Thursday, April 2, 2009

ச்சப்பென்று போனது!

கடாரத்து கோ-மகள் கோமளா மற்றும் குமார் எதிர்வினைகள் அவசரமாக பதற்றத்துடன் எழுதப்பட்டுள்ளதை மிகுந்திருந்து எழுத்துப் பிழைகளாலும் நடைகளாலும் தெரிய வருகிறது.

ஒரு சில விஷயங்களை நன்றாக விவாதித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

*ஹிண்டிராப் குறித்தான என் நிலையை - கருத்தை வல்லினத்தில் 'ஓட்டுப்போடாதவனின் வாக்குமூலங்கள்' என்ற பத்தியிலும் மற்ற இதழ்களிலும் சொல்லியிருக்கிறேன். அதை எல்லாம் படிக்கத் தவறி விட்டீர்கள், அல்லது தாக்கும் வீராவேசத்தில் கண்ணை மறைத்துவிட்டிருக்கலாம்.

*புனைப்பெயர்கள் கொண்டு கீழ் தரமான படைப்புகளை எழுதி என்னை நானே தாழ்த்திக் கொண்டதில்லை.

*சுயபுகழ் பாடுவது யார் என்று வாசகர்கள் அறிவர்.

*தலைநகரில் முன்பு நான் பண்ணிய பிழைப்பைக் குறித்து நீங்கள் தாராளமாக அம்பலப்படுத்தலாம். நான் என்ன அரசியல்வாதியா, உங்களிடம் இரண்டு கோடி வெள்ளி நஷ்டஈடு கேட்பதற்கு?(எங்கும் நிலைத்திருக்காத ஒரு சாதாரண பரதேசி தானே)

*ஜனசக்தியை நீங்கள் படிப்பதே இல்லை போல. அப்படி படித்திருந்தால் தமிழ்நேசனில் சேர்வேன் என்று சொல்லியிருக்கவே மாட்டீர்கள். இது தான் பதற்றம், ஆரவாரம்,செருக்கின் கிறுக்கு என்பது.

*உங்களுடைய சாபம் kacang putih...கோ-மகளே! இதை விட பெரிய பெரிய சாபங்களை சுமந்துக்கொண்டு திரிகிறேன்.

*குறுஞ்செய்தி மூலமாக, தொலைபேசி வாயிலாக நண்பர்களிடமிருந்து செய்தி வருகிறது. கோமளாவும் குமாரும் ஒரே நபர் என்று. அந்த ஒரே நபர் கே.பா.தான் என்று.

ச்சப்பென்று போனது!அப்போதே சந்தேகப்பட்டேன்.

மஹாத்மன்.

No comments:

Post a Comment