Tuesday, March 17, 2009

தொடர்ந்து விவாதிப்போம்...

அன்புள்ள நண்பர்களுக்கு,அஞ்சடியில் உங்கள் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.மகிழ்ச்சி.பத்தாண்டுகளுக்கு முன் மலேசிய இளைய இலக்கியவாதிகளிடம் சாத்தியமே இல்லாத சிந்தனைகள் இவை.நவீன் ஆசிரியர் என்னும் நினைவை எப்பொதும் சுமந்து திரிய வேண்டியதில்லை.இப்பிரபஞ்சத்தில் உலவும் எதன் மீதும் நீங்கள் கருத்து சொல்லலாம்.ஆலோசனைகள் அத்தகையதன்று.வேண்டபடும்போது பகிர்ந்து கொள்வதே சிறந்தது.

அதிலும் பாலமுருகன் பெரும்பாலும் ஆலோசனைகள் அதிகம் தேவைபடாதவர்.சுமார் 5 வருடத்திற்க்கு முன் சில சிறுகதைகள் அடங்கிய தபால் உறையை எனக்கு அனுப்பி இருந்தார்.ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனிடம் உள்ள அத்தனை பலவீனங்களும் கொண்ட கதைகள் அவை.என் சோம்பேறித்தனம் பாதியும் அவரைப் புண்படுத்த வேண்டாமென்ற எண்ணத்தில் வாளாவிருந்துவிட்டென்.உண்மையில் எந்த நல்ல விதையும் எப்படியும் வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அப்பொதும் இப்பொதும் உண்டு .

நிற்க, பாலமுருகன் ஏன் திடீரென மரபு மனிதர்கள் (கவிஞர்கள்?) மீது கோபப்படுகிறார்? பொம்மை கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையை போன்ற இவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் புரிதல் என்ன? நவீன வாழ்வின் அத்தனை சொளகரியங்களையும் வெட்கமின்றி முழுமையாய் அனுபவித்து கொண்டு நவீன சிந்தனயை மட்டும் ஏற்கமாட்டொம் என தலையை ஆட்டி ஆட்டி கிட்டதட்ட மயக்க நிலையில் இருப்பவர்கள் நுண் அரசியல் ,எதிர் அரசியல் என அத்தனையையும் கறைத்துக் குடித்த உங்களை புரிந்து கொள்வார்களா?

பாலா, நீங்கள் ஒரு எழுத்தாளர்.உணர்ச்சிவசத்தில் சில தவறான சொல் பிரயோகங்கள் வருவது இயல்பே.வருத்தம் தெரிவித்து தவறைத் திருத்திக் கொண்டால் போகிறது. 'விபச்சாரிகள் ' குறித்த உஙகள் விளக்கம் வெறும்சால்ஜாப்பு என்பதை எந்த நவீன(பின் நவீன)வாசகனும் எளிதில் உணர்ந்து கொள்வான்.நானும் ஜெயமோகன்,ராமகிரிஷ்ணன் போன்றவர்களை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.இது என் கருத்து.தொடர்ந்து விவாதிப்போம் நண்பர்களே... எல்லா உயிர்க்கும் அன்புடன், யுவராஜன்

3 comments:

  1. யுவராஜன்,
    வருக. சில இடைவெளிகளிக்குப் பிறகு மீண்டும் அஞ்சடியில் சந்திப்பதைக் கண்டு மகிழ்கிறேன் அண்ணா!
    தொடர்ந்து விவாதிப்பதில் ஆர்வமும் கொள்கிறேன். உங்களிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ளலாமே!
    5 வருடத்திற்கு முன் உங்களிடம் கதையை (ஆரம்பகால எழுத்தாளனிடம் உள்ள அனைத்து பலவீனங்களும் கொண்ட)அனுப்பி வைத்ததற்காக இப்பொழுதும் வருந்துகிறேன். பலவீனமானவர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக எத்தனை வருடம் (பலம்????) கொண்ட உங்கள் சொல்லாடல்களைத் தற்காத்து உங்களுக்காவே வைத்துக் கொண்டு மீண்டும் காணாமல் போகப் போகிறீர்கள்?

    இப்பிரபஞ்சத்தில் உலவும் எதன் மீதும் நீங்கள் கருத்து சொல்லலாம் என்கிற முற்போக்கு பார்வை கொண்ட நீங்கள், எப்படி 5 வருடத்திற்கு முன் ஒருவன் அனுப்பிய கதைகளை விமர்சிக்க முடியாமல் போனதற்கு "அவர் மனம் பாதிக்ககூடாது என்பாதற்காக வாளாவிருந்துவிட்டேன்" என்று குறிப்பீடுகிறீர்கள். மனம் பாதிப்பு அடையுமா இல்லையா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். (எனக்காக சேர்த்து நீங்களே முடிவு எடுத்துக் கொண்டிர்ர்களா?)
    மன்னிக்கவும். ப்ழைய கதையைக் கிளறியதற்கு.

    மரபு கவிஞர்கள் எந்தவித புரிதலுக்கும் வரவேண்டாம். அதற்காக நான் போராடவும் இல்லை.

    களத்தில் இருந்துகொண்டு நவீன படைப்பாளிகளின் இலக்கண பிழைகளை சிறுப்பிள்ளைத்தனமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டு திரிபவர்கள் நான் இருக்கும் இந்தச் சமூகத்தில் எனக்கு முன்னே இருப்பதால் அவர்களை கோழைத்தன்மாக கடப்பதற்கு என் இயல்பு இடமளிக்கவில்லை. எழுத்தாளர்கள் எப்படி எதிர்வினைகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டுமோ அதே போலத்தான் எதிர்வினை ஆற்றவும் தயாராக இருக்க வேண்டும்.
    கோபம் இல்லாமல் என்ன எழுத்தாளன்? எதற்கெடுத்தாலும் ஏன் அவர் மீது கோபம்? இவர் மீது கோபம்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    எழுத்தாளர்களின் இயல்பு இப்படித்தான் இருக்கும் என்று வரையறை செய்யும் அளவிற்கு நீங்கள் யார் அண்ணா? நான் உணர்ச்சிவசப்பட்டேன் என்று நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் அணுகி சொல்லவே இல்லையே!
    என்னை வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்கச் சொல்ல (இவ்வளவு வெளிப்படையான தலையீடல்) நான் தங்களுக்கு என் மீது உரிமையைக் கொடுக்கவில்லை. அப்படியும் தாங்கள் நாட்டாமையாக இருக்கத்தான் விரும்புகிறீர்கள் என்றால் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விவாதம் மட்டும் செய்ய நான் விரும்புகிறேன். புத்திமதிக்கு அல்ல.

    மன்னிக்கவும் அண்ணா! இந்த வெறும்சால்ஜால்பு என்று எப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் கருத்தை முன் வைய்யுங்கள்(விருப்பப்பட்டால்)
    உங்கள் நாட்டாமைத்தனம் பின் நவீன வாசகனும் (நவீன) வாசகனும் ஒரு விஷயத்தை இப்படித்தான் புரிந்து கொள்வான் என்று வன்முறையான கட்டமைப்பை உருவாக்கும் அளவிற்கு வளர்த்துவிட்டிருக்கிறது!
    ராமகிருஷ்ணன் ஜெயமோகன் போன்றவர்களை வாசிப்பது குறித்த தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. (ஆனால் இதற்கும் நம் விவாதத்திற்கும் என்ன தொடர்பு??)

    அன்புடன்
    கே.பாலமுருகன்

    ReplyDelete
  2. மேலும் ஒரு கேள்வி.
    நுண் அரசியல் எதிர் அரசியல் என அத்தனையையும் கறைத்து குடித்ததாக நான் எந்த வாக்குமூலத்தையும் முன்வைக்கவில்லையே யுவராஜன்?
    எப்படி நீங்கள் சுயமாக இப்படிப்பட்ட தீர்மானங்களையெல்லாம் கொண்டு வருகிறீர்கள்?
    ஒருவர் ஒன்றைப் பற்றி பேசினாலே அவருக்கு அனைத்தும் தெரியும் என்று சப்பைக்கட்டுவது ஒரு பின்னடைந்த தீர்மானம் என்று நினக்கிறேன்.

    அன்புடன்
    கே.பாலமுருகன்

    ReplyDelete
  3. //ராமகிருஷ்ணன் ஜெயமோகன் போன்றவர்களை வாசிப்பது குறித்த தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. (ஆனால் இதற்கும் நம் விவாதத்திற்கும் என்ன தொடர்பு??)////


    அலுவலகத்தில் இருக்கும் போது இந்த பதிவை படித்துக்கொண்டிருந்தேன். இந்த வரிகளை படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. மேலும் இதுபோன்று வாய்விட்டு சிரித்து ரொம்பநாள் ஆகிவிட்டது.

    ReplyDelete