Thursday, March 26, 2009

தேவலோகத்திலிருந்து ஒரு இ-மெயில்


குறிப்பு : கடந்த 23.3.2009 அஞ்சடியில், நான் செய்திருந்த பதிவில்,அநங்கம் என்கிற இதழ் குறித்து இனி எதுவும் எழுதப்போவதிலை என்று சத்தியம் செய்து முப்பது முக்கோடி தேவர்களுக்கு அனுப்பிய இ.மெயிலுக்கு, அங்கிருந்து அவர்களின் தலைவரான இந்திரனிடமிருந்து ஒரு இ-மெயில் கிடைக்கப்பெற்றேன்.

அதன் சாரம் எனது அம்முடிவை மறு பரிசீலனை செய்ய வழி வகுத்துள்ளது என்பதை மிகுந்த சந்தோஷத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதனை அப்படியே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.நன்றி.

"பூலோகத்திலிருந்து சீ.முத்துசாமி எனும் நாமகரணம் தாங்கிய நீர் அனுப்பிய இ-மெயில் கிடைக்கப்பெற்றோம்.அதில் கண்டிருந்த செய்தியை எனது தலைமையிலான தேவர்கள் குழு பரிசீலித்தபோது, அது தொடர்பான பிற பரிமாறல்களையும் எங்கள் பூலோக பிரதிநிதி வழி, அஞ்சடி இணையதளத்திலிருந்து பெற்று ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து அலசினோம்.

ஒரு யுத்தம் நிகழ்வது போன்ற முஸ்தீபுடன், முரசுகள் கொட்ட புறப்படும் ஆக்ரோச வார்த்தை அம்புகளின் பிரயோகங்களைப் பார்த்து எங்கள் தேவர்கள் சபையே ஆடிப்போய் கிழிபிடித்து அன்ன ஆகாரமின்றி கவலையில் மூழ்கிக் கிடக்கிறது.புராண காலத்தில், அரக்கர்களோடு நாங்கள் நடத்திய சமருக்கு நிகர்த்த மோதல்கள் அங்கு வார்த்தைகளாலேயே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பது புரிகிறது.

பரிசீலித்தவற்றிலிருந்த விஷயங்களில் பலவும் முதிர்ச்சியற்ற மேம்போகான வெற்று வார்த்தை ஜால உளறல்களாக இருப்பதை அறிந்து, பூலோகத்தில் தமிழ் மொழிக்கு மிகப்பெரும் ஊறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என வருத்தமுற்றோம்.

அதிலும் , எங்களது ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக் கொண்ட ஒரு வரியை உமக்குச் சொல்லியே ஆக வேண்டும்.கேலி என்பதாக ஏதோ ஒன்றை கற்பனை செய்துகொண்டு உளறிய அசட்டுத்தனமான வார்த்தைகளாக அவற்றை நாங்கள் கருதுகிறோம்.எங்களது சினத்தைத் தூண்டிய அந்த வரி இதுதான்....'வழிந்தொழுகும் மீதி பாலை சில கோமாளி கிழட்டு பக்தர்கள் எடுத்து அருந்திக் கொள்ளட்டும்' தொடர்ந்து, ரொம்பவும் புத்திசாலித்தனம் என்கிற நினைப்பில்...'இதை இங்கு மிகவும் கேலியாக முன்வைப்பதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்'என்று தற்குறித்தனமான கூடுதல் உளறல் வேறு.

எனவே , எங்களது முதிர்ந்த பக்தர்களையே, 'கோமாளி கிழட்டு பக்தர்கள்'என்று வசைபாடியுள்ள இத்தகையதொரு விதூஷக (கோமாளி)தற்குறி குறித்துதான், எங்களுக்கு அனுப்பிய இ-மெயிலில் நீர் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில், அது குறித்து இனி நீர் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இனி,நீர் அது குறித்து என்ன எழுதினாலும், இது குறித்து எழுதிக்கொண்டிருக்கும் உமது நண்பர்கள் உட்பட,அதனால் எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு என்றும் எவ்வித தீங்கும் (எம்.ஆர்.ராதா பாணியில் விரல்கள் முறுக்கி கோணிப்போவது போன்ற) விளையாது என்று முப்பது முக்கோடி தேவர்கள்...(அதென்ன, பக்கத்திலுள்ள பிரபஞ்சத்தின் தேவர்கள்- 4 தலை பிரம்மா- 10 தலை பிரம்மாக்கள்- 100 தலை பிரம்மாக்கள் என்றெல்லாம் எங்கள் தேவலோகத்தைப் பற்றியெல்லாம் கூட, எல்லாம் தெரிந்த தெனாலிராமன் போல், சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறி வைத்துள்ளது, அந்த அனாமத்து பூலோக விதூஷகன்?)சார்பாக நான் உத்திரவாதமளிக்கிறேன்."

இப்படிக்கு,
தேவர்கள் தலைவன் இந்திரன்.

உண்மைதான் பல பெரியவர்கள்தான் உன்னை முதலில் உறுப்பினர்- ஒரே மாதத்தில் துணை செயலாளர்-அதே மாதத்தில் செயலாளர் ஆக்கினார்கள்.(மன சாட்சி உண்டுதானே?)உன்னை அங்கிருந்து விலக சொன்னதாக மன்னிப்பு கேட்க வந்து புதிய குற்றச்சாட்டை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கும் நீர்,அதை சொன்ன எனது பெயரை ஏன் மறைத்தாய்?சொல்ல பயமா? மகாத்மன் சொன்னதுதான் சரி!எந்த ஒரு தர்க்க ரீதியான விவாதத்தையும் எதிர்கொள்ளும் திராணி உமக்கில்லை.பேசாமல் உனது குரு நாதரைப்போல் கதையோ கட்டுரையோ எழுதிக்கொண்டு பரிசு, பூமாலை,சால்வை என்று பிழைப்பை ஓட்டு.
சீ.முத்துசாமி

No comments:

Post a Comment