுதினார். கலைஞர் கருணாநிதி எழுத்தாளரே அல்ல என்று சொன்னால் எப்படி நமக்கு சிரிப்பு வருமோ அப்படித்தான் மஹாத்மா காந்தி எழுத்தாளரே அல்ல என்று சொல்லும்போது சிரிப்பு வருகிறது. சத்திய சோதனை என்ற புத்தகம் மட்டுமே நூறு புத்தகங்களுக்கு சமம். (இந்த நூறு புத்தகங்கள் படடியலில் அம்புலிமாமாவையும் ராணிமுத்துவையும் இந்தியன் மூவிசையும் சேர்த்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

இறுதிவரை போராட்டத்தில் உண்மையாக இருப்பதும் கூட ஒரு போராட்டம்தான். உதாரணமாக, டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக பதவிறே;ற முதல் நாளிலேயே ஹிண்ட்ராப்பின் இருண்டு இசா கைதிகளை விடுதலையாக்கினார். விடுதலை செய்ய வேண்டுமென்றால், எல்லா ஹிண்ட்ராப் கைதிகளையும் அல்லவா விடுதலையாக்கியிருக்க வேண்டும். ஏன் அந்த இரண்டு பேர் மட்டும்? விடுதலையாக்க அதிக நியாயங்கள் பெற்றவர்கள் இருவர்.
1).மனோகரன் - சிறையிலிருந்துக்கொண்டே தேர்தலில் ஜெயித்தவர்.
2).உதயகுமார் - அவசிய - அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்.

இவர்களை அல்லவா அரசு விடுதலையாக்கியிருக்க வேண்டும். ஏன் அவர்கள்? ஒரு வதந்தி பரவியிருக்கிறது. வதந்தி என்றாலே அதனை நாம் நம்ப வேண்டாம் தானே. ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. 1931ல் 'ஜாலியன் வல்லாபாக்' போராட்டதின் நிமித்தம் பகவத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன் அவர், ஆங்கிலேயே மகாராணி அரசுக்கு தான் இனி போராட்டவாதியாக இருப்பதில்லை, மன்னித்து விடுதலையாக்குங்கள் என்ற அவர் அனுப்பிய வாக்குமூல கடிதத்தை எப்படி நம்புவது? இதனை அரசியல் விமர்சகர்கள் மூன்று விதமாக கூறுகிறார்கள்:

1.இதுவொரு அரசியல் தந்திரம். (எப்படியாவது விடுதலையாகி மறுபடியும் போராட வேண்டும் என்ற நோக்கம்)
2.அந்தமான் சித்திரவதையும் வேதனையும் அப்படி எழுத வைத்திருக்கக் கூடும்.
3.அக்கடிதம் இட்டுக்கட்டியது, போலியானது. அந்தமான் சிறையில் காகிதமும் பேனாவும் பென்சிலும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

இந்த காரணங்களில் முதல் காரணத்தை விடுதலையான அந்த இருவருக்கு ஒப்பிடலாமா? அப்படியே இருந்தாலும் மற்ற தோழர்கள் சிறையில் இருக்க, மேள தாளத்தோடு ஹிண்ட்ராப் குழுவினர் அவ்விருவரையும் வரவேற்றுச் சென்றது ரொம்பவே ஓவர்.-நானும் ரொம்பவே அறுக்கிறேனோ...

2.கோமளா - குமார் - அந்தோனி - தமிழன்பர் யாவரையும் சந்திக்க நானும் தயார். நீங்கள் நியமிக்கும் நாளில் நான் ஓய்வாக இருக்க நேர்ந்தால் சந்திப்பு நிச்சயம். (உங்கள் யாவரின் எழுத்து நடையும், எழுத்துப் பிரயோகங்களும் நீங்கள் ஒருவரே என்று சுட்டிக்காட்டுகின்றன. இது உண்மை இல்லை என்று நேரில் நிரூபியுங்கள்.)

3.உண்மையாக, எனக்கும் நுண் அரசியல் - நுண் முரண்பாட்டு அரசியல் - எதிர் அரசியல் தெரியாது. ஆனால், சொல்லப்பட்ட விஷயங்களில் இவை இல்லை என்பது மட்டும் தெரியும். (அ.மார்க்ஸ், பிரேம் - ரமேஸ் ஆகியோரின் அனைத்து புத்தகங்களையும் இன்னும் படித்து முடிக்கவில்லை. முன்பு ஆங்கிலத்தில் பின் நவீனமும் அதிநவீனமும் படித்தது ஒன்றும் புரியாமல் இருந்தது. அவை உயர்ரக இலக்கிய ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருந்ததால் ஒரு வெங்காயமும் புரிந்திடவில்லை. ஒருவேளை உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வாய்ப்புண்டு.

4.நாஸ்டர்டாமுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன கொழுப்புள்ள வார்த்தைக்கு மருந்து: தயவு செய்து அப்புத்தகத்தை படித்துவிட்டு வந்து விவாதிக்கவும்!

5.சாத்தானின் வேதங்கள், வெட்கம் ஆகிய புத்தகங்களை எழுதியவர்களையும் மதம் சம்பந்தப்பட்டுள்ளதால் எழுத்தாளர்கள் இல்லை என்பீர்களோ.....

6.'அடிமுட்டாள்தனமாக சொல்லியிருக்கிறீர்கள்' என்ற சொற்பிரயோகம் - 'பிறரை முட்டாள் எனும் அடையாளம் காட்டும் அதிபுத்திசாலித்தனம்'என்று அர்த்தப்படுமா? அப்படியா!! -பிறரை அல்ல@ ஒருவரை!-நீ முட்டாள் என நேரடியாக தாக்கவில்லை. சொல்லப்பட்ட விஷயம் முட்டாள்தனமாக இருக்கின்றதே என்றேன்.-மனம் புண்பட்டிருக்கும் என்று இப்போது உணர்வதால் மன்னிப்பு கேட்கிறேன.

7.நான் மதிக்கும் மனிதர் ஒருவர் கூறினார், "நாங்கள்தான் முன்பு சர்ச்சை செய்து எழுத்தில் மோதிக்கொண்டோம், அடித்துக்கொண்டோம். இப்போது நீங்களுமா? நான் மற்றவர்களிடம் 'இன்றைய இளைய தலைமுறை ஒற்றுமையாக இருப்பதை பாருங்கள.; நம்மைப் போல் அடித்துக் கொள்வதில்லை' என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், இப்படி செய்துவிட்டீர்களே..." என்று சொல்லி அங்கலாய்த்துக்கொண்டார். உண்மைதான். யாருடைய கண்பட்டதோ... நாங்கள் என்ன ஜென்ம விரோதிகளா? முதுகில் குத்திய துரோகிகளா? நாங்கள் அடித்துக்கொள்வோம், மறுநாள் கைகுலுக்கிக் கொள்வோம் என்று சொல்லி சமாளிக்கலாம் தான். அவர் மனம் வருத்தமடையாதவாறு என் வார்த்தைகளை உபயோகித்துக்கொண்டேன். இலக்கிய சர்ச்சை என்பது அவரவர் முன் வைக்கும் சொற்களைப் பொறுத்துள்ளது.

-மஹாத்மன்.

Thursday, April 9, 2009

சே குவேரா எழுத்தாளரா?

அனைவருக்கும் வணக்கம்,
சே குவேரா எழுத்தாளரா என அன்பர் வினவியிருந்தார்.நேரம் இருப்பின் அவருடைய 'மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்' மற்றும் 'பொலிவிய நாட்குறிப்புகள்' வாசிக்கவும்.லோர்காவிலும் நெருதாவிலும் திளைத்தவர் 'சே'.இலக்கிய வாசிப்பு அவர் உவந்து ஏற்ற பணி.போராட்ட்வாத உடலால் இலக்கிய உயிரை வலிந்து கொன்றவர்.முற்போக்கு எழுத்துக்க்ள் பெரிதும் விதந்தோதும் நேரிடையான எழுத்து முறையை விரும்பினாலும் , வாழ்வு அவர் முன்னே வைத்திருந்த சவால்களும்,இள வயது முதல் விடாமல் தொடர்ந்த நோய்மையின் வாதையும் ஏற்படுத்திய மனசிக்கல்கள் குறித்து அவர் தாய்க்கு எழுதிய கடிதங்களில் உள் உறையும் இலக்கிய தரம் நல்ல வாசகர்கள் உடனே அடையாளம் கண்டு கொள்வர்.முதலாளிய கணவாயின் கோரப்பிடியில் விழிப்பிதுங்கி துடிக்கும் இன்றைய உலகத்தில் 'சே' மறுவாசிப்புக்கு மட்டுமல்ல தொடர்வாசிப்புக்கும் உட்படுத்த வேண்டியவர்.
அன்புடன்,
சு.யுவராஜன்.

Wednesday, April 8, 2009

சப்பென்று ஆக்கிவிட்டீர்கள்!

வணக்கம்.

இவ்வளவு விவாதங்களும் கருத்துக்களும் தெரிவித்த நிலையில் என்னையே நான் இல்லை என்று சொல்லி, எல்லாவற்றையும் சப்பென்று ஆக்கிவிட்டீர்கள். பிறகு இவ்வளவு விவாதித்து என்ன பயன்?

மஹாத்மன் அவர்கள் என்னைச் சந்திக்க நேரும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது அப்பொழுது உங்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்வீர்கள் எனத் தெரியவில்லை. விரைவில் கே.பா தொடங்கும் "ஒரு கோப்பை தேநீர்" கலந்துரையாடல் நிகழ்விற்க்கு தலைநகரம் வரும்போது நான் உங்களைச் சந்தித்து என்னை வெளிப்படுத்திக் கொள்ள நான் தயார். இப்பொழுது இதுதான் என்னை நான் நிருபித்துக் கொள்ள் வழி.

அதென்ன கணினியில் முகம் தெரியாது என்பதற்காக இப்படி என்னையே நான் இல்லை என்றும் என்னையும் குமார் என்பவரையும் இணைப்பதும். . என்னாப்பா இது? வேடிக்கை...

இனி எப்படி நான் விவாதிப்பது?

யார் அந்த மஹாத்மனின் நண்பர்கள்? அவர்களை அஞ்சடிக்குள் வரச் சொல்லுங்கள். பேசலாம். எப்படி என்னைப் பற்றி தெரிந்து கொண்டார்களென தெரிந்து கொள்ளலாம்.

சரி. சீ.முத்துசாமி அவர்கள் அவருடைய கடித்தத்தின் கடைசி பத்தியில் மிக தேளிவாக நிதானமாகப் பேசியுள்ளார். மிக்க மகிழ்ச்சி. எனக்கென்று ஒரு கேள்வி. யார் தான் இங்கு பரிப்பூரணம் சார்?

எல்லாரிடமும் சிறு சிறு குறைபாடுகளும் பலவீனங்களும் உண்டுதானே? உங்களிடமும் சில பலவீனங்கள் இருக்கத்தானே செய்யும்.

ஒரு அப்பாவின் ஆதங்கத்துடன் செயல்படும் நீங்கள், ஏன் இப்படியொரு கேலியும் கிண்டலும்? இதைத்தான் நான் கேட்கிறேன். அப்பா இப்படி கேலியும் கிண்டலும் அடிக்கலாமா?

ஒரு மகனை அரவனைப்பதும் இன்னொரு மகனை புறக்கனிபதும்தான் அப்பாவின் குணமா? யாரையும் இங்கு திருப்திப்படுத்த முடியாத நிலைதான் இங்கு எல்லோருக்கும். எல்லாம் வேளைகளிலும் பிறர் நாம் நினைப்பது போல இருப்பதில்லை. அவரவர் பாடு அவரவருக்கு. அவர்களின் வாழ்வை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்:. அதில் குற்றம் கண்டறிந்து அதைக் குறைவாக மதிப்பிடுவது நாம் பாடு. இதற்கிடையில் இதையெல்லாம் ஒரு புறந்தள்ளிவிட்டு இலக்கியத்தை வளர்க்க முயலலாம்.

எல்லோரையும் நாம் பொருட்படுத்திக் கொண்டு விவாதிக்க எதிர்வினையாற்ற தொடங்கிவிட்டால், படைப்பிலக்கியத்தை வளர்ப்பது யார்?

கோமளா

Tuesday, April 7, 2009

நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலும் ஒரு கோப்பை தேநீரும்

'அநங்கம்' இலக்கிய வட்டம் மிக விரைவில் இயங்கவுள்ளது. அநங்கம் இதழின் ஆசிரியர் குழுவும் அதன் சார்ந்த இளைய எழுத்தாளர்களும் ஒன்றாக இணைந்து இலக்கிய வட்டத்தை வளர்க்க முடிவெடுத்துள்ளோம்.

முதல் கட்டமாக "ஒரு கோப்பை தேநீர்" என்கிற இலக்கிய கலந்துரையாடல் திட்டம் வெகுவிரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் வழி பல இளம் எழுத்தாளர்களை அடையாளம்காணவும், நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த அநங்கம் இலக்கிய வட்டம் துணைப்புரியும்.

ஒரு கோப்பைத் தேநீர்

நாட்டின் மூத்த எழுத்தாளர்களுடன் ஒரு நாள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களுடன் அன்றைய பொழுதை ஒரு கலந்துரையாடலின் வழியாக வழிநடத்திச் செல்ல வகைப்படுத்தியுள்ளோம். அவர்களுடன் இருக்க போகும் அந்த ஒரு நாளில் குறிபிட்ட அந்த மூத்த எழுத்தாளரின் அனுபவங்களையும் அவரின் வாசிப்பு அனுபவங்களையும், நவீன இலக்கியம் குறித்த அவரின் புரிதல்களையும் மேலும் அவரின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல்களையும் இருவழி தொடர்பாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். ஆர்வமுள்ள இளம் வாசகர்கள், எழுத்தாளர்கள் இதில் ஈனைந்து கொண்டால் இந்தத்திட்டத்தை மலேசிய முழுவதும் கொண்டு செல்லலாம். இப்போதைக்கு 10 பேர் அடங்கிய ஒரு குழு தயாராக உள்ளது. விரைவிலேயே ஒரு கோப்பை தேநீர் தொடங்கப்படும். நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலாக வாசிப்பின் தனித்துவத்தை உணர்ந்து கொள்ள இந்தக் கலந்துரைடாடலின் வழி பல மூத்த எழுத்தாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாட இதுவே வாய்ப்பு.

ஜூன் மாதத்தில் 8ஆம் திகதி தொடங்கி 12ஆம் திகதிவரை எங்கள் ஒரு கோப்பைத் தேநீர் கலந்துரையாடல் வட்டம் கலந்துரையாடலைச் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கலந்துரையாடலில், பிரபல தமிழக எழுத்தாளர்கள் கோணங்கி, அய்யப்பன் மாதவன், நவநீதன், மைஅறை இதழாசிரியர் என்று பெரிய வட்டத்தில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்த்தப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர் இந்தில் கலந்து கொள்ளலாம். இலக்கிய பகிர்வாக மட்டுமே எளிமையான முறையில் இந்தச் சந்திப்பு நடைபெருவதோடு வாசிப்பைப் பெருக்கிக் கொள்ள தரமான இலக்கிய புத்தகங்களையும் சென்னையில் வாங்கிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு:
அநங்கம் இதழாசிரியர்:
கே.பாலமுருகன்
016-4806241 (bala_barathi@hotmail.com)

Monday, April 6, 2009

2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன கவிஞருமான
"எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய
கலந்துரையாடல்"
நாள் : 12.04.2009 (ஞாயிறு)
இடம் : கூலிம் தியான ஆசிரமம்
நேரம் : மாலை மணி 7.30க்கு
எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின் இலக்கிய தேடலை விரிவுப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் உயிரெழுத்துப் பதிப்பகத்தின் வெளியீட்டில் வெளிவந்த புத்தகங்களும் நிகழ்வில் கண்காட்சிக்கு வைக்கப்படும். மேலும் “உயிர் எழுத்து” இதழைப் பெற விருப்பம் உள்ளவர்கள் சந்தா செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
மேல் விவரங்களுக்குத் தொடர்புக் கொள்ள : கே.பாலமுருகன்

முகமூடிகள் உலகம்

அஞ்சடிக்காரர்களுக்கு வணக்கம்.

நலம்.நலமறிய ஆவல்.

இன்று உலகம் திருட்டு உலகமாகி விட்டது.போலிகளின் உலகமாகி விட்டது.முகமூடிகளின் உலகமாகி விட்டது.எழுத்தாளர்கள் நல்லவர்களா என்ற கேள்வி எழுமானால் நிச்சயம் சொல்லலாம் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்ற மிக எளிதான பதிலை... எந்த எழுத்தாளர்கள் நல்லவர்கள் என்றால் இவர்கள்தான் என மிக அப்பட்டமாக எவரையும் சுட்ட முடியாது. ஏனெனில் ஏற்கனவே கேவலத்தின் கேவலமாகி விட்ட இந்த உலகம் புதிதாக வேறு மேலும் கேவலமாகிக் கொண்டிருக்கிறது.

ஒருவரின் கேள்விக்கு அவர் இல்லாமல் இன்னொருவர் பதில் சொல்வதே அநாகரீகம் என்றாகி விட்ட நிலையில், அவருக்கான கேள்வியை அவர் இன்னொருவரின் பெயரில் பதில் சொல்லி, பின்னர் மூலக் கேள்வியைக் கேள்வி கேட்பதுமிகவும் மலிவானது. இவை எல்லாம் மிகவும் அடிப்படையான தத்துவங்கள்.

இந்த கருத்தோடு நாம் அஞ்சடி முன்வைக்கும் ஒரு முக்கிய விவகாரத்தை விவாதிக்கலாம். வெவ்வேறு பெயரில் ஒரேநபர் எதிர்வினை ஆற்றுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால் அள்ளி வீசும் வெறும் குற்றச்சாட்டுகளால் மட்டும் ஓர் எழுத்தாளரை அதுவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள பாலமுருகன் போன்று ஆளுமை படைத்தவர்களை வெல்ல முடியாது.யார் யார் பெயரில் எல்லாம் எழுகிறார்கள் என்பது முக்கியமான ஒன்றல்ல. அவ்வகை பதில்களுக்கு எதிர்வினை ஆற்றாது புறக்கணிப்பதைத் தவிர வேறு சிறந்த எதிர்வினை இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு.

இதில் எல்லையைக் கிழித்து ஆய முற்படுகிறார்கள் சில முகமூடி பையல்கள். படைப்பை அல்லது நேர்மையான விமர்சனத்தை முன்நிறுத்துபவர்களுக்கே மதிப்பு.

இங்கு விவாதம் செய்ய எனக்குத் தெரிந்து அனைவரும் தயார்.ஆனால் முகமூடிகளை கழற்றி எறிந்து விட்டு,துணிச்சலுடன் வந்தால் மட்டும் போதும்.

சாரங்கன் என்பவர் யார் ? சீ.முத்துசாமி அவர்களை விமர்சிக்கும் போது மட்டும் இந்த பெயர் எப்படி உதிக்கிறது? படைப்பு ரீதியாக இவரை நாம் இதுவரை சந்தித்ததில்லை.படைப்பாளி என்ற நிலையில் இல்லாமல், தீவிர விமர்சகர் என்றால் இதுவரை, இத்தனை காலம் எங்கு ஒளிந்து கொண்டு எதை எழுதிக் கொண்டிருந்தார்? சுங்கை சிப்புட் என்று சொல்கிறீர்கள்.நானும் உங்கள் ஊர்தான்.21 ஆண்டுகாலம் வாழ்ந்தேன் டோவன்பி கித்தா காட்டில். இன்று தலைநகர் காட்டில். எனது அப்பா அம்மா இன்றும் அங்குதான் இருக்கிறார்கள். 21 வயதில் காணமல் போன சிவம் என்ற சிவா அங்குதான் இன்னமும் அலைந்துக் கொண்டிருக்கிறான். சுங்கை சிப்புட்டில் இவ்வளவு தீவிர எழுத்தாளர் இருக்கிறார், அவர் அடுத்தவரைக் குறிப்பாக இந்நாட்டின் எழுத்துலக முன்னோடியும், எனக்கு மிகவும் பிடித்தவருமான ( என்னைப் போன்று பலருக்கும் அவரைப் பிடிக்கும், அவருக்கு என்னைப் பிடிக்குமா என்றெல்லாம் சத்தியமாகத் தெரியாது) சீ.முத்துசாமி அவர்களைப் பற்றி மட்டும் அங்கலாயிக்கும் விமர்சகராக இருப்பது ஒருவகையில் பெருமைதான். சீ.முத்துசாமி சார் உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வைத்தவர்..குறிப்பிட்ட ஓர் எழுத்தாளருக்கு மட்டும் விமர்சகராக இருப்பது எழுத்தாளனுக்கு கிடைத்த பாக்கியம்தானே...

சாரங்கன் நீங்கள் யார் ? என்னைத் தெரியுமா ? சுங்கை சிப்புட்டில் எந்த இடம் ? சுங்கை சிப்புட் என்றால் முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாரே டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அவர்களின் தொகுதிதானே...அதுதான் வட சுங்கை சிப்புட்... எழுத்தாளர் பூ.அருணாசலம் சங்கநதி ( sungai = நதி siput = சங்கு ) என்றுதான் எழுதுவார்... அந்த ஊர்தானே. ஏனென்றால், தென் சுங்கை சிப்புட் என்று ஓர் ஊரும் உண்டு வெள்ளி மாநிலத்தில்.

நீங்கள் தீவிர விமர்சகராக இருக்கும் போது, ஏன் சீ.முத்துசாமி அவர்கள் பற்றி மட்டும் எழுத விரும்புகிறீர்கள். அவ்வளவு காதலா ? என்போன்று வளரத் துடிக்கும் பாலக எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தும் விமர்சிக்கலாமே...நான் தயாராக இருக்கிறேன். என்னை விமர்சித்தால் அது எனது பாக்கியம் அல்லவா ? அல்லது சுங்கை சிப்புட்டில் தாமான் துன் சம்பந்தனில் ஏதாவது ஒரு கடையில் உங்களின் தரிசனத்துக்கு வாய்ப்பு அளியுங்கள். மகிழ்ச்சி அடைவேன்.

குமார், அந்தோணி என புதிய இணைய எழுத்தாளர்களைச் சந்திக்கும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் தீவிரமாக விவாதிப்பதற்கு உங்களைப் போன்ற புதிய அசல் ரத்தங்கள்தான் தேவை இன்றைய தேதிக்கு. நாம் இணையத்தில் மட்டுமே சந்தித்துக் கொண்டு, சண்டையிட்டுக் கொள்ளாமல், நேரடியாகவும் சந்தித்து, சி.கமலநாதன் கவிதைகள் முதல் பூங்குழலி கவிதைகள் வரை விவாதிக்க வேண்டும். கதை என்றாலும் சம்மதம்தான். ரெ.கார்த்திகேசு கதைகள் முதல் கே.பாலமுருகன் கதைகள் வரை விவாதிக்கலாம். ரெ.காவின் 'மகேஸ்வரியின் பிள்ளை' எனக்கு அவர் கதைகளில் பிடித்தமான கதை.பாலமுருகனின் கதைகளும் பிடிக்கும்.ஆகக் கடைசியாக அவரது 'பிற்பகல் வெயில்' வாசித்தேன். நுட்பமான அக்கதை குறித்து அவரிடமும் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் உண்மை இதுதான். தீவிரமாக, நேர்மையாக விவாதிப்பதற்கான கூட்டம் மிக சிறியது. யாரோ ஒரு பேரறிஞர் கூறியது போல், பத்து பேர்தான் இருப்பார்கள். சுற்றி சுற்றித் தேடுங்கள்...

மேலும் சிலவற்றைச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.ஆனால், நான் வல்லினத்துக்கு ஒரு கட்டுரை தர வேண்டும். அதை எழுதப் போகிறேன் இப்போது. அக்கட்டுரை நிறைவடைந்ததும் வருகிறேன் மீண்டும்.

நன்றி அஞ்சடி
பா.அ.சிவம்

Saturday, April 4, 2009

100 தலை பிரம்மாவின் தலைமறைவு வாழ்க்கை

பாடாங்செராய் குமார் வடமொழி செவ்வியல் புராணங்கள் வேதங்கள் அனைத்தையும் கறைத்துக் குடித்து செரிமானம் ஆகாமல் அலைந்து திரிவது புரிகிறது. நம்மால் கடலின் ஆழத்தை ஒத்த அதன் சாரத்தை உள்வாங்கவோ ஜீரணிக்கவோ இயலாது. ஆனாலும், அதனை உண்டு ஜீரணித்தவர் சொல்லும்போது, அது ஆதாரபூர்வமான செய்தியாக இருக்கும்பட்சத்தில், அதனை ஏற்பதே அறிவுடைமை.

அது சரி குமார். அறிவுபூர்வமான ஒரு வார்த்தை வைத்துவிட்டு, அடுத்த பத்தியிலேயே அந்த அறிவு நிலைக்கு சம்பந்தமில்லாத வகையில் எதற்கு உளறி வைத்துள்ளீர்கள்?

உமது குருநாதரைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லையே? அப்புறம் எதற்கிந்த வரிந்துகட்டல்? ஒருவேளை உங்கள் அனைவருக்குமே அவர் ஒருவர்தான் குருநாதரா? ஆமாம் என்றால் உங்கள் அனைவருக்குமான எனது பதில் இதுதான்.... மஹாத்மன், ஒரு மாமாங்கத்திற்கு முன்பு, அவரது பெயரை பட்டவர்த்தனமாக அஞ்சடியில் போட்டுடைத்து வைத்த கடுமையான விமர்சனத்திற்கு, தனது சுய முகத்தைக் காட்டி, இதுநாள்வரை அவரிடமிருந்து எதிர்வினை ஏதுமில்லையே ஏன் குமார்? பயமா?

எல்லா தருணங்களிலும் எனது சுய அடையாளத்தோடு, யுத்தக்களத்தில் நிற்பவன் நான். என்னைப் பார்த்து பயமா என்கிறீர்கள்? அது உங்கள் குருநாதரைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியல்லவா? ஜோக் பண்ணாதீர்கள் குமார்? (குமார் என்பது உங்கள் சொந்த அடையாளம்தானே? அல்லது இதுவும் குருநாதர் காட்டிய வடூயா? அப்புறம், அதென்ன குமார் முடிக்கும்போது பி.எஸ்.வீரப்பா பாணியில் ஆ...ஆ...ஆ.. என்று ஒரு சவடால் சிரிப்பு. எடுபிடிகள், ஹி...ஹி...ஹி... என்றுதானே சிரிக்க வேண்டும். அதுதானே நடைமுறை. அதுதானே, அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சிரிப்பு வகை.

சாரங்கன் எனும் ஒரு பினாமிக்கு...என்ன சாரங்கன் அண்ணே? உங்களுக்கும் ஒரு ஈ மெயிலா. அதுவும் என்னைப்பற்றி? புரியவில்லையே? அந்த ஈ மெயிலில் பாதி பைத்திய நிலையில் தலையை விரித்துப்போட்டு என்பதாக என்னைப் பற்றி தாங்கள் வைத்துள்ள ஒரு குறிப்பு என்னை ரொம்பவும் கவர்ந்தது அண்ணாச்சி. காரணத்தோடுதான். மற்றவை அனைத்துமே. யாரோ ஒரு பாலகன் நான்கு நாட்கள் வெளிக்கு போகாமல் மூலச் சூட்டில் கக்கூசில் உட்கார்ந்து தம்கட்டி முக்கி முக்கி அவதிப்படுவது போன்ற வெற்று முணகல்களாக இருப்பதால், அதில் தாங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்பதே, என்ன கரணம் போட்டு பார்த்தும் பிடிபடவில்லை. வயதான அண்ணாச்சி தாங்கள்... கொஞ்சம் புரியும்படி இனி மேலாவது எழுதக் கற்றுக் கொள்ளுங்களேன்.

சரி அண்ணாச்சி. இந்த பைத்திய நிலைக்கு வருவோம். தாங்கள் இப்படி பேசுவது கொஞ்சங்கூட நியாயமில்லை அண்ணாச்சி. இரண்டு மாதத்திற்கு முன்புதானே உங்ளை சுங்கைசிப்புட் டிராபிக் ஜங்சரின் பார்த்தேன். ங்கே...ங்கே.... என்று ஒரு தகரக் குவளையை தட்டிக் கொண்டு நடுரோட்டில் நின்ற வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தீர்களே?
இப்போது சொஸ்தமாகிவிட்டதா அண்ணாச்சி? இருக்கட்டும், இருக்கட்டும். நல்லாருங்க. ஆனா, இப்ப அதெல்லாம் மறந்திட்டு, இப்படி உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தன பாத்து, ஑பாதி பைத்தியம்ஒ னு சொல்றது என்ன நியாயம் அண்ணாச்சி.

அப்புறம் இன்னொரு விஷயம் அண்ணாச்சி. அண்ணக்கி உங்கள சுங்கை சிப்புட் நடுரோட்ல பாத்த அதே 'கெட்டப்ல' இங்க எங்க ஊர் சுங்கைப்ப்டாணி சுப்ரமணியர் கோயில் ஜங்சன்ல, ஒரு எளவட்டம் கொஞ்சநாளா ங்கே...ங்கே..னு தரத்த தட்டிகிட்டு திரியுது. உங்களுக்கும் அதுக்கும் ஏதோ ஒறவா அண்ணாச்சி? இருந்தா சொல்லுங்க, ஒங்களுக்காக, அந்த இளந்தாரிக்கு புடிச்சிருக்கிற மனநோய சொஸ்தபடுத்தி உங்க ஊருக்கே அனுப்பி வச்சிடறேன். இதுக்காக நீங்க ஏதும் கைமாறு செய்ய வேணாம்.

அண்ணாச்சி, நீங்க மறுபடியும் டிராபிக் லைட்ல நின்னு ங்கே...ங்கேனு தகரத்த தட்டி ஊரக் கூட்டி வேடிக்க காட்டாம இருந்தா அது போதும். வணக்கம். வரட்டுமா அண்ணாச்சி.

கோமளா மற்றும் பிறருக்கும்.போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவது மாலை சால்வைகள் பெறுவது போன்றவற்றிற்கு ஒரு எதிர்ப்பாளன் போல சிலபேர் என்னை உருவகிக்கும் ஒரு முயற்சியின் நீட்சியாகவே உங்களுடைய கருத்தும் இருக்கிறது. 24 வயதிலேயே தமிழக குமுதம் இதழ் நடத்திய உலகளவிலான சிறுகதைப் போட்டியில் தென்கிழக்காசிய பகுதிக்கான போட்டியில் முதற்பரிசும், அதனைத் தொடர்ந்து, அதே எனது இரைகள் சிறுகதை, 1977 நவம்பர் மாதத்தில் அனைத்து தமிழக இதழ்களிலும் வெளிவந்த 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளிலும் சிறந்ததாக 'இலக்கியச் சிந்தனை' என்கிற மதிப்புமிக்க அமைப்பால் தேர்வு செய்யப்பட்டு பரிசும் வழங்கியது.அதே ஆண்டில் அதே அமைப்பு வெளியிட்ட அந்த ஆண்டின் மிகச் சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாக அதுவும் உள்ளது.சிறுகதையின் பிரம்மரிஷி என போற்றப்படும் லா.ச.ரா அவர்களின் சிறுகதையும் அதில் அடங்கும். அன்று அந்த ஜாம்பவான் நின்றிருந்த வரிசையில் நின்றிருந்தவன் இந்த மண்ணைச் சார்ந்த ஒரு 24 வயது இளைஞன்.

அதென்ன எனக்கான பெருமை மட்டுமா? இந்நாட்டு தமிழ் புத்திலக்கியத்திற்கு கிடைத்த பெருமையல்லவா? இது எப்படி சாத்தியப்பட்டது? ஒரு போட்டியில் கலந்து கொண்டதன் வடூதானே? எனவே, ஒரு படைப்பாளனின் வளர்ச்சியில், அதன் பங்கு என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான். எந்தக் காலத்திலும் அதற்கு எதிரானவன் அல்ல.நான் எதிர்ப்பது, அதனை மட்டுமே (பரிசு மாலை சால்வை) முன்னிறுத்தி, படைப்பாளன் மேற்கொள்ளும் சில சமரசங்களை. அத்தகைய ஒரு படைப்பாளனின் ஆளுமையில் நிகழ்த்தும் உடைவுகள் கணிசமானது என்பதை, எனது இந்த நீண்ட இலக்கியப் பயணத்தில் கூர்ந்து கவனித்து வருபவன் நான். எழுத்தாளன் என்பவன் அநியாயங்களுக்கு எதிரானவனாகவும் நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பவனாகுமே, உலகம் முழுக்க அறியப்பட்டுள்ளான். அவனது அந்த நிலைப்பாட்டை ஆட்டங்காணச் செய்துவிடும் சக்தி இவற்றிற்கு உண்டு. பரிசு மாலை சால்வை வேண்டாமென்பது எனது கட்சியல்ல. இலக்கியவாதிகள், அதனை மட்டுமே முதன்மைப்படுத்தி, இயங்கலாகாது என்பதே என் வாதம். அரசியல்வாதிகள் வேண்டுமானால், அதனை முதன்மைப்படுத்தி இயங்லாம். அது அவர்கள் இயல்பு. படைப்பாளன் அரசியல்வாதியல்ல. இருக்கவும் கூடாது. நமது இளம் தலைமுறை, அந்தப் பொறியியல் வலிய சென்று சிக்கும்போது ஒரு தந்தையின் ஆதங்கத்தோடு எச்சரித்து தடுக்க முற்படுகிறேன். இதைத் தவறான அர்த்தப்படுத்தலோடு இலக்கியத்திற்கு சம்பந்தமில்லாத, சில போலி இலக்கிய அரசியல்வாதிகள், திரித்துக்கூறி, குழப்பி, அந்த நெருப்பில் குளிர் காய்ந்து லாபமடைய முற்படுகிறார்கள்.

அஞ்சடியில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வாதப் பிரதிவாதங்களின் உள் சரடு அதுதான். இந்த இருவேறு சக்திகளிடையே நடக்கும் மல்லுக்கட்டல்தான். அது ம்டடுமே. எங்குமே எதிலுமே எந்தப் போராட்டத்திலுமே முதலில் போலிகளின் குரல் ஓங்கி ஒலிப்பது போல் தோற்றம் காட்டும். அது வெறும் தோற்றமே. இறுதியில் வென்று நிற்பதென்னவோ உண்மை மட்டுமே.
சீ.முத்துசாமி

Friday, April 3, 2009

இருக்கலாம் யார் கண்டது?!

அஞ்சடி, வணக்கம்.

திண்ணை தெரியும். அஞ்சடிக்கும் வந்துவிட்டீர்களா?

ஆண்கள் கதைப்பதற்கும் சண்டை போடுவதற்கும் தூற்றி காரி உமிழ்வதற்கும் ஏற்ற இடம்தான் இது. இப்போது தான் உங்கள் நாட்டில் ஆரம்பமாகி இருக்கிறதா?

கொஞ்சம் பகடி, நிறைய தூஷணங்கள், கொஞ்சத்திலும் கொஞ்சம் இடம்பெறுகிறது இலக்கிய விவாதம்!அநங்கம், மவுனம் என்ற ஒரு இலக்கிய இதழா? தமிழ் இலக்கியம் மலேசியாவில் ஒளிர்கிறதோ...

உங்களுக்குள் சண்டை. நாங்கள் வேடிக்கைப் பார்க்கிறோம். எங்கள் நாட்டை உலகம் வேடிக்கைப் பார்ப்பதை போல.இதில் கோமளா - குமார் இருவரும் ஒரே நபர் எனற சந்தேகம் வேறு..... தமிழன்பரும் அந்தோனியும் கூட ஏன் ஒரே நபராக இருக்கக் கூடாது என்ற கேள்வியும் கேட்பீர்கள்...

மன்னிப்பு கேட்ட பிறகு கே.பாலமுருகன் இந்த பெயர்களில் எழுதுகிறார்களோ.....கோமளாவைக் குறித்து குமார் கதைக்கும் வார்த்தைகளில் சந்தேகத்திற்கு இடம்கொடுக்கிறது.இருக்கலாம் யார் கண்டது?!

மஹாத்மன், உங்கள் 'கடவுள் கொல்ல பார்த்தார்' எப்போது வெளிவருகிறது?ம.நவீன், ஏதேனும் புத்தக வெளியீடு உங்களிடமிருந்து...?பா.அ.சிவமிடம் இருந்து.....

வனிதா கார்லோஸ்,
பாரீஸ்.

கெடுத்துக்கொள்ள வேண்டாம்...


எழுத்து மூலமாக எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் நீங்கள். வல்லினம் மூலம்தான் சீ.முத்துசாமி, மஹாத்மன். பா.அ.சிவம். கே.பாலமுருகன், சண்முக சிவா, மற்றும் பலரை நேரடி கதைப்பின்றி அறிந்துவைத்திருக்கின்றோம். ~அஞ்சடியை இன்றைய மலேசிய எழுத்தாளர்கள் அணுகிய விதம் பற்றிய எங்களது பார்வையை முன்வைப்பதில் எவருக்கும் சங்கடம் நேராது என நம்புகின்றோம். எல்லோரும் வேடிக்கைப் பார்த்து, நகைத்து. கேலிக்கு இடம் தருவதிலிருந்து விலகியிருத்தலும் அஞ்சடி சண்டைக்காரர்களாக நீங்கள் போய்விடக் கூடாது என்பதும் தான் எமது அதி முக்கிய நோக்கங்களில் ஒன்று.

-விவாதங்களுக்குரிய ஒரிஜினல் கட்டுரை எமது பார்வையில் (அஞ்சடியில்) கிடைக்கக் காணோம். ஆகவே, அந்த விவாதங்களுக்குள் நுழைய எமக்குத் தகுதியில்லை.

-கே.பாலமுருகன் தன் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டபடியினால் அதைக்குறித்து மேலும் கதைப்பது அநாகரீகம். (மஹாத்மன் அறிக)

-எல்லோரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பரிகசித்து, கிண்டலடித்துள்ளீர்கள். (ம.நவீன்-சிவம் இதில் மிகவும் குறைவான பங்கு வகித்திருக்கிறீர்கள்;, அலட்டிக்கொள்ளாத எழுத்துநடை).

-மஹாத்மனும் கூட தனிமனித தூற்றுதல் வேண்டாம், வேண்டாம் என்று எழுதிக்கொண்டே கொஞ்சம் குறைவாக, மறைமுகமாக, பதுங்கித் தாக்கும் பாணியை கையாண்டிருப்பது வெட்டவெளிச்சம். (இதன் மூலம் கடந்த-நிகழ்கால சில உண்மைகளின் நிழலாட்டங்களை காணக் கிடைக்கின்றன).

-சீ.முத்துசாமி விவாதங்களுக்குள் வராமல் கிண்டலுடனும் கேலியுடனும் கதைத்து சென்றிருப்பது ஆச்சரியம் தருகிறது. (ஆச்சரியம்-அவருடைய வல்லினத்தின் படைப்பு)

-கோமளா + குமார் உண்மையாக வௌ;வேறு நபர்கள் என்று அவர்களாகவே முன்வந்து தோன்றினால் மட்டுமே சாத்தியப்படும். இணையத்தின் மூலம் நாங்கள் வௌ;வேறானவர்பள் என்று சொல்லிக்கொள்வதில் மட்டும் நிரூபணமாகாது. கே.பாலமுருகன் அவர்களே மறுத்தாலும் கூட ~நான் அவன் - அவள் இல்லை என்று நிரூபிப்பது சாத்தியமன்று.

-இதுவரை யாருமே நுண் அரசியல் - எதிர் அரசியல் - நுண் முரண்பாட்டு அரசியல் என்ற விடயங்களை தொட்டு கதைத்தது கிடையாது.

- வளரும் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வலுவாக பதிக்கும் முயற்சிகளில் எமக்கு நம்பிக்கை உண்டு. உங்கள் மத்தியில் இருக்கும் ரெ.கார்த்திகேசு அவர்களையும் அவர் விஞ்சக்கூடும். எழுத்து காலத்தால் பேசப்படும். ஆகவே அந்தக் கவலை யாருக்கும் வேண்டாம.

- கோமளா - குமார் - அந்தோணி - தமிழன்பர் ஆகியோரின் எழுத்து நடுநிலை கொண்டிருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
-இனி எச்சில் தெறிப்பு சொற்கள் வேண்டாம்.

-எழுத்து விபச்சாரத்திற்கு அது கொண்டுபோய் விடும்.

-சீ.முத்துசாமி + மஹாத்மன் அவர்களுக்கு.வல்லினத்தின் படைப்புகள் மூலம் உங்களுக்கு இருக்கின்ற நற்பெயரை இந்த மாதிரி சிறுபிள்ளைத் தனமான சர்ச்சைகளில் ஈடுபட்டு கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஜெயமோகன் அவர்கள் எம்.ஜி.ஆரின் ஊனத்தை பரிகசித்தும் சாருநிவேதிதாவிடம் தர்க்கித்தும் தன் இமேஜை குறைத்துக் கொண்டது போல நீங்களும் குறைத்துகொள்ளும் போக்கில் வலிந்து போவானேன்?!

நன்றி. வணக்கம்.
வசந்தரூபன்
டொரண்டோ.

நாமெல்லாம் எங்கிருந்து முளைத்தோம்? மஹா-வின் சிறுமைத்தனம்

நண்பர் மஹாத்மன் அவர்கள் ஒருவேளை மனமுடைந்து போயிருக்கலாம். பலமுனை தாக்குதலால் உங்களுக்கு அளிக்கப்படும் கவனத்தைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சித்தான் படவேண்டும். அதற்காக நாங்கள் எழுதும் எழுத்துக்குப் பிறரைக் குற்றம்சாட்டுவது செம்ம காமெடி மச்சி!

நான் குமார்தான். பாடாங் செராய் வந்தால் என்னைத் தாராளமாகச் சந்திக்கலாம். நீங்கள் என்ன அரசியல்வாதியா நஸ்டஈடு கேட்டு என்னை வற்புறுத்த? நான் பயப்படப் போவதில்லை. வாருங்கள் பாடாங் செராயில் நல்ல காப்பி கடைகள் உள்ளன. உட்கார்ந்து பேசலாம்.

பதற்றமெல்லாம் ஒன்றுமில்லை. வேகமாக டைப் செய்யும் பழக்கம் என்பதால், ஆங்காங்கே எழுத்துப் பிழைகள். இந்த யூனிகோட் அடிக்க கொஞ்சம் சிரமமாக உள்ளது.

கோமளாக்கு: நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நாம் இருவரும் ஒன்றென்று தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் சொல்லியிருப்பதால், இங்கு இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு அனுப்பும் கருத்தும், நான் என் வீட்டில் இருந்து கொண்டு அனுப்பும் கருத்தும் எப்படி தலைநகர் மஹாத்மனின் நண்பர்களால் ஒன்றென்று கண்டுபிடிக்கப்பட்டது? கோமளா நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர் மஹா அவர்கள் உலகைக் கண்காணிக்கும் காமிரா ஒன்றை பொருத்தி "உலகைச் சுற்றி" கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை நாம் விவாதிக்கும் திறனைக் கண்டு இவர்களெல்லாம் எங்கேந்து முளைத்து வந்தார்கள், என்று மஹா சந்தேகப்பட்டிருப்பார். அவருக்கு விடை கிடைக்காத பட்சத்தில் யார் மீது குற்றம் சுமத்துவது என்று தெரியவில்லை. இருக்கவே இருக்கிறாரே தமது சர்ச்சைக்குற்பட்ட வரியால் உள்ளே வந்து மன்னிப்புக் கேட்டு விலகிய நண்பர் கே.பா. மீண்டும் வம்புகிளுத்து தனது அனுமானத்தால் மீண்டும் அவரை மன்னிப்புக் கேட்க வைக்க இதை ஒரு ஹாபியாக செய்து கொண்டிருக்கிறார் போல.

நாமெல்லாம் எங்கிருந்து முளைத்தோம்?

ஒருவேளை நாமெல்லாம் எதையும் வாசிக்காதவர்கள் என முடிவு கட்டிவிட்டார் போல. நாமும் மலேசிய வல்லினம் தொடங்கி இந்தியா உயிர்மை வரையிலும், ஜெயமோகன் தொடங்கி சொ.தர்மன் வரை வாசிக்கிறோம் என்று "தான் மட்டுமே ஜாம்பவன் என்று எண்ணிக் கொண்டிருக்கும்" அவர் மண்டையில் ஒலிக்கவில்லை போல.பா.மா என்று யாரைப் பற்றியோ வம்புகிளுத்து பேசிய இவர், அதைத் தொடங்கிய நவீனே மன்னிப்புக் கேட்டும், அந்த பா.மா வை உள்ளே இளுத்த மஹா அவர்கள் இன்னும் மன்னிப்புக் கேட்காததிலேயே, உங்களுக்கெல்லாம் தெரியவில்லையா? "மன்னிப்பு கேட்பது மகத்தான விஷயம் என்று சொல்லிவிட்டு , நன்றாக போய்க் கொண்டிருந்த விவாதத்தை தனிமனித அவதூறுகள் பக்கம் திருப்பிவிட்ட மஹா அவர்கள் எவ்வளவு பெரிய சிறுமையான மனிதர் என்று.

பல சாபங்களைச் சுமந்து திரியும் பரதேசியான (அவரே சொன்னது) மஹா அவர்களின் பேச்சில் எப்படி உண்மை இருக்கும்?

குறிப்பு: நண்பர்கள் சொன்னார்கள் என மஹா குறிப்பிடுவது அவரின் சுய அனுமானத்தின் மொத்த ரூபங்கள்தான் போல.

(பாடாங் செராய் நண்பர்களுக்கு, நீங்களும் அஞ்சடியில் பதிவிடுங்கள், பிறகு உங்களையும் என்னையும் ஒன்றென்று சொல்லி சப்புக் கொட்டுவர் ஒருவர் பல்லி மாதிரி)

குமார்
பாடாங் செராய்

Thursday, April 2, 2009

யார் எழுத்தளன்? மகாத்மா காந்தியா?

முதலாம் பரிசு இரண்டாம் பரிசு. . இதுவெல்லாம் ஒரு எழுத்தாளரை நிர்ணயிக்கும் பிம்பங்கள் அல்ல. பரிசும் போட்டியும் ஒரு எழுத்தாளருக்கு அடையாளம் கிடைக்கும்வரை சாத்தியப்படும் விஷயங்கள். தனித்த அடையாளங்கள் கிடைத்த பிறகு போட்டிகளில் பங்கெடுப்பதைக் குறைத்துக் கொள்வதே சிறப்பு என நினைக்கிறேன். இருந்தாலும் அது அந்த எழுத்தாளரின் விருப்பம். களம் இருக்கும்வரை போட்டி போட்டுப் பார்ப்பது தன் சுயம் சார்ந்தவை. அதைக் கேலி செய்ய பல பேர் கொளுப்பெடுத்து வந்தாலும் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாது களத்தில் ஒய்வில்லாமல் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

கடாரத்து கோ.புண்ணியவான் இந்த வயதிலும் பேரவைக் கதைகளில் பங்கெடுத்து பரிசு பெறுவது சிலருக்குக் கேலியாக இருக்கலாம். "என்னாடா இத்தன வயசாச்சி இன்னுமா போட்டில பங்கெடுக்கனும்னு" யாராவது சொல்லலாம். ஆனால் எந்த வயதில் என்ன செய்ய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் வாய் வலிக்க கத்திக் கொள்ளவும். அதனால் யாருக்கும் சிரமம் இல்லை.

மஹாத்மன் அவர்கள் தமது தர்க்க திறனால், பொய்யையும் தவறையும் கூட சாதித்துக் காட்டக்கூடியவர் என நினைக்கிறேன். உமது வாத திறமையால் "நாஸ்டர்டாம'தனத்தை இங்கு காட்ட வேண்டாம். இங்கு ஓடிக் கொண்டிருப்பது இலக்கிய விவாதம். உமக்கென்ன கொளுப்பா? பைபிள் விவாதத்திற்கு அழைக்கிறாய் பிறரை. தீர்க்கத்தரிசனம் சொல்பவர்கள் வேண்டுமென்றால் கடவுள் போல இருந்துவிட்டு போகட்டும், அவர்கள் எழுத்தாளர்கள் (அதுவும் எழுத்தின் வகையாக இருந்தாலும்) என்று புலம்ப வேண்டாம். மகாத்மா காந்தியைக்கூட எழுத்தாள்ர் என்று சொல்லிவிடுவாய் போல? அவர் சுதந்திர தந்தை. தமது எழுத்தை போராட்டத்திற்காக பயன்படுத்தியவர்.

பிழைப்பு நடத்த இதுநாள்வரையில் உமக்கு வழியில்லாதவரை. . நீ கடவுளின் எதிரி, படைத்தவனுக்குச் சவால் விடக்கூடிடவன் ஆனால் இப்பொழுது ஒரு பிழைப்பு கிடைத்த பின், சமூக சீர்த்திருத்தவாதி. நீ எழுதுக் கொண்டிருக்கிறாய் என்பதற்காக, சமூக சீர்திருத்தம், பிரச்சார வகையிலான எல்லாம் எழுத்தையும் யதார்த்த எழுத்து வகைக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. தமது எழுத்தின் மூலம் எல்லாம் சிபாரிசுகளையும் சமூகத்திற்கான ஒழுக்க தீர்மானங்களையும் சொல்லிக் கொண்டு இருப்பவன் எழுத்தாளன் என்கிற அடையாளத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

நீ வேண்டுமென்றால், உமது கதையின் கடசியில் "இதனால் நான் மக்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் எல்லோரும் கண்டிப்பாக நேர்மையாக இருக்க வேண்டும். , எல்லாரும் நாட்டின் இறையாண்மைக்காக போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டு நீயும் ஒரு எழுத்தாளன் என்று பிதற்றிக் கொண்டு இருக்கவும்.

வணக்கம்
அந்தோணி