எதிர்முனையில் சற்று அதட்டல் போன்ற தொனியில் ‘ஹலோ’ எனும் குரல் கேட்டது. நெற்றிச்சுருங்கி கண்களைக் கூர்மையாக்கிச் சொல்லக்கூடிய ஹ்லோ அது.நானும் தடுமாறி ஹலோ என்றேன்.மீண்டும் உயர்ந்த குரலில் விசாரிப்பு நடந்தது.பெயரைச் சொன்ன சிறிது நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டவராக கோ.புண்ணியவான் பேசத்தொடங்கினார். நடக்கவிருக்கும் புதுக்கவிதை திறனாய்வில் என்னுடைய ஒரு கவிதை குறித்தும் எழுதியிருப்பதாகக் கூறினார். எனக்கு பெருமை பிடிப்படவில்லை. கோ.புண்ணியவான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய அங்கீகாரம் போல உணர்ந்தேன்.
http://vallinam.com.my/navin/
மென்னுலகம் கண்டுபிடி
2 years ago
No comments:
Post a Comment