Wednesday, March 18, 2009

'விபச்சாரியின் யோனியை'எப்படி உடைத்துப் பார்ப்பது?!

ஏ.தேவராஜன் நினைத்த நேரத்தில் வெளிவரும் 'மௌனம்' 2-வது இதழில் கே.பாலமுருகன் எழுதிய பத்தி 'புளோகில்' விவாதங்கள் நடப்பதை கேள்வியுற்று கொஞ்சம் வியப்படைந்தேன். இந்த விவாதத்தை மௌனத்தில் எதிர்ப்பார்த்தேன். மேலும், கணினிப் பயிற்சியில் இப்போதுதான் கைவைத்திருக்கிறேன். அதைவிட, என்னை கைவைக்க வைத்துவிட்டீர்கள் எனலாம்.

என்னுடைய 'மௌனம்' பிரதியில் பிரச்சனைக்குறிய அந்த வாக்கியத்தை கோடிட்டு வைத்திருந்தேன். இது பிரச்சனையை எழுப்பும் என்று மனதிற்குள் நினைத்திருந்தேன். ஒப்பீடு தவறானது என்று தெரிந்திருந்தது.

'மரபுக்கவிஞர்கள், நவீன படைப்பாளிகளின் கவிதைகளுக்கு விபச்சாரியின் யோனிக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட தருவதில்லை.'

நான் அறிந்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபுக்கவிஞர்கள் நவீன கவிதை எழுதுபவர்களை வசை பாடியது கிடையாது. அவர்கள் இப்போது மௌனம் காக்கிறார்கள். கே.பாலமுருகனின் நட்பு வடாரம் அல்லது எதிரி வட்டாரத்தை நான் அறியேன். எது எப்படி இருப்பினும் அந்த ஒப்பீடு தவறுதான்.

விபச்சாரி என்பவள் மதம் சம்பந்தப்பட்ட நாடுகளிலோ இனங்களிலோ ஓர் அவமானத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறாள். (இயேசு வாழ்ந்த காலத்தில் தங்கள் வேதத்தின் கட்டளைப்படி யூதர்கள் ஒரு விபச்சாரி கையும் களவுமாக அகப்பட்டால் கல்லால் அடித்தே கொல்வார்கள். கடுமையான இந்தக் கட்டளையை நீக்கியவர் இயேசு கிறிஸ்து)

'விபச்சாரியின் யோனி' என்கிற குறியீட்டைப் பல கலாச்சார தளங்களில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் கே.பாலமுருகன். குறிப்பிட்ட மூல வரியானது நமது கலாச்சார தளத்திலிருந்து மட்டும்தான் சொல்லப்படுகிறது. கே.பாலமுருகனின் அந்த மூல பிரதியை வாசித்தால் கொண்டு வரும் அர்த்தமது. மேலும் புளோக்கில் மடல் 1- ல் கே.பா. முன்னுக்கு பின் முரணாக இவ்விஷயத்தைத் தொட்டு எழுதியிருக்கிறார்.

'விபச்சாரியின் யோனி'என்று தொடங்கும் பத்தியில் தமிழ் சமூகத்தின் பலவீனமான கேவலமான மதிப்பீடுகளின் பின்னனியிலிருந்துதான் பயன்படுத்தினேன் என்று சொல்லிவிட்டு பத்தியின் இறுதியில் 'இக்ளு'நாட்டில் ஒழுக்கமோ விபச்சாரமோ கிடையாது. அங்கு வெப்பம் மட்டுமே கொண்டாடப்படுகிறது... ஆகையால் வெறும் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பீடுகளை மட்டும் பின்னியாக வைத்துக்கொண்டு நாம் அவர்களை (விபச்சாரிகளை) ஒடுக்கப்பட்டவர்கள்,கேலிக்குள்ளவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது' என்கிறார்.

எந்த நாடோ எந்த இனமோ விபச்சாரத்தை எப்படியாவது அர்த்தப்படுத்தட்டும். நம்முடைய விஷயமே/கேள்வியே நம்முடைய சமூகத்தை தொட்டுப்பேசப்படுகிறது. ஆகையால், இங்கேயும் இடிக்கிறது.

ம.நவீனின் விவாதக்கருத்து 'இதற்காக நீங்கள் விலைமாதர்களை வம்புகிழுப்பது வேதனைத்தருகிறது......நீங்கள் அவர்களை அவமானப்படுத்தியிருப்பது புரியும். இதுவும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்களை நோக்கிய கேலிக்குரல்தான்' என்ற கருத்துக்கு மாறாக கே.பா 'விபச்சாரிகளை ஒடுக்கப்பட்டவர்கள், கேலிக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.' என்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள் விபச்சாரிகள். தீண்டப்படாதவர்கள், கேவலத்திற்குரியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என்றுதான் நமது மரபு சமூகம் கற்றும் கற்பித்தும் வருகிறது. இப்படி இருக்க, நவீன பார்வை என்பது என்ன? அப்படிப்பட்ட விபச்சாரிகளின் பின்னால் சென்று பார்த்தால் அவர்களுக்குறிய நியாயங்கள் தெரிய வரும். கேவலத்திற்குரிய சூழலுக்கு தள்ளப்பட்ட கதை புரியும். ஒதுக்கப்பட்ட வகை அறிய வரும். இவர்களும் மனிதர்களே என்ற அங்கீகரிப்பு ஏற்படும். மரபை உடைத்து அவர்களை ஏற்றுக்கொள்ளும்.

நவீன பார்வை இப்படி இருக்கையில் கே.பா - வின் நவீன பார்வை என்ன?'விபச்சாரிகளை ஒடுக்கப்பட்டவர்கள், கேலிக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது'. இவ்வாக்கியத்தில் 'கேலிக்குள்ளானவர்கள்' என்று ஏன் பயன்படுத்தினார்? இது வார்த்தைத் தடுமாறறம். (இது வார்த்தை தடுமாற்றம் இல்லை ..அதில் நுண் அரசியல் எதிர் நுண் அரசியல் இன்னும் எக்கச்சக்கமான அரசியல் இருப்பதாக பாலமுருகன் கூறலாம்.)

விபச்சாரிகளை ஒடுக்கப்படவர்கள் என்றெல்லாம் சொன்னால் அது நவீன பார்வைக்கு அப்பாற் பட்ட பின்னடைந்த சிந்தனையாக இருக்கக்கூடும் என்ற ஒரு மிகச்சரியான பார்வையை தந்து விட்டு இவரே பின்னடைந்த சிந்தனைக்கு சென்று செயல்பட்டிருக்கிறார்-'தமிழ் சமூகத்தின் பலவீனமான கேவலமான மதிப்பீடுகளின் பின்னனியிலிருந்துதான் பயன் படுத்தினேன். அவர்களின் மதிப்பீடுகளில் 'பளார்' என்று அறைவதற்கு.' என்கிறார். இது கருத்து முரண் அல்லவா!

கே.பா- மௌனத்தில் எழுதிய இவ்விஷயத்தைக்குறித்தான 'பத்தி' மிகவும் சுலபமான வாசிப்புக்கு உட்பட்டது.இதில் எவ்விதமான நவீன சொல்லாடல்களோ- உள் அடுக்குகளோ - முரண் பட்டு பிளவு படும் நுண் வெளிபாடுகளோ- யதார்த்த சொல்லாடல்களை மீறிய கட்டமைப்போ கிடையாது. அதனால் கட்டுடைப்பு அவசியம் இல்லாமல் போகிறது. நுண் முயற்சிகளை மேற்கொள்ள தேவைப்படாமல் போகிறது. இப்படி இருக்க கே.பா, "வாசகனை அடுத்த புரிதலுக்குள் நுழைந்து சொல்லாடல்களுக்குள் இருக்கும் இரண்டாவது முரண்பாட்டை/புரிதலை நவீன சொற்களுடன் விளையாடி புரிந்துகொள்ள ஒரு சிறு பயிற்சி"என்று ஏன் சொல்கிறார்? இப்படி செய்வதற்கு அது படைப்பிலக்கியம் அல்லவே... வெறும் சாதாரண சொல்லாடல்களைக்கொண்ட பத்தியே.

எதிர் அரசியல்- நுண் அரசியல்- நுண் முரண்பாட்டு அரசியல்- பிளவுபடும் பல கூறுகள் என்று சொல்லும் கே.பா "ஆனால் இங்கு யார் ஒடுக்கப்படவர்கள் என்றுஇ வெறுமனெ தீர்மானித்து விட முடியாது" என்ற கருத்தில் சறுக்கி இருக்கிறார்.

"மேலும் இந்தச் சமூகத்தை வளரவிடாமல் இன்னும் இலக்கணம் , மரபு வாழ்வு, ஒழுக்கங்கள் என்று பின்னடைவை நோக்கி இலக்கியம் வழியாக நம் சமூகத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்"என்று பொது படையாக பேசி மேலும் சிக்கியிருக்கிறார் கே.பா. இது மிகப்பெரிய சிக்கல். இலக்கியம் வழியாக-

* சமூகம் வளராததற்கு ஒழுக்கங்கள் ஒரு காரணம்.
*இலக்கணம் ஒரு காரணம்.
*மரபு வாழ்வு ஒரு காரணம்
இந்தச்சொல்லாடலை உடைத்துப்போட்டால் (நீங்கள் உடைத்துப் பார்க்க சொன்னபடி)
இப்படி வரும்: நமது சமூகம் வளர ஒழுக்கங்களே இருக்கக்கூடாது; இலக்கணமே இருக்கக்கூடாது; மரபு வாழ்வே இருக்ககூடாது. சரியாபோச்சு... போங்கள். இதுவே தவறான ஒரு போதனை. கள்ள போதனை. அவசரப்பட்டு வார்த்தைகளை அமைத்தால் இப்படித்தான் நுண் அரசியலும் எதிர் அரசியலும் நுண் முரண்பாட்டு அரசியலும் வெளிபட்டு சீழ் வடியும்.
பாண்டிதுரைக்கு,
உங்களுடைய சொல்லாடல்களில் பல சிக்கு இருக்கின்றன. நீங்களும் அவசரப்பட்டு விட்டீர்களோ என எண்ணங்கொள்ள வைக்கிறது. சிங்கப்பூர் வேண்டாம் என்று மலேசிய அரசு ஒதுக்கிவிட்டதா? என்னையா இது? புது வரலாறு சொல்கிறீர். மலேசியாவிடமிருந்து எங்களை பிரித்து விடுங்கள் நாங்கள் தனியாக போகிறோம் என்று பாகிஸ்தானும் பங்களாதேசும் 'விடாப்பிடியாக' இருந்தது போல உங்கள் தலைவர் இருக்க வில்லையா? கோப்பிக்கடையில் இருக்கும்போது சிங்கப்பூர் பிரதமர் சைக்கிளில் சென்றதை நான் பார்த்தேன் என்று சொன்ன சாரு நிவேதிதாவின் பொய்யை போலத்தான் உங்கள் பொய்யும் இருக்கின்றது. எழுத்தாளனுக்கு முதலில் அடிப்படை வரலாறு தெரிய வேண்டும்.

அடித்த கொள்ளையைப்பற்றி நினைவிற்கு வருகிறது என்கிறீர்கள். அது எனக்குத் தெரியாது. முக்கியமும் அல்ல.ஜெயமோகன் மீதும் மனுஷ்ய புத்திரன் மீதும் எனக்குத் தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு.அது உங்களுக்கு முக்கியமல்ல. நமக்கு முக்கியம் என்னவென்றால், அழைக்கப்பட்ட ஓர் இலக்கியவாதி விருந்தினர்- அவர் ஓர் அங்கவீனராக இருக்கும் பட்சத்தில்- சக்கர வண்டி பயன்படுத்துபவர் - படிகளில் அவரை இருவராகத் தூக்கிக்கொண்டு போகப்பட வேண்டியவரை உங்கள் ஊர் காரர் பா.மா, தனது ஏற்பாட்டில் அழைத்து அவருக்கு எந்த வசதியும் செய்து தராமல் நான்கு மாடி படிகளில் தத்தித் தவழ ஏற வைத்திருக்கிறார். மீண்டும் அந்தக்கவிஞர் மலேசியாதிரும்ப யார் உதவியும் இன்றி ஒரு டாக்ஸி ஓட்டுனரின் உதவியில் வந்து சேர்ந்தார். இதற்கு பின்பு ஆராய்ந்ததில் இந்த பா.மா-வின் வண்டவாளங்களெல்லாம் தண்டவாளம் ஏறின.ஒரு புத்தக வெளியீட்டுக்குகூட சினிமா இயக்குனர்களை அழைத்தும் பணம் உள்ளவர்களின் காலைப்பிடித்தும் பணம் பண்ணும் இது போன்றவர்களிடம் மனிதாபி மானத்தை எதிர்ப்பார்க்க முடியாதுதான். இதேபோல எங்கள் ஊரில் ஓராண்டுகள் பணியாற்றிய எம்.ஏ.நுக்மான் அவர்களை தனது ஏற்பாட்டில் அநங்கம் வெளியீட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து ,பணம் வசூலானதும் எந்த விருந்தோம்பலும் இன்றி அந்த இரவே பஸ் பிடித்து மனைவியின் தம்பி பிறந்தநாளுக்கு ஜொகூர் பாரு ஓடினார்(ஒரு தமிழனாக நாம் அழைக்கும் விருந்தினரை நமது தேவைக்காக பயன்படுத்திக்கொண்டு அம்போவென கலற்றி விடும் இந்தப் பண்பை கே.பா - பா.ம- விடம் கற்றிருக்கலாம். )
பதில் வராத மின்னஞ்சல்களுக்காக உங்கள் கால்களை முடமாக்கிக்கொண்டு அல்லது மாற்றுப்பால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு போவீர்கள்.இன்னொரு விஷயத்திற்கு ஓர் இராணுவ வீரனைப்போல விரைப்பாய் நின்று ஆண்மையை வெளிப்படுத்துவீர்கள்.
புரிகிறதையா...உங்கள் புரிதல்,மனிதர்கள் மீதான - மனிதம் மீதான புரிதல்...!?

மஹாத்மன்

3 comments:

  1. என் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுகிறேன் என்று வந்துவிட்டு மஹாத்மன் தனிமனித அவதூறை செய்துவிட்டுப் போகிறார். இந்தப் பண்பை அவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. என் சாதாரண பத்தி என்று குறிபிட்ட இடத்தில், அந்தப் பத்தியில் வந்த கூற்றுக்கும், அதன் பால் வெளிப்பட்ட என் பார்வைகளையும் உடைக்க வேண்டும் என்கிற பட்சத்தில் மஹாத்மன் அவர்களுக்கு எங்கேயோ மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதனால்தான் திடீரென்று பழையதைக் கிளறி தனி மனித அவதூறில் இறங்கி (முழுமையான விஷயம் தெரியாமல்) அரைகுறையாக பேசியுள்ளார்.

    முதலில் நுக்மான் விஷயத்துக்கு வருவோம். நுக்மான் கடாரத்தைப் பார்க்க விருப்பப்படுகிறேன், ஒரு நாள் உங்கள் ஊருக்கு வருகிறேன் என்று அவரே சொல்லியிருந்தார். அவர் வீட்டில் வைத்து( நான் அவரைத் தேடி பார்க்க சென்றபோது). இந்த இடத்தில் எனக்கு எந்தப் பணம் பண்ணும் நோக்கமும் இல்லை. அவர் வருகையை அறிந்து நவீன் அவர்களே என்னை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அதுவரை அநங்கம் நிகழ்வு குறித்து எந்தத் திட்டமும் இல்லை.

    பிறகு நவீன் ஒருமுறை தொலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டு நுக்மான் அவர்களை அழைத்து சுங்கைப்பட்டாணியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யுங்கள் அப்படியே அவரும் கடாரத்தைச் சுற்றி பார்த்தது போல இருக்கும் என்று சொல்லியிருந்தார். நிற்க, இந்த இடத்தில்தான் நான் கெடா மாநில எழுத்தாளர் சங்கம் கூட்டத்தில் இது பற்றி பேசி, முதலில் அவருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். பிறகுத்தான் அநங்கம் இதழ் வெளியீட்டையும் சேர்த்தே வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை அவர்களிடம் சொல்லி அனுமதி பெற்றேன்.

    ஆகவே, மஹாத்மான், அநங்கத்திற்கு( இலக்கிய சிற்றிதழுக்குக்காக) கொஞ்சம் அறிமுகமும் கிடைக்கும், (அதே சமயத்தில் அடுத்த அநங்கத்தை வெளியீட கொஞ்சம் பணமும் கிடைக்கும் என்பதில் மறுப்பில்லை) என்பதற்காக நுக்மான் வருகையையொட்டித்தான் அநங்கம் நிகழ்வே ஏற்பாடானது. அநங்கம் இதழ் மூலம் பணம் சம்பாரித்து பணம் சேகரித்து நான் என்ன ஒரு வீடா கட்டி விட்டேன்? அந்த நிகழ்வில் கிடைத்த மொத்த பணமே எவ்வித இலாபத்தையும் ஈட்டித்தரவில்லை என்று நானே உங்களிடம் சொல்லியிருந்தேன். பணம் பண்ணி நடுவீதியில் நான் யாரையும் விட்டுச் செல்லவில்லை. ஏற்கனவே நுக்மான் அவர்களிடம் இதைப்பற்றிச் சொல்லியிருந்தேன். நவீனிடமும் சொல்லிவிட்டேன். அவருக்கான ஏற்பாடுகளையும் நான் செய்யாமல் இல்லை. நானே கோலாலம்பூர் வந்து அவரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சுங்கைபட்டாணிக்கு வந்து, யுவராஜன் அவர்களிடம் அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். (இது எல்லாவற்றையும் உடன் இருந்து பார்த்துவிட்டு. . இப்பொழுது எவ்வளவு வசதியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், என்ன ஒரு குருட்டு ஆளுமை அய்யா உங்களிடம்?)

    எவ்வளவு அபத்தமான சிந்தனை உங்களுக்கு? வேறு எங்கோ போய் முடிச்சி போட்டு எதையெல்லாமோ ஒப்பீடு செய்துவிட்டீர்கள். பாலுமாணிமாறன் அவர்களை என்னுடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு நீங்கள் யார்? அநங்கம் முதல் இதழ் வெளியீட்டில் கடைசிவரை என்னுடனே இருந்து எல்லாவற்றையும் பார்த்தும், அந்த இதழ் கொண்டு வந்து இன்றுவரை நான் செய்யும் அனைத்துமே உங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு, தகாத ஒப்பீடுகளைச் செய்து நீங்கள் உண்மையிலேயே மனப்பிறழ்வு கொண்டவர் என்று நிருபித்துவிட்டீர்களே!

    மேலும் ஞாபகம் இருக்கிறதா மாஹாத்மன்? அதே நிகழ்வில் நீங்களும் பணம் பண்ணியுள்ளீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். லதாவின் சிறுகதை தொகுப்பை (நான் கொலை செய்யும் பெண்கள்) எல்லோரிடமும் விற்றுக் கொண்டிருந்தீர்களே, கையில் ஏந்தி கொண்டு. அவ்வளவு எளிதாக மறந்துவிட்டீர்களே. பற்றாததற்கு நானும் 10 புத்தகங்கள் விற்று தந்தேன். (இது நான் நண்பர் நவீனிடமிருந்து தனிபட்ட முறையில் பெற்று விற்றுக் கொடுத்தேன்)
    இதையெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு அலைய முடியுமா?

    என் நோக்கத்திற்காக மட்டும் அநங்கம் நிகழ்விற்காக மட்டும் நுக்மான் இங்கே வரவழைக்கப்பட்டு பணம் சம்பாரித்தேனா? என்ன ஒரு அபத்தம்? நான் என்ன குஜாலா இதழா நடத்திக் கொண்டிருக்கிறேன். மொத்தமே 100 பிரதிகள்தான் இன்றுவரை அநங்கம் போய்க் கொண்டிருக்கிறது. இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல என் நேரங்களையும் தியாகம் செய்து எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் நடத்திக் கொண்டிருக்கும் இலாப நோக்கமற்ற இதழின் பால் எப்படி இப்படியொரு ஒப்பீடுகளை முன்வைக்க இயல்கிறது?
    விவாதங்கள் இலக்கியம் குறித்து இருக்க வேண்டும், அல்லது இலக்கியவாதிகளின் கருத்துகள் குறித்து இருக்க வேண்டும். பாண்டித்துரை கொள்ளையைப் பற்றி பேசினாரோ அல்லது நவீன் சிங்கப்பூரில் நடந்த கொள்ளையைப் பற்றி பேசினாரோ, தேவையில்லாமல் எந்த விவரமும் சரிவர தெரியாமல் மஹாத்மன் அவருடைய மூக்கை அநங்கம் புத்தக வெளீயீட்டு நிகழ்வில் நுழைத்துப் பேசியிருக்கக்கூடாது.

    ஊங்களின் போலி முகத்திரையையும் என்னால் கிழிக்க முடியும் மஹாத்மன். அமைதி காப்பது நல்லது என்று இருக்கிறேன். நவீன் குறித்து நீங்களே அவர் பால் உள்ள கடுப்புகளை என்னிடம் சொல்லியிருக்க்கிறீகள். அதையெல்லாம் சொல்ல இது சரியான களம் என்று தோன்றவில்லை. உங்களைப் போல் நானும் பிறழ்வுக் கொள்ள விரும்பவில்லை.

    மீண்டும் வருவேன்
    கே.பாலமுருகன்

    ReplyDelete
  2. மேலும் ஒரு கேள்வி, மஹாத்மன்!

    நான் பேருந்து பிடித்தோ இரயில் பிடித்தோ என் சார்ந்த உறவினர் நிகழ்விற்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். காரணம் இந்த நிகழ்விற்கு முன்பே என் மைத்துனனின் பிறந்தநாள் விழா முடிவாயிற்று. அங்கு நான் போவது என்பது என் தனிப்பட்ட விஷயம், சுதந்திரம். இதற்கு மத்தியிலும் நுக்மான் நிகழ்விற்காக நான் சீக்கரமே போகவிருந்த என் பயணத்தை மாற்றியமைத்துக் கொண்டு நிகழ்வு முடிந்த இரவில் அவசரமாகச் சென்றேன். இதை நான் உங்களிடமெல்லாம் ஏற்கனவே சொல்லியிருந்தேன். இருந்தும் நீங்கள் பின்னூட்டத்தில் நான் என் உறவினர் பிறந்து நாள் விழாவுக்குச் சென்றதைப் பாவத்திற்குரிய செயல்போல பம்மாத்துப் பண்ணிச் சொல்லியிருக்கிறீர்கள்.
    நுக்மான் அவர்களுக்கு என்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லைத்தான். அதற்காக அவரை நான் வீதியிலா விட்டுப் போனேன்? எங்கு இருக்கிறீர்கள் மஹாத்மான்? உலகத்திலா? அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைக் கேட்டு அறிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டுத்தான் நான் விடைப்பெற்றேன். இந்த இடத்தில் அவரை நடுவீதியில் அம்போவென விட்டுச் சென்றதாகப் பால்வா காட்டி பேசுகிறீர்கள்.
    (உங்கள் கவனத்திற்கு, பா.மா வை எனக்கு கடந்த 3மாதத்திற்கு முன்பிலிருந்து பழக்கம்) எதுவுமே தெரியாமல் எப்படியெல்லாம் கீழ்த்தரமான தனிமனித அவதூறுகளில் ஈடுபடுகிறீர்கள் மஹாதமன்.

    கே.பாலமுருகன்

    ReplyDelete
  3. மஹாத்மனுக்கு வருத்தத்துடன் சில வரிகள்...

    வணக்கம் மஹாத்மன்

    நான் விரும்பி படிக்கும் ஒரு எழுத்தாளனை இப்படியாவது சந்திக்க முடிந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வரலாறு பற்றி வாய் திறப்பதற்கு முன் இனி உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்.

    பல சிக்கு என்று ஒரு சிக்கை முன்வைத்து, சில மூட்டைகளையும் அவிழ்திருக்கிறீர்கள். அவிழ்தமைக்கு நன்றி.

    பின்னூட்டம் சார்ந்து ம.நவீன் என்னை தொடர்பு கொண்டபோது (தொடர்பு கொண்டதன் முதன்மையான விசயம் இறுதியில் வருகிறது) தெளிவு படுத்திய ஒன்றை உங்களுக்காகவும் சொல்லிவிடுகிறேன்.

    இந்திய எழுத்தாளர்களுக்கு ஒதுக்ககூடிய (1/2 / 1) பக்கத்தில் மலேசிய படைப்பாளர்களை எழுதச் சொல்லலாமே என்ற ம.நவீன் வினவலுக்கு எதற்கைய்ய தனி நாடான சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்? அந்த இடத்திலும் மலேசிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே? சரிதானா இல்லையா

    கொள்ளையை பற்றி ஒருவர் பேசி முடித்துவிட்டார் விட்டார். நீங்கள் கொள்கையை (மனவலியை) பற்றி பேசியிருக்கிறீர்கள். கவிஞர் வந்துவிட்டு சென்றதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் போல....

    இந்த விமர்சனங்களுக்கு உரிய இருவரும் வாய் திறக்கும்போது இன்னும் கொஞ்சம் உண்மையை உணரலாம் என எல்லோரும் நினைக்கலாம்.

    திறப்பார்களா?

    என் மீதே எனக்கு விமர்சனம் உண்டு (இப்ப கூட என்னைய கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டேன்) மனுஸ்யபுத்திரன் பயணத்தில் அவருக்கு உடல் மனரீதியான வலி எற்பட்டிருப்பின் அதற்காக வருந்துகிறேன். இனி அதுபோல் இதுபோல் எப்போதும் நடக்ககூடாது.

    அட இனிமே நடந்து முடிஞ்ச உடனே என்ன நினைச்சிங்கனு சொல்லிப்புடுங்கய்யா அப்பத்தான் அடுத்து எவனும் வரமாட்டான். கூட்டம்னு கூட்டமாட்டான். நீங்க இரண்டு மூன்று வருசம் என்று பொத்தி பொத்தி வச்சு பேசுற பயபுள்ளைக போல.

    கே.பா, பா.மு எதிர்பட்டால் வாய் பொத்தி போவிங்க போல. அட முழுப்பெயரை வெளிப்படுத்த ஆ இல்லையா. ஏம்பா பா.து நீதான் சொல்லலாம்ன நீங்கள் வைத்த எழுத்துக்கள் மீது நடந்துகொண்டிருப்பவன்.

    ///கற்றிருக்கலாம்///

    அட மனிதர்களோடு பழகுவதில் அப்படி என்னையா காண்டு உணக்கு. ///பணம் பண்ணுவது/// வரவு செலவு கணக்கு பார்கணும்னு எதிர்பார்கிறிங்க போல, இருங்க கேட்டுச் சொல்லுதேன்.

    ///ஆண்மையை வெளிப்படுத்துதல்///

    அட சொக்கா!

    முதல் அடிக்கு இங்கு 3-வது அடியில் ஆண்மை பீறிடுகிறதப்பா.

    வல்லினம் இதழ் சார்ந்து என்பதை நீங்கள் தப்பா புரிஞ்சுண்டேள். இருங்க தெளிவா விளக்கிடுறேன். வல்லினம் விற்பனை சார்ந்து ம.நவீன் என்னை தொடர்பு கொண்டிருந்தார். அது சார்ந்து நான் அனுப்பிய சில மின்னஞ்சல்களுக்கு அவரிடமிருந்து பதில் அஞ்சல் வந்து குவிந்துவிட்டது அதான். வல்லினம் விற்பது 5 புத்தகம்தான் அதற்மேல் படிக்ககூடிய நண்பர்களிடம் தேடிச்சென்று கொடுக்கிறேன். இங்கு எல்லோரிடமும் வெள்ளிகளை எதிர்பார்க்க முடியாது. ஆக 5 புத்தகத்திற்கு மேலான தொகையை நான் குடுக்க நேர்ந்தால் அது எனது சம்பாத்திய பணம் என்று எழுதியிருந்தேன். இதற்கு நவின் தொடர்பு கொண்டு நீங்க கவிதைதனமா எழுதியிருந்திங்களா அந்த பார ஒன்றும் புரியலை பாண்டி! என்ன பாண்டி உங்களை விற்கச் சொல்லி கஷ்டப்படுத்திட்டேனானு (எனக்கு மனிதர்கள் தான் முக்கியம்) (தன் தேவை சார்ந்து) அப்ப பிரச்சினை இல்லைதானேனு,

    இல்லை.

    அட சொக்கா!

    எனக்கு விருப்பமான இதழ்களை நண்பர்களுக்கு படிக்கச்சொல்லி நான் கொடுப்பது வழக்கம். அப்படி சமீபகாலமாக சமநிலை சமுதாயம் என்னும் இதழை நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். முதல் முறையாக சென்று 5 புத்தகங்களை அள்ளும் போது கடைக்காரன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான்.

    சுயபுராணம் என்ன செய்ய

    மேட்டருக்கு வருவோம்.

    உன் தேவை சார்ந்த நான் அனுப்பிய கேள்விகள் கொண்ட மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.

    இப்ப தெளிவா குழப்புறேன்.

    உன்னுடைய தேவைகளுக்கு மட்டும் தொடர்பு கொள்ள பாண்டித்துரை என்ன பரத்தையா?

    ஓ பரத்தையோடு நீங்கள் பரிவாக பேசக்கூடியவர்கள் அல்லவா ? அதற்காகத்தான்யா அறுவைசிகிச்சை......

    இதற்கு எந்த ஆத்மா ஆண்மைபீறிட வந்து 5-அடியில் பதிலிடப்போகிறதோ?

    ம்... பேசப் பேசத்தானே உன்னையும் என்னையும் பற்றிப் புரியும்.

    ம.நவீன் வல்லினம் இதழினை என்னிடம் கொடுப்பதற்கு முன் மஹாத்மனிடம் கலந்துரையாடியிருக்கலாம். ஏன்னா என் முகம் பார்க்கா ஜோசியர் மஹாத்மன் //கற்றிருக்கலாம்// அட அவனா அப்படி இப்படினு நெற்றிக்கண்ணால் உணர்ந்ததை சொல்லியிருப்பார். ம் இப்ப ஒரு அனுபவம் ம.நவீனுக்க கிடைத்துவிட்டது.

    என்னுடைய முதல் கவிதை தொகுப்பை உங்களிடம் தருகிறேன் மஹாத்மன் அச்சிட்டு வெளியிட்டுத் தாருங்கள்.

    தருவீர்கள் தானே.

    பாண்டித்துரை
    சிங்கப்பூர்.

    ReplyDelete