Monday, March 23, 2009

என்னருமை சொக்கா...!

விபச்சாரியின் யோனியை எப்படி உடைத்துப் பார்ப்பதுஎன்ற என் எதிர்வினை மடலில் பாண்டிதுரைக்கு எழுதிய பத்தியின் நான்கு வரிகளுக்கு மட்டும் கே.பா. நீண்டதொரு புலம்பல் + முனகல் மடலை எழுதியதற்கு அடுத்து வந்த மடலில் தான் கொஞ்சம் நிதானமாக, கொஞ்சம் விளக்கமாக பதில் எதிர்வினையாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

கே.பா.யின் தனிப்பட்ட விஷயத்தின் மீதான இழிவான சொற்களும், அவதூறு செய்கையும் நான் செய்துள்ளேனா என்று மீண்டுமொருமுறை என் மடலை வாசிக்கையில் பிடிபடாமல் போய்கிறது. கே.பா.தான் விளக்க வேண்டும். அம்போவென கழற்றிவிடும் இந்த பண்பை (இந்த ஒரே ஒரு பண்பு மாத்திரம்) கே.பா - பா.மா.-விடமிருந்து கற்றிருக்கலாம் என்று தான் சொல்லி இருந்தேன். போகட்டும்.
மௌனத்தில் எழதிய ~ஒரு வரிஎன்றாலும் விவாதத்திற்குரியது என்றால் விவாதிக்க வேண்டியது தான். இதற்காக என்னை மனப்பிறழ்வுள்ளவன் என்றோ இலக்கிய ஜாம்பவான் என்றோ நாட்டாமை என்றோ என் சுதந்திரம் - உன் சுதந்திரம் என்றோ என் உரிமை - உன் உரிமை என்றோ கைவலிக்க, வாய்வலிக்க சொல்வதில் பிரயோஜனமில்லை.

இரண்டு மரபுக்கவிஞர்கள் மோசமான சொற்களால், தொனியால் விமர்சித்து கிண்டலடித்ததற்காக அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக மௌனத்தில் மோசமாக - கேவலமாக நீரே தூற்றியிருக்கிறீர்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு தூற்றும் பழியை என்மேல் போடுகிறீர்.
தமிழறிஞர் சீனி நைனா முகமது மிகவும் கடுமையான வார்த்தைகளால், மண்டைக்கு மணியடிக்கும் வார்த்தைகளை பிரயோகித்து சண்டைக்கு வந்தார். எதிர்வினையாற்றினோம். புலம்பலாக அல்ல. முனகலாக அல்ல. மண்டியிட்ட பாவனையிலும் அல்ல. ஒரே ஒரு கவிதையில் கொஞ்சம் மீறியிருக்கிறேன். ஆபாசம் என்றார் ஒரு விரிவுரையாளர். இல்லையென்றேன் நான்.
யார் அந்த இரண்டு மரபுக்கவிஞர்கள்?
பெயர்களை மட்டும் வெளியிடுங்கள். இதற்கும் அந்த மாணிக்கவாசக விருது விஷயத்தில் எதிர்க்க திராணியில்லாமல் இருந்ததைப்போல் நழுவிச்செல்வீரா?
முன்பொருவர் கொஞ்சங்கூட நாகரீகமில்லாமல் சொன்னதைப்போல ~சீனி நைனா மீது மூத்திரம் அடித்தால் தான் என் ஆத்திரம் தீரும் என்று சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டதைப்போல மூடிக்கொள்வீரா?

எந்த திiசியிலிருந்தும் எதிர்ப்பு வேண்டாமென்றால் - கோ.புண்ணியவான் போல நியாயமான முறையில் ஆண்டு தோறும் பரிசுகள் கூடவே சால்வைகள், மாலைகள், இன்னும் கூடுமானால் தமிழ்நாட்டின் அத்தனை விருதுகளும் பெற்றுக்கொள்வதில் முனைப்பும் முயற்சியும் காட்டி பாடுபடுங்கள். அவ்வப்போது இடைவேளை ஏற்படுகையில் இலங்கைத் தமிழர்களுக்காகவும் இங்குள்ள ஹிண்டிராஃப் இயக்கத்திற்காகவும் மயிர்க்கூச்செரிய இரத்தம் கொதிக்க கவிதைகள் இயற்றலாம். (இதற்கும், நீ யார் இதை சொல்வதற்கு? நீ யார் எனக்கு கட்டளையிடுவதற்கு....... என முனகலாம்! தவறில்லை)

சிக்கலான வரிகளுக்குள் தான் நுண் அரசியலும் முரண் அரசியலும் எதிர் அரசியலும் இருக்கும் என்று என் பத்தியில் சொல்லவில்லையே. சாதாரண புரிதலுக்குள் வசப்பட்ட உங்கள் மௌனம் பத்தியில் நீங்கள் இருக்கின்றது என்கிறீர்கள்@ நான் இல்லையென்றேன்.

சரி. இதனையும் இத்தோடு விடுகிறேன்.

விவாதங்களை நியாயமான முறையில் உங்கள் முன் வைக்கையில் அதனை தனிமனித தூற்றுதல் என தப்பிதமாக நீங்கள் தம்பட்டம் அடிக்கின்றதினால் உங்களுக்கு எழுதுவதையும் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்
---------------------------------------
பாண்டிதுரைக்கு வருத்தத்துடன் சில வரிகள்.............
வணக்கம் பாண்டிதுரை.
வரலாறு பற்றி இனி என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

பத்திரிகைத் துறையில் இருப்பதால் கணனிபயிற்சி அவசியம் என்ற நிர்ப்பந்தத்தில் பயிற்சிப் பெற்று புளோக்கில் முதல் அல்லது இரண்டாவது எதிரியாய் உங்களை நான் சம்பாதித்திருக்கிறேன்.

என்னை படைத்தவனுக்கும் எனக்குமான சில உடன்படிக்கைகளின் நிமித்தம் அடிக்கடி நான் காணாமல் போவதுண்டு. அதற்கான நேரம்- எந்த நேரமோ எனக்குத்தெரியாது.
எனக்கிருக்கின்ற ஒரு கெட்ட பழக்கம் (பலவற்றுள் இதுவும் ஒன்று) ஓட்டைவாய். ரகசியம் தங்காது. இது ரகசியம் என்று நீங்கள் என்னிடம் சொல்லிவிட்டால் அதை நான் மறந்துவிடுவேன். இப்படி மறக்கப்பட்ட ரகசியங்கள் ஏராளம்.

ரகசியங்களின் கால அளவு காலாவதியாகும்போது அது சம்பந்தப்பட்ட நிகழ்வு சம்பவிக்கும்போது மூளையிலிருந்து ஏதோ ஒரு மூலையின் பகுதியிலிருந்து வினாடிகளின் அவகாசத்தில் வெளியே தள்ளிவிடுகிறது. ஆண்டுக்கணக்கில் இருந்தமையால் அழுகிய குப்பை நாற்றம் - பிணநாற்றம் போல மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வைக்கிறது.

சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் கோபித்துக்கொண்டு மூஞ்சை தூக்கி வைத்துக்கொள்ளும் ~சென்ஸடிவ் மனைவியைப் போல உங்கள் ஊர்காரர் கேஸல்லாம் போட்டு நஷ்டஈடு கேட்டால் நான் எங்கே போய் கொள்ளையிட்டு தருவது? நான் என்ன அரசியல்வாதியா? இந்த நஷ்ட ஈடு கலையை பா.ம. எங்கள் ஊர் பா.கோ. - விடமிருந்து கற்று வைத்திருக்கலாம் அல்லவா. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க.......

நானாவது பரவாயில்லை பிரதர். முழுப்பெயரை வெளியிடாமல் சுருக்கமாக எழுதி உங்களுக்கு புரியும்படியாக சொல்லியிருக்கிறேன். ஆண்மை, எழுத்தாளனின் நுண்கோபம், மயிர் எழும்பும் கோபம் என்றெல்லாம் ஆவேசப்படுகிறவர் நியாயமான எதிர்பபுக்குகோரிக்கை விடுத்தும் அரசாங்கத்தின் அடிமைநாய், என்ன செய்வது என்று மௌனித்துவிட்ட பயபுள்ளையை என்னவென்று சொல்வது. இத்தனைக்கும் அரசாங்கத்திற்கும் ~அதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
எழுத்தில் மட்டும் வீரம் பொங்கி வழிந்தோடுதே சொக்கா!

பத்தி - முண்டு முடிச்சுகளோடு கவிநயத்துடன் பிராம்மணிய வீச்சுடன் தலித்தின் வீச்சமடிக்கிறது சொக்கா.!
என்ன செய்வது?

பரதேசியாய் அலைந்து திரிந்ததில் பல வீச்சங்களையும் சகிக்கும்படி ஆகிவிட்டது என்னருமை சொக்கா.!

என் முதல் சிறுகதை தொகுப்பிற்கு ~கடவுள் கொல்லப்பார்த்தார் என பெயரிட இருந்தேன். சொக்கநாதனோ அரூபநாதனோ தடைசெய்து திருப்திப்பட்டுக்கொண்டார். இப்படியெல்லா பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகளை நானே தேடிப்போய் சம்பாதித்துக்கொண்டிருக்க, சாம்பல் காட்டில் நானே வெளியிட்டு நானே பெற்றுக்கொண்டு என் புதைகுழியில் நானே போட்டு எரிக்கவேண்டியது தான் சொக்க மக்கா!

நான் பட்ட சிறு சிறு கடனை அடைப்பதற்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வந்து படாதபாடு படுகிறேன்.

இப்படியிருக்க, உமது கவிதை தொகுப்பை எங்ஙனம் நானே அச்சிட, வெளியிட பாண்டிதுரை? (கடன் கொடுத்தவர்கள் இன்னும் என்னை நெ ருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஆலோங் கிடையாது. அன்பின் பிரதிகள்)
முற்றுப்புள்ளியுடன் வணக்கம்
-------------------------------------------------------------------------------
ம.நவீன்:
~பத்து வருடங்களாக என்னென்னவோ எழுதி பார்த்தாச்சு என ஒரு வெண்முடி எழுத்தாளரைப் போல உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது கொஞ்சம் போலித்தனமாக இருக்கின்றது.

ஞாயிறு- வார - மாத இதழ்களுக்கெல்லாம் எழுதிய கணக்கைச் சொல்லுகிறீர் போலும். உருப்படியான ஒரு புத்தகத்தையும் இந்த வெளியுலகுக்கு தராதபட்சத்தில் அவ்வரி தனது வல்லமையை இழந்துள்ளது என அறியவும்.

~இன்று தமிழகத்தில் எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆழ்ந்த நுண் அரசியல் பார்வையோ.... மார்க்ஸியப் பார்வையோ..... பின் நவீனத்துவப் பார்வையோ அற்ற நிலையில்.... என்று வேறு சொல்கிறீர்.

இதுவரை தமிழகத்தில் வெளிவந்த அத்தனை புத்தகங்களையும் கரைத்து முடித்து விட்டது போலல்லவா இருக்கிறது உங்கள் கருத்து. எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் கைக்கு வந்து சேரவில்லையே என கவலைப்பட்டுக்கொண்டிருப்பது நான் மட்டும் தானா....

~தமிழக எழுத்து பிரதிகள் போல ஒன்றை உருவாக்குவதால் எக்காலத்திலும் மலேசிய இலக்கியம் வளராது

என்று சொல்லியிருக்கிறீர். இதில் பாதி உண்மை. ~போல என்ற சொல்லை இரண்டு விதமாக எடுத்துக்கொள்கிறேன். ஒன்று - அப்படியே காப்பி பண்ணுவது. (அப்படியே இல்லாவிட்டாலும் கொஞ்சம் மாற்றி மலேசிய சூழலுக்கு ஏற்றவாறு அமைப்பது) மற்றொன்று - நடை, உத்திகளை எடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து நமதாக்குவது. இதில் இரண்டாம் வகை - தமிழக எழுத்து பிரதி மட்டுமல்ல, ஆப்பிரிக்க பிரதி - கியூபா பிரதிகளின் நடை உத்திகளை கண்ணோக்குவது நலமாகும் என நினைக்கிறேன்.
நமது சமூகத்து பிரச்சினைகளை அந்த மாதிரியான வித்தியாசமான தளத்திலிருந்து கொஞ்சம் மாற்றி - சேர்த்து - கழித்து தருவதில் புதுமை தென்படும் தானே.

பாவண்ணணுக்கும் எஸ்.ராமகிருஷ்ணணுக்கும் பின் நவீனத்துவம், மாய யதார்த்தம், அதிநவீனத்துவம் யாவும் தெரிந்தது போல நமது படைப்பாளர்களுக்கும் தெரியும் தான். ஆனால். நமது படைப்பாளர்களிடமிருந்து எதிலிருந்தும் எங்கிருந்தும் இதுவரை வெளிப்பட்டதாக தெரியவில்லை. அவர்களுக்கான தளமாக சில ஏடுகள் இருந்தும் அந்த விசயங்கள் குறித்தான பகிர்வுகள் காணக்கிடைக்காதது வருத்தமளிக்கிறது என்று சொன்னால் மறுப்பீர்களா?

நுண் அரசியல் - நுண்முரண்பாட்டு அரசியல்- எதிர் அரசியல் குறித்து கோப்பிஜன்தான் - தேயளியா பருகிக்கொண்டே

இனி விவாதங்களை நேரில் நடத்துவோம்.

மஹாத்மன்.

No comments:

Post a Comment