Wednesday, March 25, 2009

எழுத்தாளர்கள் இப்படிச் சறுக்குவது இயல்பு

எழுத்தாளர்கள் இப்படிச் சறுக்குவது இயல்பு

5 நாட்களுக்கு முன் அஞ்சடி வலைத்தளத்தில் நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள் குறித்துத் தெரிந்து கொண்டேன். 2 வருடங்களாகத் தொடர்ந்து அநங்கம் வல்லினம் படித்துக் கொண்டிருப்பதால் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எல்லோரையும் அறிவேன். விவாதத்தில் பாலமுருகன் தனி ஆளாக மாட்டிக் கொண்டு முழிக்கிறார் போல? சரி நாமும் சில பதிவுகளை முன் வைத்துப் பார்ப்போம் என்கிற நம்பிக்கையில் வந்துள்ளேன். எல்லாம் எழுத்தாளர்களும் எங்கோ ஒரு இடத்தில் இப்படிச் சறுக்குவது இயல்பு. யாரும் இங்கு பரிபூரண எழுத்தாளர்கள் கிடையாது. எஸ்.ராமகிருஷ்ணன் தமது கட்டுரையொன்றில் "எழுத்தாளன் என்பவன் சாமான்ய மனிதன் போல எல்லாம்விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உடையவந்தான். அவன் சமூக சீர்த்திருத்தவாதியோ அல்லது தீர்க்கத்தரிசியோ கிடையாது." இதை ஏன் ஒப்புக் கொள்ளாமல் தாம் தான் ஆகச் சிறந்தவன் என்பவன் போல பாடுபடுகிறார்கள்?

பாலமுருகனின் படைபிலக்கியம் குறித்து அதிகமான நம்பிக்கை வைத்துள்ளேன். சீக்கிரமே யாரும் கணிக்க முடியாத வேகத்தில் வளர்ந்து மலேசிய படைப்பிலக்கியத்திலும் தமிழகத்திலும் தமது இலக்கிய பிம்பத்தை வலுவாகப் பதித்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் இப்படியொரு விவாதங்களில் சிக்கியது வருத்ததற்குரியது.

முதலில் விபச்சாரிகளைப் பற்றி பாலமுருகன் வைத்த ஒப்பீடுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அது தவறானது என்றே கருதுகிறேன். அதே சமயம் மற்ற பலரும் சில இடங்களில் விபச்சாரிகள் குறித்து தற்காத்துப் பேசுகிறோம் என்கிற நோக்கத்தில் அங்கேயும் சில தவறுகள் புரிதல்கள் நடந்துள்ளன. (குறிப்பாக ம.நவீன் - மஹாத்மன்) விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்று வெறுமனே எப்படி அடையாளபடுத்த முடியும்? உங்கள் அடையாளப்படுத்தும் முறை தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து வந்திருந்தால், வேண்டுமென்றால், "தமிழ்" விபச்சாரிகள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உங்கள் மொழியிலேயே சொல்லிக் கொள்ளலாம்.

தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் தமது உடலை வணிக குறியீடாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ணும் பெண்களும் உலகளவில் இருக்கிறார்கள்,(சராசரி நடுத்தர பணக்காரர்களைவிட இவர்கள் இன்னும் அதிகமாகச் சம்பாதித்து, கௌளரமாக வாழ்கிறார்கள்) அதே சமயம் தமது உடலின் காம உக்கிரத்தை ஈடு செய்வதற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களும் இருக்கும் போது, ஒட்டு மொத்தமாக விபச்சாரிகளே ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்துவது, மிகப் பெரிய அத்துமீறல். அவர்களுக்கும் சில உரிமைகள் உண்டு என்பதை கொச்சைப்படுத்துவது போல உண்டு. அந்த ஒரு சிறுபாண்மை குழுவின் மனித சுதந்திரத்தைக் களங்கப்படுத்துவது போல "எல்லாம் தெரிந்த" மாதிரி பாலமுருகனின் கருத்தை எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் நீங்களும் தவறான புரிதலுக்கே உட்பட்டுள்ளீர்கள்.

யார் ஒடுக்கப்பட்டவர்கள் என வரையறுக்கும் முன் எல்லாவற்றையும் பொதுவாகவே சொல்லிவிட்டோ பொதுவான அடையாளத்தையோ கொடுத்துவிட்டுப் போக முடியாது. இதைத்தான் பாலமுருகன் சொல்ல வந்து எங்கோ விட்டுவிட்டார் போல.

பாலமுருகனுக்கு :பாலமுருகன், நீங்கள் மிக தைரியமாக ஆரம்பத்திலேயே, ஓரிரு வார்த்தைகளுடன் அஞ்சடியிலிருந்து விலகியிருக்கலாம் போல. யார் உங்கள் மீது எதிர்வினை வைத்திருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம் சார்ந்தது. ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி அல்லது உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, கடைபிடிக்க முடியாததற்கு வருந்துகிறேன் என்று இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இப்பொழுது இப்படி மன்னிப்புக் கேட்டு நிற்கும் அளவிற்கு வந்திருக்காது. சில நேரங்களில் நாம் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் நடந்து கொள்வதும் பேசுவதும் இயல்பு. அதைக் கடந்து செல்வதே சிறப்பு, பக்குவமும்கூட.

அ) அநங்கம் : நவீன் கூறியிருந்தார், "யார் வந்தாலும் போனாலும் அநங்கம் வளரும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு" என்று. பிறகு ஏன் வருத்தம்? அநங்கத்தை வளர்க்கும் பணியில் கவனம் செலுத்துங்கள். யார் வந்தாலும் போனாலும் அநங்கம் வளரும் என்பது உண்மையே. அதைக் கூட்டணி அமைப்பது கூடாரத்தில் ஆள் சேர்ப்பது என்றெல்லாம் சொல்பவர்கள் அநங்கத்துடன் தொடர்பில்லாதவர்கள். பிறகு ஏன் அவர்களைப் பொருட்படுத்த வேண்டும்?

ஆ) எதிர் அரசியல் சொல் அரசியல் என்று போட்டு ஜமாயித்துவிட்டீர்கள். உங்கள் கருத்துக்கும் நீங்கள் ஆற்றிய எதிர்வினைக்கும் எதிர் அரசியலுக்கும் ஆங்காங்கே கொஞ்சம் இடித்தாலும்- தொடர்பில்லாத முரண்களை மஹாத்மன் மிகவும் அழகாகக் கட்டுடைத்துவிட்டார், சொற்களைக் கொண்டு மிகவும் ஜாலியாக விளையாடிருக்கிறீர்கள். ரொம்பவும் இரசித்துச் சிரித்தேன்.

இ) பா.சிவம் கூறியிருந்தார், "யாருக்காகவும் நீங்கள் எழுதவில்லை" என்று. ரொம்பவும் சத்தியமான பேச்சி. யார் பற்றியும் கவலைபடாமல் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாராலும் எட்ட முடியாது ஒரு உச்சத்தை உங்களால் அடைய முடியும், அப்படியொரு வலிமை உங்கள் கதைகளில் உண்டு. (இது வெறும் புகழ்ச்சி என்று கருதிவிட வேண்டாம்)

ஈ) எல்லாவற்றுக்கும் நீங்கள் எதிர்வினையாற்றிதான் ஆக வேண்டும் என்று யாரும் உங்களுக்கு நெருக்குதல் கொடுக்க முடியாது. யார் மீது கோபப்பட வேண்டும் எது குறித்து எதிர்வினையாற்ற வேண்டும் என்பதே உங்கள் தேர்வு. இவர்கள் மதிப்பிட்டு விடுவார்கள், அவர்கள் அரசிலாக்கிவிடுவார்கள் என வருந்துவது வீண். அவர்களையும் பொருட்படுத்தாதீர்கள். எதற்கு எதிர்வினையாற்ற உங்கள் இயல்பு இடமளிக்கிறதோ உங்களுக்கு நீங்கள் மிக நேர்மையாக இருந்து அதற்கு மட்டும் எதிர்வினையாற்றுங்கள். எல்லாவற்றிலும் கருத்து தெரிவித்து, கோபத்தை வெளிப்படுத்தி, எதிர்வினையாற்ற எழுத்தாளன் என்ன சமூக சீர்த்திருத்தவாதியா? அவனை அப்படி வற்புறுத்துவதும் வன்முறைதான். மஹாத்மன் அவர்கள் தாராளமாகவே பிறர் நழுவுவதைப் பற்றி விவாதமாக முன் வைத்து, வீச்சம் அடிக்கும் தமது மூளையிலுள்ள எல்லாவற்றையும் குப்பை போல கொட்டட்டும், பெறுக்கிக் கொள்ளட்டும். அதைப் பற்றியும் நீங்கள் சட்டை செய்து கொள்ள வேண்டாம்.

ம.நவீனுக்கு :தங்களின் வல்லினத்தில் எனக்கு தனிபட்ட அபிமானமும் நம்பிக்கையும் உண்டு. பாலமுருகனுடன் ஆரம்பத்திலேயே அவர் எழுதிய வரி குறித்து உங்களுக்கு எதிர்வினை இருப்பதாகவும் அதைப் பற்றி நேரில் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னதாக அவரே தமது கட்டுரையில் சொல்லியிருந்தார்.. இருந்தும் அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அவரிடமும் இது பற்றி பேசி விளங்கிக் கொள்ளாமல், இதை இப்படி பதிவுக்குக் கொண்டு வந்தது எனக்கென்னமோ நாகரிகமாகத் தெரியவில்லை. அல்லது இது குறித்து இந்தக் கருத்து வந்த மௌளனம் இதழில் வெளியிட்டிருக்கலாம். உங்கள் தனிபட்ட புளோக்கில் இதைப் பதிவு செய்து, அவருக்குப் பொதுவில் எல்லோரும் அறியும் படி புத்திமதி சொல்லி உங்கள் தனித்திறமையைக் காட்டியுள்ளீர்கள். போதாதுக்கு எல்லோருக்கும் மின்னஞ்சல் பண்ணி அழைத்துள்ளீர்கள். ஏன்? பாலமுருகன் மீதுள்ள காழ்ப்பா? அல்லது வயிற்றெரிச்சலா?

பாலமுருகன் கீழிறங்கி பேசிவிட்டார் என்று சொல்லும் நீங்கள், மஹாத்மன் செய்ததை மட்டும் வெறும் புன்னகையுடன் நியாயப்படுத்திவிட்டீர்களோ? அந்தச் சொக்கன் தான் மட்டும்தான் மிகவும் நல்லவர் போல வேடமிட்டு நாடகமாடியுள்ளார் என்பதைத் தெரிந்தும் மறைத்துவிட்டீர்கள் போல.

மஹாத்மனுக்கு: ஒன்றும் இல்லை! பா.மா கே.பா என்று எல்லோருக்கும் புத்திமதி சொல்லும் பகவான். இவர்தான் மலேசிய இலக்கிய பண்புகளையும்- எழுத்தாளர்களின் மனவுலகையும் செயல்களையும் வரையறுக்கும் மகாத்மா போல. என்ன ஒரு வேடிக்கை?

குறிப்பு: எல்லோரும் விபச்சாரிகளுக்கு வாழ்வு கொடுக்கும் உத்தமர்கள் போலவும் அந்தத் தெய்வீகமானவர்களுக்கு வாழ வாய்ப்பளித்து அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து மீட்சி கொடுத்த வள்ளல் போலவும் , அவர்களைக் கண்டால் மண்டியிட்டுக் கும்பிடும் பக்தன் போலவும் ரொம்பவே பிதற்றுகிறீர்கள். வீச்சம் அடிக்கிறது!

வணக்கம்,
கோமளா,கடாரம்

No comments:

Post a Comment