Tuesday, March 31, 2009

இதனால் நான் மலேசிய எழுத்தாளர்களுக்குச் சொல்ல வருவது...

"இதனால் நான் மலேசிய எழுத்தாளர்களுக்குச் சொல்ல வருவது என்னவென்றால். . சாமியோ. . ஜனசக்தியுடன் (பாதியில் இணைந்து) இப்பொழுது ஒரு நாட்டாமை குறி சொல்கிறார் சாமியோ. . எழுத்து மரியாதை இழந்தவர்கள், மன்னிப்புக் கேட்காமல் விலகியவர்கள். . பரிசுகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள். . என்று எல்லோரையும் அடையாளம் காட்டி தான் சார்ந்தவர்களை தற்காத்து செல்லம் கொடுத்து வளர்ப்பவர் சாமியோ. . . பொது புத்தி சார்ந்து எல்லாம் வகையான பிரச்சாரத்திலும் இறங்குபவர் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் சாமியோ. . பைபிள் அல்குரான். . நாஸ்டர்டாம் என்று கலக்கிக் கொண்டிருக்கும் ஜாம்பவன் சாமியோ. . பற்றாததற்கு நம்மையும் அந்த விவாதத்தில் வரும்படி அழைப்புக் கொடுத்து, நாம் வராத பட்சத்தில் நம்மைக் கோழை என்று சாபம் விட்டு ஆத்திரப்படும் மலேசிய படைப்புலகின் மிகப் பெரிய தூண் சாமியோ.

"எழுத்தாளன் என்பவன் சமூக சீர்திருத்தவாதியோ அல்லது தீர்க்கதரிசியோ கிடையாது."

எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் மீட்சிக்காக எழுதுவது அது கொள்கை சார்ந்த பிரச்சாரத்தின் வகை. இதை ஒரு அரசியல்வாதிக்கூட செய்துவிடலாம். அப்படியென்றால் அவர்கூட எழுத்தாளராகிவிடுவார் உங்கள் பாணியில் சொல்லப் போனால். அரசியல் கிளைத் தலைவர்கள் ஒரு வசிப்பிடத்தின் மோசமான ககல்வாய் குறித்து மக்கள் படும் அவலத்தைப் பத்திரிக்கையில் எழுதி போராடுகிறார் என்றால், அவரும் ஒரு எழுத்தாளரோ? அப்பப்ப.. அப்படியென்றால் ஒவ்வொரு கிளைத் தலைவர்களும் எழுத்தாளர்களின் வகை போல. மகாத்மா காந்தியின் சுயசரிதையை வாசிக்கும்படி மஹாத்மனுக்கு சிபாரிசு செய்கிறேன். (அவரே பலருக்கு இங்கு சில சிபாரிசுகள் செய்யும் பட்சத்தில், நான் மட்டும் செய்யக்கூடாதா என்ன?) அதில் "நான் ஒரு சமூகப் போராட்டவாதியாகவே கருதப்படுகிறேன், எனது மக்களுக்கான நியாங்களை நான் பெற போராடுவேன், இதையெல்லாம் பதிவு செய்வது எனது கடமை. . நான் ஒரு எழுத்தாளன் அல்ல" என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க போராட்டவாதிகள் எல்லாம் இலக்கியவாதிகள் எனக் குறிப்பிடுவது தங்களின் அறியாமை. சே குவாரா ஒரு போராட்டாவாதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளாகவும் அறியப்பட்டவர் தவிர எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தபட்டவர் அல்ல என நினைக்கிறேன். நீங்கள் எந்தவகையில் அடையாளம் கொடுக்கிறீர்கள்? ஒரு சில எழுத்தாளர்கள் எல்லாம் காலங்களிலும் தான் சார்ந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தவர்கள்தான். அதனால் அவர்களின் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிறையில் தொலைந்து போனவர் தொடங்கி நாடு கடத்தப்பட்டவர்கள் வரை உண்டு. அவர்கள் ஒரு எழுத்தாளர்கள் எனும் பிம்பத்தைக் கொண்டு இந்த மாதிரியான போராட்டங்களில் இறங்கவில்லை. மொழியை தமது பலமாகக் கொண்டு, அநியாயங்களுக்குக் குரல் எழுப்பினவர்கள்.

"நீங்கள் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால், எல்லாம் எழுத்தாளர்களும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க, சினிமாவில் வரும் விஜயகாந்த் போல கிளம்ப வேண்டும் போல. ." எழுத்தாளர்கள் எனும் அடையாளத்தைச் சுமந்து கொண்டு எல்ல்லாம் நேரங்களிலும் போராட்டம் செய்து, தமது இருப்பை சர்ச்சைக்குள்ளாக்கி, தமது குடும்பத்தை இழந்து, உள்நாட்டு பாதுககப்பு சட்டத்த்தின் கீழ் அடைபட்டு சொந்த மகனையோ மகளையோ கூட பார்க்க முடியாமல் எல்லலம் தியாகங்களையும் செய்யும் ஒருவரைத்தான் நீங்கள் இதான் சந்தர்ப்பம் எனக் கொண்டாடிக் கொண்டு போய் விடுவீர்கள். ஆனால் ஒரு சக மனிதனாக அந்தப் போராட்டவாதிக்குக் கிடைக்காமல் போன அன்பையும் வாழ்வுரிமையையும் பற்றி உங்களுக்கென்ன கவலை? ஒரு எழுத்தாளனைத் தீர்க்கத்தரிசனம் செய்ய வற்புறுத்துவது போல சொல்கிறீர்கள். நான் பைபிளின் தீர்க்கத்தரிசனம் பற்றி இங்கு சொல்லவில்லை. தீர்க்கத்தரிசனம் செய்வது யதார்த்த எழுத்து வகைக்குள் வராது எனவே நினைக்கிறேன். அப்படியென்றால், ஞாயிறு பதிப்பில் இராசிகளுக்கு ஏற்ப இந்த வாரம் இது நடக்கும் பணம் சேரும். . வாகனத்தால் ஆபத்து வரலாம் என்று சொல்லும் அனுமானிக்கும் ஜோதிடர்களையெல்லாம் எழுத்தாளர்கள் என வகைப்படுத்திவிடுவீர்கள் போல? அப்பப்பா அப்படியென்றால் எழுத்தாளர்களின் பட்டியில் அதிகப்பட்சமாக செல்கின்றன. சமையல் குறிப்பு எழுதுபர்களையும் சேர்த்து எழுத்தாளர்களின் ஒரு வகை என நீங்கள் அடையாளம்படுத்துவதன் மூலம் எழுத்தாளன் என்பவனுக்கே தனி ஒரு உலகத்தைப் படைத்து எல்லாம் குப்பைகளையும் அதில் போட்டு கும்மியெடுத்து புது பிரச்சாரத்தில் இறங்கியுள்ளீர்கள். நீங்கள் வேண்டுமென்றால் சமையல் குறிப்பு எழுதுபவரையும் எழுத்தாளன் என்று பொதுவில் பிரச்சாரம் செய்யலாம், ஆனால் அதற்கு நான் ஆளில்லை.

"பொதுபுத்தியில் சமூகம் கற்பித்ததின்படி விபச்சாரிகள் ஓடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறது."

நமது தமிழ்ச் சமூகம் கொடுக்கும் கற்பித்தலில் இருந்து கொண்டு மட்டும் பொது புத்தி சார்ந்து பேசுவது உங்கள் உரிமை. சமூகத்தின் மனநிலையில் இருந்து கொண்டு அந்தப் பார்வைகளுக்கு நியாயம் கொடுக்கிறீர்கள். எங்கே (நீங்கள் சவால் இடுவது போல) விபாச்சாரிகளிடன் சென்று ஒரு 20 பேரிடம் இதைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். . "பெண்களே நீங்களெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள். . உங்களுக்கு வாழ வழியில்லாததால் நீங்களெல்லாம் இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டீர்கள். . ஆதலால் இந்தச் சமூகமே உங்களின் மீது பரிதாபம் கொண்டு உங்களை ஒடுக்கப்பட்டவ்ர்களின் பட்டியலில் சேர்க்கிறது" என்று சொல்லி அவர்களின் மனநிலைகளைக் கேட்டுப் பாருங்களேன். சும்மா பொதுபுத்தி பொதுபுத்தி என்று பிதற்றுவது கேட்கிறது! மலேசிய படைப்பிலக்கியத்திலும் தமிழகத்திலும் தமது இலக்கிய பிம்பத்தை 'வலுவாக பதித்தவர்' என்று சொல்வது அதிகபட்ச துதிபாடல். இவர்களின் மத்தியில் சீ.முத்துசாமியின் 'இரைகள்' என்ற சிறுகதை வெற்றிப்பெற்றது பாராட்டவேண்டிய ஒரு விஷயமல்லவா.(இவ்விடத்தில் சீ.முத்துசாமியின் பிம்பம் வெறும் பரிசுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். இலக்கியச் சிந்தனையில் வெற்றிப் பெற்றது பாராட்ட வேண்டிய விஷயமென்றால் கே.பா வாங்கும் அங்கீகாரங்களும் பரிசுகளும் பாராட்ட வேண்டியதுதான். அதென்ன இலக்கிய சிந்தனை பரிசை பெறுவது மட்டும் அங்கீகாரம் என்று சொல்லிவிட்டு, கே.பா வாங்குவதை மட்டும் வெறும் பரிசு என்று சொல்லிவிட்டு உங்களின் அபிமானிக்கு செல்லம் கொடுக்கிறீர்கள்? எல்லாம் பரிசுகளும் ஒருவகையில் எழுத்தாளனுக்கான அங்கீகாரம்தான், அவனுக்கு உற்சாகம் அளிப்பவைதான். பிறரின் பார்வை இதில் வேறுபடலாம். இன்னும் காலம் இருக்கிறது யார் வேண்டுமானாலும் அவரவரை எப்படி வேண்டுமென்றாலும் வளர்த்துக் கொள்ளலாம். தமது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ளலாம். கே.பா பரிசு வாங்குவதையும் அவருக்கு ஏற்பட்ட சறுக்கல்களையும் மட்டும் பேச மட்டும்தான் உங்களால் செய்ய முடிகிறது. அதையும் தவிர்த்து ஒரு படைப்பாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களின் தனிபட்ட அடையாளங்களை வரையறுத்து அதன்படி அவர் வரவில்லையென்றால், அவரை இப்படித் தாக்கிப் பேசுவது. என்னய்யா உங்கள் திட்டம்?

தமது படைப்பின் மூலம் நீங்கள் வேண்டுமென்றால் சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்யுங்கள், முடிந்தால் உங்கள் கருத்துகளைத் துண்டு பிரசுரத்தில் விநியோகித்து, "நானும் எழுத்தாளண்டா. . நாஸ்டர்டாம் தெரியுமா? தெரியவில்லையா. . அப்படினா உனக்கு ஒரு பக்க மூளை வேலை செய்யலைடா. . எனக்கும் எல்லாம் தெரியும்டா. . அதனால்தான் மூளை கிறுக்குப் பிடிச்சி திரியறேண்டா. . இதுனால் வரை என் எழுத்து படைத்த்வனின் நோக்கிய கேள்விகளாகத்தான் இருந்ததுடா. . இப்பெ ஜனசக்தியில சேர்ந்துட்ட்ன் அதனாலே புதுசா பிரச்சாரத்திற்குக் கிளம்பிட்டேண்டா. . அடுத்து தமிழ் நேசன்லே சேர்ந்தாலும் சேருவேன். . அப்ப நம்ப தலைவரோட கவிதையே விமர்சனம் செய்து கலர் பக்கத்துலே போடுவேண்டா. . இதுவும் ஒரு எழுத்து வகைதாண்டா. . இது புரியலையா உனக்கு? அப்பனா நீ ஒரு அடிமுட்டாள்டா" என்று கோஷம் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்களிடம் வம்புக்கு நின்றால்தான் நல்ல எழுத்தாளர்கள் இல்லையென்றால் திராணியில்லாதவர்கள். அப்படித்தானே? பயங்கரமாத்தான் எல்லாம் தெரிந்த வல்லமைகளாக எல்லோரையும் வம்புகிளுத்து பார்க்கிறீர்கள். நியாயங்கள் பற்றி பேசும் உங்களுக்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனனுக்கு தனிப்பட்ட நியாய அநியாங்கள் இருக்கும் என்பதையும், அதே போல ஒவ்வொரு மக்களும் அவரவர் வாழ்க்கைக்கு தகுந்த நியாய தர்மங்கள் வேறுப்பட்டுக் அமைந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் முட்டால்த்தனமாகப் பேசியுள்ளீர்கள். இங்கு என்ன நீங்கள் நியாங்களை ஒருங்கிணைக்கும் மரத்தடி நாட்டாமையா? இதையும் பொது புத்தி என்று சொல்லிவிட்டு நீங்கள் போய்விடலாம். அதில் பிறருக்கு உடன்பாடு இருக்க வேண்டி அவசியமில்லை.

"பிறரை முட்டாள் எனும் அடையாளம் காட்டும் அதிபுத்திசாலியே, அதியமானே உமக்காகத்தான் உண்மையில் நான் பரிதாபப்பட வேண்டும் போல. நீ ஆதரிக்கும் வட்டத்துடன் பின்நவீனத்துவம் பேசியோ இலக்கிய அரட்டையடித்தோ உம்முடன் வம்புக்கு தர்க்கத்திற்கு வராத எல்லோரையும் முட்டாள் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவாயாக, இது கடாரத்து கோமகளின் ஆணை! ஆணை! ஆணை!"

கோமளா

மஹாத்மனின் “wayang kulit” ஆட்டம் அசத்தல்

மஹாதமன் அவர்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். தமக்கு சாதகமான விஷயத்தில் மட்டும், தமது பாதுகாப்பிற்கு விளைவு வரதா விஷயத்தில் மட்டும் தட்டிக் கேட்டுக் கொண்டு எதிர்வினை செய்து கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. தாம் தட்டிக் கேட்கும் மனிதன், நான் பரிபூரண ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியைப் போல வேஷம் போட்டுக் காட்டும் அவரின் "wayang kulit" ஆட்டத்தைக் கண்டு சிரிப்புத்தான் வருது.எங்கே உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எல்லாவற்றையும் இழந்து நல்ல ஆரோக்கியமான மருத்துவ சேவையும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்த 5 பேருக்காக தட்டிக் கேட்டு மஹாத்மன் உண்னவிரதமோ அல்லது உள்நாட்டு சட்டத்தை எதிர்த்து அரசாங்கத்திற்கு சவாலாக இருக்க வேண்டியதுதானே? அவர்களும் ஒடுக்கப்பட்ட நமக்காக கேள்வி எழுப்பியவர்கள்தானே. தட்டிக் கேட்கிறேன் என்று சுயப் புகழ் பாடும் அவர் இதையெல்லாம் செய்யாமல் சும்மா ஒரு நாளிதழின் பின்னால் இருந்து கொண்டு இப்படி தமக்கு எந்தப் பாதிப்பும் வராத சுவராகப் பார்த்து மிகப் பத்திரமாக இருக்கிறார் போல. புனை பெயர் கொண்டு எழுதினாலும் எழுதுவார்.

அவர் இப்படியெல்லாம் உண்னாவிரதம் அல்லது அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வியெழுப்பவது போன்ற விஷயம் அல்லது வழி எனக்கு அனாவசியம் என்றால் அதே போலத்தான் பிறருக்கும் வேறு வழி இருப்பதை அவர் உணர வேண்டும். இவர் தட்டிக் கேட்க ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வது நியாயம் என்றால் பிறரும் இவர் வழியிலேயே வந்து தட்டிக் கேட்க வேண்டுமாம், இல்லையென்றால் அவர்களெல்லாம் தன் சொந்தப் பெயர் களங்கப்படாமல் ஒதுங்கி நிற்பவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள். இப்பொழுது என்னால் சொல்ல முடியும் நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க திராணியில்லாதவர். அல்லது ஒரு பாதுகாப்பு வலையத்தில் இருந்து கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு பயந்து கொண்டு சும்மா பில்டாப் செய்து கொண்டு தானும் தட்டிக் கேட்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்வதற்கு சமம். தலைநகரில் நீங்கள் பண்ணும் பிழைப்புக் குறித்து எனக்கும் சிலது தெரியும். இங்கே அதைப் பதிவிடுவது என்னைப் பொறுத்தவரை அநாகரிகம்தான்.

தட்டிக் கேட்பது என்றால், இவர்களுக்கு மட்டும்தான் நான் தட்டிக் கேட்பேன் என்று சொல்லிவிட முடியுமா என்ன? எதெல்லாம் அநியாங்களோ அதையெல்லாம் தட்டிக் கேட்கத்தான் வேண்டும் (உங்களின் கூற்றுபடி) ஹிண்ராப் புரட்சி நடந்த இத்தனை வருடங்களில் எங்கே போனார் இவர்? அப்பொழுதெல்லாம் தட்டிக் கேட்கும் தன்மை எழவில்லையோ? அப்படினா எல்லோருக்கும் ஒரு காலம் வரும் போல தட்டிக் கேட்க. இவர் சொல்வது போல நினைத்த நேரம் நாம் எல்லாவற்றையும் நம் தொழிலையும் விட்டுவிட்டு நடு ரோட்டில் நின்றுகொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் போல, கூச்சலிட்டு அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டும் போல. இப்படியெல்லாம் பேசும் இவர் அப்படி என்னா செய்து கிழித்துவிட்டார். . உலகத்தைச் சுற்றி பார்க்கும் முன் உம்மைச் சுற்றி பாருமய்யா

குமார்
பாடாங் செராய்

Monday, March 30, 2009

வலுவாகப்பதித்தல்= பிரசுரித்தலோ பரிசு பெறுதலோ இல்லை.

கடாரத்து கோ-மகள் கோமளாவுக்கு,

உங்கள் முதல் மடலின் கடைசி பத்தி (குறிப்பு) தான் நீங்கள் விவாதம் எனும் போர்வையில் ஒரு சார்பு நிலையை கையாண்டுயிருக்கிறீர்கள் என்று காட்டுகிறது. நீங்கள் வைத்திருக்கின்ற தராசின் ஒரு பக்கத்தின் தட்டின் கீழ் காந்தக் கல் இருப்பதை அறிய முடிகிறது. கே.பா.வுக்காக யார் வேண்டுமானாலும் பேசலாம். வரிந்து கட்டிக்கொண்டு வரலாம். ஆனால் விவாதம் நியாயமாகவும் சரியாகவும் இருக்க வேண்டாமா?

மலேசிய படைப்பிலக்கியத்திலும் தமிழகத்திலும் தமது இலக்கிய பிம்பத்தை 'வலுவாக பதித்தவர்' என்று சொல்வது அதிகபட்ச துதிபாடல். அதுவும் 'எல்லோரும் அறிந்ததே' என்று வேறு சொல்வதைக் கேட்கையில் சிரிப்பு தான் வருகிறது.

மலேசியாவில் சில போட்டிகளில் முதல்-இரண்டாம்-மூன்றாம் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

*தமிழகத்தில் (ஒரு) பரிசைப் பெற்றிருக்கிறார். (1970-களில் ஆனந்த விகடன் நடத்திய போட்டியில் சங்கு சண்முகத்தின் 'இரைதேடும் பறவைகள்' பரிசு பெற்றது. 1977-களில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது 'இலக்கிய சிந்தனை' என்ற அமைப்பு. அவ்வாண்டின் மிகச் சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்து கௌரவித்தது அந்த அமைப்பு. பல இலக்கிய ஜாம்பவான்கள் போட்டியிட்ட காலகட்டமது:
1). லா.ச.ரா.
2). சிவசங்கரி
3). பாஷா
4). கோமகள்
5). திலிப்குமார்
6). பொள்ளாச்சி அம்பலம்
7). பா.செயப்பிரகாசம்
8). மேலாண்மை பொன்னுசாமி
9). ஜெயகாந்தன்
10). பாலகுமாரன்
11). சீ.முத்துசாமி
12). நாஞ்சில் நாடன்
இவர்களின் மத்தியில் சீ.முத்துசாமியின் 'இரைகள்' என்ற சிறுகதை வெற்றிப்பெற்றது பாராட்டவேண்டிய ஒரு விஷயமல்லவா.(இவ்விடத்தில் சீ.முத்துசாமியின் பிம்பம் வெறும் பரிசுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கியச் சுரண்டல்களுக்கு தனது வழுவான குரலை தைரியமாகப் பதித்தவர்.) பின்வந்த காலகட்டங்களில் ரெ.கா.-வின் சிறுகதை இடம்பெற்றிருந்தாலும் 1977-ஆம் ஆண்டின் பரபரப்பும் உன்னதமும் இலக்கிய ஜாம்பவான்களின் பங்கேற்பும் இல்லாமலிருந்தது. அந்த 1977-ஆம் ஆண்டில் கிடைத்த அங்கீகாரத்திற்கு தனி மரியாதையும் தனிசிறப்பும் உண்டு)

*ஞாயிறு தினசரிகளில் சில கதைகளுக்கு பரிசுகள் பெற்றிருக்கிறாh.;
*மலேசிய - தமிழக சிற்றிதழ்களில், (இடைநிலை ஏடுகளில்!? ) சில கதைகள் இடம் பெற்றிருக்கினறன.
*இணைய ஏடுகளில் பங்கேற்பு.

எல்லாம் சரி 'வலுவாக பதிக்கும் முயற்சிகள்'தான் இவை. ஓர் இலக்கியவாதி தன் படைப்புகளை 'வலுவாக பதிக்கும்' அடையாளம் புத்தகங்களை வெளியிடுவதும் கதைகளைப் பிரசுரிப்பதும் மட்டுமல்ல . புத்தகங்களின் பாரத்தை விட அதற்குள்ளிருக்கும் இலக்கிய வலுவே, ஓர் இலக்கியவாதியை இலக்கியவுலகில் வலுவாகப் பதித்தவர் என்று கூறுவர்.

தற்காத்து பேசுகிறோம் என்கிற நோக்கத்தில் இங்கே நீங்களும் தவறு புரிகின்றீர்கள்.

'இப்போது இப்படி மன்னிப்பு கேட்டு நிற்கும் அளவிற்கு வந்திருக்காது!'

மன்னிப்பு கேட்பது ஒரு மகத்தான காரியம். எல்லோருக்கும் வராது. எழுத்தாளனாக இருந்துக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்பது ஏதோ ஒரு கீழ்தரமான செயல் என்று ஏண்ணிக்கொன்டிருக்கிறார்கள். தனக்கு இருக்கும் ஈகோ, மன்னிப்பை கேட்க வைக்காது. தவறை ஏற்றுக்கொள்ள வைக்காது. மன்னிப்பு கேட்காமல் நழுவியபடி தெரியாத்தனமாக போய்விடலாம். அதன்பிறகு எவ்வளவுதான் எழுதினாலும அவன் எழுத்து எடுபடாது. ஈகோ காரணமாக மன்னிப்பு கேட்காததால் தன் எழுத்தின் வலிமையை இழந்து நிற்கும் நிலை ஏற்படும். எழுத்தாளர்கள் சறுக்குவது இயல்பு என்பது இவர்களைப் போன்றோரின் மாய்மால வாக்குமூலங்கள.; சொல்ஆய்வாளர்.திருச்செல்வம், 'பொதுமேடைக்கு வா' என்று அழைத்தும் தைரியமில்லாமல் விலாங்குமீன் சொற்களை வாரி கொடுத்துவிட்டு சென்றவர், மன்னிப்பு கேட்காததால் எழுத்து மரியாதை இழந்து நிற்கிறார் ஒருவர்.;


இன்னொரு ரகத்தினரும் உண்டு. எவ்வித சர்ச்சையிலும் விவாதங்களிலும்; ஈடுபடாதவர்கள். சர்ச்சையில் கலந்து கொள்வதன் வழி, தான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயர் களங்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் ஒதுங்கி நிற்பவர்கள். இவர்கள் மேடையில் பேசுவதற்கும் நிகழ்ச்ச்சியில் பங்கேற்பதற்கும் பஸ், இரயில், விடுதி கட்டணங்களுக்கான பணத்தை மறக்காமல் வாங்கிச் செல்பவர்கள். இலக்கியத்திற்காக செலவு செய்யவும் செலவு பண்ணப்படவும் துணியாதவர்கள். இவர்களைப் போன்றவர்களைத் தான், நீங்கள் இதுவரையிலும் கொண்டாடி வருகிறீர்கள். இவர்களின் விமர்சனமே அற்புதம் என தலைமேல் வைத்து கொண்டாடி வருகிறீர்கள். இவர்களின் வாயால் பாராட்டுப்படுவதையே தெய்வ ஆசீர்வாதம் என ஏற்றுக்கொள்கிறீர்கள். (கருத்துக் கூறாமல் இருப்பதும் கொண்டாடியதாகத்தான் அல்லது ஏற்றுக்கொண்டதாகத்தான் குறிக்கும்.)


இதனை தட்டிக்கேட்டால் 'எல்லாம் தெரிந்தவன் மாதிரி எழுதுபவன்' என்றும் 'எல்லோருக்கும் புத்திமதி சொல்லும் பகவான்' என்றும் 'விபச்சாரிகளுக்கு வாழ்வளிக்கும் உத்தமன்' என்றும் 'விபச்சாரியைக் கண்டால் மண்டியிட்டு கும்பிடும் பக்தன்' என்றும் 'நல்லவன் போல வேடமிட்டு நாடகமாடியவன்' என்றும் பரிகசிக்கிறீர்கள்.

எழுத்தாளன் என்பவன் சமூக சீர்திருத்தவாதியோ அல்லது தீர்க்கதரிசியோ கிடையாது.

-அடிமுட்டாள்தனமாக சொல்லியிருக்கிறீர்கள்!
எழுத்து பலவகை. எழுத்தாளர்களும் பலவகையினர். சமையல் குறிப்பிலிருந்து மஞ்சள் ஏடுகள் (காமசூத்ரா வகையறாக்கள்) அரசியல்-அறிவியல் என்று பற்பல தளங்களில் எழுத்துவகை, வகை வகையாக அச்சேறியிருக்கின்றன, அச்சேறுகின்றன. இதில் ஒரு வகை அபூர்வமாக தென்படுவது சமூக சீர்திருத்தமும் தீர்க்கதரிசனமும். சமூகத்தை சீர்திருத்திய எத்தனையோ நாவல்கள் உண்டு .எத்தனையோ எழுத்தாளர்கள் உண்டு. சேகுவாரா, அரசாங்க உயர் ஸ்தானத்தில் உட்கார்ந்து சேவையாற்றியதன் அடிப்படை தூண்டுதல் அல்லது தளம் ஏதுவாக இருந்தது? அதைப்போல் பாப்லோ நெருடாவை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தது எது? உட்கார்ந்த பின் காலை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தார்களா? உயர்ரக மதுவை அருந்திக் கொண்டு காலந்தள்ளினார்களா? இந்தியாவின் மகாத்மா காந்தி,விவேகானந்தர் தங்களுக்கு மட்டும் புத்தகங்களை எழுதி வைத்து சென்றனரா? இன்று ஹிண்டிராஃப்பும் தென்னாப்பிரிக்க அரசியல் கட்சி ஒன்றும் காந்தியின் படத்தை ஏந்திக்கொண்டு 'தொலைதூர பார்வைக்கு ஓட்டுப்போடுங்கள்' என்று பிரச்சாரம் செய்வது எப்படி? ஏன்?

நமது நாட்டில் மலாய் நாவலாசிரியர்கள் இன்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உட்கார வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தை தேசிய நூலகத்திற்கு போய் ஆராயுங்கள். முடிந்தால், அவர்களை சந்தித்து 'எப்படி இந்த உயர் நிலைக்கு வந்தீர்கள்? உங்களை இங்கு கொண்டு வந்துவிட்டது எது? அல்லது யார்? நீங்கள் எழுதிய புத்தகங்கள் மலாய் சமூக சீர்த்திருத்தங்கள் கொண்டவையா?' என கேளுங்கள். அப்படி அவர்கள் இல்லையென்று உறுதியாய்-பகிரங்கமாய் பதில் சொல்வார்களேயானால் நான் என் தலையை மொட்டையடித்து மீசையை எடுக்கிறேன். அந்த முகத்தோடு என் தோல்வியை, தவறை ஏற்றுக்கொண்டு நான் பணிபுரியும் 'ஜனசக்தியில்' பிரசுரித்து விட்டு வெளியேறுகிறேன். ( தன் சொந்த வீட்டில் - ஊரில் - அலுவலகத்தில் அவமானப்படுதல் மிகவும் கேவலமானது, வேதனையானது: வெளியேறுவதே சரியானது).


தீர்க்கதரிசிகள் : நீங்கள் இன்னும் நாஸ்டர்டாம் புத்தகத்தை படிக்கவில்லை போலிருக்கிறது. அதைக் குறித்து கேள்விப்படவில்லை போலிருக்கிறது. அல்லது மூளையின் ஏதோ ஓர் பகுதி வேலை செய்யவில்லை போலிருக்கிறது. எப்படி? ஆணைவிட பெண்ணுக்கே மூளை பெரியது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களே. பொய் சொல்கிறார்களோ.......
மதம் சார்ந்த புத்தகங்களையாவது படித்திருக்கலாம். பைபில், அல்குரான், பகவத் கீதை, மகா பாரதம்.....(இதனை கடவுளா இறங்கி வந்து எழுதினார்.... மனுஷர் தானே!) இப்புத்தங்களில் தீர்க்க தரிசன வார்த்தைகள் அதிகமாய் காணப்படுவது பைபிள் ஆகும். வாதிடுவோமா ? தயாரா?

இங்குள்ள 'சிறந்த' எழுத்தாளர் ஒருவர் சொல்வதைப் போல 'திருவள்ளுவர் என் கனவில், சொப்பனத்தில், தரிசனத்தில், வந்தார். முதல் குறளில் சொல்லப்பட்ட ஆதிபகவன் 'அல்லா' தான் என்று விளக்கிய வியாக்கினத்தில் மெய்சிலிர்த்துப் போனேன். அதன் பிறகு ' ஊடாடி மூலமாக என் முன் தோன்றிய அகத்தியரும் 'ஆமாம், சாமி' என்றார், என்றெல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்த மாட்டேன்.

விபச்சாரிகள் ஒடுக்கப்பட்வர்கள்தான் என்று வெறுமனே எப்படி அடையாளப்படுத்த முடியும்?

இந்த விபச்சாரிகளிலும் பல ரகம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். பணத்திற்காக என்பது பெரும்பான்மை. கட்டாயத்தின் பேரில் என்பது சிறுபான்மை. கணவன் இருக்க காமவெறி போக்குவதற்காக விபச்சாரத் தொழிலை மிக ரகசியமாக செய்வது அதிலும் குறைந்த சதவீதம். கணவனே வழியனுப்புவது அதனினும் குறைவு. பெரும்பான்மை - சிறுபான்மை - குறைந்த சதவீதம் பற்றியெல்லாம் மூலக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. குறித்துக்கொள்க என்று கேட்டுக்கொள்ளப்பட்டதும் இல்லை.

இப்படியிருக்க...
பொதுபுத்தியில் சமூகம் கற்பித்ததின்படி விபச்சாரிகள் ஓடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படி சொல்வதில் அத்துமீறல் எங்கேயிருந்து வருகிறது? மண்ணாங்கட்டி அத்துமீறல் !


யார் ஒடுக்கப்பட்டவர்கள் என வரையறுக்கும் முன், எல்லாவற்றையும் பொதுவாகவே சொல்லிவிட்டோ, பொதுவான அடையாளத்தையோ கொடுத்துவிட்டுப் போக முடியாது.


இந்தக் கருத்தை முன் வைத்து தயவு செய்து நீங்கள் பரிதாபப்படும், ஆதரிக்கும், கே.பா.வின் முதல் இரண்டு பத்திகளை (மூலத்தையும் சேர்த்து ) நிதானமாக வாசிக்கவும். பல பிதற்றல்களை உங்கள் மனம் வாசித்தறியும் !
எல்லாவற்றையும் பொதுவாகவே சொல்லாமல், பொதுவான அடையாளத்தை கொடுத்துப் போகாமல், தீர ஆராய்ந்தோமானால் இன்று அதிகமாய் பணத்தை வைத்திருப்பவன் குறைந்த வருமானவுள்ளவனை ஒடுக்குகிறான். இதில் ஆணும் சரி, பெண்ணும் சரி.

எழுத்தாளன் என்ன சமூக சீர்த்தவாதியா? அவனை அப்படி வற்புறுத்துவதும் வன்முறை தான்.

இந்த வாக்கியத்தில் அதிகச் செல்லம் பீறிடுகிறது.
தன் மகன் இராணுவ வீரனாக வரவேண்டுமென்று போர் பயிற்சிக்கு அனுப்பிவைத்துவிட்டு அவன் உடலில் சிறு கீறல் பட்டால்கூட 'ஐயோ! வன்முறை.....' என அலறும் ஒரு தாயின் அறியாமையைப் போன்றுதான் இருக்கிறது உங்கள் வாக்குமூலம்.


'இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவித்துக்கொள்வது என்னவென்றால், ஓர் எழுத்தாளன் என்பவன் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. அது அவன் வேலை அல்ல. சமூகத்திற்காக அதன் மீட்சிக்காக எழுதச் சொல்லி வற்புறுத்துவது வன்முறையாகும். நியாயங்களை தட்டிக்கேட்க வற்புறுத்துவது வன்முறை எனப்படும். அநீதியை எதிர்க்க வற்புறுத்துவது ஒரு வன்முறை ஆகும். தைரியசாலிகள் மட்டும் எதிர்க்கட்டும். எழுத்தாளனை எழுத மட்டும் விடுங்கள். எதையாவது எழுதி எப்படியாவது போகட்டும். அவனை தனியாக விட்டுவிடுங்கள். அவனை வற்புறுத்துவது ஒரு வன்முறை என்று சட்டம் இயற்ற தீர்மானம் எடுக்கப்படுகிறது. இது கடாரத்து கோ-மகளின் ஆணை, ஆணை, ஆணை !!'

இதை இப்படி இணைய பக்கத்தில் பகிரங்கமாக பதிவுக்குக் கொண்டு வந்தது எனக்கென்னவோ அநாகரிமாகத் தெரியவில்லை!


மஹாத்மன்

Saturday, March 28, 2009

யார் சொன்னது 100 தலை பிரம்மாக்கள் இல்லையென்று?

சீ.முத்துசாமிக்கு வடநாட்டு செவ்வியல் புராணங்கள்/வேதங்கள் குறித்துக் கொஞ்சம்கூட பரிச்சயம் இல்லை போல. அந்தோ பரிதாபம். . அதனால்தான் 4 தலை பிரம்மாக்கள், 100 தலை பிரம்மாக்கள் பற்றி தெரியாமல் இருக்கிறார். வடநாட்டு செவ்வியல் வேதங்களில் முக்கியமானது 19 காண்டங்கள் கொண்ட ஷிரிமட் பாகவதம் ஆகும். அதற்கான தமிழ் விளக்கவுரைகளும் இந்தியாவிலிருந்தே எழுதப்பட்டுள்ளன. பாகவதம் 4 ஆவது காண்டத்தில் கடவுள் பற்றிய அம்சங்களின் 32 ஆவது பதத்தில் சக பிரபஞ்சங்கள் பற்றியும் அதன் பிரம்மாக்கள் பற்றியும் தெளிவான விளக்கம் இருக்கும். 4 தலை பிரம்மா எனக்குறிப்பிடுவது நம் பூமியின் பிரம்மா, அதே போல எண்ணற்ற பிரபஞ்சங்களும் உலகங்களும் இருக்க, அதன் பிரம்மாக்கள் பற்றியும் சொல்லப்பட்டுருக்கின்றன. அதில் 100 தலை பிரம்மா குறித்தும் எழுதப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக நமது பூமிக்கு 1 நிலாதான் உண்டு ஆனால் பக்கத்துக் கிரகங்களுக்கு 10 க்கு மேல் நிலாக்கள் உள்ளன.

ஆகையால் யார் இங்கே தெனாலி இராமன் என்று வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். பிரம்மா இருக்கிறாரா அது நம்பகத்தன்மையா என்ற கேள்வி வராது என நினைக்கிறேன், காரணம் இந்திரன் தேவலோகம்வரை நம்பிக்கை இருப்பதால், இது பற்றியும் சந்தேகம் இல்லை. அப்படியும் வேண்டுமென்றால், பாகவதத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். அதற்காக பாவம் மீண்டும் ஏன் இந்திரனின் போலி குரலிலிருந்து கதற வேண்டும்?

மேலும், ஒரு இடத்தில் பெயர் சொல்ல பயமா? என்று கேட்டுவிட்டு, குருநாதரின் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லையே. ஏன் அந்தக் குருநாதர் மீது அவ்வளவு பயமா? ஆ. . ஆ. . ஆ. . . நகைச்சுவை பண்ணாதீங்க சாமி. .

குமார்
பாடாங் செராய்

Friday, March 27, 2009

வாசகர்களுக்கு...

வரும் ஞாயிற்றுகிழமை(29.3.09) ந.பச்சைபாலன் எழுதிய 'என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும்' என்ற கவிதை நூலும் 'இலக்கியப் பயணத்தில் ஐக்கூ பாடகன்'என்ற பயணக்கட்டுரை நூலும் மாலை மணி 4.00 அளவில் தலைநகர் கே.ஆர்.சோமா அரங்கில் வெளியீடு காண்கிறது. ந.பச்சைபாலன் இலக்கிய அன்பர்களை அன்புடன் விழைகிறார்.

நான் ஆரம்பத்திலே சொன்ன மாதிரி ...


நான் ஆரம்பத்திலே சொன்ன மாதிரி தனிமனித தாக்குதல்களையும் பிறரை எல்லோரும் அறியும்படி திட்டுவதும் கண்டிக்கத்தக்கது. அதை மூத்த எழுத்தாளர்கள் (சீ.முத்துசாமி) செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. யார் மீது கோபமோ விமர்சனமோ இருந்தால் அதை நேருக்கு நேர் பேசி விவாதிப்பதுதான் எழுத்தாளர்களுக்கு சிறப்பு. இங்கு வந்து விவாதம் என்கிற பெயரில் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும். தர்க்கரீதியிலான எதிர்ப்புகள் அல்ல இது, தனிமனிதனையும் அவன் சார்ந்த பிறரையும் கேலி செய்து தாக்குவது.. இதற்கெல்லாம் ஒருவர் திராணி பெற்றிருக்க வேண்டி இல்லை.

அண்ணன் பாலமுருகன் இதையெல்லாம் பொருட்டாக கருதாமல், இது ஒரு தர்க்கரீதியிலான எதிர்ப்பே இல்லை, (தனிமனித வசைப்பாடல்) அமைதியாக இருப்பதே உங்கள் சிறப்பு. பிறரைப் பற்றி கவலைப்படாமல் படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

20 வயதே ஆன எனக்குத் தெரியும் விஷயம் கூட சீ.முத்துசாமிக்குத் தெரியவில்லையோ என தோன்றுகிறது.

விக்னேஸ்வரன் குப்புசாமி
பேராக்

இந்திரனுக்கும் இமெயில் அனுப்பும் மாயாவதியோ?

இனி வரவேண்டாமென்று இருந்தேன். என்ன செய்வது. .

இந்திரனுக்கு இமெயில் அனுப்புவது, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு பாலபிஷேகம் செய்வது என்று சொல்வதுதான் முதிர்ச்சியற்ற பேச்சு, கனவுலகில் முனகும் நம்பகத்தன்மையற்ற வசனங்கள். இதை முன்வைத்துப் பிறரை முதிர்ச்சியற்றவர்கள் என இந்திரன் சொன்னதாக தாமே தம்பட்டம் அடித்துக் கொண்ட வசைப்பாடல்களை எப்படி அஞ்சடி அனுமதித்தது?

பிறர் எப்படி பிழைப்பை ஓட்ட வேண்டும் என்று கட்டளையிடும் அளவிற்கு சீ.முத்துசாமி முத்தியத்தனமாகப் பேசி சிக்கிக் கொண்டுள்ளார். பரிசு பெறுவது போட்டியில் கலந்து கொள்வது பிறரின் விருப்பம். சொல்லப் போனால் போட்டிகள் ஆக்கங்கள் உருவாகத் துனைப் புரிகின்றது என்றே சொல்லலாம். அது ஒரு உந்து சக்தி மாதிரி. அதில் குற்றம் கண்டுபிடித்தால் சீ.முத்துசாமி இதுவரை எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு பெறாதவராக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இவரின் பேச்சு ஒரு போலி அரசியலைப் போன்றது என்பது இங்கு நிரூபணம் ஆகின்றது. இவர் இப்படி வசைப்பாடி திரியும் எத்தனைப் பேருக்கு குருநாதராக இருக்கிறாரோ?

மாயாவாதிகளின் பேச்சுக்கெல்லாம் என்றுமே மதிப்பிருக்காது போல

கோமளா

இந்திரனிடமிருந்து எனக்கும் ஒரு இமெயில்

முதலிலிருந்தே ஒரு (கோமாளி) கிழடு, சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறதே என்று இந்திரன் அஞடியைப் பார்த்தார். இதை விரைவில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம் என எண்ணிய இந்திரன் அந்தக் கோமாளி கிழடின் இமெயிலைப் படித்துவிட்டு, "சரியாதான் விழுந்துருக்கு அடி. . தேவ இல்லாத இடத்துலே ஆரம்பத்துலேர்ந்து வாய் கொடுத்து நல்லா வாங்கிக் கட்டிருக்கு. . வழிந்தொழுகும் மிச்ச பாலை கோமாளி பக்தர்கள் அருந்திக் கொள்ளட்டும். . சுருக்குனு ஒரைச்சிருச்சிப் போல. . அதான் உடனே இந்திரன்கிட்ட வந்து இமெயில் வழியா நீலி கண்ணீர் சொட்ட அழுது புலம்பது. . சரி என்ன பண்றது வயசாச்சி! இருக்கட்டும், இருக்கற கொஞ்ச காலத்துலே இப்படி வலிமை இல்லாம பொலம்பிகிட்டுப் போகட்டும். . போற வழிக்கு புண்ணியம் ஆகும்லே. ."

"மீண்டும் இந்திரன் எழுந்து உரக்க சொன்னார். . யாருக்கு திராணி இல்லை என்பதை காலம் பதில் சொல்லும். . திராணி இல்லாமல் படைப்பும் இல்லாமல் ஒக்காந்து தலையை விரிச்சிப் போட்டு பாதி பைத்திய நிலையிலெ இருக்கும் எவர் சொல்லும் இங்கு சாத்தியப்படாது. . நான். . இந்திரனே புராணத்தில் பாதி அடி வாங்கியவன். . உடல் முழுக்க குறிகள் முளைக்க கடவாய் என சாபமும் வாங்கியன். . என்னிடமே இமெயில் வழி புலம்பும் அசட்டுக் கோமாளியை என்னவென்று சொல்வது? அடுத்த வீட்டுப் பெண்ணின் மீது சபலம் கொள்ளும் இந்திரனின் உத்தரவாதத்தையெல்லாம் நம்பி கொண்டு இந்த ஜென்மம் இருக்கிறது என்றால். . அசல் இந்தக் கோமாளியை நினைத்து இந்திரன் லோகமே இடிந்து விழுந்துவிட்டது என சில "முத்தாத சாமிகளின்" வழி தகவல் வந்து சேர்ந்தது.இனி இந்திரனுக்கு இமெயில் அனுப்ப முடியாதாம்.

எவருக்கு எவர் குருநாதர் என்கிறவரை அனுமானிக்கும் திர்க்கத்தரிசியின் சாபம் கண்டு சாத்தான்களெல்லாம் கூதுகளமாக வானத்தை நோக்கி காரி உமிழ்ந்து பரவசம் அடைந்து கொண்டதாம் தமது தலைவரின் இயலாமையைக் கண்டு!"இப்படி எல்லாரையும் தூற்றிக் கொண்டும் பொறாமை பட்டுக் கொண்டும் உத்தரவு விட்டுக் கொண்டும். . பம்மாத்து பண்ணுவாய் என இந்திரன் சாபம் விட்டார்.

5 வருடத்திற்கு முன்புவரை இதே சீ.சாமி அதே பரிசுகளையும் மாலைகளையும் அஸ்ட்ரோ மூலமாகவும் இன்னபிற மூலமாகவும் வாங்கிக் கொண்டிருந்துவிட்டு, இப்பொழுது இளையதலைமுறகளின் மீது வக்கிரப் புத்தியைச் செலுத்திக் கொண்டு அவர்களுடன் மல்லுக்கட்டும் கோமாளித்தனத்தைக் கண்டு உலகமே ஏக்கத்துடன் பார்க்கிறது.

இப்படிக்கு

ச.சாரங்கன்
சுங்கை சீப்புட்

Thursday, March 26, 2009

ஒரு சில வரிகளுடன். . . .


1. தங்களின் மாற்றுக் கருத்துக்கு மிக்க நன்றி நவீன்

2. அதைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் அதை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்

3. பார்வைகள் வேறுபடுகின்றன, ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து விபச்சாரியின் தனி சுதந்திரம் பற்றி கூறினேன்

4. சமூகத்தின் மனநிலை பற்றி எந்த விபச்சாரிகளும் கவலைப்படுவதற்கில்லை காரணம் அந்தச் சமூகத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து காம பசியைத் தீர்த்துக் கொண்டு போகிறார்கள். வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனநிலை. .

5. விபச்சாரிகள் பற்றி பேசுவதால், அவர்களின் உலகத்திற்குள் கொஞ்சம் போய் பாருங்கள் அல்லது வந்து பாருங்கள். . என் பால்ய தோழி ஒருவள் இன்று இந்த நிலையில்தான் இருக்கிறாள், ஆகையால் அவளுடைய மன இருப்புகளையும் நீங்கள் சொல்லும் அந்தச் சமூகத்தின் மனநிலைகளைப் பற்றியும் கேட்டால் மிஞ்சுவது வெறும் கெட்ட வார்த்தைகள்தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

6. ஆண் மொழியிலேயே எல்லாவற்றையும் பார்க்கும் ஒருசிலரின் கருத்துகளுக்கு முரண்பாடுகள் உண்டு, விபச்சாரிகளின் உலகம் குறித்து.

7. எது எப்படியிருப்பினும் எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்-

நன்றி வணக்கம்
கோமளா

தேவலோகத்திலிருந்து ஒரு இ-மெயில்


குறிப்பு : கடந்த 23.3.2009 அஞ்சடியில், நான் செய்திருந்த பதிவில்,அநங்கம் என்கிற இதழ் குறித்து இனி எதுவும் எழுதப்போவதிலை என்று சத்தியம் செய்து முப்பது முக்கோடி தேவர்களுக்கு அனுப்பிய இ.மெயிலுக்கு, அங்கிருந்து அவர்களின் தலைவரான இந்திரனிடமிருந்து ஒரு இ-மெயில் கிடைக்கப்பெற்றேன்.

அதன் சாரம் எனது அம்முடிவை மறு பரிசீலனை செய்ய வழி வகுத்துள்ளது என்பதை மிகுந்த சந்தோஷத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதனை அப்படியே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.நன்றி.

"பூலோகத்திலிருந்து சீ.முத்துசாமி எனும் நாமகரணம் தாங்கிய நீர் அனுப்பிய இ-மெயில் கிடைக்கப்பெற்றோம்.அதில் கண்டிருந்த செய்தியை எனது தலைமையிலான தேவர்கள் குழு பரிசீலித்தபோது, அது தொடர்பான பிற பரிமாறல்களையும் எங்கள் பூலோக பிரதிநிதி வழி, அஞ்சடி இணையதளத்திலிருந்து பெற்று ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து அலசினோம்.

ஒரு யுத்தம் நிகழ்வது போன்ற முஸ்தீபுடன், முரசுகள் கொட்ட புறப்படும் ஆக்ரோச வார்த்தை அம்புகளின் பிரயோகங்களைப் பார்த்து எங்கள் தேவர்கள் சபையே ஆடிப்போய் கிழிபிடித்து அன்ன ஆகாரமின்றி கவலையில் மூழ்கிக் கிடக்கிறது.புராண காலத்தில், அரக்கர்களோடு நாங்கள் நடத்திய சமருக்கு நிகர்த்த மோதல்கள் அங்கு வார்த்தைகளாலேயே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பது புரிகிறது.

பரிசீலித்தவற்றிலிருந்த விஷயங்களில் பலவும் முதிர்ச்சியற்ற மேம்போகான வெற்று வார்த்தை ஜால உளறல்களாக இருப்பதை அறிந்து, பூலோகத்தில் தமிழ் மொழிக்கு மிகப்பெரும் ஊறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என வருத்தமுற்றோம்.

அதிலும் , எங்களது ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக் கொண்ட ஒரு வரியை உமக்குச் சொல்லியே ஆக வேண்டும்.கேலி என்பதாக ஏதோ ஒன்றை கற்பனை செய்துகொண்டு உளறிய அசட்டுத்தனமான வார்த்தைகளாக அவற்றை நாங்கள் கருதுகிறோம்.எங்களது சினத்தைத் தூண்டிய அந்த வரி இதுதான்....'வழிந்தொழுகும் மீதி பாலை சில கோமாளி கிழட்டு பக்தர்கள் எடுத்து அருந்திக் கொள்ளட்டும்' தொடர்ந்து, ரொம்பவும் புத்திசாலித்தனம் என்கிற நினைப்பில்...'இதை இங்கு மிகவும் கேலியாக முன்வைப்பதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்'என்று தற்குறித்தனமான கூடுதல் உளறல் வேறு.

எனவே , எங்களது முதிர்ந்த பக்தர்களையே, 'கோமாளி கிழட்டு பக்தர்கள்'என்று வசைபாடியுள்ள இத்தகையதொரு விதூஷக (கோமாளி)தற்குறி குறித்துதான், எங்களுக்கு அனுப்பிய இ-மெயிலில் நீர் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில், அது குறித்து இனி நீர் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இனி,நீர் அது குறித்து என்ன எழுதினாலும், இது குறித்து எழுதிக்கொண்டிருக்கும் உமது நண்பர்கள் உட்பட,அதனால் எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு என்றும் எவ்வித தீங்கும் (எம்.ஆர்.ராதா பாணியில் விரல்கள் முறுக்கி கோணிப்போவது போன்ற) விளையாது என்று முப்பது முக்கோடி தேவர்கள்...(அதென்ன, பக்கத்திலுள்ள பிரபஞ்சத்தின் தேவர்கள்- 4 தலை பிரம்மா- 10 தலை பிரம்மாக்கள்- 100 தலை பிரம்மாக்கள் என்றெல்லாம் எங்கள் தேவலோகத்தைப் பற்றியெல்லாம் கூட, எல்லாம் தெரிந்த தெனாலிராமன் போல், சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறி வைத்துள்ளது, அந்த அனாமத்து பூலோக விதூஷகன்?)சார்பாக நான் உத்திரவாதமளிக்கிறேன்."

இப்படிக்கு,
தேவர்கள் தலைவன் இந்திரன்.

உண்மைதான் பல பெரியவர்கள்தான் உன்னை முதலில் உறுப்பினர்- ஒரே மாதத்தில் துணை செயலாளர்-அதே மாதத்தில் செயலாளர் ஆக்கினார்கள்.(மன சாட்சி உண்டுதானே?)உன்னை அங்கிருந்து விலக சொன்னதாக மன்னிப்பு கேட்க வந்து புதிய குற்றச்சாட்டை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கும் நீர்,அதை சொன்ன எனது பெயரை ஏன் மறைத்தாய்?சொல்ல பயமா? மகாத்மன் சொன்னதுதான் சரி!எந்த ஒரு தர்க்க ரீதியான விவாதத்தையும் எதிர்கொள்ளும் திராணி உமக்கில்லை.பேசாமல் உனது குரு நாதரைப்போல் கதையோ கட்டுரையோ எழுதிக்கொண்டு பரிசு, பூமாலை,சால்வை என்று பிழைப்பை ஓட்டு.
சீ.முத்துசாமி

எழுத்தாளர் நண்பர் கென் அவர்கள் எழுதிய சமீபத்திய கவிதை இது. இது குறித்து அஞ்சடியில் யாராவது விவாதமோ அல்லது கருத்து பகிர்தலோ செய்வதன்றால் வரவேற்க்கத்ததாகும். அல்லது நான் புதியதாக தொடங்கியுள்ள "கவிதைக்கான உரையாடல்" வலைப்பதிவில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வலைப்பதிவின் முகவரி : http://kavithai-purithal.blogspot.com/

பா.சிவம் கவிதைகளுக்குப் பிறகு நான் இரசித்துப் படித்தது கென் கவிதைகள் ஆகும்
.


ஏகாந்த பெருவெளியில் தனிமையின்
இரவினில் வருகிறாள்
பருத்த புட்டங்களையும் கொழுத்த முலைகளையும்
கொண்ட மோகப்பெண்

விரைப்பேறும் சயனத்தினில் அங்கங்களில்
முகம் புதைத்து கலவி யாத்திரையில்
மிருகமாய் தொடங்கிட
வளையல்கள் உடைத்து நகங்களால் கீறி
புணர்கிறாள் என்னை முகங்களை மாற்றி

சொட்டாய் துளிர்த்து பீறிட்டு முடிகையில்
விழிப்புத் தட்டுகிறது
ஆழ்மன உணர்வில் மாறிய முகங்களில்
பார்த்தது

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

ஆக்கம்: கென்

அன்புடன்
கே.பாலமுருகன்

Wednesday, March 25, 2009

அஞ்சடி நிர்வாகி...

வணக்கம். பாலமுருகன் அண்ணன் அவர்கள்தான் வல்லினத்தையும் அநங்கத்தையும் மேலும் சில தீவிர இதழ்களையும் இலக்கியத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்தான் தங்களின் அஞ்சடி பதிவின் விவரங்களையும் அனுப்பி வைத்தார். ஒருமுறை சிறுகதை கருத்தரங்கம் நடத்த கோலா கங்சார் வந்திருந்தபோது பழக்கமாகியவர்.

இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சையைப் பற்றியும் பாலமுருகன் எழுதிய கட்டுரையில் வெளிப்பட்ட "விபச்சாரிகள்" குறித்த வரிகளைப் பற்றியும் இங்கு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. படிக்க மிக வருத்தமாக உள்ளது.

ஆரம்ப பதிவில் ஆளாளுக்கு இப்படிப் பயங்கர தாக்குதலில் இறங்கியிருப்பது எழுத்தாளனாக வேண்டும் என்கிற எனது ஆரம்ப மனநிலைகளுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. தயவு செய்து எனது வேண்டுகோள், பாலமுருகன், மஹாத்மன், நவீன் என்ற தனிநபரின் பெயரைக் குறிபிட்டுப் பேசுவதை நீக்கீவிட்டு வெறும் விவாதத்தை மட்டும் எடுத்துச் செல்லுமாறு அஞ்சடி நிர்வாகியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் சொன்னதாகவே இருக்கட்டும், இப்பொழுது சிவம் அண்ணனின் பதிவும் நவீன் அண்ணனின் பதிவும் தனிநபர் தாக்குதலிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்து விவாதம் பற்றி பேசுகின்றன. இப்படியே தொடருங்கள். கோமளா மீண்டும் நடுவில் வந்து மீண்டும் சிலரை வம்புக்கிளுத்தது போல தோன்றுகிறது.

இப்படியே சென்றால் இனியும் சிலர் உள்ளே வந்து மீண்டும் தன்னைத் தற்காத்துக் கொள்ள பாடுபடுவார் என்று தெரிகிறது. அஞ்சடி நிர்வாகி, தயவு செய்து இது நடக்காமல் கவனித்துக் கொள்ளவும். தனி மனித தாக்குதல் இடம்பெற்றால் அதைப் பதிவு செய்வது குறித்து ஆலோசியுங்கள்.

என்னைப் போன்ற இணைய அறிமுகம் உள்ள பலர், பல புது எழுத்தாளர்கள் இதைப் பார்க்க நேர்ந்தால் பலரின் பெயர்கள் பாதிக்கப்படும். இதை ஒரு பத்திரிக்கையாளர் என்கிற முறையில் உங்கள் பெயரும் பாதிக்கப்படும், காரணம் விவாததிற்கு யாரும் உள்ளே வருவது போல தெரியவில்லை. கிண்டல் செய்யவும் மலிவான விமர்சனம் செய்யவும் வருவது போலவே தெரிகிறது.. இது என் பார்வை.


மிக்க நன்றி
விக்னேஸ்வரன்
குப்புசாமிபேராக்

இது சறுக்கல் ( சர்க்கஸ்) மேடை அல்ல

எழுத்தாளர்கள் சறுக்குவது என்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. சர்ச்சைக்குள்ளான நண்பர் பாலமுருகனின் கூற்று கூட முற்றிலும் தவறு என்பதை நம்மால் முழுமையாக வாதிட இயலாது. சிறுமைப்படுத்துவதற்கு அல்லது அவமானப்படுத்துவதற்காக அந்த ஒப்பீடைக் கையாள்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

பிறரை ஏளனப்படுத்துவதற்கு நாம் என்ன நூறு விழுக்காட்டு புனிதர்களா? கரிசணத்தின் அடிப்படையிலேயே நானும் விலைமாதுவைத் தற்காத்துப் பேசியுள்ளேன்.இருப்பினும் சில சூழல்களில் கேள்விகள் எழுகின்றன. எனக்குத் தெரிந்தவரை, எந்தவொரு குடும்ப காரணமும் இன்றி, பணத்துக்காக இத்தொழிலுக்கு வருகிறவர்களும் உண்டு. பணம் சேர்க்க உலகில் வேறு தொழில் இல்லாததைப் போன்று. இது கண்டிக்கத்தக்கது. இன்றும் விலைமாதுகளை ஒழுங்கீனத்தின் குறியீடாகவே பெரும்பான்மை மக்கள் கருதுகின்றனர்.உனது எதிர்கால ஆசை என்னவென்றால் யாரும் விலை மாது ஆவது என கூறுவதில்லை. சமூகம் தந்த அடையாளத்தை - தான் பாலமுருகன் தனது கூற்றில் ஒப்பீடாக எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், சமூகம் என்பது யார் ? யாரெல்லாம் சமூகம் ? பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் சிந்தனை போக்கு என்ன என்பது பற்றி மிக இயல்பாகப் பேச முடியும். எழுத்தாளன், சராசரிகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கிறவன் ஆகிறான்...இந்த இடத்தில்தான் பாலமுருகனின் கூற்று முரண்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்காக

நமது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் பாலமுருகனின் கருத்து இருவித வாதங்களை முன் வைக்கிறது.பள்ளி சோதனைகளில்தான் கேள்விகளுக்கு ஒரே பதில். வாழ்வில் ஒரே கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.பதில்கள் இல்லா கேள்விகளும் உள்ளன. பதில் மட்டுமே கூட உள்ளது. விலைமாது மட்டுமல்ல அவளைத் தற்காத்துப் பேசுகிறவர்களின் புனிதமும் கூட கிண்டலாகிறது இக்கேடு கெட்ட உலகில். சொல்ல வந்ததை யார் கேட்கிறார்கள் ?

ஒரு விவகாரத்தில் ஒரு எழுத்தாளருக்கு எதிராக எதிர்வினைகள் அமைந்தால் அல்லது அவரது ஆற்றாமையால் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டதாக கூற முடியாது.. பாலமுருகன் சறுக்கவில்லை.

மன்னிப்பு கேட்பவர்கள் எல்லாம் சறுக்கியவர்கள் என பொத்தம் பொதுவாக அடையாளப்படுத்துவது , நியாயமாகாது.இலக்கியத்தில் எழுத்தில் வீழ்ச்சியும் - எழுட்சியும் இருக்கிறதா என்ன ?
பாலமுருகன் அவர் வழியில் செல்ல வழிவிடுங்கள்.
நேரம் வரும்போது இக்கூற்றை இன்னும் விரிவாக பேச கடமைப்பட்டுள்ளேன்.

பா.அ.சிவம்

மாற்று கருத்து

கோமளா, தங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.தங்கள் கருத்து தொடர்பில் எனது சில மாற்று கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.

"விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்று வெறுமனே எப்படி அடையாளபடுத்த முடியும்? உங்கள் அடையாளப்படுத்தும் முறை தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து வந்திருந்தால், வேண்டுமென்றால், "தமிழ்" விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உங்கள் மொழியிலேயே சொல்லிக் கொள்ளலாம். தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் தமது உடலை வணிக குறியீடாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ணும் பெண்களும் உலகளவில் இருக்கிறார்கள்.அதே சமயம் தமது உடலின் காம உக்கிரத்தை ஈடு செய்வதற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களும் இருக்கும் போது, ஒட்டு மொத்தமாக விபச்சாரிகளே ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்துவது"

கோமளா...நீங்கள் கூறுவது நியாயமே.ஆயினும் இங்கு ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப் படுத்துவது ஒடுக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து அல்ல.சமூகத்தின் மனநிலையிலிருந்து.இங்கு நான் ஒடுக்கப்பட்டவர்களாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் கூறவில்லை.கண்ணுக்குத் தெரியாத ஒரு சூட்சுமமான சங்கிலியால் பல தருணங்களில் இந்த ஒடுக்கப்படுதல் நிகழ்கிறது.என்னளவில் மலேசியாவைப் பொருத்தவரை நாம் அனைவருமே ஒடுக்கப்பட்டவர்கள்தான்.ஏதோ ஒரு வகையில் கேள்வி எழுப்ப இயலாமல்...மீறி கேள்வி எழுப்பினால் உதைபடும் நிலையிலும்,சிறைவாசம் போகும் நிலையிலும் உள்ளோம்.ஒடுக்கப்படுதல் தொழில் சார்ந்து இல்லை.இயல்பாகவே ஆதிக்கத்தை காட்ட விரும்பும் மனப் பான்மையும் தனக்கு மேலுல்லவன் தன்னை அடக்கும் போது தான் தனக்குக் கீழ் உள்ளவனை அடக்க வேண்டும் என்ற மனோபாவமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.அந்த வகையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும்(ஓரளவு தொழில் புரிந்து வாழ வழி உள்ளவர்கள்)அத்தகைய வாய்ப்பு கிடைக்காதவர்களை தங்களுக்குக் கீழாக கருதும் மன நிலை ஏற்படுகிறது.கோமளா ஊன்றி கவனித்தால் ஒரு வகையில் சாதிய கட்டமைப்பும் இந்த வகையானதே என புரிய வரும்.உங்கள் கூற்றுப்படி விபச்சாரம்ம் செய்யும் பெண்களும் சமூகத்தின் பார்வையில் கீழ்நிலையிலேயே கருதப் படுகின்றனர்.

புளோக்கில் இதைப் பதிவு செய்து, அவருக்குப் பொதுவில் எல்லோரும் அறியும் படி புத்திமதி சொல்லி உங்கள் தனித்திறமையைக் காட்டியுள்ளீர்கள். போதாதுக்கு எல்லோருக்கும் மின்னஞ்சல் பண்ணி அழைத்துள்ளீர்கள். ஏன்? பாலமுருகன் மீதுள்ள காழ்ப்பா? அல்லது வயிற்றெரிச்சலா?

கோமளா, நான் மின்னஞ்சல் யாருக்கும் செய்யவில்லை.குறுந்தகவல் வழியும் தொலைப்பேசி வழியும் கலந்துரையாடலில் ஈடுபட அழைத்தேன்.'காழ்ப்பா? அல்லது வயிற்றெரிச்சலா?' இந்த வார்த்தை யார் வாயிலிருந்தாவது என்றாவது வரும் என நான் அறிந்ததே.பல விவாதங்களும் இது போன்ற வார்த்தைகளில்தான் முடிவுற்றுள்ளன.எனது காழ்ப்பு குறித்தும் வயிற்றெரிச்சல் குறித்தும் பாலமுருகன் அறிந்திருப்பார் என நம்புகிறேன்.வேறு விள்ளக்கம் தர விரும்பவில்லை.

அறிவுரைகள் கூறியிருப்பதாகக் கூறியுள்ளீர்கள்.கோமளா உங்கள் எதிர்வினை முழுதும் நீங்களும்...

ம.நவீன்

எழுத்தாளர்கள் இப்படிச் சறுக்குவது இயல்பு

எழுத்தாளர்கள் இப்படிச் சறுக்குவது இயல்பு

5 நாட்களுக்கு முன் அஞ்சடி வலைத்தளத்தில் நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள் குறித்துத் தெரிந்து கொண்டேன். 2 வருடங்களாகத் தொடர்ந்து அநங்கம் வல்லினம் படித்துக் கொண்டிருப்பதால் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எல்லோரையும் அறிவேன். விவாதத்தில் பாலமுருகன் தனி ஆளாக மாட்டிக் கொண்டு முழிக்கிறார் போல? சரி நாமும் சில பதிவுகளை முன் வைத்துப் பார்ப்போம் என்கிற நம்பிக்கையில் வந்துள்ளேன். எல்லாம் எழுத்தாளர்களும் எங்கோ ஒரு இடத்தில் இப்படிச் சறுக்குவது இயல்பு. யாரும் இங்கு பரிபூரண எழுத்தாளர்கள் கிடையாது. எஸ்.ராமகிருஷ்ணன் தமது கட்டுரையொன்றில் "எழுத்தாளன் என்பவன் சாமான்ய மனிதன் போல எல்லாம்விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உடையவந்தான். அவன் சமூக சீர்த்திருத்தவாதியோ அல்லது தீர்க்கத்தரிசியோ கிடையாது." இதை ஏன் ஒப்புக் கொள்ளாமல் தாம் தான் ஆகச் சிறந்தவன் என்பவன் போல பாடுபடுகிறார்கள்?

பாலமுருகனின் படைபிலக்கியம் குறித்து அதிகமான நம்பிக்கை வைத்துள்ளேன். சீக்கிரமே யாரும் கணிக்க முடியாத வேகத்தில் வளர்ந்து மலேசிய படைப்பிலக்கியத்திலும் தமிழகத்திலும் தமது இலக்கிய பிம்பத்தை வலுவாகப் பதித்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் இப்படியொரு விவாதங்களில் சிக்கியது வருத்ததற்குரியது.

முதலில் விபச்சாரிகளைப் பற்றி பாலமுருகன் வைத்த ஒப்பீடுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அது தவறானது என்றே கருதுகிறேன். அதே சமயம் மற்ற பலரும் சில இடங்களில் விபச்சாரிகள் குறித்து தற்காத்துப் பேசுகிறோம் என்கிற நோக்கத்தில் அங்கேயும் சில தவறுகள் புரிதல்கள் நடந்துள்ளன. (குறிப்பாக ம.நவீன் - மஹாத்மன்) விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்று வெறுமனே எப்படி அடையாளபடுத்த முடியும்? உங்கள் அடையாளப்படுத்தும் முறை தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து வந்திருந்தால், வேண்டுமென்றால், "தமிழ்" விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உங்கள் மொழியிலேயே சொல்லிக் கொள்ளலாம்.

தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் தமது உடலை வணிக குறியீடாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ணும் பெண்களும் உலகளவில் இருக்கிறார்கள்,(சராசரி நடுத்தர பணக்காரர்களைவிட இவர்கள் இன்னும் அதிகமாகச் சம்பாதித்து, கௌளரமாக வாழ்கிறார்கள்) அதே சமயம் தமது உடலின் காம உக்கிரத்தை ஈடு செய்வதற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களும் இருக்கும் போது, ஒட்டு மொத்தமாக விபச்சாரிகளே ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்துவது, மிகப் பெரிய அத்துமீறல். அவர்களுக்கும் சில உரிமைகள் உண்டு என்பதை கொச்சைப்படுத்துவது போல உண்டு. அந்த ஒரு சிறுபாண்மை குழுவின் மனித சுதந்திரத்தைக் களங்கப்படுத்துவது போல "எல்லாம் தெரிந்த" மாதிரி பாலமுருகனின் கருத்தை எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் நீங்களும் தவறான புரிதலுக்கே உட்பட்டுள்ளீர்கள்.

யார் ஒடுக்கப்பட்டவர்கள் என வரையறுக்கும் முன் எல்லாவற்றையும் பொதுவாகவே சொல்லிவிட்டோ பொதுவான அடையாளத்தையோ கொடுத்துவிட்டுப் போக முடியாது. இதைத்தான் பாலமுருகன் சொல்ல வந்து எங்கோ விட்டுவிட்டார் போல.

பாலமுருகனுக்கு :பாலமுருகன், நீங்கள் மிக தைரியமாக ஆரம்பத்திலேயே, ஓரிரு வார்த்தைகளுடன் அஞ்சடியிலிருந்து விலகியிருக்கலாம் போல. யார் உங்கள் மீது எதிர்வினை வைத்திருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம் சார்ந்தது. ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி அல்லது உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, கடைபிடிக்க முடியாததற்கு வருந்துகிறேன் என்று இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இப்பொழுது இப்படி மன்னிப்புக் கேட்டு நிற்கும் அளவிற்கு வந்திருக்காது. சில நேரங்களில் நாம் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் நடந்து கொள்வதும் பேசுவதும் இயல்பு. அதைக் கடந்து செல்வதே சிறப்பு, பக்குவமும்கூட.

அ) அநங்கம் : நவீன் கூறியிருந்தார், "யார் வந்தாலும் போனாலும் அநங்கம் வளரும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு" என்று. பிறகு ஏன் வருத்தம்? அநங்கத்தை வளர்க்கும் பணியில் கவனம் செலுத்துங்கள். யார் வந்தாலும் போனாலும் அநங்கம் வளரும் என்பது உண்மையே. அதைக் கூட்டணி அமைப்பது கூடாரத்தில் ஆள் சேர்ப்பது என்றெல்லாம் சொல்பவர்கள் அநங்கத்துடன் தொடர்பில்லாதவர்கள். பிறகு ஏன் அவர்களைப் பொருட்படுத்த வேண்டும்?

ஆ) எதிர் அரசியல் சொல் அரசியல் என்று போட்டு ஜமாயித்துவிட்டீர்கள். உங்கள் கருத்துக்கும் நீங்கள் ஆற்றிய எதிர்வினைக்கும் எதிர் அரசியலுக்கும் ஆங்காங்கே கொஞ்சம் இடித்தாலும்- தொடர்பில்லாத முரண்களை மஹாத்மன் மிகவும் அழகாகக் கட்டுடைத்துவிட்டார், சொற்களைக் கொண்டு மிகவும் ஜாலியாக விளையாடிருக்கிறீர்கள். ரொம்பவும் இரசித்துச் சிரித்தேன்.

இ) பா.சிவம் கூறியிருந்தார், "யாருக்காகவும் நீங்கள் எழுதவில்லை" என்று. ரொம்பவும் சத்தியமான பேச்சி. யார் பற்றியும் கவலைபடாமல் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாராலும் எட்ட முடியாது ஒரு உச்சத்தை உங்களால் அடைய முடியும், அப்படியொரு வலிமை உங்கள் கதைகளில் உண்டு. (இது வெறும் புகழ்ச்சி என்று கருதிவிட வேண்டாம்)

ஈ) எல்லாவற்றுக்கும் நீங்கள் எதிர்வினையாற்றிதான் ஆக வேண்டும் என்று யாரும் உங்களுக்கு நெருக்குதல் கொடுக்க முடியாது. யார் மீது கோபப்பட வேண்டும் எது குறித்து எதிர்வினையாற்ற வேண்டும் என்பதே உங்கள் தேர்வு. இவர்கள் மதிப்பிட்டு விடுவார்கள், அவர்கள் அரசிலாக்கிவிடுவார்கள் என வருந்துவது வீண். அவர்களையும் பொருட்படுத்தாதீர்கள். எதற்கு எதிர்வினையாற்ற உங்கள் இயல்பு இடமளிக்கிறதோ உங்களுக்கு நீங்கள் மிக நேர்மையாக இருந்து அதற்கு மட்டும் எதிர்வினையாற்றுங்கள். எல்லாவற்றிலும் கருத்து தெரிவித்து, கோபத்தை வெளிப்படுத்தி, எதிர்வினையாற்ற எழுத்தாளன் என்ன சமூக சீர்த்திருத்தவாதியா? அவனை அப்படி வற்புறுத்துவதும் வன்முறைதான். மஹாத்மன் அவர்கள் தாராளமாகவே பிறர் நழுவுவதைப் பற்றி விவாதமாக முன் வைத்து, வீச்சம் அடிக்கும் தமது மூளையிலுள்ள எல்லாவற்றையும் குப்பை போல கொட்டட்டும், பெறுக்கிக் கொள்ளட்டும். அதைப் பற்றியும் நீங்கள் சட்டை செய்து கொள்ள வேண்டாம்.

ம.நவீனுக்கு :தங்களின் வல்லினத்தில் எனக்கு தனிபட்ட அபிமானமும் நம்பிக்கையும் உண்டு. பாலமுருகனுடன் ஆரம்பத்திலேயே அவர் எழுதிய வரி குறித்து உங்களுக்கு எதிர்வினை இருப்பதாகவும் அதைப் பற்றி நேரில் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னதாக அவரே தமது கட்டுரையில் சொல்லியிருந்தார்.. இருந்தும் அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அவரிடமும் இது பற்றி பேசி விளங்கிக் கொள்ளாமல், இதை இப்படி பதிவுக்குக் கொண்டு வந்தது எனக்கென்னமோ நாகரிகமாகத் தெரியவில்லை. அல்லது இது குறித்து இந்தக் கருத்து வந்த மௌளனம் இதழில் வெளியிட்டிருக்கலாம். உங்கள் தனிபட்ட புளோக்கில் இதைப் பதிவு செய்து, அவருக்குப் பொதுவில் எல்லோரும் அறியும் படி புத்திமதி சொல்லி உங்கள் தனித்திறமையைக் காட்டியுள்ளீர்கள். போதாதுக்கு எல்லோருக்கும் மின்னஞ்சல் பண்ணி அழைத்துள்ளீர்கள். ஏன்? பாலமுருகன் மீதுள்ள காழ்ப்பா? அல்லது வயிற்றெரிச்சலா?

பாலமுருகன் கீழிறங்கி பேசிவிட்டார் என்று சொல்லும் நீங்கள், மஹாத்மன் செய்ததை மட்டும் வெறும் புன்னகையுடன் நியாயப்படுத்திவிட்டீர்களோ? அந்தச் சொக்கன் தான் மட்டும்தான் மிகவும் நல்லவர் போல வேடமிட்டு நாடகமாடியுள்ளார் என்பதைத் தெரிந்தும் மறைத்துவிட்டீர்கள் போல.

மஹாத்மனுக்கு: ஒன்றும் இல்லை! பா.மா கே.பா என்று எல்லோருக்கும் புத்திமதி சொல்லும் பகவான். இவர்தான் மலேசிய இலக்கிய பண்புகளையும்- எழுத்தாளர்களின் மனவுலகையும் செயல்களையும் வரையறுக்கும் மகாத்மா போல. என்ன ஒரு வேடிக்கை?

குறிப்பு: எல்லோரும் விபச்சாரிகளுக்கு வாழ்வு கொடுக்கும் உத்தமர்கள் போலவும் அந்தத் தெய்வீகமானவர்களுக்கு வாழ வாய்ப்பளித்து அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து மீட்சி கொடுத்த வள்ளல் போலவும் , அவர்களைக் கண்டால் மண்டியிட்டுக் கும்பிடும் பக்தன் போலவும் ரொம்பவே பிதற்றுகிறீர்கள். வீச்சம் அடிக்கிறது!

வணக்கம்,
கோமளா,கடாரம்

Tuesday, March 24, 2009

என்னால் தொடங்கிய விவாதங்களுக்கு. . .

என்னால் தொடங்கிய விவாதங்களுக்கு. . . நண்பர் நவீனின் கடைசி கட்டுரையைப் படித்த பிறகு, ஏன் நான் என்ன கொம்பனா? மன்னிப்புகூட கேட்கத் தயங்குகிறோமே எனச் சுருக்கென தோன்றியது. ஆகையால் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் முன்பே சொன்னது போல எனக்கு விவாதிக்கும் திறனே இதுதான் முதல் அனுபவம் என்பதால் நான் முன்வைத்து நானே சிக்கிக் கொண்ட சில பதற்றங்களை, தடுமாற்றங்களை எண்ணி வருத்தம் கொள்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள், புத்திமதியோ அல்லது தனி மனிதனை அவனுடைய பழைய தவறுகளை சுட்டிக் காட்டி பேச வேண்டுமென்றால், நேரிலேயே முகத்திற்கு முகம் பேசிவிட்டு போனால் அவை அவ்வளவு கசப்பாக இருக்காது என நினைக்கிறேன்.

பா.சிவம் சொன்னது போல உண்மையில் மரணத்தைவிட கொடியதுதான் நண்பர்களின் பிரிவு. என்னத்தெ கொண்டு போவ போறோம்? என்னை முன்னிறுத்தி நான் ஆடிய அபத்த விவாதங்களில் கொஞ்சம்கூட நியாயம் இருக்குமோ இல்லையோ, தாராளமாக மன்னிப்பு மட்டும் கேட்கத் தோன்றுகிறது.

நண்பர்களே, மீண்டும் நான் எல்லோரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என்னால் தொடங்கிய விவாதம்தான் இந்த அளவிற்குக் காத்திரம் பெற்று எங்கொங்கோ சென்று இழிவான நிலைக்குச் சென்றுள்ளது. இறுதியாக ஒன்று மட்டும், எல்லோரையும் திருப்திப்படுத்த இயலாத நிலையில் சிலவேளைகளில் முரண்பட்டுப் போகிறேன். நவீன் நீங்கள் அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகியது தங்களின் சுதந்திரம். இனி அநங்கத்தின் ஆலோசகர் குழு இல்லை. அநங்கத்தை இன்னும் வளர்க்க பாடுபடுவேன். மேலும் விலகினாலும் நீங்கள் கடைசியாக சொன்ன ஆலோசனைகள் படி அநங்கத்தை இன்னும் தீவிரமாக்க முயற்சிப்பேன்.

நண்பர்கள் படைப்புகளை அனுப்பி அநங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வர வேண்டும். யுவராஜன் சொன்னதை அப்பொழுதே கேட்டிருக்கலாம் போல. மன்னிப்புக் கேட்டுத் திருத்திக் கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்க வேண்டியிருக்காது. நுண் அரசியலோ மண்ணாங்கட்டி அரசியலோ, இன்றும் இந்த அரசியல் வைத்தே நான் சிலரால் மதிபீடப்படுகிறேன். நானா அரசியலை கேட்டேன்? நானா செயலாளர் பதவியை வலிந்து வந்து பெற்றுக் கொண்டேன்? நம்பிக்கையின் பெயரில் ஒருசில மூத்தவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட எழுத்தாளர் சங்கம் செயலாளர் பொறுப்பை ஒரு பொறுப்பாக மட்டுமே பார்த்தேன். அது தரப்பட்டு சில நாட்களிலேயே உடனே வெளியேறு என்று கோரிக்கைவிட்டால், என்ன இது நியாயம்?

எல்லாவற்றுக்கும் சில முறைகள் உள்ளதே. நமது கால் கடிக்கப்படுகிறதே என்பதற்காக நல்லா இருக்கும் காலையும் பிடுங்குமாறு உத்தரவுவிட முடியுமா? என்னவோ. . நானே அறியாத எதிர்பார்க்காத தருணத்தில் பலரிடம் பகைத்துக் கொண்டதாக போயிற்று. இனி அவர்களிடம் நேர்மையா தவறை ஒப்புக் கொண்டு சென்றாலும் நான் சந்தர்ப்பவாதி எனக் கருதபடுவேனா? வேண்டாமப்பா! மனதிலிருந்து வரும் குரல் இது. என்னைத் திருத்திக் கொண்டு என் பலவீனங்களைத் துறந்து, இனி படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என தீவிரமடைந்துள்ளேன். மீண்டும் எங்காவது சந்தித்தால், ஒரு புன்னைகையோடு எதிர்க்கொள்வோம்.

விபச்சாரி யோனி குறித்து நான் சிறுகதை எழுதுகிறேனோ நாவல் எழுதுகிறேனோ அது என் பாடு. நானே வலிந்து ஏற்படுத்திய கட்டமைப்பைக் கொஞ்சம் தளர்த்தும்போது மனம் இலேசாகுகிறது. பா.சிவம் சொன்னது போல மரபு கவிஞர்கள் குறித்து எதற்குக் கவலைபட வேண்டும்? உண்மைதான். நாம் நம் வழியில் எழுதிக் கொண்டே போகலாம் என நினைக்கிறேன். (இது எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்) சில சமயங்களில் எதிர்வினையாற்ற வேண்டிய இடத்தில் அமைதி காத்திருக்கிறேன். இனியாவது இந்த மண்டைக்கு அதன் முக்கியத்துவம் குறித்து உறைக்குமா என்று பார்ப்போம்.

சிவம் சொன்னது போல நான் யாருடைய எதிர்ப்பார்ப்பிற்கும் எழுதவும் இல்லை, அதே சமயம் பிறரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் எதிர்வினையாற்றவும் தேவையில்லை. சறுக்கி மீண்டும் எழுந்து கொள்வதுதான் மன வலிமை போல. இப்பொழுது எழுந்து முன்பைவிட உறுதியாக நிற்பது போல தோன்றுகிறது. எங்கிருந்து எல்லாம் தவறுகளும் நிகழ்கிறது என ஆராயவும் தோன்றவில்லை. மிகச் சரியாக நடந்து கொள்ளவும் அவ்வளவு துல்லியமாக இயலவில்லை. இருந்தும் சில கற்பிதங்கள்-சில பகிர்தல்-அதே சமயம் சில அவதூறுகள் என எல்லாவற்றையும் சம்பாரித்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறேன்.

இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா? வலிக்கிறது நண்பா மனம். . . .

சிவம் சொன்னது போல அந்த தெய்வீகமானவர்களை வம்புகிளுத்ததால் கிடைத்த பலனா? தெரியவில்லை. வலு பெறும் நம்பிக்கைகளுடன். . அநங்கத்தின் எழுத்துப் பிழைகளைக் குறைக்க களைய ஆசிரியர் குழுவில் சொல்லி சீரமைப்பேன்.. . சிவம், நவீன் முன்வைத்த நட்பான எதிர்வினையில் மனம் இலேசாகி எல்லாம் தவறுகளையும் என் மீதே சுமத்திக் கொண்டு நிற்கலாம் எனத் தோன்றுகிறது. அன்புக்கு இவ்வளவு சக்தியா?

அன்புடன்
கே.பாலமுருகன்

Monday, March 23, 2009

இறுதியாய்...

மறந்து விடக்கூடும் என்பதால் முதலிலேயே ஒரு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...

'இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து ஒரு கவிஞரை அழைத்து வந்து இந்த நண்பர் படுத்தியபாடும் அடித்தக் கொள்ளையும் நினைவிற்கு வருகிறது' என கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அதில் 'அடித்தக் கொள்ளை'என்ற சொல்லை பிரயோகித்தமைக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அந்தச்சம்பவத்தை நான் நேரில் இருந்து பார்க்காத நிலையில் சம்பந்தப்பட்ட சிலரின் வாய் வழி வாக்கு மூலத்தால் ஏற்பட்ட கோபம் அது. எப்படி இருப்பினும் 'அடித்தக்கொள்ளை' என்பது மிகவும் கனமான சொல்லே. எந்த ஆதாரங்களும் இல்லாத காற்றில் கடந்த சொல்.

பாலமுருகன்,
எழுத்தாளனுக்கு கோபம் தேவைதான்.அது அறச்சீற்றமாக இருப்பது நலம்.(நிச்சயமாக நான் அறிவுரை கூறவில்லை.) எனக்கு மீண்டும் மீண்டும் டாக்டர் சண்முகசிவா போன்றவர்களினால் வழங்கப்படும் ஆலோசைனைகள். உங்கள் எதிர்வினையில் இருந்தவை உங்களுக்கான தனிப்பட்ட கோபம். அது சமூகத்துக்கானதன்று. அதன் விளைவு "உங்களின் போலி முகத்திரையையும் என்னால் கிழிக்க முடியும் மஹாத்மன். அமைதி காப்பது நல்லது என்று இருக்கிறேன். நவீன் குறித்து நீங்களே அவர் பால் உள்ள கடுப்புகளை என்னிடம் சொல்லியிருக்க்கிறீகள்" என மிகவும் கீழிறங்கி நீங்கள் பேசும் படி ஆகியுள்ளது. இது மிகவும் ஒரு கீழான செயல் அல்லவா!? யாருக்கு யாரின் மேல் வெறுப்பு இல்லை? கடுப்பு இல்லை? அத்தனையும் மீறி ஏதோ ஒரு சிறு நம்பிக்கையிலும் அன்பிலும்தானே இன்றளவும் உறவுகள் விரிகிறது.

நான் உங்கள் கருத்தில் வைத்த எதிர்வினை மூன்று...

1.விபச்சாரியின் யோனி....அது குறித்து நிறைய விவாதித்து விட்டோம். அதையொட்டி எனது இறுதி கருத்தும் ஒரு கேள்வியும்... "இன்றைய நவீன சொல்லாடல்களின் மகத்துவமே அதன் உள் அடுக்குகளும் முரண்பட்டு பிளவுப்படும் அதன் நுண் வெளிப்பாடுகளும்தான். சமூகம் குறித்து தனிநபர் குறித்து உலகம் குறித்து பயன்படுத்தப்படும் யதார்த்த சொல்லாடல்களை மீறிய ஒரு கட்டமைப்பு இப்பொழுதெல்லாம் மிக துணிச்சலாகக் கையாளப்படுகின்றன. அதை உடனே புரிந்துகொள்ள சில கட்டுடைப்புகளைச் செய்து படைப்பாளன் சொல்ல வரும் செய்தியை அடைய சில நுண் முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும்"என்றீர்கள்.

அதாவது உங்கள் விபச்சாரியின் யோனி குறித்த சொல்லாடல் பல உள் அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்றீர்கள்.சரி.ஆனால் மற்றொரு கடிதத்தில் உங்களின் வாக்குமூலமாக.... "தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து, மரபு கவிஞர்கள் ஒரு விபச்சாரியின் யோனிக்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட. . அவர்கள் பொருத்தவரை விபச்சாரியின் யோனி இழிவானது. . காரணம் இந்தச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பிலிருந்து விபச்சாரி என்பவள் அங்கிக்கரிக்கப்படாமல் போய்விட்டாள். இங்கே நவீன எழுத்தாளனின் படைப்பும் அதைவிட ஏறக்குறைய அதே அளவில்தான் வைத்து மதிப்பீடபடுகின்றன. நான் எனது வரியில் சொல்ல வந்த ஒப்பீடும் இதேதான்." என்கிறீர்கள்.

நீங்கள் விபச்சாரியின் யோனிக்குத் தரும் அர்த்தம் இதுதான் எனும்போது இதில் எங்கே இருக்கிறது சொல் அரசியலும்...எதிர் அரசியலும்?ஒரு வேலை எனக்குதான் புரியவில்லையோ.(மீண்டும் கோவை ஞானியை நான் மறு வாசிப்பு செய்ய வேண்டும் போல.)

2.எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டும் நண்பரினால் தமிழ் சமூகத்தின் மீது தீராத வருத்தம் ஏற்பட்டதாகக் கூறினீர்கள்.ஓர் இதழ் ஆசிரியராக அது போன்றவர்களுக்கு நான் நன்றி சொல்வேன்.முற்றுப்பிழை தவிர்ப்பது இயலாதக் காரியம்தான்.ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் ஓரளவு சரிபடுத்தலாம். ஒவ்வொரு மாதமும் நான் 'வல்லினம்' வெளிவந்ததும் வருந்தும் விஷயம் இதுதான். எழுத்து பிழைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது நமது கடமை. அதற்கு சமூகத்தின் மேல் நாம் வருத்தம் கொள்ள வேண்டாமே.(அவ்வளவு ஏன் சாதாரண இந்த புளோகில் எழுதும் பத்தியில் கூட நம்மால் எழுத்துப் பிழையை முழுமையாக அகற்ற முடியவில்லை.)

3.தமிழக எழுத்தாளர்களுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் பற்றி கூறினீர்கள். இன்று மலேசிய பாடல்கள் தமிழக சினிமா பாடல்களுக்கு நிகராக இசை அமைக்கப் படுகின்றன. நமது நாட்டிலும் நல்ல கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். இந்த வெளிபடல் எல்லா கலை துறைகளிலும் நிகழும். நம்மிடம் ஒரு வகையான அடிமை புத்தி உள்ளது. அது எல்லோர் போலவும் எனக்கும் முன்பு இருந்தது. நமது எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் உலக அளவில் செல்ல நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.இது குறித்து தெளிவான பார்வை நமக்கு தேவைப்படுகிறது.

சில கேள்விகளையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதில் பிரதானமாக..."இத்தனை வசதி வாய்ப்பு இருந்து நம்மால் நமது படைப்புகளை வெளி உலகிற்கு கொண்டு செல்ல முடியாதது ஏன்?" "தமிழக சிற்றிதழ்கள் முன்பு அரவே கண்டு கொள்ளாதா மலேசிய படைப்பாளிகளுக்கு இப்போது முக்கியத்துவம் தருவது ஏன்?" இதில் விவாதிக்க நிறைய உண்டு.அதற்கு கொஞ்சம் இலங்கைத் தமிழர்களின் பார்வையும் அவசியம்.

பல ஆண்டுகளாக தமிழக ஊடகவியலாளர்களால் வெளிபட முடியாமல் இருந்தவர்கள் அவர்கள்.இன்று சிற்றிதழ்கள் அவர்களைத் தேடி ஓடுகின்றன.ஆயினும் இத்தகைய விவாதங்களுக்கு இடம் தராமல்...தங்கள் ஆசிரியர் குழுவால் சில தீர்மாணங்களைக் கொண்டுவந்துள்ளீர்கள்.அவற்றில் முக்கியமானது தமிழக எழுத்தாளர்களுக்குத் தரும் முக்கியத்துவம் குறித்தும் அடங்கும். உங்களுக்கு நினைவிருக்கலாம்...அநங்கம் தொடங்கப்பட்டபோது நான் கூறினேன்."அநங்கம் ஒரு சிற்றிதழின் தன்மையைப்பெற வேண்டும்.'வல்லினம்' ஒரு இடைநிலை ஏடு. அதைக்காட்டிலும் மிகத்தீவிரமான போக்கை அநங்கம் கொண்டிருத்தல் அவசியம் (இங்கு நீங்கள் சிற்றிதழுக்கும்,இடை நிலை ஏட்டுக்குமான பேதத்தை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.)"

எனவே...தாங்கள் தங்கள் ஆசிரியர் குழுவினால் தீர்மானித்த நிலை குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிட்ட படி அது உங்கள் சிற்றிதழின் தனிபட்ட நிலைபாடுகள் சுதந்திரம் சார்ந்தவை. எனக்கும் தனிப்பட்ட நிலைபாடு உள்ளதால் நான் ஆலோசகர் குழுவிலிருந்து விலகிக் கொள்கிறேன். யார் வந்தாலும் போனாலும் அநங்கம் மேலும் வளரும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. முக்கிய குறிப்பு :அப்புறம் 'நான் கடவுள்' குறித்த எனது கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களுக்கு நன்றி.ஆனால் அவை கேள்விகள் இல்லை நண்பா.எனது விமர்சனம்தான்.
பாண்டிதுரை அவர்களுக்கு...
வல்லினத்தை தங்களிடம் முதன் முதலாக இம்முறைதான் விற்பனை செய்ய உதவி கேட்டிருந்தேன்.25 இதழ்கள்.அவற்றில் ஐந்தை தவிர மற்றவைகளுக்குத் தாங்கள்தான் பணம் செலுத்துகிறீர்கள் என எனக்குத் தெரியாது.தங்களுக்கு அந்தச்சிரமம் கொடுத்தமைக்கு வருந்துகிறேன்..இனி உங்களுக்கு வல்லினம் விற்கும் சிரமம் தர மாட்டேன்.

மகாத்மனுக்கு கூற ஒன்றும் இல்லை...ஒரு புன்னகையைத்தவிர.

ம.நவீன்

நல்லவர்களுக்கு அவள் கெட்டவள் ...

மரபுக்கவிஞர் குறித்த பாலமுருகனின் ஆதங்கமும் சினமும் நியாயமானதே...ஆனால் அதனைக் குறிப்பிட்ட விதம் அவரது நோக்கத்தை அடையவில்லை என்றே கருதுகிறேன்.மாறாக அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆத்திரத்தையும் (மூத்திரத்தையும்) வெளிப்படுத்துவதற்கு மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது.சுதந்திரம் எவ்விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதே பல வேளைகளில் கேள்வியாகிறது.

ஒன்றை இவ்விடத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பாலமூருகன் வேண்டுமென்றே மரபுக்கவிஞர்களைச் சீண்டுகிறாரா? அல்லது அவர்களின் சீண்டலுக்கு எதிர்வினை ஆற்றுகிறா என்று...வேண்டுமென்றே கல் எறிந்தால் கண்டிக்கத்தக்கதே...கல் எறியப்பட்டால் பதிலுக்கு வீட்டை கொளுத்துகிற நிலையும் வந்துவிடும்.

பாலமுருகனின் கட்டுரை மேலும் ஆழமான விவாதத்திற்கு இட்டுச் செல்கிறது. இன்று நாமாகவே சென்று மரபுக்கவிஞர்களைச் சீண்ட வேண்டிய அவசியம் இல்லை.அவர்களை ஏன் நாம் பொருட்படுத்த வேண்டும்? நாம் எழுதுகிற கவிதைகளை அல்லது நமது இலக்கிய போக்கை, இலக்கியத்தின் உயிரைக் கொல்லும் ஒரு கிருமியாகவே இன்றளவும் பார்க்கும் அவர்களை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும்?அவர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று எவர் சொன்னது?

அவர்களுடைய சிந்தனையும் செயலும் நமக்கு ஒவ்வாத நிலையில், அவர்களிடமிருந்து நாம் ஏன் மாலையையும்-பொன்னாடையையும் மதிப்பையும் எதிர்ப்பார்க்க வேண்டும்?யாரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும் என்பது முக்கியம் இல்லையா ? அரசியல் தலைவருக்கு கவிதை எழுதி, புகழ்பாடி இன்றைய இலக்கிய போக்கை வஞ்சித்து தனது இலக்கியத்தை வளர்க்கும் இறைவனின் கவிஞர்களை எல்லாம் நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்.

பாலமுருகனின் கட்டூரையில்...அவர்களின் பிதற்றலுக்கு கொஞ்சம் மதிப்பளித்து ...வாருங்கள் நவீன படைப்பாளிகளே தைரியமாக.நாமெல்லாம் துரோகிகள், மரபை உடைக்கும் பரிசோதனை படைப்பாளிகள் என்று கெளரவமாக ஏற்றுக்கொள்வோம் ...என எழுதியுள்ளார்.

எனக்கு சில கேள்விகள் உள்ளன ...
- அவர்களின் பிதற்றலுக்கு நாம் ஏன் (கொஞ்சம்) மதிப்பளிக்க வேண்டும்?- அது பிதற்றல் எனும் போது(கொஞ்சம்) மதிப்பளிக்க வேண்டும் என்பது ( கொஞ்சம்) முரணாகத் தெரியவில்லையா?

பாலமுருகனிடம் மற்றும் சக எழுத்தாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேணடி சில கருத்துக்கள்...

நவீன படைப்பாளிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு எதிராக நமது இலக்கியத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உள்ளதா? சத்தியமாக எனக்கு இல்லை.ஏனென்றால் அவர்களை நான் பொருட்படுத்தவில்லை.அவர்கள் எழுதுகிறார்கள்.நானும் எழுதுகிறேன்.

அவர்களுக்கு நிரூபிப்பதற்காகவென எழுதி குவிக்க வேண்டிய அவசியம்/தேவை நமக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நண்பர்களே...நன்கு யோசித்துப் பாருங்கள். மரபை உடைத்த துரோகிகள் யார் ? நாமா ? அவர்களா? நானில்லை மிக உறுதியாக!

வளரும் பயிரைக் கிள்ளி எறிய, அல்லது அவமானப்படுத்த,பொதுவில் கேவலப்படுத்த , நமது கருத்துக்களை மறுதலித்து, நேர்மையற்ற, விதண்டாவாதத்தை முன்வைக்கும் அவர்கள்தானே மரபை உடைக்கும் துரோகிகள் !

நவீன வாழ்வின் உற்பத்தியில் வாழ்ந்தாலும், எழுத்தின் நவீன போக்கை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் , நவீன இச பதிவுகளை நிராகரிக்கும் அவர்கள் அல்லவா மரபை உடைக்கும் துரோகிகள்...

அவ்வகையினருக்கு நாம் ஏன் கொஞ்சம் மதிப்பளிக்க வேண்டும் அல்லது அவர்களைப் பொருட்படுத்தி எழுத்தணி திரள வேண்டும்?

ஆனால் பாலமுருகனுக்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம்.அதை ஏற்றுக் கொள்வதும் , ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம் மற்றும் சுதந்திரம். ஆனால் கூற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் எம்பித் தவிக்கும் முரண், எழுத்துண்மையை காலப்போக்கில் புலப்படுத்தி விடும்.விபச்சாரியின் யோனி ... நல்ல தலைப்பு இன்னும் எழுதாத கவிதைக்கு...ஒவ்வொருவருக்கும் விபச்சாரி குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்..இருக்க வேண்டும். நல்லவர்களுக்கு விபச்சாரி கெட்டவள் ஆகிறாள்.என்னைப் போன்ற கெட்டவர்களுக்கு அவள் தெய்வமாகிறாள்.ஆக அவளது யோனியும் தெய்வீகத்தன்மையை அடைகிறது. விபச்சாரி என்பவள் கெட்டவள் அல்லது தீண்டத்தகாதவள், சமூகத்தின் தீட்டு என்றால் கடவுளின் தெய்வீகத்தன்மையும் - புனிதமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நீங்கள் ( அனுபவசாலிகள்) கவனிக்க வேண்டும்.விபச்சாரி என்று குறிப்பிடுவதே அவளைச் சிறுமைப்படுத்துவது போன்று/ அடிமைப்படுத்துவது போன்று...விபச்சாரியின் யோனி என்று வேறு குறிப்பிட வேண்டுமா? விபச்சாரியும் யோனியும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றுதானே...

அப்படியென்றால் அவர்களை எப்படி அடையாளப்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. அவர்களை உவமைக்கு எடுத்துக் கொள்வதே... அதுவும் சிறுமைப்படுத்த உவமைக்கு எடுத்துக் கொள்வது தவறு; தவிர்க்கப்பட வேண்டும். யோசித்துப் பார்க்க வேண்டும் நாம் எல்லாம். புத்தகத்தில் வாசித்தது போல, போதிக்கப்பட்டது போல இவர்கள் கெட்டவர்கள் இவர்கள் நல்லவர்கள் என பகுத்துப் பார்க்க முடிகிறதா இக்கால கட்டத்தில் ?
பாலமுருகனின் சொல்லாடல் - தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. ஒன்றே ஒன்று பாலமுருகனிடம் நான் கூறிக் கொள்ள விரும்புவது யாருடைய எதிர்பார்ப்புக்கும் நாம் எழுத வரவில்லை. தொடர்ந்து எழூதிக் கொண்டே இருங்கள்.அங்கீகாரம் கிடைக்கிறதா இல்லையா அதுவெல்லாம் முக்கியமே இல்லை.மரபுக்கவிஞர்களின் கவனிப்பும் நமக்குத் தேவையில்லை. அவர்களின் வசைபாடல்களை ஒருபோதும் பொருட்படுத்த வேண்டாம். எனக்குத் தெரிந்து கோ.முனியாண்டி, கோ.புண்ணியவான் என மேலும் பலரை மரபுக்கவிஞர்கள் வசைபாடியுள்ளனர்..திட்டித் தீர்த்தவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். இவர்கள் எங்கோ சென்று விட்டார்கள்..

பாலமுருகனின் அக்கட்டுரை விவாதங்களையும் - பகிர்தல்களையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுப்பையும் குரோதத்தையும் ஏற்படுத்தினால், இவ்விவாத மேடையால் எந்த பயனும் இல்லை.
ஆனால் நட்பையும் இலக்கியத் தொடர்பையும் அறுத்துக் கொள்ளாமல் விமர்சிக்க வேண்டும். அறுக்கும் நோக்கத்தில் விமர்சிக்க கூடாது. ஏனென்றால் மரணத்தை விட கொடியது நண்பர்களின் பிரிவு...
பா.அ.சிவம்

புனித ஆத்மாக்களுக்கு எனது கடைசி நன்றி

இந்த விவாதத்தில் கலந்து கொண்டதில் எனக்குப் பல நன்மைகளும் புதிய கற்பிதங்களும் ஏற்பட்டுள்ளன. அதற்காக அஞசடி பக்கத்திற்கும், அஞ்சடியில் எனக்குப் புத்திமதிகளும், விவாதத்தின் வாயிலாக எனது போலி முகங்களையும் சுட்டிக் காட்டி, பக்குவத்தை ஏற்படுத்திய புனித ஆத்மாக்களுக்கும் எனதூ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் தோழமையுடனும் நாகரிகமான ஒப்பீடுகளுடனும், மிகவும் நிதானமாக இலக்கிய உரையாற்றிய அன்பான நண்பர்களுக்கும் இந்த வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவாதங்களின் வழியாக நான் கண்டறிந்த எனது பலவீனங்களை இனி உடனடியாகத் துறக்க முயற்சிக்கின்றேன்.

ஜென் தத்துவத்தில் ஒரு வாசகம் வரும், "உனது குறைகளை நீ கண்டறிந்த பின் அதை உடனடியாகத் துறந்துவிடு". நான் சாதரண மனிதன்தான் என்கிற பட்சத்தில், போலி முகங்களை அணிந்து கொண்டு சுற்றித் திரிந்த அபத்தங்களை கண்டடைந்துள்ளேன். அந்தக் கண்டடைவிற்கு எனக்கு உதவிய அனைத்து பரிபூரண ஆத்மாக்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். இலக்கியமும் இலக்கிய விவாதங்களும் கொடுக்கும் பக்குவம் என்றே கருதலாம்.

சிறுகதைகள், கவிதைகள் எழுதி கொண்டு, தீவிர இலக்கியம் வாசித்துக் கொண்டு இப்படி நாலு சுவற்றில் கிடந்து கொண்டு செய்யும் தொழிலுக்கும் கொஞ்சம் நேர்மையாக இருந்து கொண்டு காலத்தைக் கடத்திய நான், எதிர்வினையாற்ற மறந்த தருணங்களை எண்ணி வருத்தமடைகிறேன். போலிமைகளுக்கும் அநியாங்களுக்கும் குரல் கொடுக்க (எழுத்தாளன் என்ற போர்வை முக்கியம் இல்லாத தருணத்தில்) முற்படுவது நமது எதிர்கால அடையாளங்களை நிர்ணயம் செய்யும் என்கிற கற்பிதம் ஏற்பட்டுள்ளது.

எனது இருப்பும் செயலும் குறித்து எந்தமாதிரியான சமூக-தனிமனித விமர்சனங்கள் ஏற்படும் என, விவாதங்களின் வழி புரிந்து கொண்டேன். சொல்லப்போனால் படைப்பிலக்கியம் தவிர்த்து இலக்கியத்தில் உள்ள சில அடுக்குகளையும் புரிந்து கொண்டேன். நான் முன் வைத்த கருத்துகளுக்கு எதிர்வினை கிளம்பியதும் இதுவே முதன்முறை என்பதால், அதை எதிர்த்து விவாதம் செய்து பதில் எதிர்வினையாற்றியதும் எனக்கு முதல் அனுபவம் என்கிற பட்சத்தில், இலக்கிய விவாதம் செய்வது குறித்தும் நான் கற்றுக் கொண்டுள்ளேன். சில இடங்களில் படைப்புச் சுதந்திரம் குறித்து பேசுவதும் தவறு எனவும் தெரிந்து கொண்டேன்.

வார்த்தையை அதிகம் விட்டால் சிக்கிக் கொள்வோம் என்கிற புரிதலுக்கும் ஆட்பட்டுள்ளேன். அப்பப்பா எத்தனை விதங்கள் இலக்கியத்தில்? முதல்முறையாக எனக்கு ஏதோ நிறவைவான ஆழமான இலக்கியத்தை நோக்கி நகர்வது குறித்து மகிழ்ச்சியடைகிறது மனம். மேலும் சும்மா சும்மா எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பதால் நமது படைப்பிலக்கியமும் அதற்கான நேரமும் பாதிக்கும் என்றும் தெரிந்துகொண்டேன்.

அந்த நேரத்தில் ஒரு சிறுகதை எழுதினாலாவது ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறலாம் போல. . ஆக மொத்தத்தில், இந்த முதல் அனுபவம், அதுவும் பல இலக்கிய ஆளுமைகள் மத்தியில் சிக்கிக் கொண்டு பதிலுக்குப் பதில் பேசி, அவ்வப்போது தடுமாறி, நிலைபாடுகளில் இறுக்கமாக இருந்து கொண்டு, இதுவரை கண்டடையாத பல முகங்களை, குறைகளை, தவறுகளைக் கண்டறிந்து, என் இலக்கியத்தை வளர்த்துக் கொள்ள, மேலும் எனது சிந்தனையைக் கூர்த் தீட்டிக் கொள்ள, பலரின் மொழியை/பார்வையை அறிந்து கொள்ள மிகப்பெரிய களமாக இருந்த "அஞ்சடி" வலைத்தளத்திற்கு ரொம்பவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறைகளை பலவீனங்களைத் தைரியமாக ஒப்புக் கொண்டு, அதைத் துறக்கவும் இனி முயற்சி எடுப்பேன் எனக் கூறிக் கொண்டு அஞ்சடியிலிருந்து விடைபெறுகிறேன். கூடியவிரைவில் "விபச்சாரிகளின் யோனியை உடைக்கும் உத்திகள்" எனும் ஒரு பின் நவீனத்துவ கதையை எழுதவுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி. வாழ்த்துகள்!

அன்புடன் :
கே.பாலமுருகன்

நான் கடவுள்

அஞ்சடி அகப்பக்கம் நல்ல விவாதங்களுக்குப் பயன்படட்டும். தனி மனித அவதூறுகளையோ தாக்குதல்களையோ, அல்லது அதையும் மீறிய பித்தநிலையில் தனியொரு சிற்றிழைக் கிண்டலடிப்பதையும் தவிர்த்து, தனிநபருக்குப் புத்திமதி சொல்லவோ "அஞ்சடீயை" பயன்படுத்த வேண்டாம்.

நவீன் சொன்னது போல "மனிதர்கள்" முக்கியமென்பதால், நானும் தனிமனித தாக்குதலில் இறங்கி யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல, என் நிலைபாடுகளிலும் கருத்திலும் நான் உறுதியாக இருக்கின்றேன். எனது நிலைபாடுகளை "அஞ்சடியில்" வலிந்து வந்து நிரூபிக்க எனக்கு அவசியம் இல்லையென கருதுவதால் இதை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வரும் மற்ற இலக்கிய விவாதங்களில் கலந்து கொள்வேன்.

அதன் தொடர்ச்சியாக நண்பர் நவீன் முன்வைத்த அவரது "நான் கடவுள்" தொடர்பான கேள்விகளுக்கு என் தரப்பு பதில். நண்பர்கள் தொடர்ந்து அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலுமென்றால், அதைச் செய்யலாம்.

கேள்வி 1: அத்தனை மெனக்கெட்டு வேறொரு உலகத்தைக் காட்டும் பாலா ஆர்யாவின் கதாபாத்திரத்தைக்கொண்டு வந்தது ஏன்? அதில் ஹீரோயிச‌ம் இல்லையா?

பதில்: படத்தின் துவக்கக் காட்சி, காசியின் மரண நரகரத்தின் அகோரிகளின் வாழ்வை காமிராவில் கொண்டு வரும் படம், இயல்புகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உலகைக் காட்ட முயலும் தீவிரத்தில் ஆர்யா என்கிற தமிழ் சினிமா ஹீரோவை முன்னிறுத்தும் சில சாகச செயற்கை கதாநாயகத்துவ மிகைகளைப் பதிவு செய்துவிட்டார்கள். அதில் ஹீரோயிசம் இருப்பதாகவே கருதுகிறேன். படாம் இரண்டு தளத்தில் வைத்து புரிந்து கொள்ளப்படலாம், ஒன்று ஜெயமோகனின் ஏழாம் உலகத்தின் சிறு துண்டான கதை (அதுவும் விளிம்புநிலையை அவர்களின் மொழியிலே பேசும் மிகத் தீவீரமான நாவல்) அடுத்து ஆர்யா- அகோரி-ஆன்மீகம்-இந்துத்துவம் என விரியும் பாலாவின் பகுதி.

கேள்வி 4: படத்தில் வரும் சிறைச்சாலை காட்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜியை ஜெயமோகனின் உதவியுடன் பாலா புகுத்தியது ஏன்?

ஜெய்மோகன் ஏற்கனவே எம்.ஜி.ஆரையும் சிவாஜி கணேசனையும் கேலியாக ஆனந்த விகடனில் விமர்சனம் செய்தவர். இங்கே பாலா தமிழ் சினிமாவின் பலநெடுங்கால அபத்தங்களையும் இன்றும் தொடரும் தொப்புள்தனங்களையும் தைரியமாகக் கேலி செய்திருக்கிறார் என் சாரு தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். அதையும் மீறி எனக்கென்னவோ அந்த விமர்சனங்களை முன்வைக்க அரவாணிகளையும் அடித்தட்டு கலைஞர்களையும் இப்படிப் பயன்படூத்தியிருக்கக்கூடாதோ எனத் தோன்றுகிறது. இருந்தாலும் பலருக்கு பல புரிதல்கள் இரூக்கலாம்.

கேள்வி 2: பலவீனமானவர்களை காப்பாற்ற சராசரி சினிமாவில் வரும் ரஜினிக்கும், விஜய்க்கும் இந்த ஆர்யாவுக்கும் என்ன வித்தியாசம்?

போலி ஆன்மீகத்தை முன்னிறுத்தி, பலவீனமானவர்களுக்கு வரம் தரும் அகோரிகளை பாலா கொண்டு வந்ததே பல சார்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன. அது என்ன வகையான ஆன்மீகம் என்றே பல விவாதங்கள் இன்றும் இணையத்தளங்களில் நடந்து கொண்டு வருகின்றன. என் தரப்பில், பாலா அந்த அகோரிகளின் வாழ்வையும் அதன் பின்னனியில் இருக்கும் இந்துத்துவ கோட்பாடுகளையும் கற்பிதங்களையும் சரியாக சொல்லாமல் இருந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. (அகோரிகள் உருவானதற்கான வரலாறையும்-அவர்களின் உலகத்தையும்- ஒரு மாயை போல பல கேள்விகள் ஏற்படும் விஷ்யமாகவே மனதில் தொக்கி நிற்கின்றன)

அன்புடன்
கே.பாலமுருகன்

என்னருமை சொக்கா...!

விபச்சாரியின் யோனியை எப்படி உடைத்துப் பார்ப்பதுஎன்ற என் எதிர்வினை மடலில் பாண்டிதுரைக்கு எழுதிய பத்தியின் நான்கு வரிகளுக்கு மட்டும் கே.பா. நீண்டதொரு புலம்பல் + முனகல் மடலை எழுதியதற்கு அடுத்து வந்த மடலில் தான் கொஞ்சம் நிதானமாக, கொஞ்சம் விளக்கமாக பதில் எதிர்வினையாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

கே.பா.யின் தனிப்பட்ட விஷயத்தின் மீதான இழிவான சொற்களும், அவதூறு செய்கையும் நான் செய்துள்ளேனா என்று மீண்டுமொருமுறை என் மடலை வாசிக்கையில் பிடிபடாமல் போய்கிறது. கே.பா.தான் விளக்க வேண்டும். அம்போவென கழற்றிவிடும் இந்த பண்பை (இந்த ஒரே ஒரு பண்பு மாத்திரம்) கே.பா - பா.மா.-விடமிருந்து கற்றிருக்கலாம் என்று தான் சொல்லி இருந்தேன். போகட்டும்.
மௌனத்தில் எழதிய ~ஒரு வரிஎன்றாலும் விவாதத்திற்குரியது என்றால் விவாதிக்க வேண்டியது தான். இதற்காக என்னை மனப்பிறழ்வுள்ளவன் என்றோ இலக்கிய ஜாம்பவான் என்றோ நாட்டாமை என்றோ என் சுதந்திரம் - உன் சுதந்திரம் என்றோ என் உரிமை - உன் உரிமை என்றோ கைவலிக்க, வாய்வலிக்க சொல்வதில் பிரயோஜனமில்லை.

இரண்டு மரபுக்கவிஞர்கள் மோசமான சொற்களால், தொனியால் விமர்சித்து கிண்டலடித்ததற்காக அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக மௌனத்தில் மோசமாக - கேவலமாக நீரே தூற்றியிருக்கிறீர்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு தூற்றும் பழியை என்மேல் போடுகிறீர்.
தமிழறிஞர் சீனி நைனா முகமது மிகவும் கடுமையான வார்த்தைகளால், மண்டைக்கு மணியடிக்கும் வார்த்தைகளை பிரயோகித்து சண்டைக்கு வந்தார். எதிர்வினையாற்றினோம். புலம்பலாக அல்ல. முனகலாக அல்ல. மண்டியிட்ட பாவனையிலும் அல்ல. ஒரே ஒரு கவிதையில் கொஞ்சம் மீறியிருக்கிறேன். ஆபாசம் என்றார் ஒரு விரிவுரையாளர். இல்லையென்றேன் நான்.
யார் அந்த இரண்டு மரபுக்கவிஞர்கள்?
பெயர்களை மட்டும் வெளியிடுங்கள். இதற்கும் அந்த மாணிக்கவாசக விருது விஷயத்தில் எதிர்க்க திராணியில்லாமல் இருந்ததைப்போல் நழுவிச்செல்வீரா?
முன்பொருவர் கொஞ்சங்கூட நாகரீகமில்லாமல் சொன்னதைப்போல ~சீனி நைனா மீது மூத்திரம் அடித்தால் தான் என் ஆத்திரம் தீரும் என்று சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டதைப்போல மூடிக்கொள்வீரா?

எந்த திiசியிலிருந்தும் எதிர்ப்பு வேண்டாமென்றால் - கோ.புண்ணியவான் போல நியாயமான முறையில் ஆண்டு தோறும் பரிசுகள் கூடவே சால்வைகள், மாலைகள், இன்னும் கூடுமானால் தமிழ்நாட்டின் அத்தனை விருதுகளும் பெற்றுக்கொள்வதில் முனைப்பும் முயற்சியும் காட்டி பாடுபடுங்கள். அவ்வப்போது இடைவேளை ஏற்படுகையில் இலங்கைத் தமிழர்களுக்காகவும் இங்குள்ள ஹிண்டிராஃப் இயக்கத்திற்காகவும் மயிர்க்கூச்செரிய இரத்தம் கொதிக்க கவிதைகள் இயற்றலாம். (இதற்கும், நீ யார் இதை சொல்வதற்கு? நீ யார் எனக்கு கட்டளையிடுவதற்கு....... என முனகலாம்! தவறில்லை)

சிக்கலான வரிகளுக்குள் தான் நுண் அரசியலும் முரண் அரசியலும் எதிர் அரசியலும் இருக்கும் என்று என் பத்தியில் சொல்லவில்லையே. சாதாரண புரிதலுக்குள் வசப்பட்ட உங்கள் மௌனம் பத்தியில் நீங்கள் இருக்கின்றது என்கிறீர்கள்@ நான் இல்லையென்றேன்.

சரி. இதனையும் இத்தோடு விடுகிறேன்.

விவாதங்களை நியாயமான முறையில் உங்கள் முன் வைக்கையில் அதனை தனிமனித தூற்றுதல் என தப்பிதமாக நீங்கள் தம்பட்டம் அடிக்கின்றதினால் உங்களுக்கு எழுதுவதையும் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்
---------------------------------------
பாண்டிதுரைக்கு வருத்தத்துடன் சில வரிகள்.............
வணக்கம் பாண்டிதுரை.
வரலாறு பற்றி இனி என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

பத்திரிகைத் துறையில் இருப்பதால் கணனிபயிற்சி அவசியம் என்ற நிர்ப்பந்தத்தில் பயிற்சிப் பெற்று புளோக்கில் முதல் அல்லது இரண்டாவது எதிரியாய் உங்களை நான் சம்பாதித்திருக்கிறேன்.

என்னை படைத்தவனுக்கும் எனக்குமான சில உடன்படிக்கைகளின் நிமித்தம் அடிக்கடி நான் காணாமல் போவதுண்டு. அதற்கான நேரம்- எந்த நேரமோ எனக்குத்தெரியாது.
எனக்கிருக்கின்ற ஒரு கெட்ட பழக்கம் (பலவற்றுள் இதுவும் ஒன்று) ஓட்டைவாய். ரகசியம் தங்காது. இது ரகசியம் என்று நீங்கள் என்னிடம் சொல்லிவிட்டால் அதை நான் மறந்துவிடுவேன். இப்படி மறக்கப்பட்ட ரகசியங்கள் ஏராளம்.

ரகசியங்களின் கால அளவு காலாவதியாகும்போது அது சம்பந்தப்பட்ட நிகழ்வு சம்பவிக்கும்போது மூளையிலிருந்து ஏதோ ஒரு மூலையின் பகுதியிலிருந்து வினாடிகளின் அவகாசத்தில் வெளியே தள்ளிவிடுகிறது. ஆண்டுக்கணக்கில் இருந்தமையால் அழுகிய குப்பை நாற்றம் - பிணநாற்றம் போல மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வைக்கிறது.

சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் கோபித்துக்கொண்டு மூஞ்சை தூக்கி வைத்துக்கொள்ளும் ~சென்ஸடிவ் மனைவியைப் போல உங்கள் ஊர்காரர் கேஸல்லாம் போட்டு நஷ்டஈடு கேட்டால் நான் எங்கே போய் கொள்ளையிட்டு தருவது? நான் என்ன அரசியல்வாதியா? இந்த நஷ்ட ஈடு கலையை பா.ம. எங்கள் ஊர் பா.கோ. - விடமிருந்து கற்று வைத்திருக்கலாம் அல்லவா. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க.......

நானாவது பரவாயில்லை பிரதர். முழுப்பெயரை வெளியிடாமல் சுருக்கமாக எழுதி உங்களுக்கு புரியும்படியாக சொல்லியிருக்கிறேன். ஆண்மை, எழுத்தாளனின் நுண்கோபம், மயிர் எழும்பும் கோபம் என்றெல்லாம் ஆவேசப்படுகிறவர் நியாயமான எதிர்பபுக்குகோரிக்கை விடுத்தும் அரசாங்கத்தின் அடிமைநாய், என்ன செய்வது என்று மௌனித்துவிட்ட பயபுள்ளையை என்னவென்று சொல்வது. இத்தனைக்கும் அரசாங்கத்திற்கும் ~அதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
எழுத்தில் மட்டும் வீரம் பொங்கி வழிந்தோடுதே சொக்கா!

பத்தி - முண்டு முடிச்சுகளோடு கவிநயத்துடன் பிராம்மணிய வீச்சுடன் தலித்தின் வீச்சமடிக்கிறது சொக்கா.!
என்ன செய்வது?

பரதேசியாய் அலைந்து திரிந்ததில் பல வீச்சங்களையும் சகிக்கும்படி ஆகிவிட்டது என்னருமை சொக்கா.!

என் முதல் சிறுகதை தொகுப்பிற்கு ~கடவுள் கொல்லப்பார்த்தார் என பெயரிட இருந்தேன். சொக்கநாதனோ அரூபநாதனோ தடைசெய்து திருப்திப்பட்டுக்கொண்டார். இப்படியெல்லா பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகளை நானே தேடிப்போய் சம்பாதித்துக்கொண்டிருக்க, சாம்பல் காட்டில் நானே வெளியிட்டு நானே பெற்றுக்கொண்டு என் புதைகுழியில் நானே போட்டு எரிக்கவேண்டியது தான் சொக்க மக்கா!

நான் பட்ட சிறு சிறு கடனை அடைப்பதற்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வந்து படாதபாடு படுகிறேன்.

இப்படியிருக்க, உமது கவிதை தொகுப்பை எங்ஙனம் நானே அச்சிட, வெளியிட பாண்டிதுரை? (கடன் கொடுத்தவர்கள் இன்னும் என்னை நெ ருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஆலோங் கிடையாது. அன்பின் பிரதிகள்)
முற்றுப்புள்ளியுடன் வணக்கம்
-------------------------------------------------------------------------------
ம.நவீன்:
~பத்து வருடங்களாக என்னென்னவோ எழுதி பார்த்தாச்சு என ஒரு வெண்முடி எழுத்தாளரைப் போல உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது கொஞ்சம் போலித்தனமாக இருக்கின்றது.

ஞாயிறு- வார - மாத இதழ்களுக்கெல்லாம் எழுதிய கணக்கைச் சொல்லுகிறீர் போலும். உருப்படியான ஒரு புத்தகத்தையும் இந்த வெளியுலகுக்கு தராதபட்சத்தில் அவ்வரி தனது வல்லமையை இழந்துள்ளது என அறியவும்.

~இன்று தமிழகத்தில் எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆழ்ந்த நுண் அரசியல் பார்வையோ.... மார்க்ஸியப் பார்வையோ..... பின் நவீனத்துவப் பார்வையோ அற்ற நிலையில்.... என்று வேறு சொல்கிறீர்.

இதுவரை தமிழகத்தில் வெளிவந்த அத்தனை புத்தகங்களையும் கரைத்து முடித்து விட்டது போலல்லவா இருக்கிறது உங்கள் கருத்து. எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் கைக்கு வந்து சேரவில்லையே என கவலைப்பட்டுக்கொண்டிருப்பது நான் மட்டும் தானா....

~தமிழக எழுத்து பிரதிகள் போல ஒன்றை உருவாக்குவதால் எக்காலத்திலும் மலேசிய இலக்கியம் வளராது

என்று சொல்லியிருக்கிறீர். இதில் பாதி உண்மை. ~போல என்ற சொல்லை இரண்டு விதமாக எடுத்துக்கொள்கிறேன். ஒன்று - அப்படியே காப்பி பண்ணுவது. (அப்படியே இல்லாவிட்டாலும் கொஞ்சம் மாற்றி மலேசிய சூழலுக்கு ஏற்றவாறு அமைப்பது) மற்றொன்று - நடை, உத்திகளை எடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து நமதாக்குவது. இதில் இரண்டாம் வகை - தமிழக எழுத்து பிரதி மட்டுமல்ல, ஆப்பிரிக்க பிரதி - கியூபா பிரதிகளின் நடை உத்திகளை கண்ணோக்குவது நலமாகும் என நினைக்கிறேன்.
நமது சமூகத்து பிரச்சினைகளை அந்த மாதிரியான வித்தியாசமான தளத்திலிருந்து கொஞ்சம் மாற்றி - சேர்த்து - கழித்து தருவதில் புதுமை தென்படும் தானே.

பாவண்ணணுக்கும் எஸ்.ராமகிருஷ்ணணுக்கும் பின் நவீனத்துவம், மாய யதார்த்தம், அதிநவீனத்துவம் யாவும் தெரிந்தது போல நமது படைப்பாளர்களுக்கும் தெரியும் தான். ஆனால். நமது படைப்பாளர்களிடமிருந்து எதிலிருந்தும் எங்கிருந்தும் இதுவரை வெளிப்பட்டதாக தெரியவில்லை. அவர்களுக்கான தளமாக சில ஏடுகள் இருந்தும் அந்த விசயங்கள் குறித்தான பகிர்வுகள் காணக்கிடைக்காதது வருத்தமளிக்கிறது என்று சொன்னால் மறுப்பீர்களா?

நுண் அரசியல் - நுண்முரண்பாட்டு அரசியல்- எதிர் அரசியல் குறித்து கோப்பிஜன்தான் - தேயளியா பருகிக்கொண்டே

இனி விவாதங்களை நேரில் நடத்துவோம்.

மஹாத்மன்.

கெடுத்திடாதிங்கப்பா!

'ஒன்றுமில்லாமல்' அந்த 'ஒன்றும்' அன்று விலகிக்கொள்ளவில்லை, 'ஒன்றுமில்லாமல்' இன்னொன்றும் இன்று விலகிக்கொண்டிருக்காது...இந்த விவாதம் தொடர்ந்தால், வெகு விரைவில் பல விலகல்கள் நிகழலாம்.அப்போது, அந்த 'ஒன்றின்' கூடாரம் காலியாகலாம்.புதிதாக ஆள் சேர்த்து கூடாரத்தை நிரப்பிவிடும் திறன் கொண்டதுதான் அந்த 'ஒன்று' என்றாலும், அதற்கு முன்பான நொடிகளில் , அந்த 'ஒன்றின்' அலரலும் அரற்றலும் பிதற்றலும் பெரு ஓசையாக எழும்பி, விரிந்து பரந்த அநங்கத்தை முட்டலாம்.

அங்கிருக்கும் முப்பது முக்கோடி தேவர்களின் காதில் அது விழ, அதன் சோக இழையில் அவர்கள் மனமகிழ்ந்து கண்ணீர் மழ்கி... அந்தப் பரிதாபக்குரல் எழக்காரணமான, நம் பக்கம் அவர்களின் கோப பார்வை திரும்பலாம்.அப்போது, இங்கே , அஞ்சடிக்காக மௌசை கிளிக் செய்து கொண்டிருகும் நமது கைவிரல்கள், அவர்களின் கண்ணில் படலாம்.அப்புறமென்ன? அதோகதிதான் நம் கதி.

ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா விரல்களின் பாணியில், மௌசை முடுக்கும் நமது விரல்கள் முறுக்கி கோணிக்கொள்ள...ஐயோ அம்மா வென்று அலரிக்கொன்டு தேவர்களின் கருணை வேண்டி கோயில் கோயிலாக ஓட வேண்டி வரலாம்.தேவையா இது நமக்கு. சற்றே உட்கார்ந்து, நிதானமாகவும் தீவிரமாகவும் யோசிக்க வேன்டிய தருணமல்லவா இத்?.அவசியம் யோசியுங்கள்.அனுபவப்பட்டவன் சொல்கிறேன்.குறிப்பாக, நவீனும் மகாத்மனும் , ப்ரிக் பீல்ஸில் உள்ள, ஏதாவதொரு கோப்பிக்கடையில் உட்கார்ந்து , ஆழ்ந்து , ஒரு பின் நவீனத்துவ படைப்பை வாசிக்கும் தீவிரத்துடன் யோசியுங்கள்.அப்போதுதான் உங்கள் செயலில் உள்ளடங்கியுள்ள விபரீதம் புரியும்.

நான் வாசித்து விட்டேன்.முடிவும் செய்து விட்டேன்.இனி இது குறித்து எழுத, மறந்தும், கனவிலும் மௌசை கிளிக் பண்ணமாட்டேன் என சத்தியம் செய்து , முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன்.காரணம், நான் உங்களைப்போல் இளமை ஊஞ்சலாடும் பருவத்தினன் அல்ல.மூப்பேறிய கிழம்.நானெல்லாம் , இதற்கு மேல் தினமும் ஒவ்வொரு கோயிலாக வளைய வந்து விரல்களை சொஸ்தமாக்க வேண்டுதல் வைப்பதில், சில பல ஆண்டுகளைக் கழிக்க இயலாது.
இருக்கப்போவது இன்னும் கொஞ்சம் நாள்.அதுவரை யேனும் இப்படி ஜாலியாக ஏதேனும் வம்பு தும்புகளில் மாட்டிக்கொண்டு தனிமையில், கணினி முன்பு உட்கார்ந்து மௌசை கிளிகி எஞ்சிய இரவுகளை ஆனந்தமாகக் கொண்டாட வேண்டும்.வீணா அத கெடுத்திடாதிங்கப்பா!

சீ.முத்துசாமி

Friday, March 20, 2009

அநங்கத்தின் நிலைபாடுகளும் போலி கண்ணீரும்

அநங்கத்தின் நிலைபாடுகளும் போலி கண்ணீரும் அநங்கத்தின் ஆசிரியர் என்கிற வகையில் அதன் நிலைபாடுகள் குறித்து சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஒரு சிலர் "அஞ்சடியில்" அநங்கம் நிலைபாடுகள் குறித்து குறும்பு, கிண்டல் கேலியெல்லாம் அடித்துக் கொள்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும் சிற்றிதழுக்கென தனித்துவமான சுதந்திரமும் செயல்பாடுகளும் உண்டு. அதில் யாரும் தலையீடவோ குறுக்கிடவோ இயலாது. சிபாரிசு ஏதும் இல்லாமலே சிற்றிதழ்கள் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும். யாரும் கண்ணீரை வீணாக்க வேண்டாம். போலி வேண்டுல்தகளும் எங்களுக்கு அனாவசியம்.

பாவண்ணன் அவர்களுக்கு இரண்டே பக்கமும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2 பக்கமும் கொடுத்துவிட்டதால், மீதி 56 பக்கங்கள் மலேசிய எழுத்தாளர்களுக்கே கொடுத்த அநங்கத்தின் நிலைபாடுகளை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பக்கத்திலுள்ள பிரபஞ்சத்தின் தேவர்களையும் சேர்த்துக் கொண்டு, 4 தலை பிரம்மா, 10 தலை பிரம்மாக்கள், 100 தலை பிரம்மாக்கள் என்று எல்லோருக்கும் பாலாபிஷேகம் செய்து கொண்டாடுகிறோம்.

வழிந்தொழுகும் மீதி பாலை சில கோமாளி கிழட்டுப் பக்தர்கள் எடுத்து அருந்தி கொள்ளட்டும். (இதை இங்கு மிகவும் கேலியாக முன்வைப்பதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்)

அநங்கத்தின் தனிபட்ட நிலைபாடுகள்:
1) மலேசிய மூத்த எழுத்தாளர்களையும் இளம் படைப்பாளர்களையும் ஒரே களத்தில் இணைப்பது. ( சைபீர், கோ.புண்ணியவான், ரெ.கார்த்திகேசு, க.பாக்கியம் போன்ற மூத்த எழுத்தாளர்கள் அநங்கத்தில் எழுதிக் கொண்டிருப்பதை அறியாதவர்கள், இனியாவது படித்துப் பார்த்துவிட்டு தெரிந்து கொள்ளவும். . )
2) தொடர்ந்து மலேசிய இலக்கியத்தை வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் ( அநங்கம் இதழ் இலங்கை, இந்தியா , சிங்கப்பூர், பாரிஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது)

3) சிங்கப்பூர் இலக்கியவாதிகளையும் இந்தியா மற்றும் பிறநாட்டு இலக்கியவாதிகளையும் அநங்கத்தில் அவ்வப்போது இணைத்துக் கொள்வது. ( அநங்கம்1-இல் எஸ்.ராமகிருஷ்ணன், அநங்க 2- அமெரிக்கா வாழ் எழுத்தாளர் கோகுலன், அநங்கம் 3- பாவண்னன், தொடர்ந்து அநங்கம் 4-இல் ஷோபா சக்தி அவர்கள்)4) புதிய இளம் படைப்பாளிகளை அநங்கத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் ( அநங்கம் 1-இல் செ.நவீன், அநங்கம் 2-இல் கோமளாதேவி , அநங்கம் 3-இல் இடம்பெறவில்லை, தொடர்ந்து அநங்கம் 4-இல் யோகேஸ்வரந் இவர்கள் யாவரும் மலேசிய புதிய எழுத்தாளர்கள்) மேலும் ஒரு சில வரிகள், இவையாவும் அநங்கத்தின் ஆசிரியர் குழுவால் ஆலோசிக்கப்பட்டு உருவாக்கிய நிலைபாடுகள்.

இன்று தமிழக சிற்றிதழ்களிலும் நம் மலேசிய படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெறுகின்றன. அவர்களும் நம் படைப்பாளிகளுக்குப் பக்கங்கள் ஒதுக்கி, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இலக்கிய பகிர்தலை அச்சில் ஏற்படுத்துகிறார்கள். நம் மலேசிய வாசகர்களும் ஒரு சில அயல் நாட்டு எழுத்தாளர்களை இதழ் மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. உயிரெழுத்து, யுகமாயினி, வார்த்தை, காலச்சுவடு போன்ற இதழ்களில் நமது மலேசிய இளம் மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகள் கவிதைகள் பத்திகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இங்கு என்ன அவர்கள் நமது வாலையா பிடிக்கிறார்கள்? இது வால் பிடிக்கிறமோ இல்லையா என்பது கேள்வியே இல்லை. அந்தந்த சிற்றிதழின் தனிபட்ட நிலைபாடுகள் சுதந்திரம் சார்ந்தவை.

மணிமொழி சொன்னது போல யர்ரும் கடவுள் அல்ல ஒரு சிற்றிதழின் நிலைபாடுகளைகூட சுயமாகத் தீர்மானித்துக் கொள்ள.

அன்புடன்
கே.பாலமுருகன்

Thursday, March 19, 2009

யாரும் கடவுள் இல்லை

"நான் கடவுள்" என்று ஆரம்பித்து, இன்று "அவரவர் நான் தான் கடவுள்" என்று சொல்லுமளவிற்கு வந்து விட்டது.. இங்கு யாரும் கடவுளாக உறுவாக வேண்டாம்..அவரவர் குறைகளையும் கடந்து விட்ட வரலாறுகளையும் மீண்டும் உருவெடுக்க இது களம் இல்லையென்று நினைகிறேன். என் போன்ற வளர்ந்து வரும் வாசகர்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விடாதீர்கள்.. 'வல்லினம்' 'அநங்கம்' இரண்டு இதழ்கள் மேல் கொண்டுள்ள எதிர்பார்ப்பை கொன்று விடாதீர்கள் . இலக்கியம் தொடர்பான தகவல் தரும் விமர்சனாமாக அமையட்டும். இருகட்டும்..உங்கள் தனி பட்ட சுயரூபத்தை இங்கு படம் பிடித்து காட்ட வேண்டாம் தயவு செய்து. அதற்கு தொலைபேசி, அஞ்சல் இருக்கிறது.. மீண்டும் இங்கு யாரும் கடவுளாக வேண்டாம்... கடவுளாக உருவெடுக்க முயற்சி செய்யவும் வேண்டாம். இது ஆலோசனை அல்ல... வேண்டுகோள்...

வீ.ஆ.மணிமொழி

ஆயிரம் புறம் பேசிகள் / நாட்டமைகள் வந்தாலும். . . இங்கு எல்லாம் எப்பொழுதும் போலவே நடக்கும்

'மரபுக்கவிஞர்கள், நவீன படைப்பாளிகளின் கவிதைகளுக்கு விபச்சாரியின் யோனிக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட தருவதில்லை.' இந்த ஒரு வரியை மௌனத்தில் சேர்த்ததற்காக, இன்று பல எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. எதிர்வினையாற்ற வந்தவர்கள், நல்ல விவாதத்தில் ஈடுபடாமல் புத்திமதி சொல்வதும், தனிமனித அவதூறில் ஈடுபட முனைவதையும் கடுமையாகச் சாடுகிறேன்.

ஒரு படைப்பாளனின் கருத்தை முன்வைத்து விவாதம் செய்யும்போது அவனின் தனிப்பட்ட அடையாளத்தின் மீதும் தனிபட்ட விஷயத்தின் மீதும் இழிவான சொற்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வதென்பது பிற்படுத்தப்பட்ட மனநிலையையே காட்டுகிறது. வானத்தைப் பார்த்துக் காரி உமிழ்ந்து கொள்வது போல, தமது சுயநலத்திற்காக இலக்கியத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம்.மேலும் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லும்போது தமது ஆளுமையை வெளிப்படுத்துவதற்காக நாட்டாமையைப் போல தமது தீர்வே இறுதியானது போலவும் பாவனை செய்கிறார்கள்.

சக எழுத்தாளனுக்கு மாற்றுக் கருத்து உள்ள விஷயத்தை எப்படி உணர்த்த வேண்டும் என்கிற அடிப்படை மனித சிந்தனைக்கூட இல்லாமல், தான் எந்தவித தவறும் குறைபாடுகளும் இல்லாத பரிபூரண மனிதன் போல புத்திமதி சொல்ல இறங்கிவிடுகிறார்கள். கூடவே கடுமையான வார்த்தைகளையும் பிரயோகித்து தனது சொல் விளையாட்டைக் காட்டிவிட்டு, இவர் இப்படியும் சொல்வார் அவர் இப்படியும் பேசுவார் என்று எல்லோருக்கும் சேர்த்து இவர்களே முடிவெடுத்துக் கொள்கிறார்கள்.

இது எந்தவகை நியாயம்? ஒரு படைப்பாளனுக்கு தமது மொழியைக் கொண்டு ஒரு கருத்தை முன் வைக்க எல்லாம் வகையான உரிமைகளும் உண்டு. அதே போல முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்திற்கு மாற்று கருத்துச் சொல்லவும் வாசகர்களுக்கும் பிற படைப்பாளனுக்கும் உரிமைகள் உண்டு. இங்கு யார் சொல்வதும் இறுதி தீர்வாக முடியாது. இது படைப்பு சுதந்திரம். இதில் கை வைக்க எந்தக் கொம்பனுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த படைப்பாளனும் அனுமதி வழங்கவில்லை.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்காததும் அந்தப் படைப்பாளனுக்கே சேரும். யாருடைய நாட்டாமைத்தனமும் இங்கு வேலைக்கு ஆகாது. அந்த வகையில் மௌனத்தில் நான் வைத்த கருத்துக்கு என் சார்ந்த புரிதல்களும் காரணங்களும் உண்டு. அது நுண் அரசியலோ முரண்பாட்டு அரசியலோ, அல்லது எந்த இசமோ, நான் என் புரிதலுக்குட்பட்ட காரணங்களை முன் வைத்துவிட்டேன். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம். நானும் ஒரு நாட்டாமையாக கிளம்ப விருப்பப்படவில்லை.

ஏற்கனவே பல நாட்டாமைகள் தாங்கள் கூறுவதுதான் சரி என்கிற போதையில் இருக்கிறார்கள். அது அவர்களுக்கே உரிய மனநிலை. அதற்கெல்லாம் சட்டை செய்து கொண்டு இருக்க முடியாது. நவீனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் நான் முன்வைத்த அந்த வரியைத் தொட்டே இருந்தது. மீண்டும் என் நிலைபாடுகளிலிருந்து நான் விலகிக் கொள்ளப்போவதில்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்."நான் அறிந்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபுக்கவிஞர்கள் நவீன கவிதை எழுதுபவர்களை வசை பாடியது கிடையாது." மஹாத்மன் கூறியது. அவர் அறியாத இடங்களில் இன்றும் அது நடந்து கொண்டுத்தான் இருக்கிறது.

உங்கள் கண்களுக்கு அது தென்படாததால் அது இல்லை என்று ஆகிவிடுமா? அல்லது நாளிதழில் இது பற்றி விவாதங்கள் வராததால் மஹாதமன் இறுதி தீர்ப்பாக தலைநகர் நாட்டாமையாக இதைத் தீர்மானித்துவிட்டார் போல. அன்மையில்கூட ஒரு நிகழ்வில் நவீன் அவர்கள் மு.வாவை மோசமாக விமர்சித்துவிட்டார் என்பதற்காக, (எப்பொழுது செய்தார் என்று தெரியவில்லை) இன்றும் அதைப் பற்றி பேசி மிகவும் இழிவாக மதிப்பிட்டுக் கொண்டிருக்கிரார்கள். நானே கேட்டேன். மேலும் இரண்டு மரபுக்கவிஞர்கள் விபச்சாரியைப் பற்றி மிகவும் மோசமான தமது சொற்களால் தொனியால் விமர்சித்துக் கிண்டலடித்ததை நான் நேரில் கண்டு, அதன்பால் அவர்கள் மேற்கொண்டு பேசிய சில வார்த்தைகளையும் கேட்டேன்.

அதையொட்டி நவீன படைப்பாளிகளையும் கிண்டல் அடித்தத்தையும் கேட்டேன். அத்தகையதோர் இழிவான கிண்டல்களை அவர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தையை இங்கு முன்வைக்க நான் விருப்பப்படவில்லை. தேவையென்றால் எனக்குத் தொடர்புக் கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்.இதையெல்லாம் கேட்டதால், அனுபவித்ததால்தான் அப்படியொரு கருத்தை முன்வைக்க நேர்ந்தது. இது சால்ஜாப்பு அல்ல. என் அனுபவம். அனுபவத்தின் அப்பாலிலிருந்து பார்க்கும் போது அல்லது அந்த அனுபவம் நேராதவர்களின் பார்வையும் புரிதலும் வேறு மாதிரிதான் இருக்கும்.

அதற்காக என் அனுபவமும் அதன் பால் உருவான சில மதிப்பீடுகளும் தவறானவை என்று தீர்மானிக்க யாருக்கும் நான் உரிமையைக் கொடுக்கவில்லை. வேண்டுமென்றால் விமர்சியுங்கள், உங்கள் பார்வையைப் புரிதலைப் பதிவு செய்யுங்கள். அது உங்கள் சுதந்திரம். ஈழத்து வலியை ஈழத்து மண்ணில் நடக்கும் கொடுமையை ஒரு ஈழப் போராளி சொல்வதற்கும், பார்வையாளன் சொல்வதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அவனது புரிதலுக்குள் எல்லோரும் வரவேண்டும் என்கிற தீர்மானத்தில் அவன் படைக்கவில்லை, அவன் வலியை அனுபவத்தை அவன் பதிவு செய்கிறான். அப்படித்தான்.

இந்தச் சமூகத்திலே பிறந்து இந்தச் சமூகத்திலே வளர்ந்து இந்தச் சமூகம் கற்றுக் கொடுத்த ஒழுக்கங்களைப் புரிந்து கொண்ட எனக்கு, இந்தச் சமூகத்தின் பின்னனியை வைத்துக் கொண்டு உலக பார்வையில் விரிந்து கிடக்கும் பற்பல கலாச்சாரங்களையும் வாழ்வுமுறையையும் அறிந்து கொள்வதும், அதன் பால் தன் சமூகத்தை விமர்சிப்பதும் மதிப்பீடுவதும் எனது உரிமையே. அதே போலத்தான் இந்தத் தமிழ் சமூகத்தில் விபச்சாரி என்பவள் ஒழுக்கம் கெட்டவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அதுவும் இப்பொழுதெல்லாம் நவீன கவிஞர்கள் ஆபாசமாகப் பேசுகிறார்கள், துகிலுத்துக் காட்டுகிறார்கள். தமது மொழியை இலக்கியத்தை விபச்சாரம் செய்கிரார்கள் என்றெல்லாம் ஒரு நவீன படைப்பாளியையும் விபச்சாரியையும் இணைத்து இந்தச் சமூகம் கட்டமைத்த விபச்சாரியின் ஒழுக்க விளிம்புகளை நவீன எழுத்தாளன் படைப்புடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.

இது மலேசியாவில்தான் நடந்து கொண்டுருக்கிறது. உங்கள் காதுகளில் எட்டவில்லை என்பதற்காக எல்லாம் பொய்யாகிடுமா?ஆகையால் இந்தத் தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து, மரபு கவிஞர்கள் ஒரு விபச்சாரியின் யோனிக்குக் கொடுக்கம் மதிப்பைக்கூட. . அவர்கள் பொருத்தவரை விபச்சாரியின் யோனி இழிவானது. . காரணம் இந்தச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பிலிருந்து விபச்சாரி என்பவள் அங்கிக்கரிக்கப்படாமல் போய்விட்டாள். இங்கே நவீன எழுத்தாளனின் படைப்பும் அதைவிட ஏறக்குறைய அதே அளவில்தான் வைத்து மதிப்பீடபடுகின்றன. நான் எனது வரியில் சொல்ல வந்த ஒப்பீடும் இதேதான். இந்த வரியைச் சொல்வதற்காக என் சமூகத்தின் பின்னனியைக் கொண்டிருப்பதோ அல்லது இக்ளு நாட்டின் கலாச்சார புரிதலைக் கொண்டிருப்பதும் என் சுதந்திரம்.

நடப்பதைச் சொல்லியாக வேண்டும். அதற்கு நமக்கு சில நுண் அரசியல் முரண் அரசியல் என்ன வேண்டுமானாலும் கையாள்வது நமது உரிமை. நுண் அரசியல் இல்லை சொல்லாடல்கள் இல்லையென்று மஹாத்மன் மீண்டும் இலக்கிய ஜாம்பவனாக மூக்கை நுழைத்துப் பார்க்கிறார். பாவம் அவர், கட்டற்ற மொழியின்பால், சிக்கலான வரிகளின்பால் சொன்னால்தான் இந்த மாதிரியான சொல்லாடல்கள் வரும் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். எளிமையான சொற்களிலும் ஒப்பீடுகளிலும்கூட அந்த மாதிரியான சொல்வகைகளை புகுத்திப் பார்க்கலாம் என்று தெரியாமல் இருக்கிறார் போல. அது அவருடைய சுதந்திரம். மேலும் "நான் குறிபிட்ட" ஒழுக்கம் பற்றி மஹாத்மன் தவறான புரிதலுக்குள் உட்பட்டுவிட்டார் போல. அதாவது நான் குறிபிட்ட ஒழுக்கம். தன் சார்ந்த சமூகம் தமது மக்கள் கலாச்சார சிதைவில் சிக்கி சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக எல்லோரையும் பொதுவான ஒரு நேர்கோட்டில் இணைப்பதற்காகச் செய்த ஒருங்கிணைப்பே ஒழுக்கம்- ஒஷோ சொல்லியிருக்கிறார்.

இந்த ஒழுக்க கட்டமைப்பை மீறுவதும் விமர்சிப்பதும் மறு கட்டமைப்பு செய்வதும் அந்தச் சமூகத்தைச் சார்ந்தவரின் தனிமனித சுதந்திரம். ஒழுக்கம் இருப்பதால் ஒரு சமூகம் பின்னடைந்துவிடும் என்று நான் சொல்லவரவில்லை. அந்த ஒழுக்கத்தின் பால் உருவான மதிப்பீடுகள்தான் விபச்சாரிகளைக் கீழாக எண்ணவும் சில வரையறைகளைக் கடக்க முடியாமல் சிக்கிக் கிடப்பதையும் உணர்த்தினேன். அதிலிருந்து மீண்டு வரக்கூடாது கடைசிவரை அந்தச் சமூகத்தின் பால் உருவான ஒழுக்கக் கட்டமைப்பிலே நாம் வளர வேண்டும் என்று போதிப்பதுதான் முழு ஆக்கிரமிப்பாலான கள்ளப் போதனை. படைப்பிலக்கியத்தில் புதிய உத்திகள் கையாளப்படுவது வரவேற்கதக்கது.

பலரும் தமது படைப்பிலக்கியத்தில் பல புதிய நுண் உத்திகளைக் கையாண்டுள்ளார்கள். சில படைப்புகள் வெற்றியடைந்தும் உள்ளன. அதே போலத்தான் விமர்சனங்களிலும் சில சொல்வகை உத்திகளையும் சொல் அரசியலையும் எதிர் அரசியலையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதைப் பயன்படுத்துவது அவரவர் சுதந்திரம். தமது படைப்பை எப்படி எந்த மொழியில் செதுக்க வேண்டும் என்பது அந்தந்த படைப்பாளர்களின் உரிமை, சுதந்திரம். அவர் படைப்பது சொல் விளையாட்டு, அவர் படைப்பது படைப்பிலக்கியம் இல்லை என்றெல்லாம் கூவிக் கொண்டிருந்தால் வாய்தான் வலிக்கும். இருந்தாலும் அப்படிக் கூவிக் கொள்வதும் அவரவர் சுதந்திரம். தனது வாசகனுக்கு எவ்வித விளையாட்டை அளிக்க வேண்டும், எவ்வித அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் எவ்வித புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள சுயம். அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. அது அப்படி அமையக்கூடாது அது தவறு என்று தீர்மானிப்பதால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடாது.

விவாதங்களை முன் வைத்து நகர்ந்தால் சிறப்பு ஆனால் இங்கு தனிமனிதனை அவதூறு செய்து பேசத் துணிந்துவிட்டார்கள். புத்திமதி சொல்வதும் ஏற்படுகிறது. ஆகையால் நான் சொன்ன எல்லாம் கருத்துகளுக்கும் பல்வகைபட்ட புரிதல் ஏற்படலாம். அதுவும் ஆரோக்கியமே. இங்கு எல்லாமும் சுதந்திரம். ஆதியில் அநங்கத்திலிருந்து ஒன்று விலகிச் சென்றது இப்பொழுது பாதியில் ஒன்று விலகிக் கொண்டது, மீதியில் அநங்கம் மேலும் செழிப்புடன் வளரும். வளந்து கொண்டே போகும் தமக்கே உரிய நிலைபாடுகளுடன் ஆயிரம் புறம் பேசிகள் குறுக்கிட்டாலும்.

அன்புடன்
கே.பாலமுருகன்

மஹாத்மனுக்கு ...

1) அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மூக்கு நுழைத்துச் சிக்கிக் கொண்டதற்காகதமக்கு முகமே இல்லை என்று சுய ஒழிப்பைச் செய்து கொண்டாய்
2)நல்ல விவாதத்தில் ஈடுபட இயலாமல் தனிமனித அவதூறில் ஈடுபட்டு, முகத்தை மறைத்துக் கொண்டாய்
3) உன்னுடைய சொல்லும் உன் நிலைபாடுகளை/ போலியான சொற்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது
4) தாராளமாக. . அநங்கம் இன்னும் வளரும்

கே.பாலமுருகன்

நாலே வாக்கியம்.

உமக்கு(பாலமுருகன்)நாலே வாக்கியம் போதுமென நினைக்கிறேன்.

* உமது வார்த்தைகளே உம்மை காட்டிக்கொடுக்கின்றன.ஐயோ பாவம்...
* யாருக்கு மன பிரழ்வு என வாசகன் தெரிந்து கொள்வான்.
* எனக்கு முகமே இல்லை.முடிந்தால் திரையை கிழித்துக் கொள்ளுங்கள்.
* தயவு செய்து அநங்கத்திலிருந்து என் பெயரை அகற்றுவீர்!

மஹாத்மன்

அருவருப்பா ? புனிதமா?

அநங்கத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு சை.பீர், சண்முக சிவா, சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி ,சிங்கப்பூர் இராம கண்ணபிரான் ஆகியோரின் பெயர்களை சிபாரிசு செய்திருக்கும் நவீனின் நல்ல எண்ணத்திற்கு ஆயிரம் கும்பிடு.இப்படி யாராவது ஒருவர் சிபாரிசு செய்ய மாட்டார்களா என நான்கு கோடி தேவர்களுக்கும் அன்றாடம் பாலாபிஷேகம் செய்து கண்ணீர் மல்க வேண்டி , இதில் யாரோ ஒருவர் (நிச்சயமாக அது நானல்ல) அதன் ஆலோசகர் என்கிற நிலையில் இருந்து வலிய விலகிக் கொண்டவன் என்பதால் அத்தைகையதொரு வேண்டுதலை வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.)நின்றதன் பலனே இதுவென்பதில் அடியேனுக்கு கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.

"அநங்கத்தின் நிலைப்பாடு குறித்து நவீன் முன் வைக்கும் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில்(நான் சரி பார்த்து கொடுத்தது அநங்கத்தின் முதல் வெளியீடு மட்டுமே)"நவீனுக்கு குறும்புதான். எழுபதுகளில் தொடங்கிவிட்ட தமிழ் நவீன எழுத்தைக்கூட அரைகுறையாக உள்வாங்கி ஜீரணிக்காத உள்நாட்டு கிழட்டு எழுத்தளர்களை எழுதச்சொல்லி மாரடிக்க 'வல்லினம்' இருக்கும் போது இன்னொரு சிற்றிதழை 'அந்தப்போட்டியில்' இறங்க அழைப்பது குறும்பில்லாமல் வேறென்ன?

அது நவீனத்தையும்- பின் நவீனத்தையும் - பின் பின் நவீனத்தையும் , யுவராஜன் வார்த்தைகளில் சொல்வதானால்,'கரைத்து' குடித்து போதை தலைக்கேறி தள்ளாடும் ஒரு சில இளைய தலைமுறை மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழக எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் இன்னும் பிற பிரபல நவீன பின் நவீன ஜாம்பவான்களுக்கும் உரியது என்பதை ஏற்றுக்கொண்டு, ஒபத்திரவம் செய்யாமல் வாழ்த்தி ஒதுங்கி வழி விடுவதுதானே இலக்கிய நாகரீகம்?
......முக்கிய குறிப்பு- அநங்கம் குறித்த இந்தப் பதிவும் கூட அதனோடு தொடர்புப் படுத்தி எனது பெயர் முன்னிருத்தப்பட்டதன் பொருட்டே.இல்லையெனில் இதுவும் இல்லை.....

இறுதியாக, இந்த யோனி பிரச்சனை தொட்டும் ஒன்று சொல்ல விழைகிறேன்.இது ஒரு பொது விவாதத்திற்கு வந்து விட்ட நிலையில் அது குறித்து கருத்து கூற இடம் உண்டு.இந்த கிழட்டு ஜென்மத்திற்கு, இந்த வயதில் இதென்ன வேண்டாத வேலை என்று இளைய தலைமுறை முகம் சுழிக்க வேண்டாம். நீங்கள் இந்த மண்ணில் தாயின் வயிற்றிலிருந்து குதித்து 'குவா குவா' சத்தம் போடுவதற்கு முன்பே எங்களுக்கு யோனி அறிமுகம் ஆகி விட்டது.(யோனி அறிமுகம் ஆனது மட்டுமல்ல கூடுதலாக மலேசியத் தமிழ் இலக்கியத்தையும் அப்போதே கடல் கடந்து தமிழக மண்ணில் அறிமுகம் செய்து விட்டிருந்தோம்.என்கிற தகுதியில், அதுகுறித்து பேசுவதற்கான அனைத்துத் தகுதிகளும் எங்களுக்குண்டு.)

யோனி- அது எவருடையதாக இருப்பினும், எத்தகைய சூழல் நிர்பந்தத்திலும் அதனை 'அவமதிப்பது என்பது , ஆணாதிக்க மனப்பான்மையின் மிக கொடூர வெளிப்பாடு.அதிலும், இந்த சீர்கெட்ட சமூகத்தின் அவலங்களில் ஒன்றான ஆண்களின் வக்கிர பசிக்குத் தீனி போட்டு சேவை புரிந்து சமூக வெளியில் பல வன் கொடுமைகள் நிகழ்வதை தடுத்து நிறுத்தும் , விபச்சாரிகளின் யோனி அருவருப்புகுரியது எனின் எனது தாயின் தங்கையின் மனைவியின் யோனி எத்தகைய புனிதத்திற்குரியது?

அன்புடன் ,
சீ.முத்துசாமி.

Wednesday, March 18, 2009

'விபச்சாரியின் யோனியை'எப்படி உடைத்துப் பார்ப்பது?!

ஏ.தேவராஜன் நினைத்த நேரத்தில் வெளிவரும் 'மௌனம்' 2-வது இதழில் கே.பாலமுருகன் எழுதிய பத்தி 'புளோகில்' விவாதங்கள் நடப்பதை கேள்வியுற்று கொஞ்சம் வியப்படைந்தேன். இந்த விவாதத்தை மௌனத்தில் எதிர்ப்பார்த்தேன். மேலும், கணினிப் பயிற்சியில் இப்போதுதான் கைவைத்திருக்கிறேன். அதைவிட, என்னை கைவைக்க வைத்துவிட்டீர்கள் எனலாம்.

என்னுடைய 'மௌனம்' பிரதியில் பிரச்சனைக்குறிய அந்த வாக்கியத்தை கோடிட்டு வைத்திருந்தேன். இது பிரச்சனையை எழுப்பும் என்று மனதிற்குள் நினைத்திருந்தேன். ஒப்பீடு தவறானது என்று தெரிந்திருந்தது.

'மரபுக்கவிஞர்கள், நவீன படைப்பாளிகளின் கவிதைகளுக்கு விபச்சாரியின் யோனிக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட தருவதில்லை.'

நான் அறிந்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபுக்கவிஞர்கள் நவீன கவிதை எழுதுபவர்களை வசை பாடியது கிடையாது. அவர்கள் இப்போது மௌனம் காக்கிறார்கள். கே.பாலமுருகனின் நட்பு வடாரம் அல்லது எதிரி வட்டாரத்தை நான் அறியேன். எது எப்படி இருப்பினும் அந்த ஒப்பீடு தவறுதான்.

விபச்சாரி என்பவள் மதம் சம்பந்தப்பட்ட நாடுகளிலோ இனங்களிலோ ஓர் அவமானத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறாள். (இயேசு வாழ்ந்த காலத்தில் தங்கள் வேதத்தின் கட்டளைப்படி யூதர்கள் ஒரு விபச்சாரி கையும் களவுமாக அகப்பட்டால் கல்லால் அடித்தே கொல்வார்கள். கடுமையான இந்தக் கட்டளையை நீக்கியவர் இயேசு கிறிஸ்து)

'விபச்சாரியின் யோனி' என்கிற குறியீட்டைப் பல கலாச்சார தளங்களில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் கே.பாலமுருகன். குறிப்பிட்ட மூல வரியானது நமது கலாச்சார தளத்திலிருந்து மட்டும்தான் சொல்லப்படுகிறது. கே.பாலமுருகனின் அந்த மூல பிரதியை வாசித்தால் கொண்டு வரும் அர்த்தமது. மேலும் புளோக்கில் மடல் 1- ல் கே.பா. முன்னுக்கு பின் முரணாக இவ்விஷயத்தைத் தொட்டு எழுதியிருக்கிறார்.

'விபச்சாரியின் யோனி'என்று தொடங்கும் பத்தியில் தமிழ் சமூகத்தின் பலவீனமான கேவலமான மதிப்பீடுகளின் பின்னனியிலிருந்துதான் பயன்படுத்தினேன் என்று சொல்லிவிட்டு பத்தியின் இறுதியில் 'இக்ளு'நாட்டில் ஒழுக்கமோ விபச்சாரமோ கிடையாது. அங்கு வெப்பம் மட்டுமே கொண்டாடப்படுகிறது... ஆகையால் வெறும் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பீடுகளை மட்டும் பின்னியாக வைத்துக்கொண்டு நாம் அவர்களை (விபச்சாரிகளை) ஒடுக்கப்பட்டவர்கள்,கேலிக்குள்ளவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது' என்கிறார்.

எந்த நாடோ எந்த இனமோ விபச்சாரத்தை எப்படியாவது அர்த்தப்படுத்தட்டும். நம்முடைய விஷயமே/கேள்வியே நம்முடைய சமூகத்தை தொட்டுப்பேசப்படுகிறது. ஆகையால், இங்கேயும் இடிக்கிறது.

ம.நவீனின் விவாதக்கருத்து 'இதற்காக நீங்கள் விலைமாதர்களை வம்புகிழுப்பது வேதனைத்தருகிறது......நீங்கள் அவர்களை அவமானப்படுத்தியிருப்பது புரியும். இதுவும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்களை நோக்கிய கேலிக்குரல்தான்' என்ற கருத்துக்கு மாறாக கே.பா 'விபச்சாரிகளை ஒடுக்கப்பட்டவர்கள், கேலிக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.' என்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள் விபச்சாரிகள். தீண்டப்படாதவர்கள், கேவலத்திற்குரியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என்றுதான் நமது மரபு சமூகம் கற்றும் கற்பித்தும் வருகிறது. இப்படி இருக்க, நவீன பார்வை என்பது என்ன? அப்படிப்பட்ட விபச்சாரிகளின் பின்னால் சென்று பார்த்தால் அவர்களுக்குறிய நியாயங்கள் தெரிய வரும். கேவலத்திற்குரிய சூழலுக்கு தள்ளப்பட்ட கதை புரியும். ஒதுக்கப்பட்ட வகை அறிய வரும். இவர்களும் மனிதர்களே என்ற அங்கீகரிப்பு ஏற்படும். மரபை உடைத்து அவர்களை ஏற்றுக்கொள்ளும்.

நவீன பார்வை இப்படி இருக்கையில் கே.பா - வின் நவீன பார்வை என்ன?'விபச்சாரிகளை ஒடுக்கப்பட்டவர்கள், கேலிக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது'. இவ்வாக்கியத்தில் 'கேலிக்குள்ளானவர்கள்' என்று ஏன் பயன்படுத்தினார்? இது வார்த்தைத் தடுமாறறம். (இது வார்த்தை தடுமாற்றம் இல்லை ..அதில் நுண் அரசியல் எதிர் நுண் அரசியல் இன்னும் எக்கச்சக்கமான அரசியல் இருப்பதாக பாலமுருகன் கூறலாம்.)

விபச்சாரிகளை ஒடுக்கப்படவர்கள் என்றெல்லாம் சொன்னால் அது நவீன பார்வைக்கு அப்பாற் பட்ட பின்னடைந்த சிந்தனையாக இருக்கக்கூடும் என்ற ஒரு மிகச்சரியான பார்வையை தந்து விட்டு இவரே பின்னடைந்த சிந்தனைக்கு சென்று செயல்பட்டிருக்கிறார்-'தமிழ் சமூகத்தின் பலவீனமான கேவலமான மதிப்பீடுகளின் பின்னனியிலிருந்துதான் பயன் படுத்தினேன். அவர்களின் மதிப்பீடுகளில் 'பளார்' என்று அறைவதற்கு.' என்கிறார். இது கருத்து முரண் அல்லவா!

கே.பா- மௌனத்தில் எழுதிய இவ்விஷயத்தைக்குறித்தான 'பத்தி' மிகவும் சுலபமான வாசிப்புக்கு உட்பட்டது.இதில் எவ்விதமான நவீன சொல்லாடல்களோ- உள் அடுக்குகளோ - முரண் பட்டு பிளவு படும் நுண் வெளிபாடுகளோ- யதார்த்த சொல்லாடல்களை மீறிய கட்டமைப்போ கிடையாது. அதனால் கட்டுடைப்பு அவசியம் இல்லாமல் போகிறது. நுண் முயற்சிகளை மேற்கொள்ள தேவைப்படாமல் போகிறது. இப்படி இருக்க கே.பா, "வாசகனை அடுத்த புரிதலுக்குள் நுழைந்து சொல்லாடல்களுக்குள் இருக்கும் இரண்டாவது முரண்பாட்டை/புரிதலை நவீன சொற்களுடன் விளையாடி புரிந்துகொள்ள ஒரு சிறு பயிற்சி"என்று ஏன் சொல்கிறார்? இப்படி செய்வதற்கு அது படைப்பிலக்கியம் அல்லவே... வெறும் சாதாரண சொல்லாடல்களைக்கொண்ட பத்தியே.

எதிர் அரசியல்- நுண் அரசியல்- நுண் முரண்பாட்டு அரசியல்- பிளவுபடும் பல கூறுகள் என்று சொல்லும் கே.பா "ஆனால் இங்கு யார் ஒடுக்கப்படவர்கள் என்றுஇ வெறுமனெ தீர்மானித்து விட முடியாது" என்ற கருத்தில் சறுக்கி இருக்கிறார்.

"மேலும் இந்தச் சமூகத்தை வளரவிடாமல் இன்னும் இலக்கணம் , மரபு வாழ்வு, ஒழுக்கங்கள் என்று பின்னடைவை நோக்கி இலக்கியம் வழியாக நம் சமூகத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்"என்று பொது படையாக பேசி மேலும் சிக்கியிருக்கிறார் கே.பா. இது மிகப்பெரிய சிக்கல். இலக்கியம் வழியாக-

* சமூகம் வளராததற்கு ஒழுக்கங்கள் ஒரு காரணம்.
*இலக்கணம் ஒரு காரணம்.
*மரபு வாழ்வு ஒரு காரணம்
இந்தச்சொல்லாடலை உடைத்துப்போட்டால் (நீங்கள் உடைத்துப் பார்க்க சொன்னபடி)
இப்படி வரும்: நமது சமூகம் வளர ஒழுக்கங்களே இருக்கக்கூடாது; இலக்கணமே இருக்கக்கூடாது; மரபு வாழ்வே இருக்ககூடாது. சரியாபோச்சு... போங்கள். இதுவே தவறான ஒரு போதனை. கள்ள போதனை. அவசரப்பட்டு வார்த்தைகளை அமைத்தால் இப்படித்தான் நுண் அரசியலும் எதிர் அரசியலும் நுண் முரண்பாட்டு அரசியலும் வெளிபட்டு சீழ் வடியும்.
பாண்டிதுரைக்கு,
உங்களுடைய சொல்லாடல்களில் பல சிக்கு இருக்கின்றன. நீங்களும் அவசரப்பட்டு விட்டீர்களோ என எண்ணங்கொள்ள வைக்கிறது. சிங்கப்பூர் வேண்டாம் என்று மலேசிய அரசு ஒதுக்கிவிட்டதா? என்னையா இது? புது வரலாறு சொல்கிறீர். மலேசியாவிடமிருந்து எங்களை பிரித்து விடுங்கள் நாங்கள் தனியாக போகிறோம் என்று பாகிஸ்தானும் பங்களாதேசும் 'விடாப்பிடியாக' இருந்தது போல உங்கள் தலைவர் இருக்க வில்லையா? கோப்பிக்கடையில் இருக்கும்போது சிங்கப்பூர் பிரதமர் சைக்கிளில் சென்றதை நான் பார்த்தேன் என்று சொன்ன சாரு நிவேதிதாவின் பொய்யை போலத்தான் உங்கள் பொய்யும் இருக்கின்றது. எழுத்தாளனுக்கு முதலில் அடிப்படை வரலாறு தெரிய வேண்டும்.

அடித்த கொள்ளையைப்பற்றி நினைவிற்கு வருகிறது என்கிறீர்கள். அது எனக்குத் தெரியாது. முக்கியமும் அல்ல.ஜெயமோகன் மீதும் மனுஷ்ய புத்திரன் மீதும் எனக்குத் தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு.அது உங்களுக்கு முக்கியமல்ல. நமக்கு முக்கியம் என்னவென்றால், அழைக்கப்பட்ட ஓர் இலக்கியவாதி விருந்தினர்- அவர் ஓர் அங்கவீனராக இருக்கும் பட்சத்தில்- சக்கர வண்டி பயன்படுத்துபவர் - படிகளில் அவரை இருவராகத் தூக்கிக்கொண்டு போகப்பட வேண்டியவரை உங்கள் ஊர் காரர் பா.மா, தனது ஏற்பாட்டில் அழைத்து அவருக்கு எந்த வசதியும் செய்து தராமல் நான்கு மாடி படிகளில் தத்தித் தவழ ஏற வைத்திருக்கிறார். மீண்டும் அந்தக்கவிஞர் மலேசியாதிரும்ப யார் உதவியும் இன்றி ஒரு டாக்ஸி ஓட்டுனரின் உதவியில் வந்து சேர்ந்தார். இதற்கு பின்பு ஆராய்ந்ததில் இந்த பா.மா-வின் வண்டவாளங்களெல்லாம் தண்டவாளம் ஏறின.ஒரு புத்தக வெளியீட்டுக்குகூட சினிமா இயக்குனர்களை அழைத்தும் பணம் உள்ளவர்களின் காலைப்பிடித்தும் பணம் பண்ணும் இது போன்றவர்களிடம் மனிதாபி மானத்தை எதிர்ப்பார்க்க முடியாதுதான். இதேபோல எங்கள் ஊரில் ஓராண்டுகள் பணியாற்றிய எம்.ஏ.நுக்மான் அவர்களை தனது ஏற்பாட்டில் அநங்கம் வெளியீட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து ,பணம் வசூலானதும் எந்த விருந்தோம்பலும் இன்றி அந்த இரவே பஸ் பிடித்து மனைவியின் தம்பி பிறந்தநாளுக்கு ஜொகூர் பாரு ஓடினார்(ஒரு தமிழனாக நாம் அழைக்கும் விருந்தினரை நமது தேவைக்காக பயன்படுத்திக்கொண்டு அம்போவென கலற்றி விடும் இந்தப் பண்பை கே.பா - பா.ம- விடம் கற்றிருக்கலாம். )
பதில் வராத மின்னஞ்சல்களுக்காக உங்கள் கால்களை முடமாக்கிக்கொண்டு அல்லது மாற்றுப்பால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு போவீர்கள்.இன்னொரு விஷயத்திற்கு ஓர் இராணுவ வீரனைப்போல விரைப்பாய் நின்று ஆண்மையை வெளிப்படுத்துவீர்கள்.
புரிகிறதையா...உங்கள் புரிதல்,மனிதர்கள் மீதான - மனிதம் மீதான புரிதல்...!?

மஹாத்மன்