நிகழ்வு தொடங்கியதும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பேசினார்கள். எஸ்.பொ. வின் எழுத்து பற்றி சை.பீர் பேசியது மட்டும் இப்போது நினைவில் தட்டுப்படுகிறது. பலர் பேசியது எதுவும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் எம்.ஏ.இளஞ்செல்வனின் எழுத்து சார்ந்த செயல்பாடுகளையும் புத்திலக்கிய நகர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கையும் செவிமடுத்தப் போது அதிர்ச்சியடைந்தேன். ஒரு இலக்கிய ஆளுமையின் முழு வடிவம் தெரியாமல் பத்திரிகையில் அவர் பெயரைத் தேடிய சிறுபிள்ளைத் தனத்தை நொந்து கொண்டேன். அவருடன் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியதும் அவரிடம் குருட்டுத்தனமான கேள்விகள் கேட்டதையும் ஒருதரம் நினைத்துப் பார்த்தேன். வெட்கமாக இருந்தது.
http://www.vallinam.com.my/
மென்னுலகம் கண்டுபிடி
2 years ago