Saturday, February 20, 2010

திறந்தே கிடக்கும் டைரி - 38

எதிர்முனையில் ச‌ற்று அத‌ட்ட‌ல் போன்ற‌ தொனியில் ‘ஹ‌லோ’ எனும் குர‌ல் கேட்ட‌து. நெற்றிச்சுருங்கி க‌ண்க‌ளைக் கூர்மையாக்கிச் சொல்ல‌க்கூடிய‌ ஹ்லோ அது.நானும் த‌டுமாறி ஹ‌லோ என்றேன்.மீண்டும் உய‌ர்ந்த‌ குர‌லில் விசாரிப்பு ந‌ட‌ந்த‌து.பெய‌ரைச் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் அடையாள‌ம் க‌ண்டுகொண்ட‌வ‌ராக‌ கோ.புண்ணிய‌வான் பேச‌த்தொட‌ங்கினார். ந‌ட‌க்க‌விருக்கும் புதுக்க‌விதை திற‌னாய்வில் என்னுடைய‌ ஒரு க‌விதை குறித்தும் எழுதியிருப்ப‌தாக‌க் கூறினார். என‌க்கு பெருமை பிடிப்ப‌ட‌வில்லை. கோ.புண்ணிய‌வான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய‌ அங்கீகார‌ம் போல‌ உண‌ர்ந்தேன்.

http://vallinam.com.my/navin/

Saturday, February 6, 2010

திறந்தே கிடக்கும் டைரி - 37

ம‌லேசிய‌ ந‌ண்ப‌னில் சிறுக‌தை வ‌ந்தால் ப‌ல‌ருக்கும் என் பெய‌ர் அறிமுக‌மாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்ட‌வ‌ச‌மாக‌ ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் ஆசிரிய‌ர் ஆதி.கும‌ண‌னே இள‌ஞ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு வ‌ந்திருந்தார்.இள‌ஞ்செல்வ‌ன் த‌ன‌து ம‌ர‌ண‌த்திலும் என‌க்கு ந‌ன்மைசெய்துவிட்ட‌தாக‌ க‌ருதினேன். ஆதிகும‌ண‌ன் க‌ருப்பு நிற‌‌த்திலான‌ 'பாத்தேக்'ர‌க‌ துணி அணிந்திருந்தார் என‌ ஞாப‌க‌ம்.அவ‌ர் ப‌க்க‌த்தில் சில‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர்.நாடு முழுவ‌தும் ப‌ல‌ ல‌ட்ச‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்ட‌வராக‌ ஆதி.கும‌ண‌ன் அப்போது இருந்தார்.அவ‌ர் சொல்லுக்குக் க‌ட்டுப்ப‌டும் ம‌க்க‌ள் திர‌ளை த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ச‌ம்பாதித்து வைத்திருந்தார்.ம‌லேசியாவில் இத்த‌கைய‌ ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ள் குறைவு.த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னின் ம‌ர‌ண‌ம் அவ‌ரை மிக‌வும் பாதித்திருக்க‌ வேண்டும்.கைக‌ளைக் க‌ட்டிய‌ப் ப‌டி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.ம‌க்க‌ள் கூட்ட‌ம் இன்னும் வ‌ந்து சேராத‌ நேர‌ம‌து.


தொட‌ர்ந்து வாசிக்க‌

http://vallinam.com.my/navin/