Monday, March 23, 2009

நான் கடவுள்

அஞ்சடி அகப்பக்கம் நல்ல விவாதங்களுக்குப் பயன்படட்டும். தனி மனித அவதூறுகளையோ தாக்குதல்களையோ, அல்லது அதையும் மீறிய பித்தநிலையில் தனியொரு சிற்றிழைக் கிண்டலடிப்பதையும் தவிர்த்து, தனிநபருக்குப் புத்திமதி சொல்லவோ "அஞ்சடீயை" பயன்படுத்த வேண்டாம்.

நவீன் சொன்னது போல "மனிதர்கள்" முக்கியமென்பதால், நானும் தனிமனித தாக்குதலில் இறங்கி யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல, என் நிலைபாடுகளிலும் கருத்திலும் நான் உறுதியாக இருக்கின்றேன். எனது நிலைபாடுகளை "அஞ்சடியில்" வலிந்து வந்து நிரூபிக்க எனக்கு அவசியம் இல்லையென கருதுவதால் இதை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வரும் மற்ற இலக்கிய விவாதங்களில் கலந்து கொள்வேன்.

அதன் தொடர்ச்சியாக நண்பர் நவீன் முன்வைத்த அவரது "நான் கடவுள்" தொடர்பான கேள்விகளுக்கு என் தரப்பு பதில். நண்பர்கள் தொடர்ந்து அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலுமென்றால், அதைச் செய்யலாம்.

கேள்வி 1: அத்தனை மெனக்கெட்டு வேறொரு உலகத்தைக் காட்டும் பாலா ஆர்யாவின் கதாபாத்திரத்தைக்கொண்டு வந்தது ஏன்? அதில் ஹீரோயிச‌ம் இல்லையா?

பதில்: படத்தின் துவக்கக் காட்சி, காசியின் மரண நரகரத்தின் அகோரிகளின் வாழ்வை காமிராவில் கொண்டு வரும் படம், இயல்புகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உலகைக் காட்ட முயலும் தீவிரத்தில் ஆர்யா என்கிற தமிழ் சினிமா ஹீரோவை முன்னிறுத்தும் சில சாகச செயற்கை கதாநாயகத்துவ மிகைகளைப் பதிவு செய்துவிட்டார்கள். அதில் ஹீரோயிசம் இருப்பதாகவே கருதுகிறேன். படாம் இரண்டு தளத்தில் வைத்து புரிந்து கொள்ளப்படலாம், ஒன்று ஜெயமோகனின் ஏழாம் உலகத்தின் சிறு துண்டான கதை (அதுவும் விளிம்புநிலையை அவர்களின் மொழியிலே பேசும் மிகத் தீவீரமான நாவல்) அடுத்து ஆர்யா- அகோரி-ஆன்மீகம்-இந்துத்துவம் என விரியும் பாலாவின் பகுதி.

கேள்வி 4: படத்தில் வரும் சிறைச்சாலை காட்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜியை ஜெயமோகனின் உதவியுடன் பாலா புகுத்தியது ஏன்?

ஜெய்மோகன் ஏற்கனவே எம்.ஜி.ஆரையும் சிவாஜி கணேசனையும் கேலியாக ஆனந்த விகடனில் விமர்சனம் செய்தவர். இங்கே பாலா தமிழ் சினிமாவின் பலநெடுங்கால அபத்தங்களையும் இன்றும் தொடரும் தொப்புள்தனங்களையும் தைரியமாகக் கேலி செய்திருக்கிறார் என் சாரு தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். அதையும் மீறி எனக்கென்னவோ அந்த விமர்சனங்களை முன்வைக்க அரவாணிகளையும் அடித்தட்டு கலைஞர்களையும் இப்படிப் பயன்படூத்தியிருக்கக்கூடாதோ எனத் தோன்றுகிறது. இருந்தாலும் பலருக்கு பல புரிதல்கள் இரூக்கலாம்.

கேள்வி 2: பலவீனமானவர்களை காப்பாற்ற சராசரி சினிமாவில் வரும் ரஜினிக்கும், விஜய்க்கும் இந்த ஆர்யாவுக்கும் என்ன வித்தியாசம்?

போலி ஆன்மீகத்தை முன்னிறுத்தி, பலவீனமானவர்களுக்கு வரம் தரும் அகோரிகளை பாலா கொண்டு வந்ததே பல சார்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன. அது என்ன வகையான ஆன்மீகம் என்றே பல விவாதங்கள் இன்றும் இணையத்தளங்களில் நடந்து கொண்டு வருகின்றன. என் தரப்பில், பாலா அந்த அகோரிகளின் வாழ்வையும் அதன் பின்னனியில் இருக்கும் இந்துத்துவ கோட்பாடுகளையும் கற்பிதங்களையும் சரியாக சொல்லாமல் இருந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. (அகோரிகள் உருவானதற்கான வரலாறையும்-அவர்களின் உலகத்தையும்- ஒரு மாயை போல பல கேள்விகள் ஏற்படும் விஷ்யமாகவே மனதில் தொக்கி நிற்கின்றன)

அன்புடன்
கே.பாலமுருகன்

No comments:

Post a Comment