Saturday, May 30, 2009

ஒரு க‌விதை

டிக்கெட்

'வரவேண்டாம்'
எனஎன்னை நீ பணித்த
சில நிமிடங்களுக்கு முன் தான்
டிக்கெட் உயிர் பெற்றது.

தனதுடலில் அச்சிடப்பட்டிருந்த
திகதியையும் நேரத்தையும்
ஒருதரம் உரக்கச் சொன்னது

தனதுபயணம் பற்றிய அவசியம் குறித்தும்
புலன்களின்வேட்கை பற்றியும்
அது ஓயாமல்பிதற்றத் தொடங்கியது

நமது பிரிவை
தனது மெளிந்த மேனியால்
இணைக்க முடியும் எனவும்

உன்னுள் உடைந்த சில பகுதிகளை
ஒட்ட முடியும் எனவும்
அது தீர்க்கமாக சொன்னது

நான் உன்னூரில் நடக்கும்
மூன்று அதிசயம் பற்றி கூறினேன்:

1.வண்ணத்துப்பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாவது பற்றி
2.மலர்கள் மீண்டும் மொட்டாவது பற்றி
3.ஓர் அன்பு சிதைவது பற்றி

டிக்கெட் சிரித்தபடி
தான் உயிர் பெற்றதை விட
அவை பெரிதில்லை என்றது.

1 comment:

  1. தம்பி, கவிதைல ஒன்னும் புரியலைப்பா.
    டிக்கெட் எடுத்து ஊர் ஊரா சுத்தற பையன் நான் எனக்கே டிக்கெட் கொடுக்கிறீயா?
    என்னப்பா டிக்கெட் அது?
    மரண டிக்கெட்டா? கவலைப்படதே, உனக்கும் அந்த டிக்கெட் கிடைக்கும்
    சிவா

    ReplyDelete