Friday, March 27, 2009

இந்திரனிடமிருந்து எனக்கும் ஒரு இமெயில்

முதலிலிருந்தே ஒரு (கோமாளி) கிழடு, சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறதே என்று இந்திரன் அஞடியைப் பார்த்தார். இதை விரைவில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம் என எண்ணிய இந்திரன் அந்தக் கோமாளி கிழடின் இமெயிலைப் படித்துவிட்டு, "சரியாதான் விழுந்துருக்கு அடி. . தேவ இல்லாத இடத்துலே ஆரம்பத்துலேர்ந்து வாய் கொடுத்து நல்லா வாங்கிக் கட்டிருக்கு. . வழிந்தொழுகும் மிச்ச பாலை கோமாளி பக்தர்கள் அருந்திக் கொள்ளட்டும். . சுருக்குனு ஒரைச்சிருச்சிப் போல. . அதான் உடனே இந்திரன்கிட்ட வந்து இமெயில் வழியா நீலி கண்ணீர் சொட்ட அழுது புலம்பது. . சரி என்ன பண்றது வயசாச்சி! இருக்கட்டும், இருக்கற கொஞ்ச காலத்துலே இப்படி வலிமை இல்லாம பொலம்பிகிட்டுப் போகட்டும். . போற வழிக்கு புண்ணியம் ஆகும்லே. ."

"மீண்டும் இந்திரன் எழுந்து உரக்க சொன்னார். . யாருக்கு திராணி இல்லை என்பதை காலம் பதில் சொல்லும். . திராணி இல்லாமல் படைப்பும் இல்லாமல் ஒக்காந்து தலையை விரிச்சிப் போட்டு பாதி பைத்திய நிலையிலெ இருக்கும் எவர் சொல்லும் இங்கு சாத்தியப்படாது. . நான். . இந்திரனே புராணத்தில் பாதி அடி வாங்கியவன். . உடல் முழுக்க குறிகள் முளைக்க கடவாய் என சாபமும் வாங்கியன். . என்னிடமே இமெயில் வழி புலம்பும் அசட்டுக் கோமாளியை என்னவென்று சொல்வது? அடுத்த வீட்டுப் பெண்ணின் மீது சபலம் கொள்ளும் இந்திரனின் உத்தரவாதத்தையெல்லாம் நம்பி கொண்டு இந்த ஜென்மம் இருக்கிறது என்றால். . அசல் இந்தக் கோமாளியை நினைத்து இந்திரன் லோகமே இடிந்து விழுந்துவிட்டது என சில "முத்தாத சாமிகளின்" வழி தகவல் வந்து சேர்ந்தது.இனி இந்திரனுக்கு இமெயில் அனுப்ப முடியாதாம்.

எவருக்கு எவர் குருநாதர் என்கிறவரை அனுமானிக்கும் திர்க்கத்தரிசியின் சாபம் கண்டு சாத்தான்களெல்லாம் கூதுகளமாக வானத்தை நோக்கி காரி உமிழ்ந்து பரவசம் அடைந்து கொண்டதாம் தமது தலைவரின் இயலாமையைக் கண்டு!"இப்படி எல்லாரையும் தூற்றிக் கொண்டும் பொறாமை பட்டுக் கொண்டும் உத்தரவு விட்டுக் கொண்டும். . பம்மாத்து பண்ணுவாய் என இந்திரன் சாபம் விட்டார்.

5 வருடத்திற்கு முன்புவரை இதே சீ.சாமி அதே பரிசுகளையும் மாலைகளையும் அஸ்ட்ரோ மூலமாகவும் இன்னபிற மூலமாகவும் வாங்கிக் கொண்டிருந்துவிட்டு, இப்பொழுது இளையதலைமுறகளின் மீது வக்கிரப் புத்தியைச் செலுத்திக் கொண்டு அவர்களுடன் மல்லுக்கட்டும் கோமாளித்தனத்தைக் கண்டு உலகமே ஏக்கத்துடன் பார்க்கிறது.

இப்படிக்கு

ச.சாரங்கன்
சுங்கை சீப்புட்

1 comment:

  1. //5 வருடத்திற்கு முன்புவரை இதே சீ.சாமி அதே பரிசுகளையும் மாலைகளையும் அஸ்ட்ரோ மூலமாகவும் இன்னபிற மூலமாகவும் வாங்கிக் கொண்டிருந்துவிட்டு, இப்பொழுது இளையதலைமுறகளின் மீது வக்கிரப் புத்தியைச் செலுத்திக் கொண்டு அவர்களுடன் மல்லுக்கட்டும் கோமாளித்தனத்தைக் கண்டு உலகமே ஏக்கத்துடன் பார்க்கிறது.
    //

    noted

    ReplyDelete