Wednesday, March 25, 2009

இது சறுக்கல் ( சர்க்கஸ்) மேடை அல்ல

எழுத்தாளர்கள் சறுக்குவது என்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. சர்ச்சைக்குள்ளான நண்பர் பாலமுருகனின் கூற்று கூட முற்றிலும் தவறு என்பதை நம்மால் முழுமையாக வாதிட இயலாது. சிறுமைப்படுத்துவதற்கு அல்லது அவமானப்படுத்துவதற்காக அந்த ஒப்பீடைக் கையாள்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

பிறரை ஏளனப்படுத்துவதற்கு நாம் என்ன நூறு விழுக்காட்டு புனிதர்களா? கரிசணத்தின் அடிப்படையிலேயே நானும் விலைமாதுவைத் தற்காத்துப் பேசியுள்ளேன்.இருப்பினும் சில சூழல்களில் கேள்விகள் எழுகின்றன. எனக்குத் தெரிந்தவரை, எந்தவொரு குடும்ப காரணமும் இன்றி, பணத்துக்காக இத்தொழிலுக்கு வருகிறவர்களும் உண்டு. பணம் சேர்க்க உலகில் வேறு தொழில் இல்லாததைப் போன்று. இது கண்டிக்கத்தக்கது. இன்றும் விலைமாதுகளை ஒழுங்கீனத்தின் குறியீடாகவே பெரும்பான்மை மக்கள் கருதுகின்றனர்.உனது எதிர்கால ஆசை என்னவென்றால் யாரும் விலை மாது ஆவது என கூறுவதில்லை. சமூகம் தந்த அடையாளத்தை - தான் பாலமுருகன் தனது கூற்றில் ஒப்பீடாக எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், சமூகம் என்பது யார் ? யாரெல்லாம் சமூகம் ? பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் சிந்தனை போக்கு என்ன என்பது பற்றி மிக இயல்பாகப் பேச முடியும். எழுத்தாளன், சராசரிகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கிறவன் ஆகிறான்...இந்த இடத்தில்தான் பாலமுருகனின் கூற்று முரண்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்காக

நமது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் பாலமுருகனின் கருத்து இருவித வாதங்களை முன் வைக்கிறது.பள்ளி சோதனைகளில்தான் கேள்விகளுக்கு ஒரே பதில். வாழ்வில் ஒரே கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.பதில்கள் இல்லா கேள்விகளும் உள்ளன. பதில் மட்டுமே கூட உள்ளது. விலைமாது மட்டுமல்ல அவளைத் தற்காத்துப் பேசுகிறவர்களின் புனிதமும் கூட கிண்டலாகிறது இக்கேடு கெட்ட உலகில். சொல்ல வந்ததை யார் கேட்கிறார்கள் ?

ஒரு விவகாரத்தில் ஒரு எழுத்தாளருக்கு எதிராக எதிர்வினைகள் அமைந்தால் அல்லது அவரது ஆற்றாமையால் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டதாக கூற முடியாது.. பாலமுருகன் சறுக்கவில்லை.

மன்னிப்பு கேட்பவர்கள் எல்லாம் சறுக்கியவர்கள் என பொத்தம் பொதுவாக அடையாளப்படுத்துவது , நியாயமாகாது.இலக்கியத்தில் எழுத்தில் வீழ்ச்சியும் - எழுட்சியும் இருக்கிறதா என்ன ?
பாலமுருகன் அவர் வழியில் செல்ல வழிவிடுங்கள்.
நேரம் வரும்போது இக்கூற்றை இன்னும் விரிவாக பேச கடமைப்பட்டுள்ளேன்.

பா.அ.சிவம்

No comments:

Post a Comment