Tuesday, March 31, 2009

இதனால் நான் மலேசிய எழுத்தாளர்களுக்குச் சொல்ல வருவது...

"இதனால் நான் மலேசிய எழுத்தாளர்களுக்குச் சொல்ல வருவது என்னவென்றால். . சாமியோ. . ஜனசக்தியுடன் (பாதியில் இணைந்து) இப்பொழுது ஒரு நாட்டாமை குறி சொல்கிறார் சாமியோ. . எழுத்து மரியாதை இழந்தவர்கள், மன்னிப்புக் கேட்காமல் விலகியவர்கள். . பரிசுகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள். . என்று எல்லோரையும் அடையாளம் காட்டி தான் சார்ந்தவர்களை தற்காத்து செல்லம் கொடுத்து வளர்ப்பவர் சாமியோ. . . பொது புத்தி சார்ந்து எல்லாம் வகையான பிரச்சாரத்திலும் இறங்குபவர் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் சாமியோ. . பைபிள் அல்குரான். . நாஸ்டர்டாம் என்று கலக்கிக் கொண்டிருக்கும் ஜாம்பவன் சாமியோ. . பற்றாததற்கு நம்மையும் அந்த விவாதத்தில் வரும்படி அழைப்புக் கொடுத்து, நாம் வராத பட்சத்தில் நம்மைக் கோழை என்று சாபம் விட்டு ஆத்திரப்படும் மலேசிய படைப்புலகின் மிகப் பெரிய தூண் சாமியோ.

"எழுத்தாளன் என்பவன் சமூக சீர்திருத்தவாதியோ அல்லது தீர்க்கதரிசியோ கிடையாது."

எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் மீட்சிக்காக எழுதுவது அது கொள்கை சார்ந்த பிரச்சாரத்தின் வகை. இதை ஒரு அரசியல்வாதிக்கூட செய்துவிடலாம். அப்படியென்றால் அவர்கூட எழுத்தாளராகிவிடுவார் உங்கள் பாணியில் சொல்லப் போனால். அரசியல் கிளைத் தலைவர்கள் ஒரு வசிப்பிடத்தின் மோசமான ககல்வாய் குறித்து மக்கள் படும் அவலத்தைப் பத்திரிக்கையில் எழுதி போராடுகிறார் என்றால், அவரும் ஒரு எழுத்தாளரோ? அப்பப்ப.. அப்படியென்றால் ஒவ்வொரு கிளைத் தலைவர்களும் எழுத்தாளர்களின் வகை போல. மகாத்மா காந்தியின் சுயசரிதையை வாசிக்கும்படி மஹாத்மனுக்கு சிபாரிசு செய்கிறேன். (அவரே பலருக்கு இங்கு சில சிபாரிசுகள் செய்யும் பட்சத்தில், நான் மட்டும் செய்யக்கூடாதா என்ன?) அதில் "நான் ஒரு சமூகப் போராட்டவாதியாகவே கருதப்படுகிறேன், எனது மக்களுக்கான நியாங்களை நான் பெற போராடுவேன், இதையெல்லாம் பதிவு செய்வது எனது கடமை. . நான் ஒரு எழுத்தாளன் அல்ல" என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க போராட்டவாதிகள் எல்லாம் இலக்கியவாதிகள் எனக் குறிப்பிடுவது தங்களின் அறியாமை. சே குவாரா ஒரு போராட்டாவாதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் கடவுளாகவும் அறியப்பட்டவர் தவிர எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தபட்டவர் அல்ல என நினைக்கிறேன். நீங்கள் எந்தவகையில் அடையாளம் கொடுக்கிறீர்கள்? ஒரு சில எழுத்தாளர்கள் எல்லாம் காலங்களிலும் தான் சார்ந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தவர்கள்தான். அதனால் அவர்களின் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிறையில் தொலைந்து போனவர் தொடங்கி நாடு கடத்தப்பட்டவர்கள் வரை உண்டு. அவர்கள் ஒரு எழுத்தாளர்கள் எனும் பிம்பத்தைக் கொண்டு இந்த மாதிரியான போராட்டங்களில் இறங்கவில்லை. மொழியை தமது பலமாகக் கொண்டு, அநியாயங்களுக்குக் குரல் எழுப்பினவர்கள்.

"நீங்கள் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால், எல்லாம் எழுத்தாளர்களும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க, சினிமாவில் வரும் விஜயகாந்த் போல கிளம்ப வேண்டும் போல. ." எழுத்தாளர்கள் எனும் அடையாளத்தைச் சுமந்து கொண்டு எல்ல்லாம் நேரங்களிலும் போராட்டம் செய்து, தமது இருப்பை சர்ச்சைக்குள்ளாக்கி, தமது குடும்பத்தை இழந்து, உள்நாட்டு பாதுககப்பு சட்டத்த்தின் கீழ் அடைபட்டு சொந்த மகனையோ மகளையோ கூட பார்க்க முடியாமல் எல்லலம் தியாகங்களையும் செய்யும் ஒருவரைத்தான் நீங்கள் இதான் சந்தர்ப்பம் எனக் கொண்டாடிக் கொண்டு போய் விடுவீர்கள். ஆனால் ஒரு சக மனிதனாக அந்தப் போராட்டவாதிக்குக் கிடைக்காமல் போன அன்பையும் வாழ்வுரிமையையும் பற்றி உங்களுக்கென்ன கவலை? ஒரு எழுத்தாளனைத் தீர்க்கத்தரிசனம் செய்ய வற்புறுத்துவது போல சொல்கிறீர்கள். நான் பைபிளின் தீர்க்கத்தரிசனம் பற்றி இங்கு சொல்லவில்லை. தீர்க்கத்தரிசனம் செய்வது யதார்த்த எழுத்து வகைக்குள் வராது எனவே நினைக்கிறேன். அப்படியென்றால், ஞாயிறு பதிப்பில் இராசிகளுக்கு ஏற்ப இந்த வாரம் இது நடக்கும் பணம் சேரும். . வாகனத்தால் ஆபத்து வரலாம் என்று சொல்லும் அனுமானிக்கும் ஜோதிடர்களையெல்லாம் எழுத்தாளர்கள் என வகைப்படுத்திவிடுவீர்கள் போல? அப்பப்பா அப்படியென்றால் எழுத்தாளர்களின் பட்டியில் அதிகப்பட்சமாக செல்கின்றன. சமையல் குறிப்பு எழுதுபர்களையும் சேர்த்து எழுத்தாளர்களின் ஒரு வகை என நீங்கள் அடையாளம்படுத்துவதன் மூலம் எழுத்தாளன் என்பவனுக்கே தனி ஒரு உலகத்தைப் படைத்து எல்லாம் குப்பைகளையும் அதில் போட்டு கும்மியெடுத்து புது பிரச்சாரத்தில் இறங்கியுள்ளீர்கள். நீங்கள் வேண்டுமென்றால் சமையல் குறிப்பு எழுதுபவரையும் எழுத்தாளன் என்று பொதுவில் பிரச்சாரம் செய்யலாம், ஆனால் அதற்கு நான் ஆளில்லை.

"பொதுபுத்தியில் சமூகம் கற்பித்ததின்படி விபச்சாரிகள் ஓடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறது."

நமது தமிழ்ச் சமூகம் கொடுக்கும் கற்பித்தலில் இருந்து கொண்டு மட்டும் பொது புத்தி சார்ந்து பேசுவது உங்கள் உரிமை. சமூகத்தின் மனநிலையில் இருந்து கொண்டு அந்தப் பார்வைகளுக்கு நியாயம் கொடுக்கிறீர்கள். எங்கே (நீங்கள் சவால் இடுவது போல) விபாச்சாரிகளிடன் சென்று ஒரு 20 பேரிடம் இதைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். . "பெண்களே நீங்களெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள். . உங்களுக்கு வாழ வழியில்லாததால் நீங்களெல்லாம் இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டீர்கள். . ஆதலால் இந்தச் சமூகமே உங்களின் மீது பரிதாபம் கொண்டு உங்களை ஒடுக்கப்பட்டவ்ர்களின் பட்டியலில் சேர்க்கிறது" என்று சொல்லி அவர்களின் மனநிலைகளைக் கேட்டுப் பாருங்களேன். சும்மா பொதுபுத்தி பொதுபுத்தி என்று பிதற்றுவது கேட்கிறது! மலேசிய படைப்பிலக்கியத்திலும் தமிழகத்திலும் தமது இலக்கிய பிம்பத்தை 'வலுவாக பதித்தவர்' என்று சொல்வது அதிகபட்ச துதிபாடல். இவர்களின் மத்தியில் சீ.முத்துசாமியின் 'இரைகள்' என்ற சிறுகதை வெற்றிப்பெற்றது பாராட்டவேண்டிய ஒரு விஷயமல்லவா.(இவ்விடத்தில் சீ.முத்துசாமியின் பிம்பம் வெறும் பரிசுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். இலக்கியச் சிந்தனையில் வெற்றிப் பெற்றது பாராட்ட வேண்டிய விஷயமென்றால் கே.பா வாங்கும் அங்கீகாரங்களும் பரிசுகளும் பாராட்ட வேண்டியதுதான். அதென்ன இலக்கிய சிந்தனை பரிசை பெறுவது மட்டும் அங்கீகாரம் என்று சொல்லிவிட்டு, கே.பா வாங்குவதை மட்டும் வெறும் பரிசு என்று சொல்லிவிட்டு உங்களின் அபிமானிக்கு செல்லம் கொடுக்கிறீர்கள்? எல்லாம் பரிசுகளும் ஒருவகையில் எழுத்தாளனுக்கான அங்கீகாரம்தான், அவனுக்கு உற்சாகம் அளிப்பவைதான். பிறரின் பார்வை இதில் வேறுபடலாம். இன்னும் காலம் இருக்கிறது யார் வேண்டுமானாலும் அவரவரை எப்படி வேண்டுமென்றாலும் வளர்த்துக் கொள்ளலாம். தமது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ளலாம். கே.பா பரிசு வாங்குவதையும் அவருக்கு ஏற்பட்ட சறுக்கல்களையும் மட்டும் பேச மட்டும்தான் உங்களால் செய்ய முடிகிறது. அதையும் தவிர்த்து ஒரு படைப்பாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களின் தனிபட்ட அடையாளங்களை வரையறுத்து அதன்படி அவர் வரவில்லையென்றால், அவரை இப்படித் தாக்கிப் பேசுவது. என்னய்யா உங்கள் திட்டம்?

தமது படைப்பின் மூலம் நீங்கள் வேண்டுமென்றால் சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்யுங்கள், முடிந்தால் உங்கள் கருத்துகளைத் துண்டு பிரசுரத்தில் விநியோகித்து, "நானும் எழுத்தாளண்டா. . நாஸ்டர்டாம் தெரியுமா? தெரியவில்லையா. . அப்படினா உனக்கு ஒரு பக்க மூளை வேலை செய்யலைடா. . எனக்கும் எல்லாம் தெரியும்டா. . அதனால்தான் மூளை கிறுக்குப் பிடிச்சி திரியறேண்டா. . இதுனால் வரை என் எழுத்து படைத்த்வனின் நோக்கிய கேள்விகளாகத்தான் இருந்ததுடா. . இப்பெ ஜனசக்தியில சேர்ந்துட்ட்ன் அதனாலே புதுசா பிரச்சாரத்திற்குக் கிளம்பிட்டேண்டா. . அடுத்து தமிழ் நேசன்லே சேர்ந்தாலும் சேருவேன். . அப்ப நம்ப தலைவரோட கவிதையே விமர்சனம் செய்து கலர் பக்கத்துலே போடுவேண்டா. . இதுவும் ஒரு எழுத்து வகைதாண்டா. . இது புரியலையா உனக்கு? அப்பனா நீ ஒரு அடிமுட்டாள்டா" என்று கோஷம் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்களிடம் வம்புக்கு நின்றால்தான் நல்ல எழுத்தாளர்கள் இல்லையென்றால் திராணியில்லாதவர்கள். அப்படித்தானே? பயங்கரமாத்தான் எல்லாம் தெரிந்த வல்லமைகளாக எல்லோரையும் வம்புகிளுத்து பார்க்கிறீர்கள். நியாயங்கள் பற்றி பேசும் உங்களுக்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனனுக்கு தனிப்பட்ட நியாய அநியாங்கள் இருக்கும் என்பதையும், அதே போல ஒவ்வொரு மக்களும் அவரவர் வாழ்க்கைக்கு தகுந்த நியாய தர்மங்கள் வேறுப்பட்டுக் அமைந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் முட்டால்த்தனமாகப் பேசியுள்ளீர்கள். இங்கு என்ன நீங்கள் நியாங்களை ஒருங்கிணைக்கும் மரத்தடி நாட்டாமையா? இதையும் பொது புத்தி என்று சொல்லிவிட்டு நீங்கள் போய்விடலாம். அதில் பிறருக்கு உடன்பாடு இருக்க வேண்டி அவசியமில்லை.

"பிறரை முட்டாள் எனும் அடையாளம் காட்டும் அதிபுத்திசாலியே, அதியமானே உமக்காகத்தான் உண்மையில் நான் பரிதாபப்பட வேண்டும் போல. நீ ஆதரிக்கும் வட்டத்துடன் பின்நவீனத்துவம் பேசியோ இலக்கிய அரட்டையடித்தோ உம்முடன் வம்புக்கு தர்க்கத்திற்கு வராத எல்லோரையும் முட்டாள் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவாயாக, இது கடாரத்து கோமகளின் ஆணை! ஆணை! ஆணை!"

கோமளா

No comments:

Post a Comment