Wednesday, March 25, 2009

மாற்று கருத்து

கோமளா, தங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.தங்கள் கருத்து தொடர்பில் எனது சில மாற்று கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.

"விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்று வெறுமனே எப்படி அடையாளபடுத்த முடியும்? உங்கள் அடையாளப்படுத்தும் முறை தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து வந்திருந்தால், வேண்டுமென்றால், "தமிழ்" விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உங்கள் மொழியிலேயே சொல்லிக் கொள்ளலாம். தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் தமது உடலை வணிக குறியீடாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ணும் பெண்களும் உலகளவில் இருக்கிறார்கள்.அதே சமயம் தமது உடலின் காம உக்கிரத்தை ஈடு செய்வதற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களும் இருக்கும் போது, ஒட்டு மொத்தமாக விபச்சாரிகளே ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்துவது"

கோமளா...நீங்கள் கூறுவது நியாயமே.ஆயினும் இங்கு ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப் படுத்துவது ஒடுக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து அல்ல.சமூகத்தின் மனநிலையிலிருந்து.இங்கு நான் ஒடுக்கப்பட்டவர்களாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் கூறவில்லை.கண்ணுக்குத் தெரியாத ஒரு சூட்சுமமான சங்கிலியால் பல தருணங்களில் இந்த ஒடுக்கப்படுதல் நிகழ்கிறது.என்னளவில் மலேசியாவைப் பொருத்தவரை நாம் அனைவருமே ஒடுக்கப்பட்டவர்கள்தான்.ஏதோ ஒரு வகையில் கேள்வி எழுப்ப இயலாமல்...மீறி கேள்வி எழுப்பினால் உதைபடும் நிலையிலும்,சிறைவாசம் போகும் நிலையிலும் உள்ளோம்.ஒடுக்கப்படுதல் தொழில் சார்ந்து இல்லை.இயல்பாகவே ஆதிக்கத்தை காட்ட விரும்பும் மனப் பான்மையும் தனக்கு மேலுல்லவன் தன்னை அடக்கும் போது தான் தனக்குக் கீழ் உள்ளவனை அடக்க வேண்டும் என்ற மனோபாவமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.அந்த வகையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும்(ஓரளவு தொழில் புரிந்து வாழ வழி உள்ளவர்கள்)அத்தகைய வாய்ப்பு கிடைக்காதவர்களை தங்களுக்குக் கீழாக கருதும் மன நிலை ஏற்படுகிறது.கோமளா ஊன்றி கவனித்தால் ஒரு வகையில் சாதிய கட்டமைப்பும் இந்த வகையானதே என புரிய வரும்.உங்கள் கூற்றுப்படி விபச்சாரம்ம் செய்யும் பெண்களும் சமூகத்தின் பார்வையில் கீழ்நிலையிலேயே கருதப் படுகின்றனர்.

புளோக்கில் இதைப் பதிவு செய்து, அவருக்குப் பொதுவில் எல்லோரும் அறியும் படி புத்திமதி சொல்லி உங்கள் தனித்திறமையைக் காட்டியுள்ளீர்கள். போதாதுக்கு எல்லோருக்கும் மின்னஞ்சல் பண்ணி அழைத்துள்ளீர்கள். ஏன்? பாலமுருகன் மீதுள்ள காழ்ப்பா? அல்லது வயிற்றெரிச்சலா?

கோமளா, நான் மின்னஞ்சல் யாருக்கும் செய்யவில்லை.குறுந்தகவல் வழியும் தொலைப்பேசி வழியும் கலந்துரையாடலில் ஈடுபட அழைத்தேன்.'காழ்ப்பா? அல்லது வயிற்றெரிச்சலா?' இந்த வார்த்தை யார் வாயிலிருந்தாவது என்றாவது வரும் என நான் அறிந்ததே.பல விவாதங்களும் இது போன்ற வார்த்தைகளில்தான் முடிவுற்றுள்ளன.எனது காழ்ப்பு குறித்தும் வயிற்றெரிச்சல் குறித்தும் பாலமுருகன் அறிந்திருப்பார் என நம்புகிறேன்.வேறு விள்ளக்கம் தர விரும்பவில்லை.

அறிவுரைகள் கூறியிருப்பதாகக் கூறியுள்ளீர்கள்.கோமளா உங்கள் எதிர்வினை முழுதும் நீங்களும்...

ம.நவீன்

No comments:

Post a Comment