Thursday, March 19, 2009

அருவருப்பா ? புனிதமா?

அநங்கத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு சை.பீர், சண்முக சிவா, சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி ,சிங்கப்பூர் இராம கண்ணபிரான் ஆகியோரின் பெயர்களை சிபாரிசு செய்திருக்கும் நவீனின் நல்ல எண்ணத்திற்கு ஆயிரம் கும்பிடு.இப்படி யாராவது ஒருவர் சிபாரிசு செய்ய மாட்டார்களா என நான்கு கோடி தேவர்களுக்கும் அன்றாடம் பாலாபிஷேகம் செய்து கண்ணீர் மல்க வேண்டி , இதில் யாரோ ஒருவர் (நிச்சயமாக அது நானல்ல) அதன் ஆலோசகர் என்கிற நிலையில் இருந்து வலிய விலகிக் கொண்டவன் என்பதால் அத்தைகையதொரு வேண்டுதலை வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.)நின்றதன் பலனே இதுவென்பதில் அடியேனுக்கு கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.

"அநங்கத்தின் நிலைப்பாடு குறித்து நவீன் முன் வைக்கும் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில்(நான் சரி பார்த்து கொடுத்தது அநங்கத்தின் முதல் வெளியீடு மட்டுமே)"நவீனுக்கு குறும்புதான். எழுபதுகளில் தொடங்கிவிட்ட தமிழ் நவீன எழுத்தைக்கூட அரைகுறையாக உள்வாங்கி ஜீரணிக்காத உள்நாட்டு கிழட்டு எழுத்தளர்களை எழுதச்சொல்லி மாரடிக்க 'வல்லினம்' இருக்கும் போது இன்னொரு சிற்றிதழை 'அந்தப்போட்டியில்' இறங்க அழைப்பது குறும்பில்லாமல் வேறென்ன?

அது நவீனத்தையும்- பின் நவீனத்தையும் - பின் பின் நவீனத்தையும் , யுவராஜன் வார்த்தைகளில் சொல்வதானால்,'கரைத்து' குடித்து போதை தலைக்கேறி தள்ளாடும் ஒரு சில இளைய தலைமுறை மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழக எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் இன்னும் பிற பிரபல நவீன பின் நவீன ஜாம்பவான்களுக்கும் உரியது என்பதை ஏற்றுக்கொண்டு, ஒபத்திரவம் செய்யாமல் வாழ்த்தி ஒதுங்கி வழி விடுவதுதானே இலக்கிய நாகரீகம்?
......முக்கிய குறிப்பு- அநங்கம் குறித்த இந்தப் பதிவும் கூட அதனோடு தொடர்புப் படுத்தி எனது பெயர் முன்னிருத்தப்பட்டதன் பொருட்டே.இல்லையெனில் இதுவும் இல்லை.....

இறுதியாக, இந்த யோனி பிரச்சனை தொட்டும் ஒன்று சொல்ல விழைகிறேன்.இது ஒரு பொது விவாதத்திற்கு வந்து விட்ட நிலையில் அது குறித்து கருத்து கூற இடம் உண்டு.இந்த கிழட்டு ஜென்மத்திற்கு, இந்த வயதில் இதென்ன வேண்டாத வேலை என்று இளைய தலைமுறை முகம் சுழிக்க வேண்டாம். நீங்கள் இந்த மண்ணில் தாயின் வயிற்றிலிருந்து குதித்து 'குவா குவா' சத்தம் போடுவதற்கு முன்பே எங்களுக்கு யோனி அறிமுகம் ஆகி விட்டது.(யோனி அறிமுகம் ஆனது மட்டுமல்ல கூடுதலாக மலேசியத் தமிழ் இலக்கியத்தையும் அப்போதே கடல் கடந்து தமிழக மண்ணில் அறிமுகம் செய்து விட்டிருந்தோம்.என்கிற தகுதியில், அதுகுறித்து பேசுவதற்கான அனைத்துத் தகுதிகளும் எங்களுக்குண்டு.)

யோனி- அது எவருடையதாக இருப்பினும், எத்தகைய சூழல் நிர்பந்தத்திலும் அதனை 'அவமதிப்பது என்பது , ஆணாதிக்க மனப்பான்மையின் மிக கொடூர வெளிப்பாடு.அதிலும், இந்த சீர்கெட்ட சமூகத்தின் அவலங்களில் ஒன்றான ஆண்களின் வக்கிர பசிக்குத் தீனி போட்டு சேவை புரிந்து சமூக வெளியில் பல வன் கொடுமைகள் நிகழ்வதை தடுத்து நிறுத்தும் , விபச்சாரிகளின் யோனி அருவருப்புகுரியது எனின் எனது தாயின் தங்கையின் மனைவியின் யோனி எத்தகைய புனிதத்திற்குரியது?

அன்புடன் ,
சீ.முத்துசாமி.

No comments:

Post a Comment