Friday, March 19, 2010

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…40

ந‌ய‌ன‌ம் இத‌ழுக்கு நான் எழுதிய‌க் க‌விதையை ஒருத‌ர‌ம் வாசித்த‌ அவ‌ர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகித‌த்தில் ‘இவ‌ர் புதிதாக‌ எழுதும் இளைஞ‌ர். இவ‌ர் க‌விதையைப் பிர‌சுத்து வ‌ள‌ர‌விட‌வேண்டும்.’ என‌ த‌ன் ந‌ண்ப‌ர் வித்யாசாக‌ருக்கு (அப்போதைய‌ ந‌ய‌ன‌ம் துணை ஆசிரிய‌ர்)ஒரு சிறு குறிப்பு எழுதி க‌டித‌த்தை அனுப்ப‌க் கூறினார்.

http://vallinam.com.my/navin/

Saturday, March 6, 2010

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…39

'த‌மிழில் டைப் செய்ய‌த் தெரியுமா?' என்று கேட்டார்.எனது க‌ணினியில் த‌மிழ் எழுத்துருக்க‌ள் உள்ள‌து என‌ அறிவேன்.ஓரிரு முறை முய‌ன்று பார்த்து அலுத்த‌வுட‌ன் அம்முய‌ற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவ‌ர் கேட்ட‌தும் 'தெரியாது' என‌ சொல்ல‌த் தோன்றாம‌ல் மௌன‌மாக‌ப் பார்த்தேன். என்னிட‌ம் ஒரு பெய‌ர்ப்பட்டிய‌லை நீட்டிய‌வ‌ர், அதில் உள்ள‌ப் பெய‌ர்க‌ளை த‌மிழில் டைப் செய்து த‌ர‌வேண்டும் என‌ப் ப‌ணித்தார்.

http://vallinam.com.my/navin/

Saturday, February 20, 2010

திறந்தே கிடக்கும் டைரி - 38

எதிர்முனையில் ச‌ற்று அத‌ட்ட‌ல் போன்ற‌ தொனியில் ‘ஹ‌லோ’ எனும் குர‌ல் கேட்ட‌து. நெற்றிச்சுருங்கி க‌ண்க‌ளைக் கூர்மையாக்கிச் சொல்ல‌க்கூடிய‌ ஹ்லோ அது.நானும் த‌டுமாறி ஹ‌லோ என்றேன்.மீண்டும் உய‌ர்ந்த‌ குர‌லில் விசாரிப்பு ந‌ட‌ந்த‌து.பெய‌ரைச் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் அடையாள‌ம் க‌ண்டுகொண்ட‌வ‌ராக‌ கோ.புண்ணிய‌வான் பேச‌த்தொட‌ங்கினார். ந‌ட‌க்க‌விருக்கும் புதுக்க‌விதை திற‌னாய்வில் என்னுடைய‌ ஒரு க‌விதை குறித்தும் எழுதியிருப்ப‌தாக‌க் கூறினார். என‌க்கு பெருமை பிடிப்ப‌ட‌வில்லை. கோ.புண்ணிய‌வான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய‌ அங்கீகார‌ம் போல‌ உண‌ர்ந்தேன்.

http://vallinam.com.my/navin/

Saturday, February 6, 2010

திறந்தே கிடக்கும் டைரி - 37

ம‌லேசிய‌ ந‌ண்ப‌னில் சிறுக‌தை வ‌ந்தால் ப‌ல‌ருக்கும் என் பெய‌ர் அறிமுக‌மாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்ட‌வ‌ச‌மாக‌ ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் ஆசிரிய‌ர் ஆதி.கும‌ண‌னே இள‌ஞ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு வ‌ந்திருந்தார்.இள‌ஞ்செல்வ‌ன் த‌ன‌து ம‌ர‌ண‌த்திலும் என‌க்கு ந‌ன்மைசெய்துவிட்ட‌தாக‌ க‌ருதினேன். ஆதிகும‌ண‌ன் க‌ருப்பு நிற‌‌த்திலான‌ 'பாத்தேக்'ர‌க‌ துணி அணிந்திருந்தார் என‌ ஞாப‌க‌ம்.அவ‌ர் ப‌க்க‌த்தில் சில‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர்.நாடு முழுவ‌தும் ப‌ல‌ ல‌ட்ச‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்ட‌வராக‌ ஆதி.கும‌ண‌ன் அப்போது இருந்தார்.அவ‌ர் சொல்லுக்குக் க‌ட்டுப்ப‌டும் ம‌க்க‌ள் திர‌ளை த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ச‌ம்பாதித்து வைத்திருந்தார்.ம‌லேசியாவில் இத்த‌கைய‌ ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ள் குறைவு.த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னின் ம‌ர‌ண‌ம் அவ‌ரை மிக‌வும் பாதித்திருக்க‌ வேண்டும்.கைக‌ளைக் க‌ட்டிய‌ப் ப‌டி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.ம‌க்க‌ள் கூட்ட‌ம் இன்னும் வ‌ந்து சேராத‌ நேர‌ம‌து.


தொட‌ர்ந்து வாசிக்க‌

http://vallinam.com.my/navin/

Sunday, January 10, 2010

திறந்தே கிடக்கும் டைரி - 35

நிக‌ழ்வு தொட‌ங்கிய‌தும் ஒவ்வொரு எழுத்தாள‌ர்க‌ளும் பேசினார்க‌ள். எஸ்.பொ. வின் எழுத்து ப‌ற்றி சை.பீர் பேசிய‌து ம‌ட்டும் இப்போது நினைவில் த‌ட்டுப்ப‌டுகிற‌து. ப‌ல‌ர் பேசிய‌து எதுவும் என‌க்கு விள‌ங்க‌வில்லை. ஆனால் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் எழுத்து சார்ந்த‌ செய‌ல்பாடுக‌ளையும் புத்தில‌க்கிய‌ ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ஆற்றிய‌ ப‌ங்கையும் செவிம‌டுத்த‌ப் போது அதிர்ச்சிய‌டைந்தேன். ஒரு இல‌க்கிய‌ ஆளுமையின் முழு வ‌டிவ‌ம் தெரியாம‌ல் ப‌த்திரிகையில் அவ‌ர் பெய‌ரைத் தேடிய‌ சிறுபிள்ளைத் த‌ன‌த்தை நொந்து கொண்டேன். அவ‌ருட‌ன் அம‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்கில் பேசிய‌தும் அவ‌ரிட‌ம் குருட்டுத்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்ட‌தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப் பார்த்தேன். வெட்க‌மாக‌ இருந்த‌து.

http://www.vallinam.com.my/

திறந்தே கிடக்கும் டைரி - 35

நிக‌ழ்வு தொட‌ங்கிய‌தும் ஒவ்வொரு எழுத்தாள‌ர்க‌ளும் பேசினார்க‌ள். எஸ்.பொ. வின் எழுத்து ப‌ற்றி சை.பீர் பேசிய‌து ம‌ட்டும் இப்போது நினைவில் த‌ட்டுப்ப‌டுகிற‌து. ப‌ல‌ர் பேசிய‌து எதுவும் என‌க்கு விள‌ங்க‌வில்லை. ஆனால் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் எழுத்து சார்ந்த‌ செய‌ல்பாடுக‌ளையும் புத்தில‌க்கிய‌ ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ஆற்றிய‌ ப‌ங்கையும் செவிம‌டுத்த‌ப் போது அதிர்ச்சிய‌டைந்தேன். ஒரு இல‌க்கிய‌ ஆளுமையின் முழு வ‌டிவ‌ம் தெரியாம‌ல் ப‌த்திரிகையில் அவ‌ர் பெய‌ரைத் தேடிய‌ சிறுபிள்ளைத் த‌ன‌த்தை நொந்து கொண்டேன். அவ‌ருட‌ன் அம‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்கில் பேசிய‌தும் அவ‌ரிட‌ம் குருட்டுத்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்ட‌தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப் பார்த்தேன். வெட்க‌மாக‌ இருந்த‌து.

Sunday, December 20, 2009

திறந்தே கிடக்கும் டைரி - 34

ச‌ர‌வ‌ணனின் ஞாப‌க‌ ச‌க்தி அபார‌மான‌து. ஒரு முறை ப‌ய‌ணித்த‌ப் பாதை அடுத்த‌ முறை அவ‌னுக்கு மிக‌த்துள்ளிய‌மாக‌ நினைவில் இருக்கும். அது போல‌வே ஒருத‌ர‌ம் வ‌குப்பில் ப‌டிக்கும் பாட‌த்தை ம‌றுமுறை மீள்பார்வையெல்லாம் செய்யாம‌லேயே நினைவில் வைத்திருப்பான். என‌க்கு ப‌த்து முறை போனாலும் பாதை ம‌ற‌ந்துவிடுவ‌து போல‌வே பாட‌ புத்த‌க‌ங்க‌ளை வாசிப்ப‌தும் நினைவில் அவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் அட‌ங்காம‌ல் இருந்த‌து. வ‌குப்ப‌றையிலும் பாட‌ப்புத்த‌க‌த்திலும் ப‌தினைந்து நிமிட‌ங்க‌ளுக்கு மேல் என்னால் க‌வ‌ன‌ம் வைக்க‌ முடிவ‌தில்லை. ச‌ர‌வ‌ணனிட‌ம் அபார‌மான‌ ஒரு ச‌க்தி இருப்ப‌தாக‌வே நான் உண‌ர்ந்தேன். அத‌ற்கு மிக‌ முக்கிய‌க் கார‌ணம் அவ‌ன் ச‌ண்டையிடும் உத்தி.


திறந்தே கிடக்கும் டைரி - 34 வாசிக்க ...http://www.vallinam.com.my/

Sunday, December 13, 2009

திறந்தே கிடக்கும் டைரி - 33

க‌விதைக்குத் தேவையான‌ துல்லிய‌ உண‌ர்வ‌லைக‌ளை எந்த‌ நூலும் ம‌னித‌னுக்குத் த‌ருவ‌தில்லை. மாறாக‌ அவை நினைவின் ம‌றைவிட‌த்தில் ப‌திந்துள்ள‌ ஏதோ ஒரு நுண்ணிய‌ உண‌ர்வின் அதிர்வை அவ்வ‌ப்போது மீட்டுக்கொண்டுவ‌ர‌ உத‌வுகிற‌து. இது போன்ற‌ நுண்ணிய‌ உண‌ர்வுக‌ள் பெண்க‌ளுட‌ன் ப‌ழ‌கும் போதுதான் என‌க்குள் உசுப்பிவிட‌ப்ப‌ட்ட‌து. மிக‌க் குறைந்த‌ ப‌ழ‌க்க‌முள்ள‌ ஒரு தோழியால் கூட‌, கால‌த்திற்கும் அழிக்க‌ இய‌லாத‌ சில‌ ப‌திய‌ன்க‌ளை ம‌ன‌தில் ஏற்ற‌ முடிந்திருந்த‌து. ப‌ழ‌காத‌வ‌ரை பெண்க‌ள் என்னுட‌ன் பேச‌ விரும்புவார்க‌ள் என‌ நான் ச‌ற்றும் எதிர்ப்பார்க்க‌வில்லை.....


திறந்தே கிடக்கும் டைரி - 33 வாசிக்க ...http://www.vallinam.com.my/

Monday, December 7, 2009

திறந்தே கிடக்கும் டைரி - 32

திறந்தே கிடக்கும் டைரி - 32 வாசிக்க ...http://www.vallinam.com.my/

Monday, November 30, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 31

திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 31 வாசிக்க‌ ...http://www.vallinam.com.my/