சரவணனின் ஞாபக சக்தி அபாரமானது. ஒரு முறை பயணித்தப் பாதை அடுத்த முறை அவனுக்கு மிகத்துள்ளியமாக நினைவில் இருக்கும். அது போலவே ஒருதரம் வகுப்பில் படிக்கும் பாடத்தை மறுமுறை மீள்பார்வையெல்லாம் செய்யாமலேயே நினைவில் வைத்திருப்பான். எனக்கு பத்து முறை போனாலும் பாதை மறந்துவிடுவது போலவே பாட புத்தகங்களை வாசிப்பதும் நினைவில் அவ்வளவு சீக்கிரம் அடங்காமல் இருந்தது. வகுப்பறையிலும் பாடப்புத்தகத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் என்னால் கவனம் வைக்க முடிவதில்லை. சரவணனிடம் அபாரமான ஒரு சக்தி இருப்பதாகவே நான் உணர்ந்தேன். அதற்கு மிக முக்கியக் காரணம் அவன் சண்டையிடும் உத்தி.
திறந்தே கிடக்கும் டைரி - 34 வாசிக்க ...http://www.vallinam.com.my/
மென்னுலகம் கண்டுபிடி
2 years ago